Thursday, April 26, 2012

உன்னைப்போல ஒருவன் - 2


'எந்தக் குப்பனோ சுப்பனோ இதைச்செய்ய முடியாது...

'என்னை மாதிரி ஒரு காமன் மேன்... கூடையிலருந்து ரோட்டில விழுற தக்காளியத் திரும்பப் பொறுக்கிப் போட்டுட்டுப் போற காமன் மேனாலதான் முடியும்..... அதனால நான் யாருன்னு தேடுறத விட்டுட்டு...'

'மிஸ்டர் காமன் மேன்! யு ஆர் அண்டர் அரெஸ்ட்!'

'எ... எப்புடிய்யா கண்டு புடிச்சீங்க?'

'முதல்ல நீங்க பேசிக்கிட்டிருக்கும்போது சாப்பிட்டது சாண்ட்விச்சா இருக்குமோன்னு எங்க டிப்பார்ட்மெண்ட் சந்தேகப்பட்டது!'

'ம்ம்....'

'நாட்டில எங்க குண்டு வெடிச்சாலும் உங்க சொந்தக்காரங்க செத்துப் போனதா புலம்புறது பத்தி உங்க மனைவி சொன்னாங்க!'

'அ..  அவ எப்பிடி?'

'நீங்க காய்கறி வாங்கப்போனா வீட்டுக்கு வர ரொம்ப லேட்டாகுதுன்னு சந்தேகப்பட்டு போலீஸ்ல கம்ப்ளெய்ண்ட் பண்ண வந்திருந்தாங்க'

'....?!'

'அப்புறம் உங்க ஏரியாவில நிறுத்தி, நிதானமா பேசுறது நீங்கதான்னும் தெரிஞ்சுக்கிட்டோம். முக்கியமா தயிர்சாதம் சாப்பிடாம சான்ட்விச் சாப்பிடுறது நீங்கதான்னு தெரிஞ்சதும் என்னோட வேலை ஈசியாகிடுச்சு!'

'ஆ... வெல்...! ப்ரில்லியன்ட்! பை தி வே.....யோ நேம்?'

'சுப்பன் ஐ. பி. எஸ்!'

8 comments:

  1. வாவ் வாட் எ மேன்...என்ன ஒரு அதிசயம்...ஸ்ஸ்!

    ReplyDelete
  2. ஹா ஹா ஹா ஜீ என்க்கியோ போய்டீங்க என்ன ஒரு ஆபாரமான அபரிதமான சிந்தனை

    ReplyDelete
  3. சபா.........முடியல்ல...அப்புறமா வாரன்:)

    ReplyDelete
  4. என்னங்க லொள்ளுசபா வசனம் மாதிரி இருக்கு? திடீர்னு எழுத ஆரம்பிசிட்டிங்களோ?

    ReplyDelete
  5. வணக்கம் நண்பா,
    நலம் தானே?

    என்னம்மா கலாய்க்கிறீங்க.

    ReplyDelete
  6. யா............ வெல்................. நான்.................................. என்ன ................. சொல்லவரேன்னா..........வெல்..................... ஜீ............... ஹ...... அதாவது.............. முடியல.................. விட்டுடுங்க :-)

    ReplyDelete
  7. கலக்கிட்டிங்க... போங்க...

    ReplyDelete