Thursday, March 8, 2012

மகளிர்தினமும் தமிழன் பெருமையும்!



ஜீ பெண்களை மிகவும் மதிப்பவன், நேசிப்பவன் என்ற ஒரே காரணத்துக்காகவே இன்று இந்தப்பதிவை எழுதுகிறான். மற்றபடி இந்தப்பதிவின் மூலம் பெண்வாசகிகளை அதிகரித்துக் கொள்ளும் எந்த உள் நோக்கமும் இல்லை!

இந்த நன்னாளில் தானைத் தலைவி அஷ்லினுக்கு ஸ்பெஷல்  மகளிர் தின வாழ்த்துக்கள்! (மேலே படத்தில் இருப்பவர் Ashlynn Brooke - யாரும் அலுவலகத்தில் / பொது இடத்திலிருந்து தேடிப்பார்த்துடாதீங்க அப்புறம் கம்பனி பொறுப்பல்ல!) இந்த ஸ்டில்ல தேட நான் பட்டபாடு...

பெண்கள் தினத்தன்று திடீர்னு பெண்கள் பற்றி யோசிச்சதில ஒரு விஷயம் தோணிச்சு!

தமிழன் அந்தக்காலத்திலயே எப்பிடி யோசிச்சிருக்கான் பாருங்க! பெண்களை வயது வாரியா வகைப்படுத்தி பெயர் சூட்டியிருக்கான்! எப்பிடீன்னா...

பேதை, பெதும்பை , மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் அப்பிடீன்னு...

இதில முக்கியமான பருவங்களைப் பார்ப்போம்.


மடந்தை (வயது 15 -18 )
டீன் ஏஜ்ல முக்கியமான பருவம். ஸ்வீட் சிக்ஸ்டீன் எல்லாம் இங்கதான் வருது! நண்பன் ஒருத்தன் முன்னாடி சொல்வான். இந்த வயசுப் பொண்ணுங்களை லவ் பண்றது சுலபம். ஈசியா மடங்கும்னு! (அப்புறம் அந்த நண்பன் ஒண்ணுமே கிழிக்கலங்கிறது வேற!) 

ஈசியா மடங்கும் என்பதால் மடந்தை? இது ஓரளவுக்கு உண்மைதான். ஏன்னா இந்தவயசில பெண்களை கவனமா இருக்கச் சொல்றாங்க..நெல்லது கெட்டது தெரியாத, அறியாத பருவம் என்பதால் மடந்தை! 

அரிவை (வயது 19 - 24 )- அதாவது இப்ப தெளிவான பருவம். இந்த வயசில எடுக்கும் முடிவு, லவ் தெளிவா இருக்குமாம்!

இதை அறுவை என்றும் சொல்லலாமா என்பது ஆராயப் படவேண்டியது. இந்த வயசுப் பெண்கள்தான் பெரும்பாலும் மொபைல், முகப்புத்தகத்தில அதிக நேரத்தைச் செலவிட்டு மொக்கை போடுவதால் இப்படி ஒரு சந்தேகம் பலருக்கு! இதையெல்லாம் அப்பவே எவ்வளவு தீர்க்க தரிசனத்தோட சொல்லியிருக்காங்க பாருங்க!

தெரிவை - இது ரொம்ப முக்கியமான காலகட்டம் இதை அப்புறமா பார்க்கலாம்!

பேரிளம்பெண் (வயது 30 க்கு மேல்)
விளக்கமா, நேரடியாச் சொன்னா ஆன்டிங்க! அதாவது முப்பதுக்கு மேல போனா எல்லாமே  ஆன்டிங்கதான் அப்புறம் வெரைட்டியே கிடையாதுக்கிறாங்க.

இப்போ தெரிவை பற்றிப் பார்க்கலாம்.

தெரிவை (வயது 25  -29 )
தெரிந்தகொள். தேர்ந்தெடுத்துக் கொள்! அதாவது இதை நாங்க ஒரு எச்சரிக்கையா எடுத்துக் கொள்ளலாம். இப்பவே பாத்துக்க இல்லேன்னா அப்புறம் எல்லாமே  ஆன்டிங்கதான் அப்பிடீன்னு! 
சுருக்கமா சொன்னா தெரிவைக்கு மேல் தெரிவே கிடையாது!

பாருங்க! தமிழன் அந்தக்காலத்திலயே எப்பிடி உட்கார்ந்து யோசிச்சிருக்கான்?


உண்மையிலேயே தமிழன் என்பதில் எனக்கு பெருமையா, கர்வமா இருக்கு! தமிழன் சீனாக் காரனுக்கு கராத்தே மட்டும் சொல்லிக் கொடுக்கல! நம்மளுக்கும் எவ்வளோ சொல்லி வச்சிட்டுப் போயிருக்கான்!  

36 comments:

  1. தல நல்லாத்தான் போடுறீங்க பதிவு
    நம்மாளுகள் அப்பவே எப்படி வகைப்படுத்தியிருக்காங்க

    ReplyDelete
  2. ////அஷ்லினுக்கு////

    ஹி.ஹி.ஹி.ஹி.............

    ReplyDelete
  3. /////உண்மையிலேயே தமிழன் என்பதில் எனக்கு பெருமையா, கர்வமா இருக்கு! தமிழன் சீனாக் காரனுக்கு கராத்தே மட்டும் சொல்லிக் கொடுக்கல! நம்மளுக்கும் எவ்வளோ சொல்லி வச்சிட்டுப் போயிருக்கான்! ////

    தமிழனின் பெருமை சொல்ல இதைவிட வேறு என்ன இருக்கு........!

    ReplyDelete
  4. ஜீ பெண்களை மிகவும் மதிப்பவன், நேசிப்பவன் என்ற ஒரே காரணத்துக்காகவே இன்று இந்தப்பதிவை எழுதுகிறான். மற்றபடி இந்தப்பதிவின் மூலம் பெண்வாசகிகளை அதிகரித்துக் கொள்ளும் எந்த உள் நோக்கமும் இல்லை!:////////

    ஹா ஹா ஹா ஏன் நண்பா, பெண் வாசகிகள் அதிகரிச்சா என்ன தப்பு?

    ReplyDelete
  5. பாருங்க! தமிழன் அந்தக்காலத்திலயே எப்பிடி உட்கார்ந்து யோசிச்சிருக்கான்?

    உண்மையிலேயே தமிழன் என்பதில் எனக்கு பெருமையா, கர்வமா இருக்கு! தமிழன் சீனாக் காரனுக்கு கராத்தே மட்டும் சொல்லிக் கொடுக்கல! நம்மளுக்கும் எவ்வளோ சொல்லி வச்சிட்டுப் போயிருக்கான்! /////////

    ஹா ஹா ஹா உண்மைதான் ஜீ! ஆனா நாமதான் எதையுமே கண்டுக்கறதில்ல!

    ReplyDelete
  6. அட ... இந்தச் சொற்களுக்கு பின்னால் இவ்வளவு அர்த்தங்கள் இருக்கா? தமிழன் தமிழன் தான் ...

    ReplyDelete
  7. அடாடா என்னே ஒரு இலக்கியதரமிக்க ஆராய்ச்சி

    ReplyDelete
  8. //ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said...
    ஹா ஹா ஹா ஏன் நண்பா, பெண் வாசகிகள் அதிகரிச்சா என்ன தப்பு?//

    அப்பிடீன்னா இந்தப் பதிவோட பெண்கள் கூட்டம் சும்மா அலைமோதும்கிறீங்க? :-)

    ReplyDelete
  9. //ஹாலிவுட்ரசிகன் said...
    அட ... இந்தச் சொற்களுக்கு பின்னால் இவ்வளவு அர்த்தங்கள் இருக்கா? தமிழன் தமிழன் தான் ...//
    இவ்ளோ நாளா தெரியாம இருந்துட்டோம் பாஸ்! :-(

    ReplyDelete
  10. //பாலா said...
    அடாடா என்னே ஒரு இலக்கியதரமிக்க ஆராய்ச்சி//

    இல்லையா பின்ன? நாங்களும் எலக்கியவாதி ஆகணும்ல! :-)

    ReplyDelete
  11. //K.s.s.Rajh said...
    தல நல்லாத்தான் போடுறீங்க பதிவு
    நம்மாளுகள் அப்பவே எப்படி வகைப்படுத்தியிருக்காங்க//

    வாங்க கிஸ்ராஜா பாரத்து ரொம்ப நாளாச்சு!
    அப்புறம் உங்களுக்குத் தெரியாதது ஒண்ணுமில்ல...:-)

    ReplyDelete
  12. //K.s.s.Rajh said...

    ////அஷ்லினுக்கு////

    ஹி.ஹி.ஹி.ஹி.............

    //

    ரிப்பிட்டு

    ReplyDelete
  13. வணக்கம் ஜீ!மகளிர் தினப் பதிவோ?என்ன திடீரென்று ஆராய்ச்சி எல்லாம்?உங்க வயசுக்கு இதெல்லாம் ரொம்ப ஓவரு சொல்லிப்புட்டேன்!ஹி!ஹி!ஹி!!!!!

    ReplyDelete
  14. ////ஜீ பெண்களை மிகவும் மதிப்பவன், நேசிப்பவன் என்ற ஒரே காரணத்துக்காகவே இன்று இந்தப்பதிவை எழுதுகிறான். மற்றபடி இந்தப்பதிவின் மூலம் பெண்வாசகிகளை அதிகரித்துக் கொள்ளும் எந்த உள் நோக்கமும் இல்லை!///////

    அப்படியே அதிகரிச்சிட்டாலும்......

    ReplyDelete
  15. /////இந்த நன்னாளில் தானைத் தலைவி அஷ்லினுக்கு ஸ்பெஷல் மகளிர் தின வாழ்த்துக்கள்! (மேலே படத்தில் இருப்பவர் Ashlynn Brooke - யாரும் அலுவலகத்தில் / பொது இடத்திலிருந்து தேடிப்பார்த்துடாதீங்க அப்புறம் கம்பனி பொறுப்பல்ல!)/////

    வெளங்கிருச்சு.... பதிவை படிக்க வந்தவங்க எல்லாரும் மொதல் வேலையா இதத்தான் பண்ணி இருப்பாங்க.....

    ReplyDelete
  16. ////தெரிவை (வயது 25 -29 )
    தெரிந்தகொள். தேர்ந்தெடுத்துக் கொள்! அதாவது இதை நாங்க ஒரு எச்சரிக்கையா எடுத்துக் கொள்ளலாம். இப்பவே பாத்துக்க இல்லேன்னா அப்புறம் எல்லாமே ஆன்டிங்கதான் அப்பிடீன்னு!
    சுருக்கமா சொன்னா தெரிவைக்கு மேல் தெரிவே கிடையாது!
    ///////

    என்ன ஒரு சிந்தனை, இதுக்கு பொண்ணுங்க ஆதரவு இருக்கோ இல்லியோ, ஓட்டுமொத்த ஆண் இனமும் ஆதரவு கொடுக்கும்......

    ReplyDelete
  17. 18+ எதுக்குனு தேடி தெரிஞ்சுகிட்டேன்

    ReplyDelete
  18. என்னமா ஆரய்சிபண்ணுறார் ஜீ. அவரின் பெண்கள்மீதான கரிசனையையும், தமிழ் ஆராய்சியையும் பாராட்டி, அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்க சிபார்சுபண்ணுகிறேன்.

    ReplyDelete
  19. ஜீ உங்க ஆளு எந்தப்பிரிவில இருக்காங்க? அதை முதலில் சொல்லுங்க

    ReplyDelete
  20. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    வெளங்கிருச்சு.... பதிவை படிக்க வந்தவங்க எல்லாரும் மொதல் வேலையா இதத்தான் பண்ணி இருப்பாங்க.....//

    எச்சரிக்கையா பண்ணி இருப்பாங்கல்ல அதுக்குத்தான் மாம்ஸ்! :-)

    ReplyDelete
  21. //Yoga.S.FR said...
    வணக்கம் ஜீ!மகளிர் தினப் பதிவோ?என்ன திடீரென்று ஆராய்ச்சி எல்லாம்?உங்க வயசுக்கு இதெல்லாம் ரொம்ப ஓவரு சொல்லிப்புட்டேன்!ஹி!ஹி!ஹி!!!!!//

    விடுங்க பாஸ்! சமுதாய அக்கறைன்னு வரும்போது வயசெல்லாம் எதுக்கு? இன்னிக்கு இல்லேன்னாலும் நாளைக்கு எனக்கும் தேவைல்ல?

    ReplyDelete
  22. >>>>>பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ////ஜீ பெண்களை மிகவும் மதிப்பவன், நேசிப்பவன் என்ற ஒரே காரணத்துக்காகவே இன்று இந்தப்பதிவை எழுதுகிறான். மற்றபடி இந்தப்பதிவின் மூலம் பெண்வாசகிகளை அதிகரித்துக் கொள்ளும் எந்த உள் நோக்கமும் இல்லை!///////

    அப்படியே அதிகரிச்சிட்டாலும்.....<<<<

    அரசியல்ல குதிச்சிடலாம்ல! :-)

    ReplyDelete
  23. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    என்ன ஒரு சிந்தனை, இதுக்கு பொண்ணுங்க ஆதரவு இருக்கோ இல்லியோ, ஓட்டுமொத்த ஆண் இனமும் ஆதரவு கொடுக்கும்......//

    நன்றி மாம்ஸ்!

    ReplyDelete
  24. //PREM.S said...
    18+ எதுக்குனு தேடி தெரிஞ்சுகிட்டேன்//
    மாட்டிக்கல இல்ல? :-)

    ReplyDelete
  25. //அம்பலத்தார் said...
    என்னமா ஆரய்சிபண்ணுறார் ஜீ. அவரின் பெண்கள்மீதான கரிசனையையும், தமிழ் ஆராய்சியையும் பாராட்டி, அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்க சிபார்சுபண்ணுகிறேன்.//

    எங்க பாஸ்? நம்ம கேப்டனுக்கு குடுத்த அதே யுனிவர்சிட்டியா?

    ReplyDelete
  26. //அம்பலத்தார் said...
    ஜீ உங்க ஆளு எந்தப்பிரிவில இருக்காங்க? அதை முதலில் சொல்லுங்க//

    இப்போதைக்கு... அஷ்லின் தெரிவைலதான் இருக்காங்க! :-)

    ReplyDelete
  27. ஜீ... said...

    //Yoga.S.FR said...
    வணக்கம் ஜீ!மகளிர் தினப் பதிவோ?என்ன திடீரென்று ஆராய்ச்சி எல்லாம்?உங்க வயசுக்கு இதெல்லாம் ரொம்ப ஓவரு சொல்லிப்புட்டேன்!ஹி!ஹி!ஹி!!!!!//

    விடுங்க பாஸ்! சமுதாய அக்கறைன்னு வரும்போது வயசெல்லாம் எதுக்கு? இன்னிக்கு இல்லேன்னாலும் நாளைக்கு எனக்கும் தேவைல்ல?///ப.ரா கரெக்டாதான் பேசியிருக்காரு!நான் தான்..............................!

    ReplyDelete
  28. பெண்கள் தினம் வந்தாலும் வந்திச்சு.உங்கள் எல்லாருக்கும் நக்கல் கூடிப்போச்சு.திட்டம்போட்டுத்தான் பதிவெல்லாம்...!

    ReplyDelete
  29. யோவ் எங்கயோ போயிட்ட...இங்க வாய்யா முதல்ல...இத்தனைக்கு மேலயும் தமிழன் என்ன கண்டுபிடிச்சான்னு கேக்கரவங்கல என்ன பண்றது ஹெஹெ!

    ReplyDelete
  30. ஹேமா said...

    பெண்கள் தினம் வந்தாலும் வந்திச்சு.உங்கள் எல்லாருக்கும் நக்கல் கூடிப்போச்சு.திட்டம்போட்டுத்தான் பதிவெல்லாம்...!///இதோட நிக்காது,அம்மாக்கள் தினம்(Mothers Day)வேற வருமே????

    ReplyDelete
  31. வாழ்த்துகள்...அதிகரித்ததற்கு அல்ல..Hall of Fame விருதுக்கு!

    ReplyDelete
  32. //செங்கோவி said...
    வாழ்த்துகள்...அதிகரித்ததற்கு அல்ல..Hall of Fame விருதுக்கு!//
    நன்றிண்ணே!

    ReplyDelete
  33. நல்லதொரு தெளிவான பதிவு ...பெண்களுக்காக எழுதியதற்கு நன்றி

    ReplyDelete
  34. //roshaniee said...
    நல்லதொரு தெளிவான பதிவு ...பெண்களுக்காக எழுதியதற்கு நன்றி//

    இல்லீங்..இது ஆண்களுக்காகத்தான்...இருந்தாலும் நன்றீங்! :-)
    (யாராவது பிளான் பண்ணி அனுப்பியிருப்பாங்களோ?!)

    ReplyDelete