Wednesday, March 21, 2012

சமீரா - ஒரு கொடுங்கனவு!


இப்போதெல்லாம் பேரூந்துப் பயணங்களில் எந்த ஒரு தெலுங்கு மொக்கைப் படத்தைக்கூட  தாங்கும் மனவலிமையைப் பெற்றிருந்தாலும், சமீரா ரெட்டியின் படமோ, பாடலோ வந்துவிடக் கூடாதே என்ற பயம் இன்னும் தொடர்கிறது!

என்னமோ இப்போதெல்லாம் அடிக்கடி சமீரா ஒரு கொடுங்கனவாகவே மிரட்டுகிறார்.

ஏற்கனவே ஒருபதிவில் நான் - 'அதென்னமோ தெரியல! வெடில சமீராவைப் பார்க்கும் போது நம்ம பொன்னம்பலம் ஞாபகம் வந்திச்சு! நல்ல நடிகர் இப்போ காண முடியிறதில்ல!'

'சமீரா ரெட்டி ஏன் ஹீரோவா நடிக்கக்கூடாது? ரொம்ப நல்லாயிருக்கும்னு நினைக்கிறேன். ஆண்கள் மட்டும்தான் பெண்வேஷம் போடணுமா? பெண்கள் ஆண்வேஷம் போடக்கூடாதா? அப்பிடின்னா அது ஆணாதிக்கம் இல்லையா?'

இப்படிக் கூறியதைப் பார்த்த என் நண்பன் ஒருவன் காண்டாகி, இந்தப் பெண்மணியையா இப்படிச் சொன்னே? எனது ரசனையையே கேள்விக்குள்ளாக்கி இந்த அரிய புகைப் படத்தை எனது முகப்புத்தகத்தில் பதிந்தான்.

அதைப் பார்த்தபோது......

முன்னொரு காலத்தில் யாழ்ப்பாணத்தில் பலர் வான்டேம் என்பவர் நடிக்கும் படங்களை விரும்பிப் பார்ப்பார்கள். ஒவ்வொரு படமும் உலகசினிமாவில் சேர்க்கவேண்டியவை. படத்துக்குப் படம் வித்தியாசமாக - மனைவியை அல்லது காதலியை கொன்றுவிடும் வில்லன் பழியை வான்டேம் மீது போட்டுவிட அவர் ஜெயிலுக்குப் போவார். அங்கே ஜெயிலில் மேலேயுள்ள சமீராவை ஒத்த தோற்றத்தில் ஒரு காரெக்டர் வரும்! அது பற்றி மேற்கொண்டு சொல்ல வேண்டியதில்லை!

வாரணம் ஆயிரம் பார்த்துவிட்டு சமீரா அழகென்று இயக்குனர் லிங்குசாமி போலவே குருட்டாம்போக்காக நம்பும் ஏராளமான ரசிகர்கள் இருப்பதாகவே தோன்றுகிறது. எனது நண்பர் ஒருவரும் அப்படியிருந்தார். பின்பு தெளிந்திருக்கலாம்.

ஒரு ப்ரொடியூசர் சமீராவை ஹீரோயினாக வைத்து படமெடுப்பது...
அவரின் மனதைரியத்தை, எதற்கும் துணிந்த உறுதியான மனநிலையை, எவ்வளவு அடிவாங்கினாலும் தாங்கிக் கொள்ளும் பணபலத்தை, மிக முக்கியமாக தமிழனின் வீரத்தை, தமிழன் பெருமையைப் பறை சாற்றுவதாக உள்ளது!

ஆனால் ஒரு இயக்குனர் தனது படத்தில் நடிக்க வைப்பது..
ஒருத்தன் (ப்ரொடியூசர்) வசமா சிக்கிட்டான்... மங்களம் பாடிட வேண்டியதுதான்! என்னைக் கேட்பதற்கு யார் இருக்கிறார்கள்? என்ற எதேச்சாதிகாரப் போக்கையும், ரசிகர்கள் என்பவர்கள் நாம் எதைப் பிடித்துக் கொண்டுவந்து ஹீரோயினாக நடிக்கவைத்தாலும் ரசித்துத் தொலைக்கும் ஆட்டுமந்தைகள் என்ற ஆணவத்தையும் காட்டுகிறதேயன்றி வேறொன்றுமில்லை.

இல்ல நான் தெரியாமத்தான் கேட்கிறேன்...நாங்க எல்லாம் என்ன அவ்ளோ மோசமான கேணப் பயலுகளா? நாங்க எல்லாம் பொண்ணுங்களப் பார்த்ததே இல்லையா? என்ன தெனாவட்டு இருந்தா இப்படிப் பண்ணுவார்கள்? இவர்களுக்கெல்லாம் கொஞ்சமாவது மனச்சாட்சியே கிடையாதா? என்ன ஒரு அராஜகம்!

நான் மட்டுமா இப்படி என யோசித்தபோது, என்னைப் போலவே பலரும் மூத்த பதிவர்கள் உட்பட பாதிக்கப்பட்டிருப்பதை உணர முடிந்தது! அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்த்தால்..முதலில் நம்பாளு 

மெட்ராஸ் பவன் சிவகுமார் சமீரா இருக்கிறார் என்றதுமே மனது பகீர் என்றது

ராஜன் லீக்ஸ் சமீரா ரெட்டி இதில் பெண் வேடம் போட்டு நடித்தாலும் மேக்கப் காட்டிக் கொடுத்து விடுகிறது.

லக்கி லுக் ‘டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டுன்னு சொன்னாங்க. மூணு ஹீரோ இருக்காங்களே பாஸூ’ என்று கூட படம் பார்த்த தோழரிடம் சொன்னபோது, ‘முட்டாள். அது ஹீரோயின், பேரு சமீராரொட்டி’ என்று கடிந்துக் கொண்டார்.  இந்த அழகில் அம்மணிக்கு அஞ்சு செகண்டுக்கு ஒருமுறை குளோசப் வேறு. திட்டு திட்டான மேக்கப்பில் சமீராவை ஜூம் செய்துப் பார்த்த நீரவ்ஷாவுக்கு சிக்கன் குனியா வந்திருந்தாலும் ஆச்சரியப்பட ஏமி லேது.

ஆதிஷா சமீரா ரெட்டியை குளோஸ் அப்பில் பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது! நாம் பார்த்துக்கொண்டிருப்பது வேட்டையா அல்லது ஈவில் டெட்டா என்கிற சந்தேகம் வரும் அளவுக்கு அழகாக இருக்கிறார் சமீரா! கேமராமேன் நீரவ்ஷா இன்னுமும் உயிரோடிருப்பது அவருடைய மனைவியின் தாலிபாக்கியமாகத்தான் இருக்க வேண்டும். சமீராவுக்கு பதிலாக இந்த சமரசீமா ரெட்டியோ சமோசாக்குள்ள ரொட்டியோ அவரையே ஹீரோயினாக போட்டிருக்கலாம்! பெரிய வித்தியாசமே ருந்திருக்காது.

The Good Stranger   சமீரா ரெட்டி காஞ்சு போன ரொட்டி மாதிரி இருக்காங்க. அவருடைய act நமக்கு ஏனோ "யக்கா" என்பவர்களை ஞாபக படுத்துகிறது. தங்கச்சி அமலா பால் சமீராவை அடிக்கடி அக்கா அக்கா என்று அழைத்து கொண்டே இருப்பது அதற்கு வலு சேர்க்கிறது.

கார்த்திகைப்பாண்டியன் சமீரா ரெட்டியை தாவணியில் பார்த்தபோது தோன்றியது - முப்பது வருசத்துக்குமுன்னாடியே கல்யாணம் ஆகி இருக்க வேண்டியவ.. இன்னும் இப்படியேசுத்திக்கிட்டு இருக்கா.

****************

வெடி படத்தில் சமீரா 'என்ன ஆச்சு' (ம்ம்ம்? நாசமா.....ப் போச்சு!) அப்பிடீன்னு ஒரு பாட்டு!

(எச்சரிக்கை: இளகிய மனம் கொண்ட ஆண்கள், இருதய நோய் உள்ளவர்கள், கர்ப்பிணித் தாய்மார்களை உருவாக்கும் திட்டத்தில் இருப்பவர்கள் கண்டிப்பாகத் தவிர்க்கவும்!)

http://www.youtube.com/watch?v=Iaf-fK0VmCE

சமீரா வெட்கப்படுவதைப் பார்த்தபோது ஓடும் பேரூந்திலிருந்து குதித்து விடலாம் போலத் தோன்றியது. மா கோரம் என்றால் என்ன என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் இல்லையென்பேன். என் போலவே வேறு சிலருக்கும் இந்த தற்கொலை எண்ணம் வந்திருக்கலாம் என்பது அவர்கள் அவசர அவசரமாக 'சீட் - பெல்ட்' அணிந்தபோது உறுதியானது!

உச்சகட்டக் கொடுமையாக 14 ,15 ஆவது நொடியில் சமீரா காட்டும் ஆக்சனின் போது பேரூந்திலிருந்த பெருசுகள் முதற்கொண்டு வயது வித்தியாசமின்றி பயந்து, பின்னகர்ந்ததை அவதானிக்க முடிந்தது!

38 comments:

 1. வணக்கம் ஜீ!என்ன ஒரு கொலைவெறி?மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்,நீங்கள் ஆணாதிக்கவாதி இல்லைஎன்று????பெண் என்பது கூடவா???????????????????????????

  ReplyDelete
 2. ஏங்க சமீராமேல இவ்ளோ கொலைவெறி?
  ஆனாலும் நீங்க சொல்றதுல உண்மை இல்லாம இல்ல...


  நட்புடன்
  கவிதை காதலன்

  ReplyDelete
 3. சமீரா ரெட்டி ரசிகர்கள் கண்டனங்களை ஓய்வில் இருக்கும் பதிவர் சென்கோவி சார்பில் தெரிவித்து கொள்கிறேன்.

  ReplyDelete
 4. அய்யய்யோ எத்தனை பேருடைய கனவு கன்னி தெரியுமா அவர் வட இந்தியாவில்...?

  ReplyDelete
 5. “என்னோடு வா வீடு வரைக்கும். அப்புறம் பார் என்னைப் பிடிக்கும்“ என்கிற தாமரையின் வரிகள் “வாரணம் ஆயிரத்தில்“ சமிராவைப் பார்த்தவுடன் மறந்து போனது. இப்போது ஏனோ ஞாபகத்துக்கு வந்து தொலைகிறது.

  நான் ஆணாதிக்கவாதியும் இல்லை- பெண்ணாதிக்க வாதியும் இல்லை. ஆகவே, வேறுவகையில் பின்னுாட்ட முடியவில்லை. ஹிஹிஹி!

  ReplyDelete
 6. //வணக்கம் ஜீ!என்ன ஒரு கொலைவெறி?மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்,நீங்கள் ஆணாதிக்கவாதி இல்லைஎன்று????பெண் என்பது கூடவா//
  ஆகா! என்னா ஒரு கொலவெறி? என்னமா கோர்த்து விடுறாங்க? :-)

  ReplyDelete
 7. //கவிதை காதலன் said...
  ஆனாலும் நீங்க சொல்றதுல உண்மை இல்லாம இல்ல...//

  இது இது! இந்த நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு பாஸ்! :-)

  ReplyDelete
 8. //KANA VARO said...
  சமீரா ரெட்டி ரசிகர்கள் கண்டனங்களை ஓய்வில் இருக்கும் பதிவர் சென்கோவி சார்பில் தெரிவித்து கொள்கிறேன்//
  அண்ணனை எதுக்கு பாஸ் இழுக்குறீங்க? சரி விடுங்க...நீங்க சமீரா ரசிகரா.. ஆ? :-)

  ReplyDelete
 9. //MANO நாஞ்சில் மனோ said...
  அய்யய்யோ எத்தனை பேருடைய கனவு கன்னி தெரியுமா அவர் வட இந்தியாவில்...?//

  இது என்ன பாஸ் புதுசா இருக்கு அங்க போணியாகம தானே இங்கின சுத்துக்கிட்டு இருக்கா! இருந்தாலும் உங்களுக்கு ஓவர் குசும்பு பாஸ்! :-)

  ReplyDelete
 10. //மருதமூரான். said...
  “என்னோடு வா வீடு வரைக்கும். அப்புறம் பார் என்னைப் பிடிக்கும்“ என்கிற தாமரையின் வரிகள் “வாரணம் ஆயிரத்தில்“ சமிராவைப் பார்த்தவுடன் மறந்து போனது//

  ஐயையோ அந்த வரிகளை எதுக்கு ஞாபகப் படுத்திறீங்க? பயமா இருக்கு!

  ReplyDelete
 11. ஜீ...சமீரா பற்றி பதிவர்கள் கமெண்ட் அத்தனையும் அற்ப்புதம்.
  என்னமா யோசிச்சு ஆளை காலி பண்றீங்க...

  தொகுத்தளித்த ஜீக்கு சமீரா குளோசப்போபியாவால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மனமார்ந்த நன்றிகள்.

  ReplyDelete
 12. ஜீ... பஸ்ல சமீரா ரெட்டி படத்தைப் பாத்துட்டு, வடிவேலு மாதிரி இன்டர்வெல்ல நீங்க வெளில குதி்ச்சுடலையே... ஹி... ஹி... (உங்களின் வரிகள் அனைத்தையும் டிட்டோ போட்டு ஆமோதிக்கிறேன்)

  ReplyDelete
 13. அன்பரே வாரணம் ஆயிரம் படத்தில் சமீரா அழகு தான்

  ReplyDelete
 14. உங்க காதலை சமீரா ரிஜக்ட் பண்ணிட்டாங்களா? செம காண்டா இருக்கீங்க போல.

  ReplyDelete
 15. அந்த அளவுக்கு மோசமா.....ரசிக்க தெரியாத அளவுக்கு நம்ம பதிவுலகம் இருக்கே...........நம்ம கவுண்டமணி சொல்வாரே...ஆலையில் ஓடற கரும்புல அடிக்கரும்புன்னா என்ன ...நுனி கரும்புன்னா என்ன....நமக்கு வேண்டியது வெல்லம் தானடா...

  ReplyDelete
 16. சமீரா மேல் ஏன் இவ்வளாவு கோவம்?

  ReplyDelete
 17. இருந்தாலும் இப்படி சாமிராவை கொலைவெறியோடு நோக்கக்கூடாது

  ReplyDelete
 18. ஐயோ பாவம் இதோட விட்டிடுங்க.

  பெண்பாவம் பொல்லாதது என்று வேற சொல்லுறவங்க

  ReplyDelete
 19. யோவ்... ராத்திரி நேரத்துல ஏன்யா இப்படி சிரிக்க வைக்கிற... வீட்டுல தூங்கிட்டு இருக்குற அப்பனாத்தாவெல்லாம் மிரளுறாங்க இல்ல...

  ReplyDelete
 20. பதிவு குலுங்கி குலுங்கி சிரிக்கும் அளவுக்கு இருக்கிறது.
  அவர் தன்னை பற்றி இப்படி வர்ணனைகள் இருப்பது தெரிந்தால் வருத்தப்படுவார் :-(

  ReplyDelete
 21. //உலக சினிமா ரசிகன் said...
  தொகுத்தளித்த ஜீக்கு சமீரா குளோசப்போபியாவால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மனமார்ந்த நன்றிகள்//
  நீங்களுமா பாஸ்? நன்றி! :-)

  ReplyDelete
 22. //கணேஷ் said...
  ஜீ... பஸ்ல சமீரா ரெட்டி படத்தைப் பாத்துட்டு, வடிவேலு மாதிரி இன்டர்வெல்ல நீங்க வெளில குதி்ச்சுடலையே... ஹி... ஹி...//
  அதான் சீட் பெல்ட் போடுறமில்ல! :-)

  ReplyDelete
 23. //PREM.S said...
  அன்பரே வாரணம் ஆயிரம் படத்தில் சமீரா அழகு தான்//
  எல்லாப் புகழும் கவுதம் மேனனுக்கே! :-)

  ReplyDelete
 24. //Kovai Neram said...
  அந்த அளவுக்கு மோசமா.....ரசிக்க தெரியாத அளவுக்கு நம்ம பதிவுலகம் இருக்கே...........நம்ம கவுண்டமணி சொல்வாரே...ஆலையில் ஓடற கரும்புல அடிக்கரும்புன்னா என்ன ...நுனி கரும்புன்னா என்ன....நமக்கு வேண்டியது வெல்லம் தானடா...//
  சரியாப் புரியல! நாம் இன்னும் வளரணுமோ! :-)

  ReplyDelete
 25. //ராஜி said...
  உங்க காதலை சமீரா ரிஜக்ட் பண்ணிட்டாங்களா? செம காண்டா இருக்கீங்க போல//
  ஓ! நோ நோ நோ! நினச்சாலே பயங்கரமா இருக்கு!
  இது உச்சகட்ட அவமரியாதை :-(

  ReplyDelete
 26. //தனிமரம் said...
  இருந்தாலும் இப்படி சாமிராவை கொலைவெறியோடு நோக்கக்கூடாது//
  போங்க பாஸ்..நான் இப்பல்லாம் பாக்கிறதே இல்ல!:-)

  ReplyDelete
 27. //அம்பலத்தார் said...
  ஐயோ பாவம் இதோட விட்டிடுங்க//
  நீங்க சொல்லிட்டீங்க இல்ல! ஓக்கே இத்தோட நிறுத்திக்குவோம்!

  ReplyDelete
 28. //Philosophy Prabhakaran said...
  யோவ்... ராத்திரி நேரத்துல ஏன்யா இப்படி சிரிக்க வைக்கிற... வீட்டுல தூங்கிட்டு இருக்குற அப்பனாத்தாவெல்லாம் மிரளுறாங்க இல்ல...//

  ஏது...? சிரிக்...கிறீங்களா? நான் சீரியஸா பேசிக்கிட்டிருக்கேன் பாஸ்!

  ReplyDelete
 29. இந்த அம்மணி பற்றி நான் ஒரு இடகையில் சொன்னது இது:

  //இந்த ரெட்டி பையனை வைத்து கொண்டு கௌதமும் லிங்குசாமியும் எவ்வளவு நாள் தான் அழுவார்களோ? ஏகப்பட்ட க்ளோஸ் அப்பில் முடியலடா சாமி ! இயக்குனர்களுக்கு பத்திரிக்கை மற்றும் இணையம் படிக்கும் வழக்கமே இல்லையா? அனைத்து ஊடகங்களும் சமீரா ரெட்டி குறித்து ஒரே மாதிரி எழுத, இன்னும் எப்படி அவர் பல படங்களில் இடம் பிடிக்கிறார் என்பது புரியாத புதிரே.//

  நீங்கள் பகிர்ந்ததில் ராஜன் எழுதியதை படிச்சிட்டு விழுந்து விழுந்து சிரித்தேன்

  ReplyDelete
 30. //மோகன் குமார் said...
  இந்த அம்மணி பற்றி நான் ஒரு இடகையில் சொன்னது இது:இந்த ரெட்டி பையனை வைத்து கொண்டு கௌதமும் லிங்குசாமியும் எவ்வளவு நாள் தான் அழுவார்களோ? ஏகப்பட்ட க்ளோஸ் அப்பில் முடியலடா சாமி ! //
  சூப்பர் பாஸ்! :-)

  ReplyDelete
 31. ஜீ....ஜீ....ஏன் இப்பிடி !

  ReplyDelete
 32. செம காண்டா இருக்கீங்க போல.

  ReplyDelete
 33. வாரணம் ஆயிரம்ல பார்த்தப்போஅழகா இருந்த மாதிரி தோணுச்சு அப்புறம் அசல் படத்துல பார்த்தப்போ அவங்களா இவுங்கன்னு இருந்துச்சு . வெடி படத்துல திகிலா இருந்துச்சு கடைசியா வேட்டை ல படு பயங்கரம் பாஸ். பேசாம இவிங்கள ஹாரர் மூவில மேக்அப் இல்லாமலே நடிக்க வைக்கலாம்.

  ReplyDelete
 34. வாரணம் ஆயிரம் படத்தில் சமீரா அழகு... NOW SHE SEEMS AGED.. BUT SHE IS CUTE IN HER HEIGHT

  ReplyDelete
 35. அழகு என்பது அவரவர் ரசனையைப் பொறுத்த விஷயம். உலக அழகிப் போட்டியில் சில நீக்ரோ பெண்களும் வென்றிருக்கிறார்கள்.
  வாரணம் ஆயிரம் படத்தில் சமீரா அழகாகத் தான் இருந்தார்,
  ஜீ.... ரொம்ப நாளாச்சு பார்த்து. நலமா ?

  ReplyDelete
 36. என்ன இருந்தாலும் சமீரா ரெட்டி ஒரு பெண், அதுவும் நடிகைங்கறதால மன்னிச்சு விட்டிருக்கலாம்...

  ReplyDelete
 37. /////மெட்ராஸ் பவன் சிவகுமார் சமீரா இருக்கிறார் என்றதுமே மனது பகீர் என்றது//////////

  பாவம் தம்பி எதையோ பாத்துப்புட்டு ரொம்பத்தான் மெரண்டிருக்காப்ல.........

  ReplyDelete

Followers

Powered by Blogger.
Copyright © வானம் தாண்டிய சிறகுகள்.. |