Tuesday, May 8, 2012

விஜய் காமெடி, facebook, அட்வைஸ் - பஸ்ல உட்கார்ந்து யோசிச்சது!நேற்று பேரூந்தில படத்துக்குப் பதிலா காமெடி டி.வி.டி. போட்டிருந்தாங்க. டைட்டில் 'விஜய் காமெடி'ன்னு போட்டிருந்திச்சு! முதல் 'சச்சின்' படம் - வடிவேலுவும் விஜயும் அதகளம் பண்ணிட்டிருந்தாங்க.  கிட்டத்தட்ட ஒருமணி நேரத்துக்கும் மேல! சந்தோஷமாப் பாத்துட்டிருந்தேன்.  

அடுத்ததா 'சுக்ரன்'னு டைட்டில் வந்திச்சு!  அது நம்ம சந்துமாமா எடுத்த படமாச்சே! - என்னடா இது? சந்துமாமா எது பண்ணினாலும் காமெடியா இருக்கும்கிறது வேற.. ஆனா இந்தப்படத்துல? யோசிச்சிட்டே பார்த்துட்டிருந்தேன். தற்கொலை செய்யப் போன ஒரு காதல் ஜோடியைத் தடுத்து விஜய் அட்வைஸ் பண்ணிட்டிருந்தார். முதல்ல தற்கொலை கோழைத்தனம் என்பதில் ஆரம்பித்து தன்னம்பிக்கை, நீதி, நேர்மை, உண்மை, சட்டம், ஒழுங்கு அப்பிடீன்னு அப்பப்ப பன்ச் டயலாக் கலந்து ஒரே அட்வைஸ் மழை! அதுவரை தற்கொலை எண்ணமே வராம சும்மா உட்கார்ந்துட்டிருந்த எனக்கே ஒரு மாதிரியா இருந்துச்சு!

தற்கொலை செய்து கொள்ளுறது குற்றம், தற்கொலைக்குத் தூண்டுவது அதைவிடப் பெரிய குற்றம் இல்லையா? - அதுபற்றிப் படத்தில் சொல்லவில்லையென்றாலும் டிரைவருக்குத் தெரிஞ்சிருக்கணும். டீ.வியை ஆஃப் செய்துவிட்டார். 

அப்புறமாத்தான் தோணுச்சு! இதெல்லாம் காமெடியா? படத்துலயே ரொம்ப சீரியசான, ஜனங்களுக்கு சமுதாய அக்கறையோட மெசேஜ் சொல்லக்கொடிய காட்சிகள்னு நினைச்சு சந்துமாமா கஷ்டப்பட்டு யோசிச்சு எழுதி, வைச்ச சீன் எல்லாத்தையும் யாரோ ஒரு பயபுள்ள காமெடின்னு கட்டங்கட்டி..இதைப்பார்த்தா அவர் மனசு எவ்வளவு கஷ்டப்படும்?

**********

ஃபேஸ்புக்ல சிக்குறாய்ங்கப்பா!

முன்னாடியெல்லாம் ஃபேஸ்புக்ல ஒரு வைரஸ் அப்ளிக்கேஷன் வரும். அநேகமா ஒரு பொண்ணு ட்ரெஸ் ரிமூவ் பண்றமாதிரி இருக்கும். நம்மாளுங்க ஆர்வக்கோளாறில ஓப்பன் பண்ணா...ஒண்ணுமிருக்காது...ஆனா, பிரண்ட்ஸ் எல்லாருக்கும் ஷேர் பண்ணுப்பட்டுடும். 

அப்புறம் நம்மாளுங்க அலறியடிச்சுட்டு ஒவ்வொருத்தனுக்கும் தனித்தனியா மெயில் அனுப்புவாங்க! அது நானில்லைங்கோ ஓப்பன் பண்ணாதீங்கோ தெரியாம நடந்துபோச்சுங்கோன்னு! சமீபகாலமா அந்தப் பிரச்சினை இல்ல.

இப்ப என்னடான்னா ஃபேஸ்புக் ஓப்பன் பண்ணி வச்சுட்டு வேற எந்த லிங்க் பார்த்தாலும் உடனே அவங்கவங்க சுவர்ல அப்டேட் ஆகுது! அதை ஆர்வக் கோளாறில சிலபேர் கிளிக் பண்ணி தாங்களும் அப்டேட் பண்ணிக்கொள்றாங்க! விவரமானவங்க வேற பிரவுசரில ஓப்பன் பண்றாங்க!
- அநேகமா அது daily motion ஆக இருக்கும்! அதெல்லாம் விடுங்க!

கொடுமை என்னான்னா இந்த ரெண்டு சந்தர்ப்பங்கள்லயும், விவரமில்லாத அப்பாவிப் பெருசுங்க பப்ளிக்கா மாட்டிக் கொள்ற போதுதான் தோணுது.. இந்தப் புள்ளக்குள்ளையும் என்னமோ இருந்திருக்கு பாரேன்!

**********

மீபத்தில் Chungking Express படம் பார்த்தேன். படம் பற்றிப் பகிர்ந்துகொண்ட உலக சினிமா ரசிகனுக்கு  நன்றி!

படம் பார்த்தபோது ஒரு விஷயம் தோணிச்சு! அங்கேயும்(Hong Kong ) பசங்கதான் எப்பவுமே பழைய காதலிய நினைச்சு ஃபீல் பண்ணிட்டு, புலம்பிட்டு.... ! எங்கேயுமே அப்படித்தானா? பெண்கள் நினைச்ச உடனேயே தங்கள் காதலனை ஈசியா கழட்டிவிட்டுட்டு, புது லவ்வரோட ஜாலியா போயிடுறாங்க!

எவ்வளவு விவரமா, தெளிவா இருக்காய்ங்க பாருங்க! என்னதான் இருந்தாலும், இல்லாட்டாலும்(!?)பொண்ணுங்க பொண்ணுங்கதான்!( பாராட்டிக்கிறேன் - நோட் பண்ணிக்குங்க! )

**********

ஜீ... அட்வைஸ்
நம்மாளுங்க இருக்காங்களே ஒரு நல்ல நாட்டில, நல்ல வாழ்க்கை கிடைச்சா அதை அனுபவிச்சு வாழுறதை விட்டுட்டு அங்கே இல்லாத ஒரு விஷயத்தை, ஏதாவது ஒரு காரணத்தைத் தேடிப் பிடிச்சு கவலைப் படுவாய்ங்க! ஒன்றைப்பெறுவதற்காக சிலதை இழக்கிறோம். இது நாங்களாகவே விரும்பி ஏற்றுக் கொண்டதுதான்..இல்லையா? 

சிலருக்கு உண்மையிலேயே சொந்த ஊரைப் பிரிந்த சோகம் இருந்தாலும் பலர் ஓவரா சீன் போடுவாய்ங்க! இவனுங்க போனதே திருட்டுத்தனமா.. அப்புறம் என்னமோ இவனுங்க விருப்பமில்லாம... அந்த நாட்டு அரசாங்கங்கள் ரொம்பக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டதால போனாப்போகுதுன்னு வாழ்ந்துட்டு இருக்கிறமாதிரி!

என் நண்பன் ஒருவன் இப்பிடித்தான் ஸ்கைப்ல அடிக்கடி புலம்புவான்..
'ச்சே என்ன வாழ்க்கை இது! எங்கட ஊர்த் தண்ணிய குடிச்சிட்டு, மரவள்ளிக்கிழங்கு, பனங்காய்ப் பணியாரம் சாப்பிட்டுட்டு இருக்கிற சந்தோசம் வேற எதிலையுமே இல்லடா!'

நான் ஆறுதல் சொனேன் 'கவலைப்படாத மச்சான் உனக்கு காலம் முழுக்க மரவள்ளிக்கிழங்கு, பனங்காய்ப் பணியாரம் நான் ஏற்பாடு பண்றேன். இப்பவே கருமம் அந்தப் பி.ஆர கேன்சல் பண்ணி, டிக்கட்ட போட்டுட்டு ஓடிவா!'

அதுக்கப்புறம் பயபுள்ளய காணோம்!

29 comments:

 1. அட்வைஸ் செம, எப்பூடீ வரும்னே

  ReplyDelete
 2. நல்ல வேளை டிரைவர் டிவி ஐ நிறுத்தி விட்டார்..இல்லேனா இங்கொன்னு நடந்திருக்கும் தானே..

  ReplyDelete
 3. இது பரவாயில்லை ஒஸ்தி படத்துல வர்ற ஃபைட் சீனெல்லாம் காமெடில்ல போடுறாய்ங்க.., என்னத்த சொல்றது..,

  Chunking Express பிடிச்சிருந்தா WOng Kar Wai எடுத்த மத்த படங்களலெல்லாம் பாருங்க செமையா இருக்கும்.., குறிப்பா In the Mood for Love , Days of Beign Wild , happy Together எல்லாம் செமையா இருக்கும்..,

  ReplyDelete
 4. @...αηαη∂....
  In the Mood for Love பார்த்திருக்கிறேன் பாஸ்! படத்தின் இசை உட்பட செம்ம!

  ReplyDelete
 5. //நான் ஆறுதல் சொனேன் 'கவலைப்படாத மச்சான் உனக்கு காலம் முழுக்க மரவள்ளிக்கிழங்கு, பனங்காய்ப் பணியாரம் நான் ஏற்பாடு பண்றேன். இப்பவே கருமம் அந்தப் பி.ஆர கேன்சல் பண்ணி, டிக்கட்ட போட்டுட்டு ஓடிவா!'//

  ஜீ .. இந்த பில்ட் அப் குடுக்குற ஆக்களுக்கு முறையா குடுத்து இப்ப என்ன கண்டாலே பீதில ஓடிடுவாங்க ... அநேகமான தமிழர்கள் இங்கே வந்து இந்த அரசாங்கத்தை திட்டிக்கொண்டு .. வெள்ளைக்காரன் இந்தியர்களை திட்டுகிறான் என்றவுடன் தாங்களும் சேர்ந்து பிளடி இந்தியன் என்று திட்டி ..

  இது பற்றி கனகரத்தினம் மாஸ்டர் என்று ஒரு கதை கூட எழுதியிருக்கிறேன் ..

  நம்மாட்களை திருத்தமுடியாது ...

  ReplyDelete
 6. //மனசாட்சி™ said...
  அட்வைஸ் செம, எப்பூடீ வரும்னே//

  அது சரி! காண்டாக்கிறானுங்க பாஸ்!
  :-)

  ReplyDelete
 7. //கோவை நேரம் said...
  நல்ல வேளை டிரைவர் டிவி ஐ நிறுத்தி விட்டார்..இல்லேனா இங்கொன்னு நடந்திருக்கும் தானே..//

  ஆமா பாஸ்! ஏற்கனவே நொந்து நூடுல்சாகிப் போய் கிடக்கோம்! இதில இவனுங்க வேற! :-)

  ReplyDelete
 8. வாங்க பாஸ்!

  //வெள்ளைக்காரன் இந்தியர்களை திட்டுகிறான் என்றவுடன் தாங்களும் சேர்ந்து பிளடி இந்தியன் என்று திட்டி ..//

  நம்மாளுங்க நிறையப் பேர் தங்களையும் வெள்ளைகாரனுங்களாத்தானே 'பீல்' பண்ணுறாங்க! :-)

  //இது பற்றி கனகரத்தினம் மாஸ்டர் என்று ஒரு கதை கூட எழுதியிருக்கிறேன் ..//

  பாஸ்! உங்க பிலாக்கில நிறைய ஆராய்ச்சி பண்ண வேண்டியிருக்கு! வார விடுமுறைல வர்றேன்! :-)

  ReplyDelete
 9. பலர் ஓவரா சீன் போடுவாய்ங்க! இவனுங்க போனதே திருட்டுத்தனமா.. அப்புறம் என்னமோ இவனுங்க விருப்பமில்லாம... அந்த நாட்டு அரசாங்கங்கள் ரொம்பக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டதால போனாப்போகுதுன்னு வாழ்ந்துட்டு இருக்கிறமாதிரி!

  ReplyDelete
 10. சந்துமாமா படம்னாலே காமெடி தானே..கூடவே டாகுடர் வேற..எப்படியோ, பதிவர் தற்கொலையை தவிர்த்த ஓட்டுநருக்கு நன்றி.

  ReplyDelete
 11. ஃபேஸ்புக் ஒரு ரணகள பூமிங்கிறதுக்கு இன்னொரு உதாரணமா ஜீ? நாம எப்பவும்போல ஃபேஸ்புக்ல தலைமறைவா திரியவேண்டியது தான் போல..

  ReplyDelete
 12. @@ அதுவரை தற்கொலை எண்ணமே வராம சும்மா உட்கார்ந்துட்டிருந்த எனக்கே ஒரு மாதிரியா இருந்துச்சு! @@
  சுவார்ஸ்யமான பதிவு..படிக்கையில் ரசித்தேன்..ஏதோ ஒரு வகையில் சிந்தித்தேன்..மிக்க நன்றி

  ReplyDelete
 13. //இப்ப என்னடான்னா ஃபேஸ்புக் ஓப்பன் பண்ணி வச்சுட்டு வேற எந்த லிங்க் பார்த்தாலும் உடனே அவங்கவங்க சுவர்ல அப்டேட் ஆகுது! அதை ஆர்வக் கோளாறில சிலபேர் கிளிக் பண்ணி தாங்களும் அப்டேட் பண்ணிக்கொள்றாங்க! விவரமானவங்க வேற பிரவுசரில ஓப்பன் பண்றாங்க!
  - அநேகமா அது daily motion ஆக இருக்கும்! அதெல்லாம் விடுங்க!
  //

  இது போல வரும் லிங்க் சில application க்கு நாம் தரும் அனுமதிதான் .. இதை remove செய்வது பற்றி வந்தேமாதரம் தளத்தில் நண்பர் சசி பதிவிட்டுள்ளார்

  ReplyDelete
 14. என் நண்பன் ஒருவன் இப்பிடித்தான் ஸ்கைப்ல அடிக்கடி புலம்புவான்..
  'ச்சே என்ன வாழ்க்கை இது! எங்கட ஊர்த் தண்ணிய குடிச்சிட்டு, மரவள்ளிக்கிழங்கு, பனங்காய்ப் பணியாரம் சாப்பிட்டுட்டு இருக்கிற சந்தோசம் வேற எதிலையுமே இல்லடா!'///வணக்கம் ஜீ! வேற ஒண்டும் சொல்லையில்லையோ,ஹி!ஹி!ஹி!!!!!

  ReplyDelete
 15. //செங்கோவி said...
  ஃபேஸ்புக் ஒரு ரணகள பூமிங்கிறதுக்கு இன்னொரு உதாரணமா ஜீ? நாம எப்பவும்போல ஃபேஸ்புக்ல தலைமறைவா திரியவேண்டியது தான் போல..//

  வாங்கண்ணே! அதான் ராஜா சொல்லிட்டாருல்லே! ஒன்னும் பிரச்சினை இல்லையாம்!

  ReplyDelete
 16. //Kumaran said.
  சுவார்ஸ்யமான பதிவு..படிக்கையில் ரசித்தேன்..ஏதோ ஒரு வகையில் சிந்தித்தேன்..மிக்க நன்றி//

  நம்ம பதிவப் பார்த்தெல்லாம் சிந்திக்கிரதுன்னா..ஒரு வேள காலாய்க்கிறாங்களோ! :-)

  ReplyDelete
 17. //"என் ராஜபாட்டை"- ராஜா said...
  இது போல வரும் லிங்க் சில application க்கு நாம் தரும் அனுமதிதான் .. இதை remove செய்வது பற்றி வந்தேமாதரம் தளத்தில் நண்பர் சசி பதிவிட்டுள்ளார்//

  அப்பிடியா பாஸ்! இதை நம்ம பெருசுங்களுக்கு சொல்லணுமில்ல!

  ReplyDelete
 18. //Yoga.S.FR said...
  ச்சே என்ன வாழ்க்கை இது! எங்கட ஊர்த் தண்ணிய குடிச்சிட்டு, மரவள்ளிக்கிழங்கு, பனங்காய்ப் பணியாரம் சாப்பிட்டுட்டு இருக்கிற சந்தோசம் வேற எதிலையுமே இல்லடா!'///வணக்கம் ஜீ! வேற ஒண்டும் சொல்லையில்லையோ,ஹி!ஹி!ஹி!!!!!//

  பாஸ்! நம்ம நண்பர்கள் எல்லாம் என்னை மாதிரியே ரொம்ப நல்லவய்ங்க பாஸ்! :-)

  ReplyDelete
 19. ஒடுற பஸ்ஸில் விஜய் படமா? மிகவும் அபாயகரமானது.

  //அட்வைஸ்

  மிகச்சரி. நம்மாட்கள் வாய் இருக்கிறதே?

  ReplyDelete
 20. பேஸ்புக் போனமா நாலு கமெண்டும் லைக்கும் போட்டமா வந்தமா எண்டு இருந்தா பிரச்சினையே இல்லை பாஸ்...

  பேஸ்புக்கை பொறுத்தவரை அப்ளிகேஷன் எல்லாம் தேவையில்லாதது

  ReplyDelete
 21. பஸ்ஸில இருந்து யோசிச்சதுன்னு தலைப்பப் பாத்துட்டு,ப.ரா வோட ஆளாக்கும் எண்டு நினைச்சன்!அப்புடி ஒண்டுமில்ல,ஹி!ஹி!ஹி!!!!

  ReplyDelete
 22. யோவ் மாப்ள...ஒரு ஜூப்பரு ஹீரோவ கலாச்சதை வண்டியுடன் கண்டிக்கிரேன்...ச்சே வண்மையாக கண்டிக்கிறேன்...அது என்னய்யா கடைசில கரண்டுல அடிப்பட்ட கரம்பான் பூச்சி போல ஒரு மேட்டரு!

  ReplyDelete
 23. //////படத்துலயே ரொம்ப சீரியசான, ஜனங்களுக்கு சமுதாய அக்கறையோட மெசேஜ் சொல்லக்கொடிய காட்சிகள்னு நினைச்சு சந்துமாமா கஷ்டப்பட்டு யோசிச்சு எழுதி, வைச்ச சீன் எல்லாத்தையும் யாரோ ஒரு பயபுள்ள காமெடின்னு கட்டங்கட்டி..இதைப்பார்த்தா அவர் மனசு எவ்வளவு கஷ்டப்படும்?///////////

  சந்து அங்கிள் இதுக்கெல்லாம் கவலப்படமாட்டாரு............ தான் எடுக்குற சீன்ல தனக்கே தெரியாம காமெடியும் இருந்திருக்கேன்னு நெனச்சி பெருமைப்பட்டுக்குவாரு, அதை உடனே ஒரு பேட்டியாவும் கொடுத்து எல்லாரையும் மறுக்கா ஒருவாட்டி சந்தோசப்படுத்துவாரு..........

  ReplyDelete
 24. //////நான் ஆறுதல் சொனேன் 'கவலைப்படாத மச்சான் உனக்கு காலம் முழுக்க மரவள்ளிக்கிழங்கு, பனங்காய்ப் பணியாரம் நான் ஏற்பாடு பண்றேன். இப்பவே கருமம் அந்தப் பி.ஆர கேன்சல் பண்ணி, டிக்கட்ட போட்டுட்டு ஓடிவா!'////////////

  யோவ் எவனாவது வாழவே புடிக்கலேன்னு புலம்புனான்னா பாலிடால் வாங்கி அனுப்பிடுவீரு போல...........?

  ReplyDelete
 25. ////////செங்கோவி said...
  ஃபேஸ்புக் ஒரு ரணகள பூமிங்கிறதுக்கு இன்னொரு உதாரணமா ஜீ? நாம எப்பவும்போல ஃபேஸ்புக்ல தலைமறைவா திரியவேண்டியது தான் போல..//////////

  அங்கங்க ஆள் போட்டு வைங்கப்பா......... இன்னிக்கு வேற ஒண்ண புடிக்க வேண்டி இருக்கு...........

  ReplyDelete
 26. எல்லாம்சூப்பர்...........ஆமா மரவள்ளி ஓடர் பண்ணமுடியுமா உங்ககிட்ட.........:))))))

  ReplyDelete
 27. ஹா...ஹா... ஹா..

  அருமை... என்ன எழுத்து நடை... சுவராஸ்யமாய்...

  ReplyDelete
 28. ஜீ...உங்கட அட்வைஸ்தான் பிடிச்சுது.இனி ஒரு நாளும் சும்மா ஆசைக்குக்க்கூட எங்கட ஊர்ச்சாப்பாடு நல்லாயிருக்கும் சொல்லமாட்டேன்.சத்தியமா !

  ReplyDelete
 29. //நான் ஆறுதல் சொனேன் 'கவலைப்படாத மச்சான் உனக்கு காலம் முழுக்க மரவள்ளிக்கிழங்கு, பனங்காய்ப் பணியாரம் நான் ஏற்பாடு பண்றேன். இப்பவே கருமம் அந்தப் பி.ஆர கேன்சல் பண்ணி, டிக்கட்ட போட்டுட்டு ஓடிவா!'//

  எப்படிண்ணே இப்பிடி???

  ReplyDelete

Followers

Blog Archive

Powered by Blogger.
Copyright © வானம் தாண்டிய சிறகுகள்.. |