Wednesday, May 2, 2012

பில்லா 3 - கதை ரெடி!


இயக்குனர் விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில், அஜித் நடித்து பெரு வெற்றியடைந்த  பில்லா படத்தைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமான பில்லா 2 படத்திலும் இதே கூட்டணி இணைவதாக இருந்தது. சில காரணங்களால் இணைய முடியாத இக்கூட்டணி மீண்டும் இணைந்து பில்லா 3 படத்தை உருவாக்குவது குறித்து பேச்சு...

'சேவற்கொடி பறக்குதடா சேர்ந்து...' ரிங்க்டோன் ஒலிக்க தினசரியை வைத்துவிட்டு, அலைபேசிக்கு காதைக் கொடுத்தான்.

'ஹலோ வேலு ஹியர்!'
'I am back!'

'யா.. யாரு பேஸ்றது?'
'பில்லா.... டேவிட் பில்லா....!' (மின்னல் வெட்டி இடி முழங்குகிறது!)

'நீ எப்பிடி..?'
'ஹா ஹா ஹா! உயிரோடதான் இருக்கேன்!'

'ஆனா பிரபு சார்...'
'அவர் என்ன போலீசா இல்ல டாக்டரா? நான் கோமால இருந்தப்ப, தான் சாப்பிடுற அவசரத்தில நான் செத்துட்டதா முடிவு பண்ணி புதைச்சிட்டார். நல்ல வேளையா நம்ம டீம் வெளிய எடுத்து ட்ரீட்மென்ட் பண்ணி...'

'ஆனா இந்த நியூஸ் எல்லாம்..'
'யாருக்குமே தெரியாது...இந்தியால இருந்து சீக்ரெட்டா நம்ம 'சிவாஜி' ரகுவரன் டாக்டர் வந்து...'

'ரகுவரன் டாக்டரா?'
'ம்ம்ம்...அப்போ ரகுவரன் டாக்டர் உயிரோடதானே இருந்தார்..சிவாஜிக்கு எலெக்ட்ரிக் ஷாக் அடிச்சப்போ அவரு காப்பாத்தினதப் பாத்துதான்..'

'ஆனா அவர் எப்பிடி ஒத்துக்கிட்டார்?'
'வரலாறை ஒருமுறை திரும்பிப் பாரு..'

'அது பழைய படமாச்சே மறுபடியும் ஓட்றானுங்களா?'
'யோவ்! நான் சொன்ன வரலாறு..ஹிஸ்டரி!' 

ஹிஸ்ட்ரியப் பாரு! எங்கள மாதிரி டான் எல்லாருக்குமே முன்னோடி, குரு, தல எல்லாமே ரகுவரன் டாக்டர் தான். சோ...'

'நீ சொல்றதெல்லாம் உண்மையா?'
'சென்ட் பர்சென்ட்!அதான் நேர்ல சந்திக்கப் போறமே! ஆனா என்ன...உண்மை புரியும்போது பேசுற நிலைமைல நீ இருக்கமாட்டே! பை!'

விஷ்ணு சார் பில்லா பிழைச்சுக்கிட்டானாம் கதைய ரெடி பண்ணுங்க!


நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் logo வை design பண்ணியது உங்கள் ஜீ...! :-)  

16 comments:

 1. ஒரு ஊர்ல பெரிய மய...அதுல ஒரு குய்!..ஸ்டார்ட் ஆக்‌ஷன்!

  ReplyDelete
 2. விஷ்ணு சார் டேவிட் பில்லாவை மலேசியா பக்கமில்ல; இந்த முறை அமெரிக்கா, இல்லாட்டி இலத்தின் அமெரிக்கா பக்கம் நடக்க வைங்க!

  இதுதான் கதை சொல்லும் ஜீனியஸ்கள் வேண்டும் என்பது. 'ஜீ'யை விரைவில் யாராவது தமிழ் சினிமா இயக்கும் ஜாம்பவான்கள் தேடக்கூடும். கதை விவாதத்துக்காக:P

  ReplyDelete
 3. ////'அது பழைய படமாச்சே மறுபடியும் ஓட்றானுங்களா?'
  'யோவ்! நான் சொன்ன வரலாறு..ஹிஸ்டரி!' /////

  ஆருமையான சரவெடீப்பா...

  ReplyDelete
 4. haa haa போட்டுத்தாக்கேய்

  ReplyDelete
 5. ஹா ஹா முடியல

  ReplyDelete
 6. வணக்கம் ஜீ!!!!உங்களுக்கு என்ன எங்கடை"தலை"(அஜீத்) மேல?????

  ReplyDelete
 7. நண்பா அடுத்து என்ன எந்திரன் - 2 வா?
  உங்களுக்குள்ள பல சங்கர்கள்,மணிரத்னம்கள் ஒளிஞ்சுகிட்டிருக்காங்க. விடாதீங்க.....

  ReplyDelete
 8. ரைட்டு .., கிளப்புங்க ..!

  ReplyDelete
 9. யாராச்சு விஷ்ணுவர்தனுக்கு போன் பண்ணி இவர அவரோட கனெக்ட் பண்ணிவிடுங்கப்பா.

  ReplyDelete
 10. கலக்குங்க .... சூப்பர் !

  ReplyDelete
 11. ஜீ பாஸ். மேலே பாலா அண்ணன் சொன்னது போல்

  உங்களுக்குள்ள
  நாலு மணிரத்தினம்
  ரெண்டு பாரதிராஜா
  மூணு சங்கர்
  ஒரு பாலா
  ஒளிஞ்சு இருக்காங்கா........ விட்ராதீங்க சினிமாவே இனி உங்க பின்னால்தான்... ஹா ஹா....

  ReplyDelete
 12. அருமையான பதிவு

  மே தின வாழ்த்துகள்
  உங்கள் பதிவுகளை DailylLib ல் இணைத்து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

  தமிழ்.DailyLib

  we can get more traffic, exposure and hits for you

  To get the Vote Button
  தமிழ் DailyLib Vote Button

  உங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்

  நன்றி
  தமிழ்.DailyLib

  ReplyDelete
 13. //
  நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் logo வை design பண்ணியது உங்கள் ஜீ...! :-)
  //

  :D.. அதுசரி...! நீங்க எப்ப நடிக்க வரப்போறீங்க :P

  ReplyDelete
 14. விகடன்ல கடைசிப்பக்கம் எழுத உங்களைத்தான் தேடிட்டு இருக்காங்களாம்...

  ReplyDelete
 15. நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் logo வை design பண்ணியது உங்கள் ஜீ...! :-) ///சரி தான்!எல்லாம் முடிந்து எலெக்க்ஷனிலையும் நிக்கப் போறார் போல???

  ReplyDelete
 16. கொச்சட்டியான் டிராப் ஆன பிறகு உங்கள தான் கூப்பிடோனும் என்று ரஜனி சொல்லிக்கொண்டு இருக்கிறாராம்!

  ReplyDelete

Followers

Blog Archive

Powered by Blogger.
Copyright © வானம் தாண்டிய சிறகுகள்.. |