மனதில் ஒரு சஞ்சலம்.
ஏதோ ஒரு இனம்புரியாத கலக்கம்
எப்போதுமே ஒரு குழம்பின மனநிலை
நான் குழம்பி என்னதான் செய்வது..?
தலைவர் சுஜாதா சொன்ன மாதிரி,' புத்திக்கு தெரியுது, மனசுக்கு தெரியல'.
ஒழுங்காகத் தூங்கவும் முடியல..
என்னாச்சு எனக்கு..?.
நீங்க நினைக்கிறமாதிரி ஒண்ணுமில்லை!
மணிரத்னத்தின் அடுத்த 'அட்டாக்' பொன்னியின்செல்வன் என்றொரு சேதி (உபயம் -அண்ணன் கேபிள் சங்கர்).
அதைக் கேட்டதில இருந்துதான் இப்படி..
இதெல்லாம் ஓவர்ன்னு நீங்க நினைச்சா...என்னோட நண்பன் ஒருத்தன் நித்திரைல திடீர்னு முழிச்சு கத்துறானாம்!
சோழ சாம்ராஜ்யத்துக்குத் தான் எத்தனை சோதனைகள்! சமீபத்தில செல்வராகவ பாண்டியன் ஒரு பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்டிருந்தார். அதில அவருக்குத்தான் பயங்கர இழப்புங்கிறதால ஒக்கே.
இப்போ மணி 'அட்டாக்' பண்ண போறாராம்.
தளபதி நல்லா இருந்தது!, ராவணன் எப்படியோ.....இருந்தது! அதெல்லாம் வடமொழிக்கதைகள். எதையாவது பண்ணிட்டு போறார்னு விட்டுடலாம். ஆனா தமிழ் என்று வரும்போது...!
ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு கடைசில...!
பொன்னியின் செல்வனை ரசித்துப் படித்தவர்களால் அந்தப் பாத்திரங்களோடு எந்த நடிகர்களையும் பொருத்திப் பார்க்க முடியாதென்பது எனது கருத்து.
ஏற்கெனவே முன்பு எம்.ஜி.ஆர். பொன்னியின் செல்வனுக்குத் திரைக்கதை எழுதும் பொறுப்பை இயக்குனர் மகேந்திரனிடம் கொடுத்திருந்தாராம்.
நல்லவேளை! அவர் எழுதல!
எம்.ஜி.ஆர். வந்தியத் தேவேனாக நடிக்கிறதே பெரிய கொடுமை...அதைவிடப் பெரிய கொடுமை ஜெயலலிதாவோ, சரோஜாதேவியோ குந்தவையாக நடிக்கிறது! தப்பிச்சம்டா!
இருந்தாலும் சிவாஜி காமெடி பண்ணிய 'ராஜராஜசோழன்' ன்னு ஒரு படம் வந்திச்சாமாம்! சிவாஜி (சோழன்) கோபப்படுறாராம்னு, அவர் முகத்துல 'ரெட்' கலர் போகஸ் லைட்டெல்லாம் அடிச்சு....ஹய்யோ! செம்ம காமெடி!
இப்போ மணி என்ன காமெடி பண்ணப் போறாரோ?
யாராவது தமிழே தெரியாத ஹிந்தி நடிகைதானே குந்தவை?
வசனம் சுஹாசினியா?
ஆழ்ந்த கருத்துக்கள் கொண்ட ராவணன் வசனங்கள் இன்னும் காதில கேக்குது!
பிரகதீஸ்வரா காப்பாற்று!
கடேசியில கவித்துட்டிய தலைவா
ReplyDeleteபடம் நல்லா வந்தா சரி...
ReplyDeleteநன்றி பனித்துளி சங்கர், உங்கள் வருகைக்கு!
ReplyDeleteநன்றி அருண்! இன்னுமா? :)
ராஜ ராஜ சோழன் படத்தில் பழம் பெரும் நடிகை எஸ்.வரலக்ஸ்மி குந்தவையாக நடித்த கொடுமையும் நடந்ததே!
ReplyDelete@கிருஷ்குமார்
ReplyDelete//பழம் பெரும் நடிகை எஸ்.வரலக்ஸ்மி குந்தவையாக//
அப்படியா? நான் சோழன் கோபப்படும்(?!)சீன் மட்டுமே தொலைக்காட்ச்சியில் பார்த்தேன்! :)
//இருந்தாலும் சிவாஜி காமெடி பண்ணிய 'ராஜராஜசோழன்' ன்னு ஒரு படம் வந்திச்சாமாம்! சிவாஜி (சோழன்) கோபப்படுறாராம்னு, அவர் முகத்துல 'ரெட்' கலர் போகஸ் லைட்டெல்லாம் அடிச்சு....ஹய்யோ! செம்ம காமெடி!//
ReplyDeleteபய புள்ள ...ஓவர் அக்டிங் அதிகமா கொடுக்குமே :-))
@தனி காட்டு ராஜா
ReplyDelete//பய புள்ள ...ஓவர் அக்டிங் அதிகமா கொடுக்குமே
:-))//
அதேதான்! :))
அதோடு மணி ரத்னம் கதையையும் ஊத்தி மூட வேண்டியதுதான். நம்மவர்கள் மன்னிக்க மாட்டார்கள்.
ReplyDelete@ கக்கு - மாணிக்கம்
ReplyDeleteஅது எப்பிடி! நம்மவர்கள்தான் :))))
very true............someone pls tell him not to touch/take ponniyin selvan.........
ReplyDeleteவிடுங்க பாஸ், யாராவது ஒரு ஆளு எடுக்கணும்ல...
ReplyDeleteஎத்தனையோ பேர் “பொன்னியின் செல்வன்” திரைப்படமா பார்த்துட்டாங்க....
//பிரகதீஸ்வரா காப்பாற்று!//
ReplyDeleteநானும் உங்கள் பிரார்த்தனையில் கூட்டு சேர்கிறேன். கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற ஆராய்ச்சி செய்ததில்லை. ஆனால் இப்படி எல்லாம் நியூஸ் படிக்கும் போது எந்த பிரார்த்தனையும் செய்ய தயாராக இருக்கிறேன். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.
//பொன்னியின் செல்வனை ரசித்துப் படித்தவர்களால் அந்தப் பாத்திரங்களோடு எந்த நடிகர்களையும் பொருத்திப் பார்க்க முடியாதென்பது எனது கருத்து.//
ReplyDeleteI know.
I totally agree...
ReplyDelete