Wednesday, December 11, 2013

தேடிச்சோறு சுட்டகதை - உட்கார்ந்து யோசிச்சது!

"தேடிச்சோறு நிதந்தின்று.."

வீழ்ந்து விடுவோமோ? என்று சிறு சந்தேகம் வரும்போதெல்லாம் சன்னமான குரலில் எனக்கு மட்டுமே கேட்கும் வகையில் சொல்லும்போது ஒரு உத்வேகம் வந்துவிடுகிறது. 'வீழ்வேனென்று நினைத்தாயோ?' இந்த வரிகளுக்கு மட்டும்  சந்தர்ப்பங்கள் தாராளமாக வாய்த்து விடுகின்றன. எதையாவது சாதிக்கத் திட்டம் இருக்கிறதோ இல்லையோ, முயற்சி செய்கிறோமா இல்லையோ என்பதெல்லாம் வேறு பிரச்சினை. சமயங்களில் துவண்டு போய்விடாமல் இருப்பதற்கேனும் கூடவே துணையிருக்கிறது!

யாழ்ப்பாணத்தில் இருந்தபோது, என் அறையில் மேசைக்கு மேலாக சுவரில் அழகான கையெழுத்தில் எழுதி ஒட்டி வைத்திருந்தேன். அடிக்கடி பார்வையில் படவேண்டும் என இந்த ஏற்பாடு. ஆனால் பாருங்கள், படிக்கிற மேசைப்பக்கம் நாம் எந்தக்காலதில போயிருக்கிறோம்? அவ்வப்போது அகால வேளைகளிலெல்லாம் வெறியேற்றிக் கொள்வதாக நினைத்து கவிதையை முறைத்துப் பார்த்து இம்சை கொடுப்பது வழக்கம்.

கொழும்பு வந்தபின்னர், எந்தக் கடையில் கிடைக்கும் நல்ல சாப்பாடு என்று 'தேடிச் சோறு தின்றபோது' தோன்றியது அதெல்லாம் அவ்வளவு சுலபமில்லைடா தம்பி! இப்போது இணையத்தில், ஃபேஸ்புக்கிலும் சின்னஞ்சிறு கதைகள் பேசிக் கொண்டிருக்கிறேன்.எதையும் கிழித்துவிடவில்லை எனினும், நம்பிக்கையுடன் இதே கவிதை, என் கூடவே எப்போதும்!

பாரதி படப்பாடல்களில் 'நிற்பதுவே நடப்பதுவே' வெளியான காலத்திலேயே பிடித்துக் கொண்டது. சிலவருடங்களுக்கு முன்னர்தான் படம் பார்த்தேன். படத்தைத் மீண்டும் பலதடவை பார்த்துக் கொண்டிருந்தேன்.அப்போது மிகப்பிடித்துக் கொண்டது, 'எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ' பாடல்தான் - அதுவரை நான் கேட்டதேயில்லை! நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று,  எனக்கு மிகப்பிடித்த பாடலைத் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.


அதுபோலவே நல்லதோர் வீணை செய்தே' பாடலும்!

வாத்தியார் சுஜாதா என்ன செய்தார்? ஏன் செய்யவில்லை? என்ற கேள்விகளுக்கப்பால் அவர் செய்த மிக நல்லதும், அவசியமானதுமான  முயற்சிகளில் ஒன்று 'பாரதி' படம் உருவாவதற்குக் காரணமாயிருந்தது. படத்திற்கு அவரும் ஓர் தயாரிப்பாளர். நஷ்டமடைந்திருக்கலாம்!


லுவலகத்தில் வந்திருந்தபோதே வாழ்க்கையில் எதையாவது கிழித்துவிட வேண்டும் என்ற உத்வேகம் மனதில்! என் அறையில் அப்படியே சுற்றுமுற்றும் பார்த்ததில் காலண்டர் நவம்பர் மாதத்தைக் காட்டியது. யாரும் கவனிக்கவில்லை. அருகில் சென்று சற்று உயரத்தில் இருந்த கலண்டரை இருகைகளாலும் பிடித்து கிழிக்க, என்ன நடந்ததென்று தெரிவில்லை. நவம்பர் அப்படியே இருக்க, டிசெம்பர் கையோடு வந்திருந்தது. கரெக்டா அந்த நேரம் வந்த, அஃபீஸ் எய்ட் ஒருமாதிரிப் பார்த்துட்டுப் போறான். தொட்டதெல்லாம் துலங்கும்னு இதைத்தான் சொல்வார்கள் போலும்.


சுட்ட கதை!

DVD கடையில் தற்செயலாகப் பார்த்து, ஏதோ ஒரு நம்பிக்கையில் வாங்கினேன். ஏனோ படம் பிடித்திருந்தது. எந்த இடத்திலும் இரிட்டேட் பண்ணாமல் கதை நகர்ந்ததாலோ, நகைச்சுவை செய்கிறோம் என்று சாவடிக்காததாலோ, இல்லை நான் ஒரு காமிக்ஸ் ரசிகன் என்பதோ காரணமாயிருக்கலாம். என்வரையில், நகைச்சுவைக்காட்சி என்பது வாய்விட்டுச் சிரிக்க வைக்கவேண்டும் என்பதில்லை. மொக்கைக் காமெடிப் படம்தான்!



ஒரு சோம்பேறித்தனமான ஊரின் போலீஸ் ஸ்டேசனில் கொன்ஸ்டபிளாக சேர்கிறார்கள் ஹீரோக்கள் இருவர். பெயர் ராம்கி, சங்கிலி! பக்கத்திலுள்ள ஆதிவாசிக் கிராமத்தின் தலைவர் 'ஒட்டகம்' (எம்.எஸ் பாஸ்கர்). அவர் மகளான 'சிலந்தி'யை இருவரும் ஒருதலையாக லவ்வுகிறார்கள். திடீரெனத் தலைவர் கொலையாக, துப்புத் துலக்கச் செல்கிறார்கள் இருவரும்.

படத்தின் காட்சிகளும் காமிக்ஸ் போலவே தோன்றியது. ஆங்காங்கே சின்ன சின்ன அடடே! சிபாரிசுக் கடிதத்தில் கைநாட்டு வைத்திருக்கும் கல்வித்துறை மந்திரி 'அறிவழகன்', தேநீர்க்கடைக்குப் பெயர் பரடைஸ் டீ ஸ்டால். ஆங்கிலத்தில் PARADESI TEA  STALL! போலவே போலீசார் முதல் குற்றவாளிகள் வரை விரும்பிப்படிக்கும் சாம்பசிவம் காமிக்ஸ் விளம்பரம் வேறு இடையிடையே வருகிறது. காமிக்ஸ் படித்தே குற்றம் செய்ய ஐடியாவும், குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க ஐடியாவும் பெற்றுக் கொள்கிறார்கள் சாம்பசிவம் காமிக்ஸ் ரசிகர்கள் எனத்தெரிந்ததும் நட்பாகிறார்கள் ராம்கியும் சங்கிலியும்! போலீஸ் அதிகாரி நாசர் புதிதாகச் சேரும் சங்கிலியைப் பார்த்து,"மூக்கைப் பார்த்தா பய நம்ம ஜாதி மாதிரியிருக்கே!" சங்கிலியின் பிரச்சினைக்கான காரணத்தை ஊர்மக்கள் டீ.வி கருத்துக் கணிப்புப் போல பேசுவது, ஒருவர் டிஸ்கவரி சானல் ஸ்டைல் தமிழில் பிளந்துகட்டுவது புன்னகைக்க வைக்கிறது. சிலந்தி ஓர் இசைக்கருவியைத் தனிமையில் அமர்ந்து இசைக்கும் ஒரு காட்சி அட்டகாசம். அந்தக்காட்சி ஏதோ ஹொலிவூட் படம் பார்ப்பது போல இருந்தது.

படத்தின் நாயகி சிலந்தி ஏனோ எனக்கு ரஜினி மகள் சௌந்தர்யாவை ஞாபகப்படுத்தினார். அவளுக்காகவே இருவரும் உயிரைப் பணயம் வைத்து சாகசம் செய்கிறார்கள். கடைசியில் எந்த வேலையும் செய்யாத, எப்போதும் தின்றுகொண்டேயிருக்கும்  உருப்படாத இன்னொரு போலீசுக்கு செட்டாகிவிடுகிறாள் சிலந்தி. அந்தவகையில் சமகால யதார்த்தையும் படம் பேசுகிறது. படம் 1.40 மணி நேரம்தான். காமிக்ஸ் ரசிகர்களுக்குப் பிடிக்கலாம்.

10 comments:

  1. பிறந்த நாளையெல்லாம் ஞாபகம் வச்சு, பதிவு போடற அளவுக்கு டெவலப் ஆகிட்டீங்களா ஜீ?

    ReplyDelete
    Replies
    1. அய்யய்யே... அதெல்லாம் இல்லண்ணே.. எனக்கு அதெல்லாம் பிடிப்பதில்லை! காலைல ஞாபகப் படுத்திட்டாங்க .. பாட்டு ஞாபகம் வந்து.. அப்பிடியே தொடங்கி இப்பிடியாச்சு! :-)

      Delete
  2. நீங்க சொன்னப்புறம்தான் மூடர்கூடம் பார்த்தேன், படம் ரொம்பவே பிடிச்சிருந்துச்சு... ஆனா, அத நம்பி சுட்டபடம் பார்க்குற தைரியம் இல்ல....

    ReplyDelete
    Replies
    1. சும்மா ஒரு ட்ரை குடுங்க பாஸ் ..எவ்ளோ பாத்திருப்பீங்க? :-)

      Delete
  3. நன்றி,ஜீ!பாரதி நினைவு சுமந்த பகிர்வு!///'சுட்ட கதை' கொஞ்சம் பார்த்தேன்.போரடித்தது,ஹி!ஹி!!ஹீ!!!

    ReplyDelete
  4. அருமையான பாடற் பகிர்வுடன் கூடிய அருமையான படைப்பு !!
    வாழ்த்துக்கள் சகோதரா .மிக்க நன்றி பகிர்வுக்கு .

    ReplyDelete
  5. பாரதி பற்றிய நினைவுப் பகிர்வு...
    சுட்டகதை இன்னும் பார்க்கவில்லை.... பார்க்க எண்ணம் வரவில்லை...

    ReplyDelete
  6. சுட்ட கதையை நீங்கள் சுட்ட விதம் அருமை !
    த.ம 2

    ReplyDelete
  7. உலக சினிமா விமர்சனங்களுக்கு பேஸ்புக் இன் இந்த பக்கத்தை அணுகவும்.
    https://www.facebook.com/hollywoodmve
    இதில் மிகவும் வித்தியாசமான படங்கள் மட்டுமே இடம் பெறும்.
    நன்றி....

    ReplyDelete
  8. My Posted Movies in this Page:

    1) The Prestige (2006)
    2) City of god (2002)
    3) 11:14 (2003)
    4) Run lola run (1998)
    5) 3-Iron (2004)
    6) Buried (2010)
    7) Eternal Sunshine of the spotless mind (2004)
    Mr.Nobody (2009)
    9) The Chaser (2008)
    10)The Thieves (2012)
    11)Source Code (2011)
    12)The Croods (2013)
    13)Inception (2010)
    14)Timecrimes (2007)
    15)Rope (1948)
    15)Groundhog day (1993)
    16)Dial M for murder (1954)
    17)The Terminal (2004)
    18)Reservoir Dogs (1992)
    19)Fight Club (1999)
    20)Memento (2001)
    21)A Beautiful Mind (2001)
    22)Pulp fiction (1994)
    23)The Shawshank Redemption (1994)
    24)Children of Heaven (1998)
    25)The way home(2002)
    26)50 first dates (2004)
    27)12 monkeys (1995)
    28)The Curious Case of Benjamin Button (2008)
    29)New World (2013)
    30)Disconnect (2012)
    31)Life is beautiful (1997)
    32)The Dark Knight Rises (2012)
    33)Memories of Murder (2003)
    34)The Time Traveler's wife (2009)
    35) Premonition (2007)

    Like this page and get Hollywood movies updates...
    https://www.facebook.com/hollywoodmve

    ReplyDelete