Tuesday, May 31, 2011

கடலை,கவிதை,காதல்!


'ஐயப்பன் செல்போனில் பேசுவதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?' 

கடலை போட்டுக் கொண்டிருந்த கம்பரைப் பார்த்தபோது அப்பிடித்தான் தோணிச்சு!  - கதிரையில் இரண்டு கால்களையும் தூக்கிவைத்துக் கொண்டு வலது கையை காதுக்குக் கொடுத்து, இடக்கையை இடது முழங்காலில் ரெஸ்டில!

தொடர்ந்து சிலநாட்களாக கம்பர் மொபைலும் கையுமாக யாரோ ஒரு பெண்ணுடன் ஒரே கடலைஅது சரி பொண்ணுன்னு எப்பிடி?.... அதான் நம்மாளுங்க கதைக்கேக்க முகத்தைப் பார்த்தாலே தெரியுமேவாயெல்லாம் பல்லாகமூஞ்சியே பல்ப்பாக!


அதிலும் கம்பர் இருக்கானே, அவனிடம் ஒரு பையன் முதன்முதலாக கதைக்கும்போது, நேராகப் பார்க்காமல் பக்கவாட்டில் தலையைத் திருப்பி, முகத்தை பதினைந்து டிகிரி ஏற்றக்கோணத்தில் வைத்து, விழிகளை அதே பதினைந்து டிகிரி இறக்கி வைத்து சிரிக்காமல், அலட்சியமாக, அமர்த்தலாகநாங்களும் சும்மா இல்ல பெரிய ரௌடி தான் என்ற தோரணையில்தான் நோக்குவார்.

அதுவே பெண்ணாக இருந்தால், நேராக முகம் பார்த்து, முகத்தில் பரவசம் கொப்பளிக்க, இரு முனைகளிலும் உதடுகள் ஒட்டியிருக்க, நடுவில் உதடுகளை விரித்து, நான்கு பற்கள் தெரிய சிரித்தவாறே, ' ச்ச்சொல்லுங்கோ' (ஜொள்ளுங்கோ!
- கற்பனை பண்ண முடிகிறதாமுடியலயா! சரி விடுங்க உங்களுக்கு எதுக்கு அந்தக் கருமமெல்லாம்மொத்தத்தில் பார்க்கக் கண்றாவியா இருக்கும்!

நாங்கள் தங்கியிருந்த அந்தப் பெரிய வீட்டில் நண்பர்கள் எட்டுப் பேரில் யார் எங்கு தூங்குவது என்ற ஒழுங்கு கிடையாதுபிரச்சினை கிடையாதுபெரிய ஹாலில் அவனவன் ஒரு நாளைக்கு ஒரு இடத்தில்!அறைக்குள் கட்டில்களில் யாரும் தூங்குவது குறைவுஆனா கம்பர் மட்டும் தனக்கென ஒரு அறையின் மூலை! அந்த ஏரியாவுக்குள் யாரும் போறதில்ல!

அந்தக் கடலை குறித்து சிலர் கேட்டபோது கம்பர் சொன்னது, 'அது பிரண்ட்ஷிப், தப்பா நினைக்கக் கூடாது!'  அதோட விட்டானா? ஒரு ஆணும் பெண்ணும் நட்பா பழகினா தப்பா யோசிக்கும் தமிழ் சமூகத்தை கிழிகிழியென்று அரைமணி நேரம்...நான் கூட ரொம்ப நொந்து போனேன் ஏன்தான் நாமெல்லாம் இப்பிடி 'விளங்காம' இருக்கோம்னு! - நல்லவேளை நானெதுவும் கேட்கல

**********

ஒரு மாலை நேரத்தில், கதிரையில் 'ஐயப்பன் ஸ்டைலில்' உட்கார்ந்திருந்த கம்பரின் கேள்வி..

'ஜீ, உனக்கு கவிதை எழுதத் தெரியும் தானே?'
'இல்லடா'
'சும்மா சொல்லாதே'
'தெரியாதுடா'

'ச்சே என்னடா உன்னைப்பற்றி என்னமோ நினைச்சேன் நிறைய புக்ஸ் எல்லாம் வாசிக்கிறே
'டேய் வாசிக்கிறவனால எல்லாம் எழுத ஏலாதுடா, அது சரி எதுக்கு கேக்கிறே?'

'சும்மா அவளுக்கு அனுப்பத்தான்!'
' பிரண்ட்டுன்னு சொன்னியேடா?'
பிரண்ட்க்கு கவிதை அனுப்பிறதில்லையா? அனுப்பக் கூடாதா?' ( பிரண்ட்ஷிப்புக்கு கவிதையா? புதுக் கலவரமா இருக்கேடா?)
'அப்பிடியா? இவ்வளவு காலமா நீ எனக்கு ஒரு கவிதையும் அனுப்பலையே? - கம்பரைக் கலவரமாக்கி கிடைத்த gap எஸ்கேப்!

பிறகு இரண்டு நாட்களாக இதே தொல்லை.
'மச்சான் உனக்கு வரும்டா, நீ எவ்வளவு நல்லா கதைக்கிறே, திங்க் பண்றே' நமக்கு சம்பந்தமில்லாதத எல்லாம் சொல்லி நல்லா உசுப்பேத்திறான்னு தெரிஞ்சுது! - ஆனா யாருகிட்ட? எவ்ளோ பார்த்திருக்கோம்?

ஆனா ஒரு கட்டத்தில எனக்கே ஒரு சபலம் வந்திட்டுன்னா பார்த்துக் கொள்ளுங்க! 'ஒருவேளை நமக்கு கவிதை வருமோ?' - அட அத விடுங்க! ஆபீசுக்கு வெள்ளை ஜிப்பா போட்டுக்கிட்டே ஜோல்னாப் பைக்குள்ள 'லாப்டாப்' கொண்டுபோறமாதிரி கனவுகூட வந்திச்சுன்னா பாருங்க!

நல்ல வேளை! உடனேயே தெளிஞ்சுட்டேன்தமிழ் கூறும் நல்லுலகிற்கு நிகழவிருந்த அசம்பாவிதம் தடுக்கப் பட்டது. நான் கவிதை எழுதாததைத் தான் சொல்றேன்!

பிறகு கடலை பிசியில் கவிதையை மறந்து விட்டான்
தப்பிச்சன்டா! ஆனா ஒண்ணு! நல்லவேளையா கம்பர் 'லவ்' பண்ணல!   இல்ல கடலைக்கே இப்பிடிக் கண்ணைக் கட்டுதே, இவன் 'லவ்' பண்ண வேற ஆரம்பிச்சுட்டான்னா ஒருபயல் நிம்மதியா இருக்க முடியாதே! ஒழுங்கா தூங்க முடியுமா காதல் கதை சொல்லியே கொலையா கொன்னுருவானுகளே! - நிம்மதியானேன் - ஆனா விதி?

************

அன்று ஏனோ கம்பரை மறந்து கட்டிலில் தூங்கலாம்ன்னு அறைக்குள் போக, கம்பர் படு உற்சாகமாக 'டேய் ஜீ ஆபீஸ்ல வேலை எல்லாம் எப்பிடி போகுது?' ( என்னடா புதுசா அக்கறை?....அய்யய்யோ! அப்போ ஆரம்பிச்சுட்டானா?) - அலேட் ஆகிட்டேன்!

முன்னப் பின்ன நான் தேன் குடிச்ச நரியைப் பார்த்ததில்லை என்றாலும் கம்பரை பார்க்கும்போது ஊகிக்க முடிந்தது!

'......' (அதே தாண்டா!)

'உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்டா
'......' 

'நான் அவளை லவ் பண்றேன்டா
'....!  நான் வெளில படுக்கிறன்டா மச்சான்! குட்நைட்! 

29 comments:

 1. வித்தியாசமான கற்பனை...

  ReplyDelete
 2. //'நான் அவளை லவ் பண்றேன்டா'
  'ஓ....! நான் வெளில படுக்கிறன்டா மச்சான்! குட்நைட்!

  மாட்டிருந்தீங்க ரத்தம் வந்திருக்கும்

  ReplyDelete
 3. மூன்றும் முச்சுவைகளில் இருக்கிறது...

  ReplyDelete
 4. முன்னப் பின்ன நான் தேன் குடிச்ச நரியைப் பார்த்ததில்லை என்றாலும் கம்பரை பார்க்கும்போது ஊகிக்க முடிந்தது!

  நான் கூட அப்படித்தான் உங்கள் பதிவு தேனை குடித்த நரியானேன்

  ReplyDelete
 5. இன்னிக்கு இங்கும் காமெடியா? சூப்பர் மாப்ளே! அசத்தல் காமெடி!

  ReplyDelete
 6. //அப்பிடியா? இவ்வளவு காலமா நீ எனக்கு ஒரு கவிதையும் அனுப்பலையே? - கம்பரைக் கலவரமாக்கி கிடைத்த gapல எஸ்கேப்!//

  தேன் குடித்த நரிபோலவே நாங்களும்.
  பதிவுக்குப் பாராட்டுக்கள்

  ReplyDelete
 7. AnonymousMay 31, 2011

  கம்பர் சரியான வம்பர் போல..

  ReplyDelete
 8. AnonymousMay 31, 2011

  ////'உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்டா'
  '......'

  'நான் அவளை லவ் பண்றேன்டா'
  'ஓ....! நான் வெளில படுக்கிறன்டா மச்சான்! குட்நைட்! /// ஹிஹிஹி நல்ல முடிவு பாஸ்...)

  ReplyDelete
 9. வித்யாசமான கற்பனை.

  ReplyDelete
 10. கம்பர்.... உங்களை தேடிட்டு இருக்கப்போறாரு! அது சரி... இந்த பதிவின் மூலக்கரு எப்படி வந்திச்சு திரு. ஜீ அவர்களே?

  ReplyDelete
 11. ஹேய் கலக்கல் காமடி கும்மி ஹிஹிஹிஹி.....

  ReplyDelete
 12. முடிவு நல்லா இருக்கு.

  ReplyDelete
 13. ஹி ஹி...இறுதியில் எடுத்தது நல்ல முடிவுதான்....ஏழாவது ஒட்டு நான் குத்தியது...நம்ம ஜனநாயக கடமையல்லவா?

  ReplyDelete
 14. :) ஜீ கம்பரிடம் சொல்லுங்கள் ஜீக்கு நல்லா கவிதை எழுத தெரியும் என்று இல்லாவிட்டால் கம்பரின் முகவரி தாருங்கள் நான் கூறுகின்றேன்.
  நல்ல கற்பனை

  ReplyDelete
 15. ஹிஹிஹி முடிவு நச்!!!

  ReplyDelete
 16. //தமிழ் கூறும் நல்லுலகிற்குநிகழவிருந்த அசம்பாவிதம் தடுக்கப் பட்டது. நான் கவிதை எழுதாததைத் தான்சொல்றேன்!//
  ஏன் பாஸ் ஆல்ரெடி நம்மள போல பசங்க கொல்றாங்க எண்டா??

  ReplyDelete
 17. ஆய் ஜீக்கு லவ்வு ஸ்டாட் ஆகிடுச்சு! அந்த நண்பர்தான் ஜீ. ஜீதான் அந்த நண்பர்.
  அது சரி ஏன் இண்டைக்கு சில வரிகள் straightஆ போகுது எதாவது settings ல கிழையா சார்?
  இந்த வரிய கேட்டனீங்களா?
  அந்த சாலையில் நீ வந்து சேராமல், ஆறு டிகிரியில் என் பார்வை சாயாமல், விலகிப் போயிருந்தால் தொல்லையே இல்லை, இது வேண்டாத வேலை! #VairaMuthu

  ReplyDelete
 18. ஆஹா..இந்த மச்சிகள் தொல்லை இருக்கே, தாங்க முடியாது..அதுவும் லவ்வுன்னா..சூப்பராச் சொன்னீங்க ஜீ.

  ReplyDelete
 19. மாப்ள U turn போடுவது எப்படி ஹிஹி!

  ReplyDelete
 20. >>
  'உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்டா'
  '......'

  'நான் அவளை லவ் பண்றேன்டா'
  'ஓ....! நான் வெளில படுக்கிறன்டா மச்சான்! குட்நைட்!

  haa haa ஹா ஹா அண்ணன் அடிச்சார்யா ஒரு யூ டர்ன்

  ReplyDelete
 21. நல்ல கற்பனை...

  ReplyDelete
 22. பாஸ், வித்தியாசமான கற்பனை, உரை நடையும் அருமையாக இருக்கிறது சகோ.

  ReplyDelete
 23. தொடர்ந்து சிலநாட்களாக கம்பர் மொபைலும் கையுமாக யாரோ ஒரு பெண்ணுடன் ஒரே கடலை! அது சரி பொண்ணுன்னு எப்பிடி?.... அதான் நம்மாளுங்க கதைக்கேக்க முகத்தைப் பார்த்தாலே தெரியுமே! வாயெல்லாம் பல்லாக! மூஞ்சியே பல்ப்பாக!//

  உங்கள் ரூமில் மைந்தன் சிவாவும் தங்கியிருக்காரா...

  கம்பர் காதலில் விழுந்திட்டாரா...
  கம்பர் கவிழ்ந்தார்;-)))

  ReplyDelete
 24. அதிலும் கம்பர் இருக்கானே, அவனிடம் ஒரு பையன் முதன்முதலாக கதைக்கும்போது, நேராகப் பார்க்காமல் பக்கவாட்டில் தலையைத் திருப்பி, முகத்தை பதினைந்து டிகிரி ஏற்றக்கோணத்தில் வைத்து, விழிகளை அதே பதினைந்து டிகிரி இறக்கி வைத்து சிரிக்காமல், அலட்சியமாக, அமர்த்தலாக, நாங்களும் சும்மா இல்ல பெரிய ரௌடி தான் என்ற தோரணையில்தான் நோக்குவார்.//

  கருணாகரன் வாத்தியிடம் தமிழ் படித்திருக்கிறீங்க போல இருக்கே...

  அவரும் இப்படித் தான் கம்பரைப் பல விதமான கோணங்களில் சொல்லுவார்.

  நான் சொல்வது அந்தக் கம்பர்.

  ReplyDelete
 25. பிறகு இரண்டு நாட்களாக இதே தொல்லை.
  'மச்சான் உனக்கு வரும்டா, நீ எவ்வளவு நல்லா கதைக்கிறே, திங்க் பண்றே' நமக்கு சம்பந்தமில்லாதத எல்லாம் சொல்லி நல்லா உசுப்பேத்திறான்னு தெரிஞ்சுது! - ஆனா யாருகிட்ட? எவ்ளோ பார்த்திருக்கோம்?//

  நண்பேண்டா, ஒரு நண்பனோடை திறமையை வெளிக் கொணர கம்பர் முயற்சி செய்கிறாரு, அல்லது
  தன் காதலை ஸ்ரோங் பண்ண முயற்சி பண்ணுறாரு,
  ஆனால் நீங்க வேறு விதமாக எஸ் ஆகிறீங்களே;-)))

  ReplyDelete
 26. நல்ல வேளை! உடனேயே தெளிஞ்சுட்டேன். தமிழ் கூறும் நல்லுலகிற்கு நிகழவிருந்த அசம்பாவிதம் தடுக்கப் பட்டது. நான் கவிதை எழுதாததைத் தான் சொல்றேன்!//

  அடப் பாவி, அப்போ நாம எல்லாம் என்ன எழுதுறோம், சும்மா ட்ரை பண்ண வேண்டியது தானே,

  கவிதை எழுதத் தொடங்கின பலரே இப்போ காதலர்களாக மாறிட்டாங்க.
  அப்புறம் உங்களுக்கும் அதிஷ்டம் வரும் தானே.

  ReplyDelete
 27. 'உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்டா'
  '......'

  'நான் அவளை லவ் பண்றேன்டா'
  'ஓ....! நான் வெளில படுக்கிறன்டா மச்சான்! குட்நைட்!//

  குறுங் கதை என்றும் இதனை எடுத்துக் கொள்ளலாம். அதே போல அழகிய உரை நடை என்ற அடைப்பிற்குள்ளும் இப் பதிவினைச் சேர்க்கலாம்.

  ஜீ...உங்களின் சினிமா விமர்சனங்களிற்குப் பின்னால் நான் ரசித்துப் படித்த ஒரு அற்புதமான படைப்பு இது!

  வாழ்த்துக்கள் மாப்பிளை!

  ReplyDelete
 28. கதை சொன்ன விதம் அழகு.பாவம் ஒரு காதலுக்காக வெளில படுத்த,நித்திரையையே தியாகம் செய்த தியாகி நீங்கதான் சிவா !

  ReplyDelete
 29. மன்னிக்கணும் ஜீ.மைந்தன் சிவாவின் பக்கம் போய் அடுத்து உங்கள் பக்கம் வந்த பாதிப்பு உங்கள் பெயர் சிவாவாக மாறிவிட்டது !

  ReplyDelete

Followers

Blog Archive

Powered by Blogger.

Archives

Follow by Email

Copyright © வானம் தாண்டிய சிறகுகள்.. |