ஒரு கடல்வழித் தரையிறக்கத்திற்கு தயாராக இராணுவ வீரர்கள் துருப்புக்காவி கடற்கலங்களில். இன்னும் கொஞ்ச நேரத்தில் கரையை நெருங்கப் போகிறார்கள். பரிச்சயமில்லாத புதிய களமுனை. கரையில் இவர்களை எதிர்கொள்ள, தயாராகக் காத்திருக்கும் எதிரிகள். என்ன நிகழுமோ எனத்தவிப்புடன் நிலைகொள்ளாமல் சிலர். பயணம் ஒவ்வாமல் வாந்தி எடுத்தவாறு சிலர்.
கரையை நெருங்கி கடற்கலத்தின் கதவு திறக்கப்பட, சரமாரியாகத் தாக்கத் தொடங்குகிறார்கள் எதிரிகள். சிலர் கலத்திலேயே உயிரைவிட, கடலில் இறங்கிய உடனே சிலர், தண்ணீருக்குள் மூழ்கி மேலேவரும்போது பிணமாக. குண்டு மழையிலிருந்து தப்பிய சிலர் தட்டுத் தடுமாறி, பாதுகாப்பாக நிலை எடுத்து பதுங்கிக் கொள்கிறார்கள்.
- Saving Private Ryan படத்தில் வரும் உண்மையில் நடைபெற்ற சம்பவம்.
இரண்டாம் உலகப்போர். ஜூன் 6 , 1944 . ஆங்கிலக் கால்வாயூடாக பிரான்சின் Omaha கடற்கரையைக் ( Normandy,France) கைப்பற்றும் நோக்கில் பாரிய தரையிறக்க நடவடிக்கையில் ஈடுபட்ட அமெரிக்காவுக்கும், அங்கு நிலைகொண்டிருந்த ஜெர்மனுக்கும் நடந்த பாரிய சண்டை. அரைமணி நேரம் மட்டுமே நடந்த அந்த சண்டையில் அண்ணளவாக 3000 அமெரிக்க படையினரும், 1200 ஜெர்மன் படையினரும் கொல்லப்பட, அமெரிக்கா வெற்றிகொள்கிறது.
இரண்டாம் உலகப் போரை மையமாகக் கொண்டு எத்தனையோ ஹாலிவுட் படங்கள் வெளிவந்திருந்தாலும் என்னை மிகவும் கவர்ந்த படம் இது.
படத்தின் கதை....
நான்கு சகோதரர்கள் கொண்ட ரின் குடும்பத்தில் (நால்வரும் அமெரிக்க இராணுவத்தில்) மூன்று பேர் சண்டையில் இறந்துவிட, இறுதியாக உள்ள Private James Francis Ryan ஐ சேவையிலிருந்து விடுவித்து, சொந்த நாட்டுக்கு அனுப்ப முடிவு செய்கிறார்கள். ரோந்துப் படையணியில் பிரான்சில் இருக்கும் Ryan (Matt Damon) தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில். அவனைத்தேடி , Omaha தரையிறக்கத்தில் பங்கு கொண்ட கப்டன் ஜோன் எச்.மில்லர் (Tom Hanks) தலைமையில் ஒரு சிறிய குழு புறப்படுகிறது. பின்பு என்னவாகிறது?
இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கப் படையில் பணியாற்றிய Niland Brothers என்ற நான்கு சகோதரர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதை எழுதப்பட்டது.
1998 இல் ஸ்டீவன் ஸ்பில்பேர்க் இயக்கத்தில் வெளியான இப்படம், ஸ்பில்பேர்க் இற்கு இரண்டாவது முறையாக சிறந்த இயக்குனருக்கான Oscar விருது உட்பட, ஐந்து Oscar விருதுகளைப் பெற்றுக் கொண்டது.
Nornmandy, France இலுள்ள அமெரிக்கப்படையின் கல்லறை.
கத்தி முனையில் சூயிங்கம் ஒட்டி, அதில் மிரர் பொருத்தி, எதிரிகளை கண்காணிக்கும் இந்தக் காட்சியை அப்படியே ஆளவந்தானில் 'சுட்டு' இருப்பார் கமல்.
படத்தின் ஆரம்பத் தரையிறக்கக் காட்சிகள் போரின் உக்கிரத்தையும், வலியையும் கண்முன் நிறுத்துகின்றன. நிச்சயம் இதைவிடப் பெரிய ஒரு சண்டை நிகழ்ந்திருக்கிறது எமது நாட்டிலும்....எந்த ஆவணப்படுத்தலும் இல்லாததால் வெளியே தெரியாமல்!
நல்ல விமர்சனம்..
ReplyDeleteபார்க்காத படம்தான்.
மிகவும் அருமையான திரைப்படம் இது..
ReplyDeleteரொம்ப நாட்களாக நானும் எழுதனும் நினைச்சிட்டு இருந்தேன்..
மிகவும் அருமையாக விமர்சனம் பண்ணியிருக்கீங்க..
நான் இந்த படத்தை பார்த்து இருக்கவில்லை , நீங்கள் எழுதிய பிறகு பார்க்கணும் என்ற ஆர்வம் வந்து விட்டது
ReplyDeleteஅருமையாக எழுதயுள்ளீர்கள்
படத்தின் ஆரம்பத் தரையிறக்கக் காட்சிகள் போரின் உக்கிரத்தையும், வலியையும் கண்முன் நிறுத்துகின்றன. நிச்சயம் இதைவிடப் பெரிய ஒரு சண்டை நிகழ்ந்திருக்கிறது எமது நாட்டிலும்....எந்த ஆவணப்படுத்தலும் இல்லாததால் வெளியே தெரியாமல்! "
ReplyDeleteநன்றாக சொன்னீர்கள்
//நிச்சயம் இதைவிடப் பெரிய ஒரு சண்டை நிகழ்ந்திருக்கிறது எமது நாட்டிலும்....எந்த ஆவணப்படுத்தலும் இல்லாததால் வெளியே தெரியாமல்! //
ReplyDelete:(
நல்ல விமர்சனம்.
ReplyDeleteஅருமையாக எழுதயுள்ளீர்கள்..... ஜீ
விமர்சனத்தை வித்தியாசமாக தந்திருக்கிறீர்கள்..
ReplyDeleteபோர் எங்கு நிகழ்ந்தாலும் இலங்கையின் வலி ஞாபகத்திற்கு வருகிறது எமக்கும்..
நல்ல விமர்சனம். வாழ்த்துக்கள் ஜீ !
ReplyDeleteவிமர்சனம் அருமை
ReplyDeleteஅழகா விமர்சனம் பண்ணியிருக்கீங்க!!!
ReplyDeleteவாழ்த்துக்கள்
அருமையாக விமர்சனம் செய்து உள்ளீர்கள்......தொடரட்டும்....
ReplyDeleteஸ்டீவன் ஸ்பில்பேர்க்கின் திறமைக்கு மற்றுமொரு சான்று... பகிர்வுக்கு நன்றி..
ReplyDeleteஎப்பிடி ஜீ?!! உலக படங்களை தவறாமல் பார்த்து விமர்சனமும் தருகிறீர்கள்!! இதனால் நல்ல படங்களை மட்டும் நாங்கள் தேர்ந்தெடுத்து பார்க்கலாம்!!
ReplyDeleteதரமான விமர்சனம்!
ReplyDeleteஅதை சொன்ன விதம் அருமை!
படத்தை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் ....
அடங்கேப்பா...அற்புதமான விமர்சனம் !! படம் பார்ப்பேனா னு தெரியாது..ஆனால் படிச்சுட்டு படம் பார்த்த மாதிரி இருக்கு...
ReplyDeleteஇந்த படம் பார்த்து வாயடைத்துப் போய் அதன் தாக்கத்தில் Call of Duty எனும் கணிணி விளையாட்டை விளையாடியது நினைவிருக்கிறது.. உண்மையில் சுட்டுத்தள்ளவேண்டும் என்பது நோக்கமல்ல... போரில் வாழ்வது என்பதே நோக்கம்.
ReplyDeleteஇந்த படத்தில் என்னை மிகமிக சிலாகித்த ஒரு காட்சி உண்டு.. மகனது இறப்பைச் சொல்ல வரும் அதிகாரிகளின் கார் வருகையைப் பார்த்தே தாய் புரிந்து கொள்ளும் ஒரு காட்சி ... அதில் எந்த வசனங்களும் கிடையாது. ஆனால் பார்க்கும் ஒவ்வொருவரின் மனதினுள்ளும் ஆயிரமாயிரம் வசனங்கள் தோன்றும்!!
வாழ்த்துக்கள்
பார்த்த படம், நல்ல விமர்சனம், மீள நினைக்க வைத்தது.
ReplyDelete!அருமையான விமர்சனம்.. கடைசி வரிகள் நச்..
ReplyDeletemigavum alagaaga pathivu seithu irukkireergal
ReplyDelete