Thursday, November 10, 2011

தமில் வாள்க! - ஸ்ருதி!


ஸ்ருதி? ஸ்ருதி சுருதி தானே சரியான தமிழ்?  

ஆரம்பத்தில எனக்கு ஒண்ணுமே தோணல! ஆனாலும் எங்க தலைவரோட பொண்ணுன்னு ஒரு 'இது' இருந்திச்சு! அப்புறமா ஸ்டில்ஸ் பார்த்தப்போ பிடிச்சிருந்திச்சு! ஆனா ஏழாம் அறிவு பார்த்ததும்...

'உன் காதலைத் தூக்கிக் குப்பைல போடு!'

எனக்கு அதிர்ச்சியாயிடுச்சு! சூர்யா லவ் பண்ணாரா? சொல்லவேயில்ல?
படம் தொடங்கி ஒரு கனவுல டூயட் பாடிஇருந்தாலும் கூட நம்ப முடியவில்லை! இதே அதிர்ச்சி எல்லாருக்கும் இருந்திருக்கும்! ஏன் முதன்முதல் படம் பார்க்கும்போது சூர்யாவுக்கே கூட இருந்திருக்கலாம்!

ஆனா பாருங்க நம்ம சுருதி இதுக்கெல்லாம் அசரல!

திடீர்னு ஒருபையன் 'லவ்'வை சொன்னா எந்தப் பொண்ணுக்குமே கொஞ்சமாவது அதிர்ச்சி வரும்! 
வரணும்! அதானே இயல்பு? கருமம்..அந்தக் கொஞ்ச நஞ்ச அதிர்ச்சிய கூட சுருதி காமிக்கல! 

ஒருவேளை இததான் 'அண்டர் பிளே'ன்னு சொல்வாய்ங்களோ?

அப்போது அவர் காட்டும் முகபாவம் 'சவசவ' அல்லது 'தம்பி டீ இன்னும் வரல' இரண்டில் எது என்பதே சினிமா ஆர்வலர்கள் ஆராய வேண்டியது!

'உன் காதலைத் தூக்கிக் குப்பைல போடு!' - இதைச் சொல்லும்போது ஒரு தமிழ்ப்பொண்ணு மாதிரியே தோணல! - ராஜீவ்மேனன் படத்தில வர்ற தமிழ் தெரியாத பொண்ணுங்க, ஆன்டிங்க சொல்றமாதிரியே இருந்திச்சு!

இருந்தாலும் எதுவுமே நடக்காத மாதிரி, நிறுத்தி நிதானமா பதில் சொல்லும் அந்தத் தேர்ந்த நடிப்பு(?!) மிக அருமை! ஆவேசப்பட்டா என்ன, கோபப்பட்டா என்ன..துக்கப்பட்டா..ஆச்சரிய...இன்னும் என்னென்ன பட்டாலும் மிக நிதானமா நிறுத்தி நிறுத்தி வசனம் பேசுறதைப் பார்க்கும்போது முருகதாஸ் என்னதான் பாத்திட்டிருந்தார்னு தோணுது! ஒருவேளை எதையாவது பண்ணித் தொலைன்னு கைகழுவி விட்டுட்டாரோ?

கஜினி படத்தில லவ் சீன்களே படத்தின் பெரும்பலம்! அதில் அசினுக்கு குரல் தனியா நடிச்சிருக்கும்! ஆனா அப்பிடியொரு படமெடுத்திட்டு சுருதி குரலைக் கண்டுக்காம...ஏன்? இதுக்குப் பேசாம டோங்லிக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்து டப்பிங் பேச வச்சிருந்தா நமக்கெல்லாம் பெருமையா(?!) இருந்திருக்கும்!  

ஆனா, நகைச்சுவைல பின்னியிருக்கிறார் சுருதி!

வெல்லைக்காரன் இந்தியர்களை மதிக்க மாட்டேங்குறான். தமில்ல பேசினா தமிள் நாட்டுக்காரனே மதிக்க மாட்டேங்குறான்னு உணர்ச்சி பொங்க ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோட பேசும்போது செம்ம காமெடி! 

எனக்கு சிப்புச் சிப்பா வந்திச்சு! அதென்ன கருமமோ கண்றாவியோ தெரியல! அவங்க எவ்ளோ சீரியஸா பேசினாலும் எனக்குச் சிரிப்பா வருது! ஆனா சிரிக்கல..அப்புறம் நமக்கு தமிழுணர்வு இல்லேன்னு பஸ்லேருந்து இறக்கி விட்ருவானுகளோன்னு பயம்! இப்பல்லாம் நம்மாளுகளுக்கு தமிழுணர்வு ரொம்ப அதிகமாயிடுச்சு!

என்னமோ அவரது வசன உச்சரிப்பு, நடிப்பு பற்றி பலர் சிலாகித்துச் சொல்லியிருக்கிறார்கள்! ஷ்பட்டமா பேசுகிறார்னு சொன்னாங்க...
எச்சூஸ்மீ..எஸ்பட்டம்னா தெளிவுதானே! அதில என்ன தெளிவைக் கண்டுட்டாங்க?
இதுவரைக்கும் நாம யாராவது தல அஜீத்தோட தமிழ் உச்சரிப்பைப் பாராட்டியிருந்தா சந்தேகமில்லாம ஸ்ருதியோட உச்சரிப்பைப் பாராட்டித் தொலைக்கலாம்!

அந்தக் குரலையும் உச்சரிப்பையும் கேட்டபோது ஒருவிஷயம் ஞாபகத்துக்கு வந்திச்சு!

நம்ம மணி சார் இருக்காருல்ல...அதாங்க படிச்சவங்களுக்காகப் படமெடுப்பாரே அவருதான்! அவரு படங்கள்ல வர்ற லேடீசைப் பார்த்தீங்கன்னா தமிழுக்குச் சம்பந்தமே இல்லாத தோற்றத்துல இருப்பாய்ங்க..ஆனா ஸ்ட்ரிக்டா தமிழ்ல டப்பிங் கொடுக்கச் சொல்லியோ என்னவோ பேசுவாங்க பாருங்க..அப்பிடியே நாக்குல குளவி கொட்டினா மாதிரி தத்தத்தான்னு! இதுல வட்டார வழக்குல வேற பேசினா அது மேலதிக கொடுமை!

எனக்கென்னவோ சுருதியப் பார்க்கும்போது ஆய்த எழுத்து படத்தில சூர்யாவோட அம்மாவா வருவாங்களே ஒரு ஆன்டி அவங்களப் பாக்குறமாதிரியே ஒரு பீலிங்! அது ஏன்னே புரியல! பாடல்களின்போது அப்பிடியில்ல..ஆனா நடிக்கும்போது அந்தம்மாதான் ஞாபகத்துக்கு வர்றாங்க!

எத்தனையோ தமிழ்ப்படத்தில எப்பிடியெல்லாமோ தமிழ் பேசறாங்க..அது பிரச்சினையல்ல! ஆனால் தமிழன் வரலாறு, தமிழன் பெருமைன்னு கூவிக் கூவி விளம்பரம் செய்த ஒரு படத்தில ஒழுங்கா தமிழ் பேச வேணாமா?

எப்பவுமே தமிழனுக்கு இன்னொரு தமிழனை விட அந்நியர்களே உதவுவாங்கன்னு சொல்றாய்ங்க நமக்கு அது பற்றித் தெரியல..ஆனா ஒரு நியூஸ் போட்டிருந்தாய்ங்க!

ஷாருக்கான் சொல்லியிருக்காராம்!
சுருதியோட வளர்ச்சியளவுக்கு தமிழ்ப்பயலுவ இன்னும் சரியா வளரல! சுருதி நடிக்கக்கூடிய அளவுக்கு தமிழ்சினிமா இப்போதைக்கு எடுக்க மாட்டாய்ங்க அதனால பாலிவுட்டுக்கு வந்திருங்கன்னு..! ஏதோ நல்லது நடந்தாச் சரி! 

தமிள் எங்கிருந்தாலும் வாளனும் வலரனும்!

36 comments:

 1. மாப்ள வாத்தியாரு புள்ள மக்குன்னுவாங்களே!....அது இது தானோ ஹிஹி!

  ReplyDelete
 2. அழகான மகிழ்வான பதிவு .
  ரசித்து படித்து சிரித்து
  மகிழும் எழுத்து நடை
  வாழ்த்துக்கள் நண்பா

  ReplyDelete
 3. சிறிப்பு..... சிறிப்பு.......

  ReplyDelete
 4. சுருதியோட வளர்ச்சியளவுக்கு தமிழ்ப்பயலுவ இன்னும் சரியா வளரல! சுருதி நடிக்கக்கூடிய அளவுக்கு தமிழ்சினிமா இப்போதைக்கு எடுக்க மாட்டாய்ங்க அதனால பாலிவுட்டுக்கு வந்திருங்கன்னு..! /// அடப்பாவிகளா?

  ReplyDelete
 5. அதொண்ணும் பெரிய தப்பே இல்ல!"இங்கிலிசுபிசு"வில படிச்ச பொண்ணு!அப்புடியாச்சும் பேசுதே?அத வுட ராதிகா அக்கா தமில் பேசி நடிச்ச மொத படம் பாத்தீங்கன்னா இது ஒரு பெரிய கொறையாவே தெரியாது!ராதிகா அக்கா கூட சீமையில படிச்சவங்க தான்!

  ReplyDelete
 6. 'உன் காதலைத் தூக்கிக் குப்பைல போடு!' - இதைச் சொல்லும்போது ஒரு தமிழ்ப்பொண்ணு மாதிரியே தோணல! - ராஜீவ்மேனன் படத்தில வர்ற தமிழ் தெரியாத பொண்ணுங்க, ஆன்டிங்க சொல்றமாதிரியே இருந்திச்சு!//

  நல்லவேளை நான் இன்னும் படத்தை பார்க்கலை, அதுவும் நல்லதுக்குதானோ...!!!

  ReplyDelete
 7. வாத்தியாரு புள்ள மக்கு...

  ReplyDelete
 8. நீங்க நல்லா கொல்றீங்க மாப்ளே!!!வர வர குசும்பு ஜாஸ்தி ஆகிட்டே போகுது :)

  ReplyDelete
 9. இந்த லட்சனத்தில் இருக்காங்க என்ன பண்றது...

  ReplyDelete
 10. ஸ்ருதியை தாக்கியதை வண்மையாக காண்ட் சாரி கண்டிக்கிறோம் ஹி ஹி

  ReplyDelete
 11. ///'உன் காதலைத் தூக்கிக் குப்பைல போடு!' - இதைச் சொல்லும்போது ஒரு தமிழ்ப்பொண்ணு மாதிரியே தோணல! - ராஜீவ்மேனன் படத்தில வர்ற தமிழ் தெரியாத பொண்ணுங்க, ஆன்டிங்க சொல்றமாதிரியே இருந்திச்சு!////

  இந்தப் பகுதியே என்னை அதிகம் கவர்ந்த பகுதி. இதுவும் ராஜிவ் மேனன் குறித்த தங்களின் பார்வை சூப்பர்.

  (ராஜிவ் மேனன் “கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்“ என்று ஏஆர்ஆர்- சுஜாதா கூட்டணியில் மெகா சீரியல் டைப் படமொன்று எடுத்திருப்பார். அதில், வரும் ஆரம்ப காட்சிகளை இன்றைக்கும் என்னால் மறக்க முடியாது. அதுபோல மன்னிக்கவும் முடியாது. எதுவுமே செய்யாத இந்திய இராணுவத்தை தமிழ்ப் போராளிகள் குண்டு வைத்து கொன்றது மாதிரியும்- தமிழர்களை ஏதோ அயோக்கியர்கள் போலவும் காட்டிவிட்டு இலகுவாக நழுவிப்போனவர் ராஜிவ் மேனன்!)


  ஸ்ருதி குறித்த வர்ணணைகளுடன் பல இடங்களில் ஒத்துப் போனேன்!

  ReplyDelete
 12. //
  ஒருவேளை இததான் 'அண்டர் பிளே'ன்னு சொல்வாய்ங்களோ?
  //

  என்ன expression குடுக்கிறது என்று தெரியாவிட்டால் இருக்கிற ஆயுதமே அதுதான்! 'அண்டர் பிளே'

  ReplyDelete
 13. சுருதியின் தமில் பத்தி நள்ளாச் சொள்ளியிருக்கீங்க!(ஜொள்ளி இல்ல!)

  ReplyDelete
 14. கவனத்தை வச்சிருக்கணும் ...விட்டுட்டாங்க...

  ReplyDelete
 15. இதுல கொடும என்னன்னா கமல்ஹாசன் பல வெரைட்டில தமிழ் பேசி அசத்துவார், அவரு பொண்ணு இப்புடி கொலை பண்ணுறாங்க....

  ReplyDelete
 16. ஸ்ருதிக்கு ஷாருக்கான் ,”நீங்க இங்கே இருக்க வேண்டிய நடிகையே இல்லை வாங்க மும்பைக்கு “என்று அழைப்பு விடுத்திருக்கிறாராமே..
  ..போகட்டும் போகட்டும் .நாம் ஒரு நல்ல டமில் நடிகையை மும்பைக்குத் தாரை வார்த்துக்கொடுத்து விடுவோம்.

  ReplyDelete
 17. எங்கிருந்தாலும் வால்க ..என்று அவரை ,வாழ்த்த மறந்து விட்டேனே.

  ReplyDelete
 18. சூர்யா சொன்னதைக்கேட்டீங்களா?
  கமல் பொண்ணு என்பதால் நெருங்கி நடிக்க தயக்கமாக இருந்ததாம் ....
  அப்படியென்றால் மற்ற பெண்கள் என்றால் ......எதற்கும் தயங்க மாட்டாரா?

  ReplyDelete
 19. அண்ணே, ஏற்கனவே த்ரிஷான்னா க.கா ஞாபகம் தான் வருது, இப்போ நீங்க ஸ்ருதின்னா அந்த ஆன்ட்டின்னு சொல்றீங்க, இனிமே ஸ்ருதிய பாக்கிறப்போ எல்லாம் அந்த ஆன்டி ஞாபகம்தான் வரும்...

  ReplyDelete
 20. ரவுண்டு கட்டி அடிக்கிறீங்களே..தலைவர் பொண்ணாச்சேன்னு கொஞ்சமாவது கருணை காட்டுறீங்களா..?

  பஸ்ல டெய்லி இதே படம் தான் ஓடுதா?

  ReplyDelete
 21. பாராட்டுற மாதிரி ஆரம்பிச்சு இப்படி கிழிச்சிட்டீங்களே...

  ReplyDelete
 22. சுருதி காதலை தூக்கி குப்பையில் போடுன்னு சொன்னப்ப அடேங்கப்பா தமிழ் சினிமா வரலாற்றில் இப்படி ஒரு ஹீரோயின் கேரக்டரா என்று நானும் கொஞ்சம் வியந்தேன்... ஆனால் அடுத்த சில காட்சிகளில் மொபைலில் சூர்யாவுடனான காதலைப் பற்றி ரெகார்ட் செய்து வைத்திருப்பாரே அந்தக்காட்சியில் அப்படியெல்லாம் நம்பிடாதீங்கோன்னு தலையில தட்டி உட்கார வச்சிட்டாங்க...

  ReplyDelete
 23. மச்சி, செம காமெடிப் பதிவு,

  தமில் பற்றை அசத்தலாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறது பதிவு.

  ReplyDelete
 24. 11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 25. அதென்னமோ சரி தான் முதல்ல உங்க தமிழ் சரியாய் இருக்குதா?

  ReplyDelete
 26. //suganthiny said...
  அதென்னமோ சரி தான் முதல்ல உங்க தமிழ் சரியாய் இருக்குதா?//

  சரியாய் இல்லைத்தான்!
  ஆனா ஒண்ணு என்னோட தளத்தைப் படித்தால் தமிழன் பெருமைப்படலாம், கர்வப்படலாம் என்று நான் எப்போதும் சொல்லவில்லை! :-)
  நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்!

  ReplyDelete
 27. //தமிள் எங்கிருந்தாலும் வாளனும் வலரனும்!
  //
  வலரும்...வலரும்...

  ReplyDelete
 28. படம் பார்க்கலை...ஆனால் சில காட்சிகள் பார்த்தேன்...நானும் அப்டி தான் நினைச்சேன்...பாப்பா ரொம்ப அழுத்தமா பேசும்போது என்னவோ போலே இருக்கேன்னு...;-))) ஆனால் நீங்க ...துவைச்சு..கிழிச்சு ...தொங்கபோட்ட மாதிரி இருக்கே ;-))....சூப்பர்...நீங்க சொன்னது எல்லாமே உண்மை..;-))

  என் தம்பி சொன்னது போலே.."சூர்யா ..ஸ்ருதியை படத்தில் பார்க்கும் பார்வை...ஒரு சித்தப்பா பொண்ணை பாசமா பார்க்கிற மாதிரியே இருக்குன்னு:-))) " இந்த போஸ்ட் படிச்ச பிறகும் அந்த நினைப்பு தான் வந்தது..;-))

  அதுக்கு ஸ்ருதிக்கு ,கௌதமியாவது டப்பிங் குடுத்திருக்கலாம்..;-)))

  சூப்பர் போஸ்ட் ஜீ..;-))

  ReplyDelete
 29. ///suganthiny said...
  அதென்னமோ சரி தான் முதல்ல உங்க தமிழ் சரியாய் இருக்குதா?//

  சரியாய் இல்லைத்தான்!
  ஆனா ஒண்ணு என்னோட தளத்தைப் படித்தால் தமிழன் பெருமைப்படலாம், கர்வப்படலாம் என்று நான் எப்போதும் சொல்லவில்லை! :-)
  நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்! //

  ;-))))))

  ReplyDelete
 30. பாஸ் பாப்பாவுக்கும் தமிழ் உச்சரிப்புக்கும் ரொம்ப தூரம்.அதுலயும் இந்த ல,ள இதெல்லாம் சுத்தமா வராது போல,அந்த பாட்டுல கொளையா கொள்ளுது,
  @ yoga
  இங்கிலிபிசுல படிச்ச பொண்ணுன்னு சும்மா விட முடியாது?
  நடிகை அஞ்சலி ஒரு தெலுங்கு பொண்ணு தான்,ஆனா சொந்த குரல் டப்பிங் பேசி நடிக்கிறாங்க,யாராச்சும் குறை சொல்லுறாங்களா இல்லியே,ஏன்னா அப்பிடி ஒரு உச்சரிப்பு.இப்போ ஒரு படி மேல போய் "தம்பி வெட்டோத்தி சுந்தரம்" படத்துல கன்னியாகுமரி மாவட்ட வழக்குல பேசிருக்காங்க.so இப்பிடி நொண்டிச்சாக்கு சொல்லப்படாது.இது "யாரு என்ன கேக்க போறாங்க,எப்பிடி பேசுனாலும் ரசிகர்கள் ஏத்துப்பாங்க?அப்பிடிங்கிற ஒரு உணர்வுன்னு நினைக்கிறேன்.

  ReplyDelete
 31. நாம யாராவது தல அஜீத்தோட தமிழ் உச்சரிப்பைப் பாராட்டியிருந்தா சந்தேகமில்லாம ஸ்ருதியோட உச்சரிப்பைப் பாராட்டித் தொலைக்கலாம்!//

  யோவ்! எதுக்கையா இந்த கொலைவெறி, நல்லவேளை தல ரசிகன் யார்க்கிட்டயும் மாட்டல..

  ReplyDelete
 32. ஹ ஹ உங்களுக்கு ரொம்ப குசும்புதான்.

  ReplyDelete
 33. ஜீ... ஸ்ருதி இல்லை சுருதியா? ஸ்ஸ்ஸ்ஸ்..!!

  ReplyDelete
 34. பாவம்பா அந்தப்பொண்ணு .. கும்மிஎடுக்கிரீங்களே.. தமிழே தெரியாத மாதிரி காட்டிக்கற நம்ம திரிஷா அக்காவ விட இந்த பொண்ணு எவ்ளோவோ தேவலாம்.. (பன்னேண்டாம்ப்புலchemistry கிளாஸ் ல கூட எனக்கு லகரம் ளகரம் ழகரம் சொல்லி குடுத்தாரு தில்லை சார்.. அவ்ளோ அளகா நாம டமிள் பேசுவோம்ல)

  ReplyDelete

Followers

Blog Archive

Powered by Blogger.

Archives

Follow by Email

Copyright © வானம் தாண்டிய சிறகுகள்.. |