Tuesday, November 1, 2011

வேலாயுதம்! - இது படமல்ல..காவியம்!
டிஸ்கி 1: நிச்சயமா இது கலாய்த்தல் பதிவல்ல!


டிஸ்கி 2: ஒரு செயலின் விளைவாக நடைபெறக்கூடிய இன்னொரு சாத்தியம் பற்றிய குட்டிக்கதை முயற்சி அவ்வளவே!'ண்ணா அவரு பெட்டிய மறந்து வச்சுட்டு போயிட்டாரு'

வேலாயுதம் அவசரமாக படிகளில் இறங்கி பெட்டியை எடுத்துக் கொண்டான்.

எங்கே அவர்?

அதோ! கீழே இறங்கிப் போயிட்டிருந்தார்.

ஜனத்திரளில் வேகமாக முன்னேற முடியாமல்...அவஸ்தைப்பட்டு ...ஒரு வழியாக வெளியில் வந்து பார்க்க..

எங்கே போனார்?

நிறையப் பணம் இருக்கும் போலிருக்கே!

என்ன பண்ணலாம்?

வேகமாகச் சிந்தித்து.......

'ஆட்டோ...!'

*************


'ப்புடி கரெக்டா புடிச்சாங்க பாத்தியா..தமிழ்நாடு போலீஸ்னா சும்மாவா?'
டீக்கடையில் மாரி! கையில் பத்திரிகையில்

தலைப்புச் செய்தி...


தீவிரவாதி வேலாயுதம் கைது!
பிரஸ்தாப நபர் போலீஸ் ஸ்டேசனுக்கு சூட்கேஸ் குண்டு வைக்க முயன்ற வேளையில்.... 

**************

விளைவு!
டித்து துவைத்து அரைமயக்கத்திலிருந்த வேலாயுதம் கையெழுத்திடப்பட்டான்! 

தொலைக்காட்சிச் செய்தியில்!

.....தீவிரவாதிக்கு உடந்தையாக இருந்த அவரது தங்கை, மாமா, மாமன் பொண்ணு, நண்பன், ஆட்டோக்காரர், ஆட்டோக்காரர் வழியில் இறங்கி சோடா குடித்த பெட்டிக் கடைக்காரர், தீவிரவாதி ட்ரெய்னில் வந்தபோது கூடவே வந்த டி.டி.ஆர் கஜேந்திரன், பிச்சைக்காரன் போண்டாமணி உட்பட முப்பத்தைந்து பேர்....

'அத்தனை பேரையும் தூக்கில போடணும்!' ஆத்திரத்தில் கையிலிருந்த இந்து பத்திரிகையைக் கசக்கி எறிந்தவாறே கொந்தளித்தார் காந்திதாசன்!

நீதி!
ய்யா... நீ ஏதாவது சொல்ல விரும்புறியாய்யா? - நீதிபதி பாப்பையா!

'உலக தங்கச்சிங்கள எல்லாம் கேட்டுக்கிறேன்!
துணிக்கடைக்குப் போனா சேலைங்களைப் பாருங்க....சுடிதாரப் பாருங்க...போரடிச்சா பக்கத்தில நிக்கிற ஆன்டியோட நெக்லஸைப் பாருங்க...இவ்வளவு ஏன்? அழகான பையன்கள் நின்னா திருட்டுத்தனமா சைட் அடிங்க...வேணாங்கல!' 

'ஆனா தயவு செய்து...'

'எவனோ மறந்துபோய் விட்டிட்டுப் போன பெட்டிய பாக்காதீங்க!
பார்த்தாலும் அத அண்ணன்காரங்க கிட்ட சொல்லாதீங்க!'


டிஸ்கி 3: இந்த காத்திரமான, நீதிக்கதையின் மூலம் நானும் ஒரு சமூக அக்கறையுள்ள பதிவர் என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்!

டிஸ்கி 4: அப்படி ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில், தொடர்ந்து ஏழாம் அறிவு, மங்காத்தா கதைகள் எழுதுவேன்! 
வேலாயுதம்! - இது படமல்ல..காவியம்! | வானம் தாண்டிய சிறகுகள்..

24 comments:

சண்முகம் said...

கதை கலக்கல்......

Dr. Butti Paul said...

என்னமா தின்க் பன்றாருய்யா... சைடு வாங்கிய சிந்தனைங்குறது இதுதானா?

Online Works For All said...

Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

விக்கியுலகம் said...

அட ஆண்டவா இந்த புள்ளைக்கு எதோ ஆகிப்போச்சி...இந்த லிங்கை பார்க்கவும்!

http://www.youtube.com/watch?v=aRXfg4nXhjA&feature=related

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ங்ணா...... டாகுடரு படம் எப்படியோ ஓட ஆரம்பிச்சிடுச்சுணா.... எதையாவது சொல்லி கெடுத்து விட்ராதீங்ணா....

கணேஷ் said...

உங்க சமூக அக்கறை புல்லரிக்க வைக்குதுங்ணா... ஒத்துக்கிட்டோம்... பாவம் விஜய், விட்டுடுங்க. முடியல... அழுதுடுவாரு...

செங்கோவி said...

கலக்கிட்டீங்க ஜீ..அப்புறம் வேட்டிக்குள்ள பாமை மறைச்சவரையும் அரெஸ்ட் பண்ணி, ஆபரேசன் பண்ணியிருப்பாங்களே...

Dr. Butti Paul said...

அகாதுகா அப்பாடக்கர்ஸ்: நாம் சுதந்திரம் பெற்றோமா அடிமைப் படுத்தப்பட்டோமா? - ஏழாம் அறிவு என்னுள் எழுப்பிய கேள்வி

அண்ணே இந்த பதிவையும் தொடரும்படி உங்களை அன்புடன் அழைக்கிறேன்.

நா.மணிவண்ணன் said...

அண்ணே ஜி அண்ணே உங்களுக்கு வேலாயுதம் படம் பிடிக்கலைனா அப்படியே விட்டுடனும் அத விட்டு புட்டு இப்படி லாம் எழுதகூடாது .அவரு எவ்வளவு தன்மையா எடுத்த சூட்கேச உரியவுங்களுகிட்டையே கொண்டு போயி சேத்து மக்களை காப்பாத்திருக்காறாரு

ஹேமா said...

ஜீ...நல்ல படங்களுக்கே எப்பவும் விமர்சனம் தருவீங்க.இந்தக் காவியத்துக்குமா !

மைந்தன் சிவா said...

ஹிஹி மச்சி இப்பிடியும் மொக்கை போட தெரியுமா??~~!!!அன்னிக்கு அது இன்னிக்கு வேலாயுதமா!!ம்ம்ம் நடக்கட்டும்!

MANO நாஞ்சில் மனோ said...

எழுதுங்க எழுதுங்க உங்க சமுதாய அக'கரைக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்...

சென்னை பித்தன் said...

கலக்கிட்டீங்க!தலைப்பு ஒரு தூண்டில்!

சேட்டைக்காரன் said...

உண்மையிலேயே நீங்க ரொம்ம்ம்ம்ம்ப சமூக அக்க்க்க்க்க்க்க்க்க்க்கறை உள்ள பதிவருங்க! உங்க அக்கறையை சர்ஃப் போட்டாலும் கழுவ முடியாதுங்கோ! :-)

பாலா said...

நண்பா ஏற்கனவே அவரு குல்லா போட்டுட்டு வந்து குறுக்கா வெட்டுராறு. நீங்க என்னன்னா நெடுக்கா வெட்டுறீங்க... நடத்துங்க,,,

மொக்கராசு மாமா said...

ரெண்டு மூணு நாளா இந்த பக்கம் வர முடியாம போச்சி, மன்னிக்கனும் ஜீ.... அப்புறம் சத்தியமா சொல்றேன் இது காத்திரமான நீதிக்கதைதான் நீங்களும் சமூக அக்கறையாளர்தான்..

கார்த்தி said...

சூப்பர் சார்! நல்ல இருக்கு உங்கட வேலாயுதம் கதை! ரசித்தேன் சிரித்தேன்!

நிரூபன் said...

இனிய மதிய வணக்கம் மச்சி,
முன்னாடி ரெண்டு போட்டிருக்கிறதால முஸ்கி என்று பேர் வைச்சிருக்கலாமில்லே.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...

சிரிச்சு மாளலை..
என்னமா லாஜிக் ஓட்டைகளை அண்ணன் கண்டு பிடித்து நோண்டி,
தங்கச்சிங்களுக்கு வேறை தகவல் சொல்லியிருக்காரே...

கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
ஹா...ஹா...

Yoga.S.FR said...

அடடே!இப்புடி ஒண்ணு இருக்குதா?பாக்கல,அதனால கேக்குறேன்!ஹி!ஹி!ஹி!

Webpics Tamil Links said...

உங்கள் தளத்திற்கு நிறைய வாசகர்கள் வர வேண்டுமா ? உடனே உங்கள் பதிவுகளை http://talinks.webpics.co.in இணைத்து வாசகர்களை பெற்றிடுங்கள். இது இலவசம் .

M.R said...

நீங்களும் கதாசிரியர் தான் ஹா ஹா

ஆனா பாருங்க நீங்க இப்பிடி கேப்பிங்கன்னு தான் முன்னாடியே ஊர்க்காரங்க எல்லோரும் சேர்ந்து தரேன்னு சொன்ன பணத்தை வேண்டாம்
என் பணம் மட்டும் போதும் என்ற வசனம் வைத்திருக்காங்க்களோ


இருந்தாலும் மற்ற படத்தின் உங்களுடைய மாற்று கோணத்தை அறிய ஆவல் ,அதையும் எழுதுங்கள்

உங்கள் கற்பனை பாராட்டத்தக்கதே

M.R said...

த.ம 8

vijaiyan Bhoopalan said...

நான் ஏற்றுக் கொள்ளவில்லை. தொடரட்டும் உமது பணி