Sunday, May 1, 2011

Hats off அஜித்!


அஜித் எப்போதுமே ஒரு ஆச்சரியம்தான்! 

ஒவ்வொரு முறையும் அஜித்தின் பேச்சுக்கள் எல்லோரது கவனத்தையும் ஈர்ப்பவை!யோசிக்கவைப்பவை!அட!போடவைப்பவை! சர்ச்சைக்கு உள்ளாக்கப்படுபவை! 

தற்போதைய ஆச்சரியம், ஒரு சாதாரண அடிமட்ட ரசிகனுக்கு அதிர்ச்சி, தனது ரசிகர் மன்றங்களைக் கலைத்து விடுவதான அறிவிப்பு! கலைக்கப்படலாம்...இல்லை, கலைக்கப்படாவிட்டாலும், இப்படி வேறு எந்த ஒரு பெரிய நடிகராலாவது இப்படிச் சிந்திக்க முடியுமா? இதுவரை எந்த ஒரு பெரிய நடிகரும் யோசித்திருபார்களா? இனிமேலும் யோசிப்பார்களா? 

எந்தவித பக்கபலமோ, சினிமா பின்னணியோ இல்லாமல் ஒரு தனி மனிதனாக தன்னம்பிக்கையை மட்டும் மூலதனமாகக் கொண்டு போராடி தமிழ் சினிமாவில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர் அஜித். தன ரசிகர்கள் மட்டுமே தனது பலமென்று கூறுபவர்.

ஏகப்பட்ட தோல்விப்படங்களைக் கொடுத்துக் கொண்டு வேறு எந்த நடிகராலும் இவ்வளவு காலமாக, பெரும் ரசிகர் கூட்டத்தை தன்னகத்தே வைத்துக்கொண்டு இத்துறையில் நீடித்திருக்க முடியுமா என்பது கேள்விக்குறியே! இதையும் வெளிப்படையாகக் கூறியிருக்கிறார், 'என்னைப் போல் யாரும் அதிக தோல்விப் படங்களைக் கொடுத்ததில்லை' என்று!

அஜித்தின் படங்களையோ அல்லது நடிப்பையோ (பார்த்து, அதனால்தான் இவ்வளவு ரசிகர்களைப் பெற்றிருப்பார் என்பது சாத்தியமான ஒன்றாகத் தோன்றவில்லை. மாறாக ஒரு நடிகனாக அன்றி, வெளிப்படையான, நேர்மையான, நிஜத்தில் நடிக்காத தன்னம்பிக்கை கொண்ட, ஒரு நல்ல மனிதராக மட்டுமே சாத்தியமாகியிருக்கிறது என்று தோன்றுகிறது!

இதுவரை அஜித் நடித்த எந்தப்படத்தையும் நல்ல படம் என என்னால் கூறமுடியவில்லை. அஜித் நடிப்பதாகக் கூறப்பட்டு, விலகிய, அல்லது நடிக்க மறுத்த படங்கள் சில தமிழ்சினிமாவின் அடையாளங்களாகிப் போனது! (நந்தா, காக்க காக்க, கஜினி, நான்கடவுள்) காதல்கோட்டை ஸ்கிரிப்ட் வாசித்தபோது, முடிந்தளவு லாஜிக்குடன் எழுதப்பட்டது தெரிந்தது! (அதற்குத்தான் தேசிய விருது கிடைத்தது) அஜித்தின் வேறு எந்த வெற்றிபடமானாலும் இரண்டாம் முறை பார்க்குமளவிற்கு என்னைப் பெரிதாகக் கவர்ந்ததில்லை. இது எனது தனிப்பட்ட ரசனை சார்ந்த கருத்து மட்டுமே.

சில வருடங்களுக்கு முன் அஜித் தனது ரசிகர்களுக்கு விடுத்த அறிவுரை 'முதலில் உங்கள் வாழ்க்கையை, குடும்பத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள் அதுதான் முக்கியம்.பிறகுதான் சினிமா. அப்போது இந்தப்பேச்சு பரபரப்பாக பேசப்பட்டது! இந்தியாவில் எந்தவொரு பெரிய நடிகரும் இவ்வளவு வெளிப்படையாக, துணிச்சலாக பேசியதில்லையென்று.

தற்போது இந்த அறிவிப்பு! 

அஜித்தின் அடிமட்டரசிகர்கள் (இந்த சொற்பிரயோகம் தவறானதாக இருக்கலாம் - ஒரு நடிகனின் கட் அவுட்டுக்கு பால், பீர் ஊற்றுபவர்களை எப்படிக் குறிப்பிடுவதென்று தெரியவில்லை)  தவிர்ந்த ஏனைய ரசிகர்களுக்கு இது ஒரு அதிர்ச்சியாக இருக்காது. வரவேற்பார்களென்றே தோன்றுகிறது. 

ஏனெனில், நான் பெரும்பாலான அஜித் ரசிகர்களிடம் கவனித்த ஒரு முக்கியமான விஷயம்! அஜித்தின் படம் வெளியாகி முதல் நாள் படம் சரியில்லை என்று தெரிந்துவிட்டால், அவ்வளவுதான்! யாரும் மறந்தும் தியேட்டர் பக்கம் போக மாட்டார்கள். இந்த விஷயத்தில் பெரும்பாலானோர், தலைவர் படத்தை ஓட்டவேண்டும் என நினைக்காமல், எந்த தயவு தாட்சண்யமும் பார்க்காமல் புறக்கணித்து விடுவார்கள்! இது ஒரு ஆரோக்கியமான விஷயமே! 

ஒரு நடிகனை நடிகனாக மட்டும் பார்க்காமல், வழிகாட்டியாக, அறிவுரை சொல்பவராக, தத்துவஞானியாக, இன்னும் என்னென்னவாகவோ எண்ணிக் கொண்டாடப்படும் ஒரு அறிவார்ந்த, ஆரோக்கியமான சமூகத்தில் நிச்சயம் இது ஒரு நல்ல ஆரம்பமே! ஆனால் தனிப்பட்ட முறையில் அஜித் என்ற ஒரு நடிகனுக்கு பாதகமான விளைவையும் ஏற்படுத்தலாமென்பதை அவரும் நன்கு உணர்ந்தே இருப்பார். ஏனெனில் தமிழ் நடிகர்களுக்கு ரசிகர்மன்றம் என்பது ஒரு மிகப் பெரிய பக்கபலமாக இருக்கும் அதேவேளையில், தனது ஐம்பதாவது படமான மங்காத்தா பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தயாராகும் நிலையில், இந்த முடிவினை எடுத்திருக்கும் தில் நிச்சயம் வேறு யாருக்கும் வருமா என்பது கேள்விக்குறியே! 

இது குறித்து அஜித் கூறியது - 
'நலத்திட்டங்கள் செய்ய இயக்கம் எதுவும் தேவையில்லை. நல்ல உள்ளமும் எண்ணமும் இருந்தாலே போதும்'

Hats off அஜித்! 

20 comments:

 1. 01-மே-2011 தினம் பிறந்த சிறிது நேரத்தில்(12:11 AM)
  உங்கள் கடமை உணர்ச்சிக்கு பாராட்டுகள்.

  ReplyDelete
 2. அஜித்-க்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. அனைவருக்கும் இனிய ”மே”தின வாழ்த்துகள்

  ReplyDelete
 4. உங்க பெயரே சொல்லி நிற்கிறது, நீங்க தல ரசிகர் என்பதை...
  இருங்க பதிவைப் படித்து விட்டு வருகிறேன்.

  ReplyDelete
 5. கட்சிகள், மன்றங்கள் பேதமின்றி நல்ல திட்டங்களை மக்களுக்கு பயனுள்ள வகையில் செய்யலாம் எனும் அஜித் அவர்களின் கருத்துக்களுக்கு ஒரு சபாஷ் சகோ.

  ReplyDelete
 6. அஜித்தின் முடிவு பாராட்டத் தக்கது..தல தல தான்!

  ReplyDelete
 7. என்னுடைய இடுகை இன்னும் சில நிமிடங்களில்...

  ReplyDelete
 8. // இது எனது தனிப்பட்ட ரசனை சார்ந்த கருத்து மட்டுமே. //

  எனக்கும் அதே ரசனை தான்... உங்கள் நேர்மை பாராட்டுக்குரியது...

  ReplyDelete
 9. // அஜித்தின் அடிமட்டரசிகர்கள் (இந்த சொற்பிரயோகம் தவறானதாக இருக்கலாம் - ஒரு நடிகனின் கட் அவுட்டுக்கு பால், பீர் ஊற்றுபவர்களை எப்படிக் குறிப்பிடுவதென்று தெரியவில்லை) தவிர்ந்த ஏனைய ரசிகர்களுக்கு இது ஒரு அதிர்ச்சியாக இருக்காது. வரவேற்பார்களென்றே தோன்றுகிறது. //

  மிகவும் சரியான கருத்து...

  ReplyDelete
 10. நான் விஜய் ரசிகனாக இருந்த போதிலும் அஜித்தின் இந்த கருத்து என்னையும் கவர்ந்துவிட்டது ஜி..
  தொடர்ந்து பதிவு போடுவதற்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. இது குறித்து அஜித் கூறியது -
  'நலத்திட்டங்கள் செய்ய இயக்கம் எதுவும் தேவையில்லை. நல்ல உள்ளமும் எண்ணமும் இருந்தாலே போதும்'

  Hats off அஜித்! /////

  இதை படிக்கும் போதே அஜித் மீதுள்ள ஈர்ப்பு இன்னும் அதிகமாகிறது..
  Hats off அஜித்!

  ReplyDelete
 12. ஜி கலக்கல் . நீங்கள் கூறியது போல் நானும் தலயின் ஒரு அடிமட்ட ரசிகனே ,

  ReplyDelete
 13. அஜித்தின் முடிவு சரியானதே!

  ReplyDelete
 14. உண்மைதான்.
  தலைபோல வருமா என்ன?
  வாழ்த்துக்கள் தல!

  ReplyDelete
 15. அஜித் ஒரு வித்தியாசமான மனிதர்தான்.

  ReplyDelete
 16. //நலத்திட்டங்கள் செய்ய இயக்கம் எதுவும் தேவையில்லை. நல்ல உள்ளமும் எண்ணமும் இருந்தாலே போதும்//

  இந்த அதே உள்ளமும் எண்ணமும் செயல் படுத்த பட வேண்டும் என்பதுதான் நல்லது....

  ReplyDelete
 17. சரியான கட்டுரை! அஜித்தின் இந்த முடிவு மற்றவர்களையும் சிந்திக்க வைத்தால் நல்லது!

  ReplyDelete
 18. நல்ல நடிகர். கதைகளை தெரிவு செய்வதில் மட்டும் தவறு செய்கிறார். belated wishes.

  ReplyDelete
 19. AnonymousMay 26, 2011

  //நல்ல நடிகர். கதைகளை தெரிவு செய்வதில் மட்டும் தவறு செய்கிறார். //
  I know! =(( The only stylish actor in Tamil Industry!

  ReplyDelete

Followers

Blog Archive

Powered by Blogger.

Archives

Follow by Email

Copyright © வானம் தாண்டிய சிறகுகள்.. |