Sunday, November 28, 2010

இதப் பற்றி நீ என்ன நினைக்கிறே?


'இதப் பற்றி நீ என்ன நினைக்கிறே?' - சிங்கம் கேட்டான்.

அசோகச் சக்கரவர்த்தி இல்லாமல் எப்படி ஒரு சரித்திரப் பாடம் இல்லையோ, அதே போல 'இதப் பற்றி நீ என்ன நினைக்கிறே?' என்ற கேள்வியைக் கடந்து செல்லாமல் இளமைப்பருவம் பையன்களுக்கு இல்லை.

கேள்வி கேட்கப்படும் நேரம் மாறுபடலாம். அனால் காலம், கேட்கிறவனைப் பொறுத்த வரையில் அவனுக்கு வாழ்வின் வசந்த(?) காலமாகவும், எங்களைப் பொறுத்தவரை எங்களின் போதாத காலமாகவும் இருக்கும்.

கேள்வியின் வடிவம் மாறலாம். 'இதுக்கு என்ன அர்த்தம்?', 'அப்ப ஒக்கே தானே?' என்பதாக.
உட்பொருள் ஒன்றுதான். பதிலும் அவ்வாறே.
'அவளுக்கும் ஒரு ஐடியா இருக்கலாம்', 'உன்ன பிடிச்சிருக்கு ன்னு நினைக்கிறேன்', 'ஆமாமா' இவ்வாறாக.
மாற்றுக் கருத்துக்களைத் தெரிவித்தோமானால் அவ்வளவுதான். உடனே பார்வை மாறும்.

வெளியே ஒன்றும் சொல்லாட்டியும் உள்ளே என்ன நினைக்கிறான்னு ஊகிக்கலாம்.
பொறாமை, புகைச்சல்ல சொல்றான், இவன எவளுமே பார்த்திருக்க மாட்டாள் அதான் வயித்தெரிச்சல்.

நானெல்லாம் அப்போது ஒல்லிப்பிச்சானாக வேறு இருந்ததால் (இப்போ?), எங்கே வயிதெரிச்சல்ன்னு முடிவே பண்ணிடுவாங்களோன்னு உடனேயே 'அப்பிடியா?', 'இருக்கலாம்' ன்னு பொத்தாம் பொதுவாக எதையாவது உளறி, எஸ்கேப்.


இதே கேள்வியை சிங்கம் கேட்டபோது உடனடியாக நான் எதையும் கூறவில்லை.

சிங்கம் ஒரு சிந்தனாவாதி. பெரும்பகுதி சிந்தனை பெண்கள் பற்றித்தான். சமீபகாலமாக தான் அடிக்கடி சந்திக்க நேரும் பெண்ணைப் பற்றித்தான் அப்படிக் கேட்டான்.

அவள் செய்யும் எல்லாக் காரியங்களுக்கும் தனக்குச் சார்பான காரணங்களைக் கற்பித்துக் கொண்டு, இதுக்கு என்ன அர்த்தம்? அப்போ அதுக்கு என்ன அர்த்தம்?
உடனடியாக 'ஆமா'ன்னு சும்மா சொல்றான்னு தெரிஞ்சிடும் போய் சொல்றான்னு.
இல்லேன்னு சொன்னா கேட்கமாட்டான்...அடம்பிடிப்பான்.

தீவிர சிந்தனையில் நான். 

இங்கு தீவிர சிந்தனை என்பது, தலையைச் சிறிது சாய்த்து, தொலைதூரத்தில் பார்வையைச் செலுத்தி, வெறித்த பார்வையுடன், புருவத்தைச் சிறிது சுருக்கி, முகத்தில் உணர்ச்சிகளற்ற ஒரு வெறுமையைப் படர விட்டு.....! கைகளைக் கட்டிக்கொண்டு நிற்கும் பழக்கம் இருந்தால், ஒரு கையால் தாடையைத் தடவிக் கொள்ளலாம், என்னை மாதிரி.

ஆனா அதே நேரத்தில எதிர்ல வாற பொண்ணை 'சைட்' அடிக்கலாம். 

இது தான் முக்கியமான விஷயம். ஆனா ரொம்ப கஷ்டமானதும் கூட. ஏன்னா நம்ம பசங்க 'சைட்' அடிக்கிறாங்க ன்னா அப்பிடியே முகத்தில தெரியும். பார்வை திசை மாறும், பேச்சு 'கட்' ஆகும், மூஞ்சில 'பல்ப்' எரியும். எங்களுக்கு பின்னால யாரோ பொண்ணு போகுதுன்னு திரும்பாமலே கண்டுபிடிக்கலாம்.

இதில எனக்கொரு பிரச்சனை என்னன்னா சிங்கம் தான் காதலைப் பற்றி சொல்ல ஆரம்பிக்கும் நேரம் பாத்துதான் எனக்குக் கொட்டாவி வரும். அத நான் மறைச்சு விடுறதுக்கு படுறபாடு இருக்கே ஐயோ ஐயோ.... நானும் எவ்வளவு நேரம் தான் வலிக்காத மாதிரியே...!

நாளுக்கு நாள் சிங்கத்தில் காதல் தீவிரமாகி எங்களைக் கொலைவெறியுடன் துரத்தத் தொடங்கினான். கதை சொல்லத்தான்! பலமுறை காதல் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்கானதால் அவன் வருகிறான்னதுமே நம்ம நண்பர் கூட்டம் தெறிச்சு ஓடுற அளவுக்கு போயிட்டுது.

நிலைமை தீவிரமான ஆரம்பத்திலேயே நான் சொல்லிவிட்டேன். 'மச்சான் அங்க சொல்லி முடிவு தெரிஞ்சப்புறம், கற்பனை, கதை எல்லாத்தையும் 'டெவலப்' பண்ணு. இல்லாட்டி கஷ்டம். அது வரைக்கும் எனக்கு இந்தக் கதை ஒண்ணும் சொல்லவேணாம்'.

இதன்பிறகு என்னிடம் ஒன்றும் சொல்லல. எங்கள் நட்பில் கூட சிறு விரிசல். ஏத்தி விட்டு கூத்து பாக்கும் தீபாவிடம்தான் எல்லாம் சொல்ல, அவனும் தன்னால முடிஞ்ச அளவுக்கு, உசுப்பேத்தி, உருவேத்தி....

ஒரு சுபயோக, சுபதினத்தில் சிங்கம் அசிங்கப்பட்டு, மனசெல்லாம் ரணகளமாகி...

அன்றிரவு, எங்கள் அட்வைசர், காதல் 'கோச்' தலைமையில் நாங்களெல்லோரும் கூடி,

அந்த சோகத்திலும் சிங்கம் தளராமல் 'கோக்' தான் குடிச்சான். நாங்க தான் சோகம் தாங்க முடியாம 'பியர்'.

அப்ப சிங்கம் என்ன நினைத்தானோ, கேட்டான் ஒரு கேள்வி, 'டேய் உங்க எல்லாரையும் விட நான்தானேடா நல்லவன் ?'

'இதைப்பற்றி நீங்க என்ன நினைகிறீங்க?'

10 comments:

  1. வித்தியாசமாக இருக்கு

    ReplyDelete
  2. 'இதைப்பற்றி நீங்க என்ன நினைகிறீங்க?'///

    காதல் ஒரு அபத்தமான விசயம் என்று..))))

    ReplyDelete
  3. நல்லா இருந்தது!

    ReplyDelete
  4. //இதைப்பற்றி நீங்க என்ன நினைகிறீங்க?'//
    காதல் இனிமையான முட்டாள்தனம்! கொடுமையான புத்திசாலித்தனம்!

    ReplyDelete
  5. ஒன்னும் நினைகிறதுக்கே இல்ல ...

    ReplyDelete
  6. வித்தியாசமான இடுகை தாங்க.

    ReplyDelete
  7. வித்தியாசமான பதிவு..... தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  8. @KANA VARO
    நன்றி!

    @ganesh
    :))

    @எஸ்.கே
    nice!

    @கே.ஆர்.பி.செந்தில்
    :))

    @Chitra
    really? :)

    @பிரஷா
    sure! :)

    ReplyDelete
  9. ஜீ ... Superb!

    "காதல் செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயம் என்ன?"
    --------------------------------
    "யார் காதல் செய்யும்போது? நீங்கள் என்றால் பர்ஸைக் கவனியுங்கள்.மற்றவர்கள் என்றால் அவர்களது அசட்டுத்தனங்களைக் கவனித்து சிரியுங்கள்."
    இது சுஜாதாவிடம் கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில்....
    உண்மையுங்களா?

    ReplyDelete
  10. @க.சுரேந்திரகுமார்
    இரண்டாவதில் மட்டுமே எனக்கு அனுபவம்...எஸ்கேப்! :-)

    ReplyDelete