எங்கள் ப்ராஜெக்ட்காக சைட் விசிட் சென்றிருந்த சமயம். புத்தளையிலிருந்து மொனராகல போகும் வழியில் வீதியின் ஓரத்திலிருந்தே ஆரம்பித்தது ஓர் மலை. அதைக்காட்டி, சிங்கள அங்கிள் 'மலை வந்த கதை' பற்றிச் சொல்லத் தொடங்கினார்.
துட்டகெமுனுவுக்கும் (தமிழ் மன்னனான எல்லாளனை வென்றதால் சிங்களவர்களின் ஹீரோவாகக் கொள்ளப்படுகிறவன்) அவனுடைய தம்பிக்கும் இராஜ்ஜியம் தொடர்பாக சண்டை மூண்டிருந்ததாம். இரண்டுபேரும் பெரும் படையுடன் மோதிக் கொள்ளத் தயாராக இருந்தார்களாம். இவர்களைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. பெரும் அழிவைத் தவிர்க்க வேண்டும். உடனே ஒரு பௌத்தத் துறவி தனது சக்தியால் இருவரும் இருந்த பகுதிகளுக்கு நடுவில் ஒரு மலையை உருவாக்கினாராம். அந்த மலைதான் இதுவாம்!
இதைக்கேட்டதும் உடனே என் பகுத்தறிவு விழித்துக் கொண்டது.
'இல்ல... பௌத்தத் துறவிகளெல்லாம் இந்த மாதிரி மாஜிக் வேலைகள் செய்வார்களா? சைவத் துறவியாக இருந்திருக்கலாம். இவனுங்க வழக்கம்போல மாத்தியிருப்பானுங்க!' நான் ஆழ்ந்து சிந்திப்பதைப் பார்த்ததும் அங்கிள் ஒரு முடிவுக்கு வந்திருப்பார் போல.
இந்தக் கதை நிச்சயமாக என் சிந்தனையில் அன்பு, மனிதநேயம் குறித்த நல்லதோர் மாற்றத்தை கொண்டுவந்திருக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கலாம். கிட்டத்தட்ட புத்தருக்கு ஈக்குவலானது என்று நம்ப்பி ஒரு புன்னகை பூத்தவாறே கேட்டார், "என்ன யோசிக்கிறே?"
"ம்ம்ம்.. இந்த மலை இருக்கிறதால ரோட் சைட்ல எக்ஸ்கவேட் பண்ணி பைப் லேயிங் செய்ய வாய்ப்பில்லை. பாறைல ஸ்ட்ராப் அடிச்சுத்தான் கொண்டு வேணும். இதால நிறையப் பிரச்சினை. கஷ்டம்! எதிர்காலத்தை யோசிக்காம ஒரு மலையை அவசரப்பட்டு உருவாக்கிட்டார். அவர் தேவை என்ன? அந்த யுத்தத்தை நிறுத்தியிருக்க வேணும் அவ்வளவுதானே?"
"பேசாம அந்த துட்டகெமுனவையும் மற்ற கெமுனுவையும் போட்டுத் தள்ளியிருக்கலாம்ல?"
**********
பாடசாலையின் பழையமாணவர் சங்க வருடாந்த ஒன்றுகூடல்! பேசிக் கொண்டிருந்தோம். என் பின்னால் இருந்த இருக்கையில் ஒரு பெண்மணி வந்து அமர்ந்தார். திரும்பிப் பார்த்துவிட்டு 'இந்த அக்காவும் எங்க ஸ்கூல்லதான் படிச்சிருக்காங்க போல'. இடையில் பேசும் போது ரூபன் அண்ணன் "டீச்சர் உங்களுக்கே தெரியும்தானே" என்றார்.
'டீச்சரா?' மறுபடியும் திரும்பிப்பார்த்தேன். லேசாகச் சிரித்த மாதிரி இருந்தது. தெரிஞ்ச மாதிரியும் இருக்கு..ஆனா தெரியல.. பார்த்திருக்கிறேனே பெயர் ஞாபகப்படுத்த முயன்றேன். முடியலை. 'ஒகே இப்ப படிப்பிக்கிற டீச்சர்னா எனக்குத் தெரிய வாய்ப்பில்லை' நினைத்துக் கொண்டேன்.
பின்பு கேட்டேன், "டீச்சர் நீங்க எப்பலேருந்து படிப்பிக்கிறீங்க?"
"93 லருந்து எங்கட ஸ்கூல்தான்"
"நான் 96 ல வந்தேன். அப்பிடின்னா எனக்கு உங்களைத் தெரியுமா?" அறிவுபூர்வமாகக் கேட்க,
"உன்னை எனக்குத் தெரியுதுடா... அப்பிடியே இருக்கே நான் விக்கி டீச்சர்டா" தமிழ் டீச்சர்.
"அய்யய்யோ நீங்களா மிஸ்? அப்பவே யோசிச்சேன் எங்கயோ பாத்திருக்கேன்னு பேர் ஞாபகம் வரல்ல" அசடு வழிந்து சமாளித்தேன்.
இவ்வளவு வருஷத்துக்குப் பிறகு ஞாபகம் வைத்திருக்கும் அளவிற்கு அப்படி என்ன சம்பவம் நிகழ்ந்தது? என யோசித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் பாருங்கள் ஸ்கூல் லீவ் பண்ணி சரியா ஒரு வருஷம்கூட ஆகாத நேரம். ஒரு டீச்சர் என்னைக் கண்டதும் மிகுந்த உற்சாகமாகி ஏதோ கண்டுபிடிப்பை நிகழ்த்திவிட்ட மகிழ்ச்சியுடன்,
"தம்பி உம்மட அண்ணா என்னட்டைப் படிச்சவரல்லோ?"
"அந்த அண்ணாவே.. நான்தான் மிஸ்!"
இந்த ஒன்றுகூடல் சம்பவத்தைப் பகிர்ந்ததும் நண்பன் கேட்டான், "அதெப்பிடி அவ்வளவு பேர் படிச்ச இடத்தில இத்தனை வருஷம் கழிச்சு உன்னை ஞாபகமிருக்கும்? "
"அதே டவுட்தான் மச்சி எனக்கும்" பிறகு யோசிக்கும்போது தோன்றியது இரண்டு சாத்தியங்கள்.
"முதலாவது, ஒரு ஸ்கூலில், அல்லது எங்கேயுமே 'ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு'கள்தான் பெரும்பான்மை. ஆக, இதில எந்தக் குமாரைப் பார்த்தாலுமே தெரிந்த குமாராகத் தோன்றலாம்"
"இரண்டாவது சாத்தியம், ஒரே இனத்தை, ஒரே வயதைச் சேர்ந்த இருபது குரங்குகளுக்குப் பெயரிட்டு, 'இதில் ராமுவைக் கண்டுபிடியுங்க பார்க்கலாம்' என்று யாரவது கூறினால் எங்களால் வித்தியாசப்படுத்த முடியாது. எல்லாமே ஒரே மாதிரித்தான் தெரியும்.அதே நேரம் எங்கேயோ காட்டில நாம் பார்க்கும் குரங்குகூட 'அட நம்ம ராமுல்ல இது?' என்று பார்த்தமாதிரியே தோணும்"
"இப்ப நீ என்ன சொல்ல வர்றே?"
"இல்ல மச்சி டீச்சர் உன்னைப் பார்த்திருந்தாலும் தெரியும்னுதான் சொல்லியிருப்பாங்க"
**********
டக்கு எனப்படுவது யாதெனில்...
நண்பர்களிடையே தொடர்புகளைப் பேணிக் கொள்வதில் எங்களை யாருமே அடிச்சுக்க முடியாது. ஒரு மதிய நேரத்தில் நண்பன் தொலைபேசினான்.
"மச்சி எப்பிடிரா இருக்க?"
"மச்சி நீ எங்க இருக்க? வேலைலயாடா? இப்ப நீ பிசியா மச்சி?"
நான் மிக அக்கறையாகக் கேட்டதும், புரிந்து கொண்டு சிரித்தான்,
"ஒக்கே மச்சி நீ பிசியா இருக்கேன்னு தெரியுது.." இல்லாட்டி என்ன நண்பன்?
"நான் நைட் கோல் பண்றேண்டா!" என்றேன்.
"ஓக்கேடா!"
அவ்வளவுதான். அன்றிரவு பேசவில்லை. அதற்குப்பிறகு இடையிடையே 'இன்று எப்படியாவது பேசிவிட வேண்டும்' நினைத்துக் கொள்வேன். பிறகு வழமைபோல மறந்து விடுவேன்.
இரண்டு நாளைக்கு முதல் வெற்றிகரமாகச் செயல்படுத்தினேன்.
அவ்வளவுதான். அன்றிரவு பேசவில்லை. அதற்குப்பிறகு இடையிடையே 'இன்று எப்படியாவது பேசிவிட வேண்டும்' நினைத்துக் கொள்வேன். பிறகு வழமைபோல மறந்து விடுவேன்.
இரண்டு நாளைக்கு முதல் வெற்றிகரமாகச் செயல்படுத்தினேன்.
பேசும்போது மேற்கண்ட அந்தச் சம்பவத்தை நினைவூட்டினேன். அவனும் மறந்து போயிருந்தான். பிறகுதான் நினைவு வந்து அந்த அதிர்ச்சியான விஷயத்தைச் சொன்னான்.
சம்பவம் நடந்தது போன வருஷம் டிசெம்பர் மாதமாம்!
சம்பவம் நடந்தது போன வருஷம் டிசெம்பர் மாதமாம்!
**********
சரியான நேரத்தில சரியான முடிவை எடுக்கிறதுதான் புத்திசாலித்தனம்!
வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். இலேசாக மழை தூறல் போட ஆரம்பித்தது. வீட்டுக்கு இன்னும் ரெண்டு நிமிஷ நடைதான். மழை பிடித்துக் கொண்டால் எப்போது விடும் என்று சொல்லமுடியாது. ஒதுங்கி நிற்கவேண்டாம் எனப் புத்திசாலித்தனமாக முடிவெடுத்தேன்.
எதிர்பாராமல் தூறல் சற்றுப் பலமானது. வேகத்தைக் கூட்ட, மழையும் இணைய ஓட்டமும் நடையுமாக வீட்டையடைந்தபோது, அரைநிமிடத்துக்கும் குறைவான அடைமழையில் தெப்பலாக நனைந்து விட்டேன்.
படியேறும்போது கவனித்தேன். சுத்தம்! மழை சுத்தமாக நின்றுவிட்டிருந்தது.
அதைவிட சோகம், வீட்டிலிருந்த ஆத்துமா ஒன்று "மழையே பெய்யல எப்பிடிடா நனைஞ்சே?" கையை வேறு பால்கனிக்கு வெளியே நீட்டி, அண்ணாந்து பார்த்தது.
"மழை பெய்யுதான்னு சினிமா ஹீரோயின் மாதிரி மேலே மட்டும்தான் பாப்பீங்களாடா? கீழ பாருங்கடா ரோட் நனைச்சிருக்கு"
நல்லார் ஒருவருக்காக மழை பெய்யுமாம். சமயத்தில், ரொம்ப நல்லவன் ஒருத்தன மட்டும் நனைக்கக்கூட பெய்யுமாம்!
சம்பவம் நடந்தது போன வருஷம் டிசெம்பர் மாதமாம்!
ReplyDelete>>
ரொம்ப சீக்கிரமாவேதான் பேசி இருக்கீங்க!
டக்கு விஷயத்தில் நம்மை மிஞ்ச ஆளில்லை. நண்பர்களும் (பழகிப்போய் ) புரிந்துகொள்வது தான் விஷேசம்!
ReplyDeleteடக்கு எனப்படுவது.................. அருமை...
ReplyDeleteடீச்சர்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!ஹ!ஹ!!ஹா!!!(கமண்டினவங்க எல்லாரும் தொடாத ஒரு விஷயத்த தொடுவமெண்டு............ஹி!ஹி!!ஹீ!!!)
ReplyDelete