Thursday, August 25, 2011

கரிகாலன்,300,ஆட்டுக்கல்லுக்கு மாலை!

கரிகாலன் 
விக்ரமின் அடுத்த படம் சோழ அரசன் கரிகாலன் பற்றிய படமாம்! கரிகாலனின் மனைவியும் ஒரு தமிழச்சியாகவே இருந்திருக்க வேண்டும்! அதனால் வழக்கம்போல அந்தப் பாத்திரத்தில் யாரோ ஒரு தமிழே தெரியாத பாலிவூட் நடிகை நடிப்பார் எனத்தெரிகிறது!


கி.மு.270 முதல் கி.பி.2012 வரை எனக்குறிப்பிடப்பட்டிருப்பது லேசான பீதியைக் கிளப்பினாலும் (எல்லாம் ஆயிரத்தில் ஒருவனால்தான்!) தமிழ் மன்னன் ஒருவனின் வரலாறு பதியப்படுவது நல்ல முயற்சி!

ஆனால் பாருங்க ஆயிரத்தில் ஒருவனைப் பாத்துட்டு இதுதான் தமிழன் வரலாறுன்னு ஒரு கூட்டம் புதுசா தமிழன் வரலாறு பேச கிளம்பின மாதிரி இல்லாம நல்லபடியா வரவேண்டும்.

ஒரு இணையத்தில போட்டிருந்திச்சு! விக்ரமின் நடிப்பில் மற்றுமொரு வரலாற்றுச் சிறப்புமிக்க படமாய் (அதாவது முதல் வரலாற்றுச் சிறப்புமிக்க படம் தெய்வத்திருமகளாமாமாம்!) அமையவிருக்கிறது என  படத்தின் பர்ஸ்ட் லுக்கே சொல்கிறது! - இப்படிச் சொன்னதாலதான் போஸ்டரைப் பார்த்தேன்!


நல்லாத்தான் இருக்கு கூடவே இன்னொரு படத்தின் ஞாபகமும் வந்திச்சு!

300 - Prepare for Glory 


1998 இல் வெளிவந்த காமிக்ஸ் சீரிசான 300 இலிருந்து எடுக்கப்பட்ட படம்தான் 300. அந்த காமிக்ஸ் 1962 இல் வெளியான The 300 Spartans படத்தின் பாதிப்பில் உருவானதாம்!

கி.மு. 480 இல் நடந்ததாக கூறப்படும்/நம்பப்படும் Leonidas என்ற ஸ்பார்ட்டாவின் அரசனின் வரலாற்று/புராண நம்பிக்கையின் அடிப்படியிலான Battle of  Thermopylae என்ற புகழ்பெற்ற யுத்தம் பற்றிக் கூறுகிறது!

2007 இல் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றது! மிக விறுவிறுப்பான சண்டைக்காட்சிகள். படம் பார்த்ததிலிருந்து சிலகாட்சிகள் அப்படியே பதிந்துபோய்விட்டது! மகாதீரா என்ற புகழ்பெற்ற(?!) தெலுங்குப் படத்தைத் தவிர்க்கமுடியாமல் பார்த்தபோது அதன் சண்டைக்காட்சிகளும் ஏனோ 300 படத்தினையே நினைவூட்டியது!


எல்லாவற்றையும் விட என்னை மிக மிகக் கவர்ந்தது படத்தின் பின்னணிக் காட்சிகள் அனைத்தும் கிராபிக்ஸ் என்பதே! நீலத்திரையைப் பின்புலமாக வைத்துப் படம் பிடிக்கப்பட்டு அதன்பின்னர் கிராபிக்ஸில் வடிவமைக்கப்பட்ட பின்னணிக் காட்சிகள் இணைக்கப்பட்டது! இதை Digital Backlot என்கிறார்கள்!

அதனால் படத்தின் Behind the Scenes பார்க்கும்போது, மிக சுவாரஸ்யமாக இருப்பதுடன் ஒவ்வொரு சிறு காட்சிக்குப் பின்னாலுள்ள கடுமையான உழைப்பும் தெரியும்!


ஆட்டுக்கல்லுக்கு மாலை!

நண்பர் ராஜனுடன் ஒரு கடையில் சாப்பிடும்போது ராஜன் சொன்னார் வெளில பார்க்க நல்ல ஷோவா இருந்திச்சு! கடைசில ஆட்டுக்கல்லுக்கு மாலை போட்ட கதைதான் என்றார்! என்ன கதை? என்றேன்.

ஒரு போலிச்சாமியார் ஹோட்டல் ஒன்றில் தோசை ஓடர் பண்ணிச் சாப்பிட்டிருக்கிறார். தோசை நல்லாவேயில்லை. கடுப்புடன் சாப்பிட்டு பணம் கொடுத்துவிட்டு வெளியேறும் போது தற்செயலாக கவுண்டர் பக்கம் பார்த்தவர் கோபத்தின் உச்சிக்கே போய் ஒரு கமென்ட் அடித்தாராம்!

'அவையின்ர தோசையின்ர திறத்தில (தரத்தில) ஆட்டுக்கல்லுக்கு ஒரு போட்டோ! மாலை!'

- அங்கே ஒரு சிவலிங்கத்தின் படம் மாட்டியிருந்தது!
கரிகாலன்,300,ஆட்டுக்கல்லுக்கு மாலை! | வானம் தாண்டிய சிறகுகள்..

38 comments:

ஐத்ருஸ் said...

ஜீ,எனக்கு 300 படம் பார்க்கும் போதெல்லாம் அதன் Parody யான Meet The Spartans தான்நினைவுக்கு வருகிறது.அதில் லியோனிடைசை குதறி எடுத்திருப்பார்கள், அதுபோல் கரிகாலனும் கரிகால மன்னனை பிராண்டி எடுக்க போகிறதா அல்லது பேறு சேர்க்கபோகிறதா பொறுத்திறுந்து பார்க்கலாம...

உலக சினிமா ரசிகன் said...

ஜீ...
படம் வரட்டும்.
நிச்சயம் தெய்வத்திருமகளில் பாடம் கற்றிருப்பார்கள்.

M.R said...

ஜீ நண்பரே தாங்கள் சொல்லியுள்ள படங்களை நான் பார்க்கவில்லை .இருந்தாலும் தங்கள் அலசல் அருமை .கரிகாலன் வருமுன் தாங்கள் குறிப்பிட்ட படங்களை பார்கிறேன் .

பகிர்வுக்கு நன்றி

மாய உலகம் said...

கரிகாலனைப்பற்றி கலக்கலான செய்தி... 300 டன் ஒப்பிட்டு சொன்னவிதமும் அருமை ... கலக்குங்க நண்பரே

நிகழ்வுகள் said...

போஸ்டரை பார்க்க பிரமாண்டமாய் இருக்குமோ எண்டு தோணுது ;-)

நிகழ்வுகள் said...

சாமியார் வேலை பார்க்க கிளம்புரவர்கள் சிவலிங்கம் பற்றியெல்லாம் தெரிஞ்சிருக்க வேணாம் ஹிஹி ...

கடம்பவன குயில் said...

//ஒரு இணையத்தில போட்டிருந்திச்சு! விக்ரமின் நடிப்பில் மற்றுமொரு வரலாற்றுச் சிறப்புமிக்க படமாய் (அதாவது முதல் வரலாற்றுச் சிறப்புமிக்க படம் தெய்வத்திருமகளாமாமாம்!) அமையவிருக்கிறது என படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கே சொல்கிறது! - இப்படிச் சொன்னதாலதான் போஸ்டரைப் பார்த்தேன்!//

ஹா....ஹா...ஹா...தெய்வத்திருமகளால் ரொம்ப பாதிச்சிருக்கீங்க போல. விக்ரமை விடுவதாயிலலை.... தங்கள் ஒப்பீடு அருமை.

"என் ராஜபாட்டை"- ராஜா said...

கடைசி பன்ச் சூப்பர்

விக்கியுலகம் said...

But ஆனா Why ஏன்?

மாப்ள இப்படி ஞாபகப்படுத்தியே படம் பற்றி பீதி கெளப்பிடுரீயே ஏன்யா ஹிஹி!

Chitra said...

கரிகாலனின் மனைவியும் ஒரு தமிழச்சியாகவே இருந்திருக்க வேண்டும்! அதனால் வழக்கம்போல அந்தப் பாத்திரத்தில் யாரோ ஒரு தமிழே தெரியாத பாலிவூட் நடிகை நடிப்பார் எனத்தெரிகிறது!


...... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... செம!

செங்கோவி said...

// நல்லாத்தான் இருக்கு கூடவே இன்னொரு படத்தின் ஞாபகமும் வந்திச்சு! //

ஆஹா..இந்த மனுசனுக்கு இப்படி வதந்தியை கிளப்புறதே வேலையாப் போச்சு..எப்படியோ நமக்கு இன்னொரு பதிவு தேறும்போல தெரியுது!

செங்கோவி said...

விக்ரம் தெய்வத்திருமகளுக்கு முன்பே தன்னை ஒரு நல்ல நடிகராக நிரூபித்தவர் தானே..தெ.தியில் நடித்ததாலேயே அவர் நல்ல நடிகை இல்லை என்று ஆகிவிடாது, இல்லையா?

செங்கோவி said...

// 'அவையின்ர தோசையின்ர திறத்தில (தரத்தில) ஆட்டுக்கல்லுக்கு ஒரு ஃபோட்டோ! மாலை!' - அங்கே ஒரு சிவலிங்கத்தின் படம் மாட்டியிருந்தது! //

ஹா..ஹா..செம ஜோக்! கலக்கிட்டீங்க.

செங்கோவி said...

// லேசான பீதியைக் கிளப்பினாலும் (எல்லாம் ஆயிரத்தில் ஒருவனால்தான்!) //

தமிழ்சினிமாவின் கேவலமான படங்களில் ஒன்று அது!

அரசன் said...

வரட்டும் பார்ப்போம்

மகேந்திரன் said...

விக்ரம் நடிக்கிறதால
நல்லா இருக்கும் னு
தைரியமா போய் பார்க்கலாம்.

ரெவெரி said...

முடிவு முத்தாய்ப்பு...ரசித்து வாசித்தேன்...

sarujan♥ ! ♥ ! (சாருஜன்)♥ ! ♥ ! said...

படம் வரட்டும்.

kobiraj said...

எப்படி எல்லா தகவல்களையும் அறிந்து வைத்து இருக்கிறீர்கள் .பட அறிவிப்பு வெளியானவுடன் எந்த படத்தின் காபிஎன துல்லியமாக கணிக்கிறீர்கள் .பாராட்டுக்கள் நண்பரே

சென்னை பித்தன் said...

ஒரு பழமொழி உண்டு-”நக்குகின்ற நாயே,உனக்குச் செக்கும் தெரியாது, சிவலிங்கமும் தெரியாதா?” என்று .அது போல் இருக்கிறது!

ராக்கெட் ராஜா said...

தமிழ் தெரியாத பொண்ணுதான் ஹீரோயீன தலைவா

சே.குமார் said...

பகிர்வுக்கு நன்றி.
வாழ்த்துக்கள்.

ஆகுலன் said...

ஆகா ஆப்பு இப்பவே ரெடியா..............எப்படி பாஸ் முடியுது....

மைந்தன் சிவா said...

ஹிஹி வழமை போல கடியுடன் கூடிய ரசனை!!
இந்த மாதம் விக்கிரம் மாதமோ??ஹிஹி

Dr.எம்.கே.முருகானந்தன் said...

பொருத்தமான புகைப்படத்துடன் சுட்டதையும் சுடப்போவதையும் எடுத்துக் காட்டியுள்ளீர்கள்.

Raazi said...

superb..

Tamilmanam 7

பிரணவன் said...

நல்ல படைப்பாக வரட்டும் என நம்புவோம். . .

Philosophy Prabhakaran said...

ஆஹா..இந்த மனுசனுக்கு இப்படி வதந்தியை கிளப்புறதே வேலையாப் போச்சு..எப்படியோ நமக்கு இன்னொரு பதிவு தேறும்போல தெரியுது!

Philosophy Prabhakaran said...

அவனவன் படத்தையே காப்பி அடிக்கிறான்... நான் பின்னூட்டத்தை காப்பி அடிச்சா தப்பா...?

மதுரன் said...

கரிகாலன், வரட்டும் பார்ப்போம்.. தமிழ்சினிமாவை பொறுத்தவரை எதையுமே முன்கூட்டி சொல்வது கடினமாக இருக்கிறது.

மதுரன் said...

300 ஏற்கனவே பார்த்திருந்தாலும் பின்னணிக்காட்சிகள் அனைத்தும் கிராபிக்ஸ் என அறியும்போது மறுபடியும் பார்க்கவேண்டும் போல் உள்ளது

ஜீ... said...

கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட நாண்பர்கள் அனைவருக்கும் நன்றி!

போஸ்டரைப் பார்த்ததும் எனக்கு 300 ஞாபகம் வந்ததால் மட்டுமே அதைப்பற்றி எழுதினேனே தவிர..வேறெந்த காரணமும் இல்லை!
நான் வதந்தி கிளப்பவோ, ஒப்பிடவோ இல்லை என்பதை பணிவன்புடன் கூறிக்கொள்கிறேன்! அவ்வ்வ்வவ்!
எனவே இதை நம்ம்ம்பி பதிவு தேத்திடாதீங்க நண்பர்ஸ்!

மருதமூரான். said...

ஜீ….!

கரிகாலன் மிகவும் நேர்த்தியாகவும்- சிறந்த திரைக்கதையுத்தியுடனும் படமாக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் சொதப்பி விடும். (எனக்குத் ஓரளவுக்கு பழக்கப்பட்ட ஒருவர் கரிகாலனில் நடிக்கிறார். அவரின் மூலம் ஏற்கனவே பல விடயங்களை அறிய முடிந்தது)

சிவலிங்கம் சூப்பர். ஏப்படியெல்லாம் இருக்கிறாங்கப்பா………..!

சி.பி.செந்தில்குமார் said...

>>கரிகாலனின் மனைவியும் ஒரு தமிழச்சியாகவே இருந்திருக்க வேண்டும்! அதனால் வழக்கம்போல அந்தப் பாத்திரத்தில் யாரோ ஒரு தமிழே தெரியாத பாலிவூட் நடிகை நடிப்பார் எனத்தெரிகிறது!

haa haa ஹா ஹா நக்கலு!!!!!

சி.பி.செந்தில்குமார் said...

அதெப்பிடி எந்த படம் வந்தாலும் எதனோட உல்டான்னு கண்டு பிடிச்சிடறீங்க?

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

தரமான அலசல்.. படம் வரட்டும் பார்க்கலாம்.

ஆர்.கே.சதீஷ்குமார் said...

இனிமேல் காப்பிதான் அடிப்பானுக...ருசி கண்ட பூனைகளும் சோம்பேறி பூனைகளும் சும்மா இருக்குமா

நிரூபன் said...

அடப்பாவமே,....நம்ம ஜீ இருக்கும் வரைக்கும், தமிழ் சினிமா பற்றி அக்கு வேறு ஆணிவேராக தெரிஞ்சு கொள்ளலாம்,

மிக்க நன்றி பாஸ்,
நாமெல்லாம் உங்களுக்கு கடமைப்பட்டவர்கள்.

விக்ரமின் படமும் இப்படியா..
என்னமோ போங்க.
தமிழில் எத்தனை விதமான கதைகள் இருக்க....இப்படியெல்லாம் சுடுறாங்களே.