Tuesday, November 8, 2011

வேலாயுதம் Vs ஏழாம் அறிவு - ஒரு நடுநிலை ரிப்போர்ட்!


வேலாயுதம், ஏழாம் அறிவு படங்களை பற்றி நான் ஏன் எழுதவில்லை எனப் பலர் (யார் என்றெல்லாம் கேட்கப்படாது) ஏகப்பட்ட மெயில்களை அனுப்பிக் கேட்டிருந்தார்கள்! எது நல்ல படம்? என்றெல்லாம் பல கேள்விகள்! அவர்களின் அன்புக்கட்டளைக்கு இணங்க இந்த நடுநிலைப் பதிவு! 

நடுநிலைமை!

இரண்டு படத்தையும் ஓசில தான் பார்த்தேன்! பார்க்க வச்சிட்டாய்ங்க பஸ்ல!
இரண்டையுமே பதினாறாம் நம்பர் சீட்ல இருந்துதான் பார்த்தேன்! (நடுநிலைமை! - இதுதான் ரொம்ப முக்கியம்!)  

வேலாயுதம் ஆரம்பிக்கும்போது சிரிச்சுக்கிட்டு இருக்கும்போதே தூங்கிடணும்னு நினைத்தேன்! முதல் பாதில விஜயின் காமெடிகளை ரொம்ப ரசிச்சுக்கிட்டே, இரண்டாம் பாதில கொஞ்சம் பாத்துட்டே தூங்கிட்டேன். பார்த்தவரையில் எனக்குப் பிடிச்சிருந்தது! இன்னும் கொஞ்சம் பார்த்திருக்கலாமோன்னு தோணிச்சு!

ஏழாம் அறிவு ஆரம்பிச்சப்போ நான் எதுவுமே நினைக்கல! ஏதோ நடக்கிறது நடக்கட்டும்னு இருந்தேன். டோங்க்லி, சுருதியைத் தேடி, எல்லாப் போலீசையும் போட்டுட்டு வர்றான். சூர்யா சுருதியைக் கூட்டிட்டு வெளியே ஓட ட்ரை பண்றார். 

அடுத்து என நடக்கும்? எவ்வளவு த்ரில்லான சூழ்நிலை? ஒரு தமிழனா ஆர்வத்தோட, படபடப்போட இருந்திருக்கணுமா இல்லையா? ஆனா பாருங்க சரியா அந்த டைம்ல தூங்கித் தொலைச்சிட்டேன்! வர வர நம்மளுக்கு தமிழுணர்வு குறையுதோ?

ஆக, நான் விரும்பாமலே என்னைத் தூங்க வைத்த ஏழாம் அறிவே சிறந்தபடம் என்று இங்கே பதிவு செய்கிறேன்! (அடுத்தநாள் அபீஸ் போகணுமில்ல..!)

யாரும் காண்டாயிடாதீங்க! இது என்னோட நேர்மையான அனுபவம் மட்டுமே! சரி இனி சீரியசான விஷயங்களைப் பார்க்கலாம்! 

ஜெனிலியா!

ஜெனி தனது தமிழ்த் திரையுலக வரலாற்றில் முதன்முறையாக ஒரு மனநிலை சரியான பாத்திரத்தில் நடிச்சிருக்கு! ஆனா பாருங்க அந்தப் புள்ளைய போட்டு வில்லன்க அடிச்சுடுறானுங்க..ரத்தம்லாம் வருது..
மேலேருந்து தள்ளி விட்டு நான் ஆடிப்போயிட்டேன் அப்பறமா தப்பி வந்ததும்தான் நிம்மதியாச்சு!

மனசுக்கு ரொம்ப கஷ்டமா போச்சு! இதுக்கு பேசாம ஜெனி வழக்கம்போல தலைய சொறிஞ்சுகிட்டு, கெக்கே பிக்கேன்னு சிரிச்சுட்டு அலைஞ்சிருக்கலாமோன்னு தோணிச்சு! 

ஆனா ஒண்ணு! இப்ப எல்லாருக்கும் தெளிவாப் புரிஞ்சிருக்கும் ஜெனி நார்மலான பொண்ணுதான்னு! மேலேயுள்ள படத்தில சட்டையக் கிழிச்சிட்டு இருக்கிறது ச்சும்மாதான் நம்புங்க!

ஹன்சி

ஹன்சி ஒரு மோனாலிசா ஓவியம் மாதிரி! 

நாம எத நினைச்சுக்கிட்டு பாக்கிறமோ அதான் தெரியும்!(நான் முகத்தைப் பற்றிப் பேசுறேன்!) நாங்க எந்த ஐடியாவும் இல்லாம 'பே...'ன்னு பார்த்தோம்னு வையுங்க எல்லா சீன்லையும் லூசுத்தனமா சிரிக்கிற மாதிரித்தான் தெரியும்!

ஹன்சி கண்களை இடுக்கி உதடுகளை இழுத்து சிரிக்கும்போது, அது சிரிப்பு என்பதில் யாருக்கும் எந்த சந்தேகம் வருவதேயில்லை!

ஆனா அப்பிடியே முகத்தை வச்சுகிட்டு கண்ணுல கொஞ்சம் தண்ணி தெளிச்சுவிட்டா அதான் அழுகை!

உதடுகளை சிரிக்காமல் இயல்பு நிலைக்கு கொண்டுவந்தா அது வெறுப்பு! உதடுகளைக் குவிச்சா அது ர்ர்ர்ர்...ரொமான்ஸ்!

இப்போ கண்களை கொஞ்சம் திறந்தா அது கோபம்!
இன்னும் கொஞ்சம் விழிகள் விரிந்தால்...ஆச்சரியம் ...அடடே!

அப்பிடியே கண்களால் மட்டும் மேலே பார்த்தா...சோகம் அடடா!
அப்பிடியே கீழே பார்த்தா...வெட்கமாம்! பார்ரா!

ச்சே சான்சே இல்ல! சமகாலத்தில இப்பிடி ஒரு நடிகையை, நவரசத்தையும் சும்மா டக்கு டக்குனு காட்டக்கூடிய திறமைசாலியை திரையுலகம் சந்தித்ததில்ல! வேலாயுதம் படத்தில ஹன்சி கிராமத்துப் பொண்ணு! - சமீப காலத்துல தீவிர சினிமா ஆர்வலர்களை கலங்கச் செய்த நிகழ்வு இதுதான்!

இது எப்பிடி? யார் செய்த அநியாயம்? இதன் பின்னணி என்ன? - எதுவுமே புரியல! என் நண்பனொருவன் படத்துல ஹன்சிய கிராமப் பொண்ணா பாத்ததுல துக்கம் தாங்கமாட்டாம கோன்னு அழுதுட்டானாம்!

இதே கேள்வி, கோபம், துக்கம், குமுறல் தலைவி ஹன்சிக்கும் இருந்திருக்கணும்! என்னைக் காட்ட விடுங்கடா! என்னைக் காட்ட விடுங்கடா! (தெறமயத்தான்!) என்றொரு வெறி ஒவ்வொரு சீன்லயும் தெரிஞ்சுது! இறுதியில் ஹன்சி ஜெயித்துவிட்டார் என்றே தோன்றுகிறது! 

இதான் தெறமைங்குறது! - யார் சதி செய்தாலும் மறைக்க முடியாது!

டிஸ்கி! : ஸ்ருதி பற்றி எழுத இந்தப்பதிவில் இடம்போதாது...நிறைய வருது! முடிந்தால் தனிப்பதிவாக!       

38 comments:

  1. பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள் ......

    ReplyDelete
  2. சூப்பர் ஜீ!

    நிறையச் சிரித்தேன்!!

    ReplyDelete
  3. யோவ் மாப்ள குசும்பா...அது என்ன ஆம்புல பசங்கள பத்தி சொல்ல சொன்னா...படத்த பத்தி சொல்றே ...பொம்பள புள்ளைங்கள பத்தி மட்டும் விவரமா சொல்றே..ஹிஹி!

    ReplyDelete
  4. //ஸ்ருதி பற்றி எழுத இந்தப்பதிவில் இடம்போதாது...நிறைய வருது! முடிந்தால் தனிப்பதிவாக!
    //

    ஜொள்ளுங்க.. சாரி சொல்லுங்க

    ReplyDelete
  5. ஹிஹி ரொம்ப ரசித்தேன் ))

    ReplyDelete
  6. ஹிஹி வழமை போலவே !!!அசத்தல் பாஸ்!உங்க மொபைல் நம்பர எனது பேஸ்புக்க்கு அனுப்புங்க

    ReplyDelete
  7. ஹன்ஸிய நல்லாத்தான் வாட்ச் பண்ணியிருக்கீங்க நண்பா

    த.ம 4

    ReplyDelete
  8. நல்லாவே ரசிச்சிருக்கீங்க!எதை?!

    ReplyDelete
  9. சிறந்த படத்துக்கு மிகச்சிறந்த அளவுகோல். பின்னிட்டீங்க ஜீ... மோனாலிசா ஓவியம் ஹன்சிகா மட்டும்தானா? பலபேர் அப்புடித்தான்னு தோணுது..

    ReplyDelete
  10. பஸ்சுல என்ன 32 சீட்டா இருந்துச்சி? நடுநிலமைங்கறது இதுதானா? தெரியாம போச்சே.. இனிமே நடுலமை பேண ட்ரை பண்ணறேன்.

    ReplyDelete
  11. டிஸ்கி! : ஸ்ருதி பற்றி எழுத இந்தப்பதிவில் இடம்போதாது...நிறைய வருது! முடிந்தால் தனிப்பதிவாக!
    >>>
    ஸ்ருதிக்கு தனி பதிவா? அப்போ சரி ஹி ஹி

    ReplyDelete
  12. ஹீ ஹீ.. இது அல்லவா நடுநிலைமை... வாழ்க ஜனநாயகம்....

    ReplyDelete
  13. அந்த ஸ்ருதி பதிவ சீக்கிரம் போடுங்க...ஹீ ஹீ

    ReplyDelete
  14. ஹன்சிக்காவோட ஒரு நல்ல நடுநிலை போட்டோவையும் போட்டிருக்கலாம்.....

    ReplyDelete
  15. டிஸ்கி!:ஸ்ருதி பற்றி எழுத இந்தப்பதிவில் இடம்போதாது...நிறைய வருது! முடிந்தால் தனிப்பதிவாக!///இதாங்க உச்சக்கட்ட காமெடி!

    ReplyDelete
  16. //
    ஜெனி தனது தமிழ்த் திரையுலக வரலாற்றில் முதன்முறையாக ஒரு மனநிலை சரியான பாத்திரத்தில் நடிச்சிருக்கு //

    செம நக்கல்...

    ReplyDelete
  17. ஸ்ருதிக்கு சொம்படிக்க போறீங்களோன்னு ஆவலா காத்துட்டு இருக்கேன்...

    ReplyDelete
  18. பாஸ் ரெம்ப ரசித்து சிரிச்சேன் அதுவும் ஹன்சிகா பற்றி சொன்னது கெக்கே பேக்கே சிரிப்பு ..... சான்சே இல்லை... கலக்கீட்டீங்க பாஸ்.

    ReplyDelete
  19. ரசிச்சேன் சிரிச்சேன்
    நல்லாத்தான் இருக்கு ஒக்கே ...
    உங்க விமர்சனம் எப்போ ???
    பார்க்க படிக்க ஆவலாய் இருக்கு பாஸ். ப்ளீஸ்

    ReplyDelete
  20. //அம்பாளடியாள் said...
    பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள்//
    நன்றி!

    //மருதமூரான். said...
    சூப்பர் ஜீ!
    நிறையச் சிரித்தேன்!!//
    பாஸ்! மெய்யாலுமா? நக்கல் இல்லையே! :-)

    //விக்கியுலகம் said...
    பொம்பள புள்ளைங்கள பத்தி மட்டும் விவரமா சொல்றே..ஹிஹி!//
    விடுங்க மாம்ஸ் ஏதோ நம்மால முடிஞ்சது!

    //"என் ராஜபாட்டை"- ராஜா
    ஜொள்ளுங்க.. சாரி சொல்லுங்க//
    சொல்லிடுவோம்! :-)

    @கந்தசாமி
    @M.R
    @சென்னை பித்தன்

    நன்றி! :-)

    ReplyDelete
  21. //மைந்தன் சிவா said...
    ஹிஹி வழமை போலவே !!!அசத்தல் பாஸ்!உங்க மொபைல் நம்பர எனது பேஸ்புக்க்கு அனுப்புங்க//
    (ஆகா! எதுக்கு பயபுள்ள நமபர் கேக்குது! ஏதும் வில்லங்கமா இருக்குமோ!)
    பதிவு பதிவாதான் இருக்கணும் அதென்ன மொபைல் நம்பர் கேட்டு வாங்கி திட்டறது? எதா இருந்தாலும் பின்னூட்டத்தில திட்டிடணும்...
    ராஸ்கல்ஸ்!! :-)

    ReplyDelete
  22. //Dr. Butti Paul said...
    பஸ்சுல என்ன 32 சீட்டா இருந்துச்சி? நடுநிலமைங்கறது இதுதானா?//
    இல்ல பாஸ் ரெண்டு படத்தையும் ஒரே நம்பர் சீட்ல இருந்து..

    ReplyDelete
  23. ஹன்சியை அணுஅணுவா ரசிச்சிருக்கீங்க போல..வெரிகுட், இப்படித் தான் ரசிக்கணும்.

    ReplyDelete
  24. ஜெனீ புரட்சிப்பெண் ஆனதும் லூசுத்தனமாத் தான் இருந்துச்சு..

    ReplyDelete
  25. செம ஜாலியான பதிவுய்யா..

    ReplyDelete
  26. //மொக்கராசு மாமா said...
    அந்த ஸ்ருதி பதிவ சீக்கிரம் போடுங்க...ஹீ ஹீ//

    //சி.பி.செந்தில்குமார் said...
    டிஸ்கி! : ஸ்ருதி பற்றி எழுத இந்தப்பதிவில் இடம்போதாது...நிறைய வருது! முடிந்தால் தனிப்பதிவாக!
    >>>
    ஸ்ருதிக்கு தனி பதிவா? அப்போ சரி ஹி ஹி//

    ம்ம்ம்...

    //Philosophy Prabhakaran said...
    ஸ்ருதிக்கு சொம்படிக்க போறீங்களோன்னு ஆவலா காத்துட்டு இருக்கேன்...//

    எல்லாரும் ரொம்ப ஆவலாயிருக்காங்க....நம்மள ரத்தக்காயம் பாக்காம விடமாட்டாங்க போல! :-)

    ReplyDelete
  27. //Yoga.S.FR said...
    டிஸ்கி!:ஸ்ருதி பற்றி எழுத இந்தப்பதிவில் இடம்போதாது...நிறைய வருது! முடிந்தால் தனிப்பதிவாக!///இதாங்க உச்சக்கட்ட காமெடி!//

    ஏதோ நீங்க சொல்றதால நம்பி எழுதப்போறேன் பாஸ்!

    ReplyDelete
  28. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ஹன்சிக்காவோட ஒரு நல்ல நடுநிலை போட்டோவையும் போட்டிருக்கலாம்.....//
    பாருங்க மாம்ஸ்!
    இது நமக்குத் தோணாமப் போச்சு!
    இதுக்குத்தான் ஒரு விஞ்ஞானி எப்பவும் நம்ம கூட இருக்கணும்கிறது!
    நன்றி! :-)

    ReplyDelete
  29. //துஷ்யந்தன் said...
    உங்க விமர்சனம் எப்போ ???
    பார்க்க படிக்க ஆவலாய் இருக்கு பாஸ். ப்ளீஸ்//
    விமர்சனமா இனியுமா எழுதணும்? வேணாம்... வலிக்குது! :-)

    ReplyDelete
  30. //செங்கோவி said...
    ஹன்சியை அணுஅணுவா ரசிச்சிருக்கீங்க போல..வெரிகுட், இப்படித் தான் ரசிக்கணும்.//
    மன்றத் தலைவரே சொன்னது ரொம்ப மகிச்சியா இருக்குண்ணே!

    ReplyDelete
  31. //செங்கோவி said...
    செம ஜாலியான பதிவுய்யா.//
    அண்ணே அப்பிடீன்னா சுருதி....?

    ReplyDelete
  32. இனிய மதிய வணக்கம் மச்சி,

    ஏலேய் இங்க என்ன நடக்குது..

    ஒரே ரணகள காமெடியா இல்லே இருக்கு..


    தூங்க வேண்டிய நேரத்தில ஏழாம் அறிவின் போது தூங்கியதால் கொஞ்சமும் உணர்ச்சியை வேஸ்ட் ஆக்கலை நீங்க.

    அப்புறமா ஹன்சி வர்ணனை சூப்பர்

    அது என்ன கீழ?

    அதையும் சொல்லிட வேண்டியது தானே..

    அவ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  33. ஜீ....ஜீ....என்ன இது !

    ReplyDelete
  34. ஸ்ருதி பதிவை சுறுசுறுப்புடன் போடுங்க.

    ReplyDelete
  35. நேரில கண்டனெண்டா தெரியும் சேதி!! நடுநிலை றிப்போர்ட் தாராராம் றிப்போர்ட்....

    ReplyDelete