கடந்த வாரம் பஸ்ல மின்னலே படம் போட்டிருந்தாங்க. கவுதம் மேனன் படங்களில், குறைந்த பட்ஜெட்டில், அதிகமான ரிச் லுக்கில்! ஒவ்வொரு காட்சியமைப்பிலும் அவ்வளவு மினக்கெடல்!
படம் வெளிவந்தபோது பார்த்தது. அப்போது யாழ்ப்பாணத்தில் மிகப் பிரசித்தி பெற்றிருந்த(!) சந்திரன் மினியில். (சந்திரன் மினி பற்றிய ஓர் எலக்கியப்பதிவு பின்னர் வரும்) டீ.வி திரையில், முதன்முதல் வெளிவந்த மோசமான காமெரா கொப்பியில் பார்த்தபோது ஆர்.பி.சௌத்ரி தயாரிச்ச படம் மாதிரியே இருந்திச்சு! டைட்டில்வேற சரியாப் பார்க்காததால் படம் முழுவதும் ஒரே ஆச்சரியம்! எப்படி இந்த மாதிரியொரு மியூசிக்கை எஸ்.ஏ.ராஜ்குமாரால் போட முடிஞ்சது?
அந்தக்காலத்தில எல்லாம் மறந்துபோய்க்கூட வீட்டில் ரேடியோ கேட்பதில்லை. அவ்வளவு பயம்! காரணம் எஸ். ஏ. ராஜ்குமார். எல்லா ஸ்டேசன்களிலும் கொலவெறியாக் கொன்னுட்டிருந்தாய்ங்க. அப்புறம் மின்னலே ஓடியோ சிடி கேட்டு, ஹாரிஷ் ஜெயராஜ் பற்றித் தெரிஞ்சு, நொந்துபோனேன் தப்பா யோசிச்சிட்டியேடா ஜீ! ஆனாலும் இரண்டுபேருக்கும் ஒற்றுமை இருக்கு. தாங்கள் போட்ட ட்யூனையே திரும்பத் திரும்ப போட்டு, அது ஹிட்டா வேற ஆகிடும்!
நொந்த ஃபீலிங்க்ஸ்!
அதை எல்லாம் விடுங்க ரீமா..
ரீமாவை பார்த்தால் என்ன தோணும்? நண்பர்கள் பலருக்கு மின்னலே பார்த்த உடனேயே ரீமாவைப் பிடித்துக் கொண்டதாம்! ஒரு நண்பருக்கு ரீமா கட்டிலில் விழும் சீன் மறக்க முடியாதென்றும் அவ்வளவு அழகாயிருப்பார் என்றும் சொன்னார். எனக்கு தூள் 'இத்துனூண்டு முத்தத்தில' பாட்டு பார்த்தபோதுதான் மனதில் 'பச்சக்'கென்று ஒட்டிக் கொண்டார் ரீமா. இப்பிடி ரீமாவை பார்த்தால் பலருக்கு பல பீலிங்ஸ் தோணும்.
ஆனா நம்ம செல்வராகவனுக்கு தோணியிருக்கு பாருங்க 'ஆயிரத்தில் ஒருவன்ல' நிக்க வச்சு...நொந்து போயிட்டேன்
ஒவ்வொருத்தனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்க்ஸ்.
சொந்த ஃபீலிங்க்ஸ்!
இப்போ செல்வா பொன்னியின் செல்வனைப் படமா எடுக்கப்போறதா சொல்றாய்ங்க செல்வா சோழ சாம்ராஜ்யத்த ஒரு வழி பண்ணாம விட மாட்டார் போலருக்கு. ஏற்கனவே கதறக் கதற வன் புணர்ந்ததில், படம் பார்த்து தமிழன் வரலாறு தெரிஞ்சு கொள்ற பயபுள்ளக கோஷ்டி புதுசு புதுசா பீதியக் கிளப்பிட்டு இருந்தானுக. இப்போ இது வேறையா? வழக்கம்போல இந்த வாட்டியும் இவங்க பிளான் சொதப்ப, பிரகதீஸ்வரர் அருள் பாலிக்க வேணும்!
நியாயமான ஃபீலிங்க்ஸ்!
பஸ்ல ஒரு ஆன்டி இன்னொரு ஆன்டிகிட்ட ஏதோ டீ.வி சீரியல்ல முக்கியமான டவுட் கேட்டுட்டிருந்தாங்க...அப்ப தோணிச்சு
உண்மையிலேயே பாலசந்தர் பெரிய மனுஷன்தான். அவர் படங்களில் வரும் பெண் பாத்திரங்கள் பல சமயம் எரிச்சலை ஏற்படுத்தினாலும், இப்பக் கூட சொல்ல முடியாத விஷயங்களை, அந்தக் காலத்திலேயே சொல்லியிருக்காரு. உதாரணமா 'அவர்கள்' படம்!
எல்லாத்தையும் விட ஒட்டுமொத்த டீ.வி சீரியல்களின் பிதாமகரே அவர்தான்! ஒரேயொரு படம்! அந்த ஒரே படத்தை வைத்து எத்தனை வருஷமா எத்தனை சீரியல்கள்?
படம்... 'அவள் ஒரு தொடர் கதை'
ஓவர் ஃபீலிங்க்ஸ்!
ஓர் ஆமையும், ரெண்டு கொக்கும் பறக்க ரெடியா இருந்தாங்க. ஒரு நீண்ட குச்சியின் இரு அந்தங்களையும் கொக்குகள் கவ்விப் பிடிக்க ஆமை நடுவில கவ்விகொண்டு..
ஒரு கொக்கு சொல்லிச்சாம் "மச்சி என்ன ஆனாலும் சரி. நீ மட்டும் வாயைத் திறந்திடாதே... முன்னாடி ஒரு தடவை நடந்தது தெரியுமில்ல.."
"ம்ம்.. தெரியும் நானும் சிறுவர் நீதிக்கதைகள்ல படிச்சிருக்கேன்"
பறக்கத் ஆரம்பிச்சாங்க ஆமை வாயே திறக்கல! ஒரு கொக்குக்கு ரொம்ப ஆச்சரியம் எவ்வளவு சமர்த்தா வாயே திறக்காம வர்றான்னு - அது டீ.வி சீரியல் பாக்குற கொக்கு அதனால ஃபீலிங்ஸ் ஆகி "உன்ன நினைச்சா எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு"
அவ்வளவுதான்! ஒருபக்கம் நிலை சரிந்து, தடுமாறி விழத் தெரிஞ்சு..மற்றக் கொக்கு ரொம்பக் கஷ்டப்பட்டு, அலகு நெரிபட்டு ரத்தம் கசிய..இவ்வளவு கஷ்டத்திலையும் அது பிடியை விடவில்லை. தன் நண்பன் தனக்காக பட்ட கஷ்டத்தைப் பார்த்த ஆமையும் நெகிழ்ந்து கண்களில் நீருடன்...
இதற்கிடையில் மற்றக் கொக்கு திரும்பவும் சுதாரித்து, ஒரு வழியா மீண்டும் பிடித்துக் கொண்டு ஸ்மூத்தா பறக்க..
ஆமை ரொம்ப ஃபீலிங்ஸோட " தாங்க்ஸ் மச்சான்"
ஹாய் ஜீ,
ReplyDeleteசுவாரசியமான அலசல். புதிய நீதிக்கதை அருமை. பஸ்ல என்னேன்னோ படமெல்லாம் போடறானுக, இன்னமும் பஸ்ல பில்லா-2 போடலையா?
//
(சந்திரன் மினி பற்றிய ஓர் எலக்கியப்பதிவு பின்னர் வரும்)
//
எதிர்பார்க்கிறேன்..
//Vimalaharan
ReplyDeleteபஸ்ல என்னேன்னோ படமெல்லாம் போடறானுக, இன்னமும் பஸ்ல பில்லா-2 போடலையா?//
போட்டிருப்பாங்க பாஸ்! அந்த நாள்ல நான் சிக்கல! ஒரிஜினல் DVD வந்தா பாத்துரலாம். எவ்வளவோ பாத்துட்டமாம்!
செம பீலிங்க்ஸ்..
ReplyDeleteசெல்வராகவனுக்கு ஏன் இந்த கொலை வெறி :(
ReplyDeleteவகை வகையா கலக்கல் ஃபீலிங்க்ஸ்!
ReplyDeleteநன்றி.
சூப்பர்
ReplyDeleteகவனிப்பும் வாழ்த்துக்கள் நண்பா
எழு ஸ்வரத்தை தான் எல்லாம் மாத்தி மாத்தி போட்டு துட்டு பாக்குறாங்க
ReplyDeleteஆமை அமர்க்களம் போங்க...
ReplyDeleteஃபீலிங்க்ஸ் பலவகை:)
ReplyDeleteஹாரிசுக்கும் ராஜ்குமாருக்கும் இருக்கும் ஒற்றுமை அந்நியனில் வரும் ஃப்ளாஷ்பேக்கில் அவர் போட்ட 'லாலிலாலோ'வில் விளங்கியது...:)
ReplyDeleteபொன்னியின் செல்வன் புத்தகத்தில் இல்லாத ஒரு campfire சீன நிச்சயம் சேத்துருவான் நம்ம கண்ணாடிகாரன்...:)
ReplyDeleteஅவள் ஒரு தொடர்கதைல நாயகி முதல் காட்சியில் கண்ணாடியை பார்த்து தனது சேலையை அட்ஜஸ்ட் செய்யும் காட்சியிலேயே நடுத்தர வர்க்க வேலைக்கு செல்லும் பெண்களின் சமரசங்களை முத்திரை குத்தியிருப்பார் கேபி.. தலைவர் தலைவர்தான்...
ReplyDelete///ரீமாவை பார்த்தால் என்ன தோணும்?///
ReplyDeleteஹி....ஹி.....!
////இப்போ செல்வா பொன்னியின் செல்வனைப் படமா எடுக்கப்போறதா சொல்றாய்ங்க ////
ReplyDeleteஇன்னும் அடங்கலையா பயபுள்ள.........?
இசை!ம்ம் அப்ப ஹாரிஸ் மயிக் புரிந்துவிட்டீர்கள்§ஈஈ
ReplyDeleteசந்திரன் மினி !ம்ம் நானும் ஒரு இலக்கிய பதிவு போடுகின்றேன் விரைவில் !ஹீ
ReplyDeleteஅருமையான அலசல்...எங்க இருந்தெல்லாம் நம்ம ஆளுக யோசனை பண்றாங்க....வாழ்த்துக்கள்...!
ReplyDelete