Showing posts with label பொன்னியின் செல்வன். Show all posts
Showing posts with label பொன்னியின் செல்வன். Show all posts
Friday, July 27, 2012
Tuesday, November 16, 2010
மணிரத்னத்தின் அடுத்த 'அட்டாக்'?
மனதில் ஒரு சஞ்சலம்.
ஏதோ ஒரு இனம்புரியாத கலக்கம்
எப்போதுமே ஒரு குழம்பின மனநிலை
நான் குழம்பி என்னதான் செய்வது..?
தலைவர் சுஜாதா சொன்ன மாதிரி,' புத்திக்கு தெரியுது, மனசுக்கு தெரியல'.
ஒழுங்காகத் தூங்கவும் முடியல..
என்னாச்சு எனக்கு..?.
நீங்க நினைக்கிறமாதிரி ஒண்ணுமில்லை!
மணிரத்னத்தின் அடுத்த 'அட்டாக்' பொன்னியின்செல்வன் என்றொரு சேதி (உபயம் -அண்ணன் கேபிள் சங்கர்).
அதைக் கேட்டதில இருந்துதான் இப்படி..
இதெல்லாம் ஓவர்ன்னு நீங்க நினைச்சா...என்னோட நண்பன் ஒருத்தன் நித்திரைல திடீர்னு முழிச்சு கத்துறானாம்!
சோழ சாம்ராஜ்யத்துக்குத் தான் எத்தனை சோதனைகள்! சமீபத்தில செல்வராகவ பாண்டியன் ஒரு பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்டிருந்தார். அதில அவருக்குத்தான் பயங்கர இழப்புங்கிறதால ஒக்கே.
இப்போ மணி 'அட்டாக்' பண்ண போறாராம்.
தளபதி நல்லா இருந்தது!, ராவணன் எப்படியோ.....இருந்தது! அதெல்லாம் வடமொழிக்கதைகள். எதையாவது பண்ணிட்டு போறார்னு விட்டுடலாம். ஆனா தமிழ் என்று வரும்போது...!
ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு கடைசில...!
பொன்னியின் செல்வனை ரசித்துப் படித்தவர்களால் அந்தப் பாத்திரங்களோடு எந்த நடிகர்களையும் பொருத்திப் பார்க்க முடியாதென்பது எனது கருத்து.
ஏற்கெனவே முன்பு எம்.ஜி.ஆர். பொன்னியின் செல்வனுக்குத் திரைக்கதை எழுதும் பொறுப்பை இயக்குனர் மகேந்திரனிடம் கொடுத்திருந்தாராம்.
நல்லவேளை! அவர் எழுதல!
எம்.ஜி.ஆர். வந்தியத் தேவேனாக நடிக்கிறதே பெரிய கொடுமை...அதைவிடப் பெரிய கொடுமை ஜெயலலிதாவோ, சரோஜாதேவியோ குந்தவையாக நடிக்கிறது! தப்பிச்சம்டா!
இருந்தாலும் சிவாஜி காமெடி பண்ணிய 'ராஜராஜசோழன்' ன்னு ஒரு படம் வந்திச்சாமாம்! சிவாஜி (சோழன்) கோபப்படுறாராம்னு, அவர் முகத்துல 'ரெட்' கலர் போகஸ் லைட்டெல்லாம் அடிச்சு....ஹய்யோ! செம்ம காமெடி!
இப்போ மணி என்ன காமெடி பண்ணப் போறாரோ?
யாராவது தமிழே தெரியாத ஹிந்தி நடிகைதானே குந்தவை?
வசனம் சுஹாசினியா?
ஆழ்ந்த கருத்துக்கள் கொண்ட ராவணன் வசனங்கள் இன்னும் காதில கேக்குது!
பிரகதீஸ்வரா காப்பாற்று!

Sunday, August 15, 2010
இதே பூமி....இதே நிலவு....அரிசிலாற்றங்கரையில்.....
நிலா வெளிச்சம், கருமை படர்ந்த மரங்களும், கிளைகளும், மெலிதாக வீசும் காற்றில் இலைகளின் சலசலப்பு - அழகான இந்தப் பொழுதில் உங்களுக்கு என்ன தோன்றும்?
எனக்கு மனதில் ஒரு மென்சோகம் படரும். ஏன்?
நிலவு வெளிச்சத்துக்கும் சோகத்துக்கும் என்ன சம்பந்தம்?
நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா?
நிலவொளி சோகத்தை ஏற்படுத்துகிறதா? இல்லை அந்த ஒளியில் எமது அடிமனதின் சோகங்கள் கிளறப்பட்டு பிரதி பலிக்கிறதா?
இதைவிட இன்னொன்றும் கற்பனையில் தோன்றும்.
ஒரு ஆற்றங்கரை, குதிரையின் குழம்புச் சத்தம்.
இதே போன்ற ஒரு ராத்திரியில் தானே இதே பூமி, இதே நிலவில்தானே அரிசிலாற்றங்கரையில் வந்தியதேவன் குதிரையில் சென்றிருப்பான்.
நீங்கள் கல்கியின் பொன்னியின் செல்வன் வாசித்தவரா? அப்படியானால் நிச்சயம் உங்களுக்கும் இந்த அனுபவம் இருக்கும், அல்லது இதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை.
ஆறாம் வகுப்பு முடித்து, பள்ளியின் ஆண்டிறுதி விடுமுறையின் போது எனக்கு வாசிக்கக் கிடைத்தது. சில தினகலாகத் தொடர்ந்து வாசித்தேன் என்று சொல்ல முடியாது, அதே தியானமாக இருந்தேன்.
நாளின் அத்தியாவசிய கருமங்கள் தவிர்ந்த ஏனைய பெரும்பகுதி முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டது பொன்னியின் செல்வன்.
மின்சாரமில்லாத அந்த இரவுகளில் மண்ணெய் விளக்கில் வெகு நேரம் விழித்திருந்து வாசித்தது இன்னும் பசுமையாய் என் நினைவுகளில்.
இடையிடையே வீட்டு முற்றத்தில் நிலா வெளிச்சத்தில் வந்து நிற்கும்போது, மனம் நூற்றாண்டுகள் கடந்து, கடல் கடந்து,
அரிசிலாற்றங்கரையிலும், பழையாறையிலும், தஞ்சை, கோடிக்கரை என சஞ்சரிக்கும்.
எனது நினைவிலும் , கனவுகளிலும் வாட்களும், வேல்களும், குதிரையின் குழம்பொலிகள், யானையின் பிளிறல்கள், வெற்றி முழக்கங்கள்.
வந்தியத்தேவன், குந்தவை, ஆதித்த கரிகாலன், ஆழ்வார்க்கடியான், அருள்மொழி, வானதி, பூங்குழலி, சேந்தன் அமுதன், பார்த்திபன், பழுவேட்டரையர்கள், நந்தினி, சுந்தரச் சோழர், அநிருத்தர், கந்தமாறன், ரவிதாசன் எல்லோரும் என் சொந்தக்காரர், அயலவர்கள் ஆனார்கள்.
அவர்களின் உருவமும், குணவியல்புகளும் மனதில் ஆழமாக பதிந்து போய், பார்க்கும் மனிதர்களிளெல்லாம் அவர்களைத் தேட முயற்சித்திருக்கிறேன்.
கல்கியின் அளவுக்கு மீறாத வர்ணனைகள், நகைச்சுவை கலந்த எழுத்து, ஓவியர் மணியம் வரைந்த அருமையான, உயிரோட்டமுள்ள ஓவியங்கள் என்றும் மனதை விட்டகலாதவை.
குறிப்பாக ஆரம்பத்தில் வந்த அந்த ஓவியங்கள் பின்னாளில் எந்தப் பதிப்பிலும் நான் காணவில்லை. கல்கியில் தொடராக வந்தபின் முதல் பதிப்பான புத்தகங்கள் வைத்திருந்த வாசிக்கக் கொடுத்த கண்ணன் மாமாவும் மறக்க முடியாதவர்.
இதைத் திரைப்படமாகவோ, தொடராகவோ எடுத்தால் நிச்சயம் நன்றாயிருக்காது (வாசித்தவர்களுக்கு). கல்கியும், மணியமும் மனதில் பதித்துச் சென்ற பாத்திரங்களுக்கு யாருமே இணையாக முடியாது.
முன்பு எம்.ஜி.ஆர். திரைப்படமாக எடுக்கும் முயற்சியில் இருந்தாராம். அவர் வந்தியத்தேவனாக? நடிப்பதை ஓரளவாவது ஜீரணிக்க முடிந்தாலும் (நிச்சயமாக என்னால் முடியாது), அதைவிடக் கொடுமை, எம்.ஜி.ஆர்.வந்தியத் தேவேனாக நடித்தால், குந்தவை? ஜெயலலிதாவோ, சரோஜாதேவியோ குந்தவையாக நடித்தால்?
அய்யய்யோ நினச்சாலே பயங்கரமா இருக்கு. நல்ல வேளை தஞ்சைப் பிரகதீஸ்வரர்தான் காப்பாற்றினார்.
Subscribe to:
Posts (Atom)