Wednesday, August 10, 2011

Don't Look Down (2008)எலாய் - 19 வயது இளைஞன். சிமேட்ரியில் வைக்கப்படும் சிலைகள் வடிப்பவன். நீண்ட பொய்க்கால்களைக் கட்டிக் கொண்டு நடக்கக் கூடியவன். அவ்வப்போது ஒரு bun போல மாறுவேடமணிந்து விளம்பரப் பிரசுரங்களை விநியோகிப்பவன். அவனது அப்பா இறந்தபின், அடிக்கடி அவர் தன்னோடு வந்து பேசுவதாக தன அண்ணனிடம் சொல்கிறான். மயானத்திற்கு வெளியே இறந்தவர்கள் எல்லோரும் வரிசையில் அமர்ந்திருப்பது போன்ற மாயத்தோற்றத்தையும் அவன் அடிக்கடி காண்கிறான்.எலாய் வழமையாக காலையில் எழுந்து பார்க்கும்போது அவனது நோட்புக்கில் ஏதாவது எழுதி இருப்பதைப் பார்த்து அச்சரியப்படுகிறான். அது அவனே எழுதியது - தந்தை இறந்ததிலிருந்து அவனுக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி இருக்கிறது. 

எல்விரா - பர்சிலோனாவில் இருந்து வக்கேஷனுக்கு தன் பாட்டி வீட்டுக்கு வந்திருக்கிறாள். திறந்து மூடக்கூடிய அவளது அறையின் கூரையினைத் திறந்து நட்சத்திரங்களைப் பார்த்தவாறே தூங்கும் வழக்கமுடையவள்.ஒருநாளிரவு வழக்கம்போல எலாய் வீட்டின் மேல்தளத்திலிருக்கும் தனது அறையிலிருந்து வெளியேறி பக்கத்து வீடுகளின் கூரைகளின்மீது தனது பயணத்தைத்(?!) தொடரும்போது திறந்திருக்கும் கூரை வழியே கட்டிலில் படுத்திருக்கும் எல்வீராவின்மீது விழுகிறான்

எல்விரா அலறியடித்து எழுந்திருக்க பாட்டி ஓடிவருகிறாள். அலங்க மலங்க விளிக்கும் எலாயிடம் பாட்டி அன்பாகப் பேசுகிறாள். எவ்வளவு  நாட்களாக இப்படித் தூக்கத்தில் நடக்கும் பிரச்சினை இருக்கிறது எனக் கேட்கிறாள். பாட்டி பாரம்பரிய தாந்ரீகங்களில் தேர்ச்சி மிக்கவள்.


அன்றிலிருந்து எலாயும், எல்விராவும் சிநேகிதர்களாக, அவளுக்கும் பொய்க்கால் கட்டி நடக்கும் வித்தையைச் சொல்லித்தருகிறான். தடுமாறி விழப்பார்க்கும் எல்விராவை தாங்கிப்பிடிக்கும் எலாய் அவளை முத்தமிட, அவர்களுக்குள் நெருக்கம் அதிகரிக்கிறது. இந்நிலையில், ஒருநாள் பாட்டி வீட்டில் இல்லை எனக்கூறி எலாயை எல்விரா வீட்டுக்கு அழைக்க, அது அவர்களுக்குள் உடலுறவில் முடிகிறது.......இல்லை தொடங்குகிறது!

அதன்பின் தொடரும் காட்சிகள் எல்லாம் முழுக்க முழுக்க வயது வந்தோருக்கானது!


உறவு கொள்ளும் முன் எலாய், எல்விரா இருவருக்கிடையே நிகழும் உரையாடல்கள் அருமை!

எல்விரா : நான் இறந்தபிறகு கடவுளைக்காண விரும்பவில்லை.இப்போதே நம் உறவின்மூலம் காண விரும்புகிறேன் - என எல்விரா கூறுகிறாள்.
எனக்கு ஓஷோவின் ஞாபகத்தை ஏற்படுத்தியது!

எல்விரா : நாமிருவரும் உறவுகொள்ளும்போது ஒரு  எலக்ட்ரிசிட்டி  உருவாகிறது, பயோ எலக்ட்ரிசிட்டி!
எலாய் : ஓ! அப்போ நாம் இப்போ எலக்ட்ரிசிட்டியை உருவாக்கத்தான் வந்திருக்கிறோமா?


எல்விரா : இரண்டு விஷயம் நீ தெரிந்துகொள்ள வேண்டும். ஒன்று உன்னுடைய கிளைமாக்ஸ் கண்ட்ரோல். இரண்டு, உன் லவ்வரின் சடிஸ்பாக்சன். இதுல நீ ஒழுங்கா இருந்தா உலகத்திலேயே நீதான் பெஸ்ட் லவ்வர்!

எல்விரா : இதையெல்லாம் ஒழுங்காகக் கற்றுக்கொள். ஒரு முறை உன்னிடம் வந்த பெண் கனவிலும் வேறு யாரையும் நினைக்கக் கூடாது!

சொல்லித் தெரிவதில்லைமன்மதக்கலை என்கிறார்கள். எல்விரா சொல்லிக் கொடுப்பதைப் பார்த்தால் அப்படித் தோன்றவில்லையே! எல்லாமே சொல்லிக்கொடுக்கப்பட வேண்டுமோ - எனத் தோன்றுகிறது!


எலாய்க்கு உச்சகட்டத்தின்போது, அவன் வாழ்நாளில் பார்த்திராத நாடுகளின் நகரங்கள் எல்லாம் , மனத்திரையில் காட்சிகளாக விரிகின்றன. ஸ்பெயின், ஜெர்மன், ரோம், லண்டன், கொல்கத்தா கூட வருது!

எப்படி இப்படி ஒரு படத்தை எடுக்க முடியும்னு ஆச்சரியமா இருந்தது படம் பார்க்கும்போதும், இப்போதும்!

கொஞ்சம்கூட முகஞ்சுளிக்க வைக்காமல், அருவருப்பு ஏற்படாமல், மிக முக்கியமாக பார்வையாளனுக்கு எந்தவித கிளர்ச்சியும் ஏற்படுத்தாமல் ஒரு பாலியல் கல்வியைப் போதிப்பது போலவே படமாக்கப்பட்டிருக்கும்!


மிக அருமையான ஒளிப்பதிவு! மொழி புரியாத பாடல்கள், வித்தியாசமான இசையில் ரசிக்கவைக்கின்றன!

எல்விரா வக்கேசன் முடிந்து பிரிந்து செல்லும்போது பிரிவுத்துயரில் தனது கண்ணீரை மறைக்க, எலாய் தனது விளம்பர பொம்மை Bun உடையை அணித்து எல்விராவின் கையைப் பிடித்துக்கொண்டு நடந்து செல்லும் காட்சியும் பின்னணி இசையும் மிக அருமை!


இயக்குனர் - Eliseo Subiela
மொழி -  Spanish
நாடு : Argentina

டிஸ்கி 1  : நிச்சயமா எல்லாரும் பார்க்கவேண்டிய படம் இது! சில மூட நம்பிக்கைகளை களையவும் உதவும் எனத் தோன்றுகிறது!

டிஸ்கி 2 : என்னை மாதிரி 'படம் மட்டுமே பார்த்து' எழுதுவதை விட 'அனுபவப்பட்டவங்க' யாராவது எழுதினா நிறைய புது விஷயங்களை சொல்ல முடியும்னு தோணுது!

40 comments:

 1. சூப்பர் விமர்சனம்ங்கோ.....வாழ்த்துக்கள்....!!!

  ReplyDelete
 2. ஜி விமர்சனம் குமால்ட்டிக்கா இருந்துச்சு , ஏலே எலாய் உனக்கு வந்த வாழ்வு ம்ம்ம்ம்ம்ம்ம் ,அப்படியே பெருமூச்ச விட்டு போகவேண்டியதுதான் வேற என்ன செய்யமுடியும்

  ReplyDelete
 3. பதினெட்டு வயசுக்கு கீழ் பட்டவர்களும் (நானும்) பார்க்கலாமா ;-)

  ReplyDelete
 4. ///என்னை மாதிரி 'படம் மட்டுமே பார்த்து' எழுதுவதை விட 'அனுபவப்பட்டவங்க' யாராவது எழுதினா நிறைய புது விஷயங்களை சொல்ல முடியும்னு தோணுது! // ஹிஹி இதில எதோ உள் குத்து இருக்கிறது போல இருக்கே ;-)

  ReplyDelete
 5. இந்தப்படத்தை மிகச்சாதாரணமான படம் என எண்ணி இருந்தேன்.
  உங்கள் பதிவைப்படித்த பின் பார்க்க ஆவல் வருகிறது.

  ReplyDelete
 6. விமர்சனங்கள் நல்லாயிருக்குங்க..
  பகிர்வுக்கு நன்றி..

  ReplyDelete
 7. ரசிக்கும் படி விமர்சனம் எழுதி பார்க்கும் ஆவலை தூண்டிய உங்களுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. புனிதமான உறவின் புரிதலைப்பற்றின படம் என்று உங்கள் விமர்சனம் கூறியிருக்கிறது..

  பார்க்கவேண்டும்....

  ReplyDelete
 9. சரி சரி ...பார்க்க வேண்டியது தான் ..நன்றி
  பகிர்வுக்கு

  ReplyDelete
 10. எங்கண்ணன் விமர்சனமெல்லாம் பிரமாதமாத்தான் எழுதறார், ஆனா டிஸ்கி 2 ல ஏதோ பொடி வெச்சிருக்கார். என்னமோ அவர் ஒண்ணூமே தெரியாதவர் போல.. ஹய்யோ ஹயோ

  ReplyDelete
 11. விமர்சனம் விமர்சித்த விதம் அற்புதம்... வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
 12. நான் இறந்தபிறகு கடவுளைக்காண விரும்பவில்லை.இப்போதே நம் உறவின்மூலம் காண விரும்புகிறேன் - என எல்விரா கூறுகிறாள்.
  எனக்கு ஓஷோவின் ஞாபகத்தை ஏற்படுத்தியது!

  எல்விரா : நாமிருவரும் உறவுகொள்ளும்போது ஒரு எலக்ட்ரிசிட்டி உருவாகிறது, பயோ எலக்ட்ரிசிட்டி!
  எலாய் : ஓ! அப்போ நாம் இப்போ எலக்ட்ரிசிட்டியை உருவாக்கத்தான் வந்திருக்கிறோமா?//


  அவ்......செம காரமான படமாக இருக்குமே மச்சி.

  ReplyDelete
 13. இப்படியான கலக்கலான ரொமாண்ட்ரிக் காட்சிகளோடு சமீபத்தில் ஒரு படமும் வந்திருக்கிறது Strings No Attached எனும் பெயரில்.
  அந்தப் படத்தைப் பார்த்தேன். ஆனால் இந்தப் படத்தினைத் தவற விட்டேன்.
  உங்களின் விமர்சனம் இப் படத்தினைப் பார்க்க வேண்டும் எனும் ஆவலினை அதிகரிக்கச் செய்கிறது.

  ReplyDelete
 14. டிஸ்கி 2 : என்னை மாதிரி 'படம் மட்டுமே பார்த்து' எழுதுவதை விட 'அனுபவப்பட்டவங்க' யாராவது எழுதினா நிறைய புது விஷயங்களை சொல்ல முடியும்னு தோணுது!//

  மச்சி, பொறுமையாக, சாதுவாக இருக்கிற நீங்களும் யாருக்கோ உள்குத்துப் போடக் கிளம்பிட்டீங்களா..
  ஆண்டவா...என்னைக் காப்பாத்து.
  ஒன்னுமே புரிய மாட்டேங்குது.

  ReplyDelete
 15. வழமை போலவே...விமர்சனம் அழகு, இம் முறை விமர்சனத்தில் படத்தின் வ்சனங்களைக் கோர்வையாக்கித் தந்தமை மிக மிக அழகு.

  ReplyDelete
 16. ஹா டிஸ்கி செம்ம, எனக்கும் அதே மாதிரி தோணுச்சு பாஸ், படம் பார்க்கும்போது. :-)

  ReplyDelete
 17. நேத்திக்கு எனக்கு 21+ தொடங்கிருச்சிண்ணே!

  ReplyDelete
 18. நீங்களெ ரொம்ப ரசிச்சுதான் எழுதியிருக்கீங்க

  ReplyDelete
 19. ஏற்கனவே ரசித்த படம்...விமர்சனம் புதுமை...அருமை...

  ReplyDelete
 20. Sir original movie name elvira than.intha padathoda inspiration than malayaalathula vanthuthu athu tamilla varusham 16 aaga vanthuchiSir original movie name elvira than.intha padathoda inspiration than malayaalathula vanthuthu athu tamilla varusham 16 aaga vanthuchi

  ReplyDelete
 21. சார் அதென்ன 21+ நோமலா 18பிளஸ் எண்டுதானே சொல்லுவாங்க???

  ReplyDelete
 22. paarthum anupava pattum erganave ezhuthitoom.. இன்னுமா வேணும்

  ReplyDelete
 23. அடுத்து ஒரு நல்ல படத்துடன் களமிறங்கிட்டீங்க போல...

  ReplyDelete
 24. இந்த மாதிரி அரிய படங்கள் பத்தி எழுதும்போது டொரண்ட் லின்க்கும் கொடுக்கலாமே ஜீ..தேடுனா கிடைக்கமாட்டேங்குது.

  ReplyDelete
 25. //நான் இறந்தபிறகு கடவுளைக்காண விரும்பவில்லை.இப்போதே நம் உறவின்மூலம் காண விரும்புகிறேன் - என எல்விரா கூறுகிறாள்.
  எனக்கு ஓஷோவின் ஞாபகத்தை ஏற்படுத்தியது!//

  அதே..அதே...அதே!

  ReplyDelete
 26. //டிஸ்கி 2 : என்னை மாதிரி 'படம் மட்டுமே பார்த்து' எழுதுவதை விட 'அனுபவப்பட்டவங்க' யாராவது எழுதினா நிறைய புது விஷயங்களை சொல்ல முடியும்னு தோணுது!////

  இது யாருக்கு? எனக்கா? அவ்வ்வ்!

  ReplyDelete
 27. கலக்கல் ஜீ... நீங்க படிச்சிருக்கீங்களான்னு தெரியல, இந்த படத்தைப் பற்றி நான் ஒரு வருடத்திற்கு முன்னதாகவே நான் எழுதியிருக்கிறேன்...

  http://philosophyprabhakaran.blogspot.com/2010/06/18.html

  ஆனால் நான் அனுபவஸ்தன் எல்லாம் இல்லை... ஆனால் எனக்கு முன்னதாகவே அனுபவஸ்தர்கள் ஜாக்கி, கேபிள் எழுதியிருக்கிறார்கள்...

  http://jackiesekar.blogspot.com/2010/04/dont-look-down-18.html

  http://cablesankar.blogspot.com/2010/05/no-mires-para-abajo-2008.html

  ReplyDelete
 28. // சில மூட நம்பிக்கைகளை களையவும் உதவும் எனத் தோன்றுகிறது! //

  அது என்னென்ன மூடநம்பிக்கைகள்ன்னு சொன்னீங்கன்னா உதவியா இருக்கும்...

  ReplyDelete
 29. நல்ல பகிர்வு தோழா...நன்றி!
  முடிந்தால் 'முன்புபோலவே' என்ற எனது கவிதையை படிக்கவும்.
  http://kavithaiveethi.blogspot.com/2010/02/blog-post_10.html

  ReplyDelete
 30. ஜீ…..!

  இப்படியான படங்களை நீங்கள் தொடர்ந்தும் எழுத வேண்டும். அப்பொழுது நல்ல படங்களைப் பார்க்க முடியும். ஹிஹிஹிஹி.

  கொஞ்சம் ஆணிகள் அதிகம் அதனால் கொஞ்வம் லேட். நேற்றைய பின்னூட்டாம் மொபைலில் இட்டது.

  ReplyDelete
 31. அப்படியே இந்த பக்கத்தையும் கொஞ்சம் பாருங்க
  http://sparkkarthikovai.blogspot.com/p/own-details.html

  ReplyDelete
 32. நல்ல படத்தை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். நன்றி.

  ReplyDelete
 33. ஜீ! நீங்க சொன்ன மாரியே அனுபவப் பட்டுட்டு அப்புறமா இந்த படம் பாத்து தெளியலாம்ன்னு இருக்கேன்(?!).
  நீங்க என்ன நெனைக்கிறீங்க?

  ReplyDelete

Followers

Blog Archive

Powered by Blogger.

Archives

Follow by Email

Copyright © வானம் தாண்டிய சிறகுகள்.. |