Monday, February 27, 2012

சுஜாதா! சுஜாதா!விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு, எந்தவித கேள்விக்கும் உள்ளாக்காமல் மிகச்சிலரை மட்டுமே ரசிக்க, நேசிக்க முடிகிறது. அப்படி எந்த சமரசமும் செய்துகொள்ள விரும்பாமல் நான் ரசிக்கும் ஒருவர் சுஜாதா! ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்திலாவது தன்னை நினைவு படுத்திப் போகிறார். என்னைப் போல பலருக்கும் இப்படியிருக்கலாம். 


எந்த விஷயத்தையும் இலகுவாக, வாசகனைக் குழப்பாமல் குறிப்பாக நான் எழுதுவதை உன்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று வாசகனைக் குற்றம் சொல்லாமல் எளிமையான நடையில் எழுதியவர். ஏராளமான வாசகர்கள், வெகுஜன இதழ்கள், சினிமா என்று கலக்கிய தமிழ் எழுத்துலகின் சூப்பர் ஸ்டார் இந்தக் காரணங்களாலேயே இலக்கியவாதி என்று ஏற்றுக் கொள்ளப்படாதவர்.

சுஜாதாவின் எழுத்துக்களில் எப்போதும் கலந்திருக்கும் நக்கல், நையாண்டி, எள்ளல் போன்றவைதான் என்னை மிக மிகக் கவர்ந்தவை. எவ்வளவு சீரியசான விஷயங்களையும் போகிற போக்கில் அலட்டிக் கொள்ளாமல் நக்கலாக, பிளாக் ஹியூமராக கூறிச் செல்வது அவரின் தனித்தன்மை. முக்கியமாக அவரின் சுய எள்ளல்!

கணையாழியின் கடைசிப் பக்கங்களில் சொல்கிறார்..
சமீபத்திய துக்கத்தின் காரணமாக சென்ற சில இதழ்களில் எழுத முடியவில்லை. சுஜாதா எழுதாமல் இருந்ததில் அப்படியொன்றும் பிரளயம் ஏற்பட்டு விடவில்லை என்பதை அறிந்துகொண்டதில் கொஞ்சம் ஸ்திரப் பட்டுக் கொள்கிறேன்.

தமிழ்ப் பதிவுலகின் முன்னோடி என்று சுஜாதாவைச் சொல்லலாமா? இன்று பதிவுலகில் பல்சுவைக் கதம்பமாக, நகைச்சுவை கலந்த நடையில் எழுதப்படும் பதிவுகள் சுஜாதாவை நினைவு படுத்துகின்றன. 'கற்றதும் பெற்றதும்' அவ்வாறான பதிவுகளுக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கலாம். ஆனால் முப்பது வருஷத்துக்கு முன்னரே கணையாழியின் கடைசிப் பக்கங்கள் தொடரே ஒரு பல்சுவைப் பதிவாகவே இருக்கிறது! அதில் அவர் தொட்டுச் செல்லாத விஷயங்களே இல்லை எனத் தோன்றுகிறது!

புறநானூறு, பீட்டில்ஸ், பம்பாய்,டெல்லியின் வீதிகள், லெமூரியா, லேட்டரல் திங்கிங், புதுக் கவிதைகள், எழுத்தாளர்களின் அறிமுகங்கள், ஜென், நாட்டுபுறப் பாடல்கள், சிறு பத்திரிகைகள், ஆழ்வார் பாடல்கள், விமானத் தொழில்நுட்பம், சினிமா, தமிழ்சினிமாவின்  அபத்தங்கள்...இன்னும் எவ்வளவோ!

சுஜாதா அப்படி என்னதான் செய்துவிட்டார் என்று கேட்பவர்கள் 'கணையாழியின் கடைசிப்பக்கங்களை' ஒருமுறை வாசிக்கலாம்.

அதிலிருந்து சில சுவாரஷ்யங்கள்....

மிழ்சினிமாவின் அபத்தங்கள் பற்றி..
'ராஜராஜசோழன்' சிவாஜி நடிக்கும் தமிழ்ப்படத்தில் எத்தனையோ செலவழித்து மெட்ராசில் தஞ்சைக் கோயிலையும் நந்தியையும் அடியில் செட் அமைத்துப் பிடித்திருக்கிறார்களாம். இதைவிட ..த்தனமான காரியம் இருக்க முடியாது.

மேனாட்டில் சரித்திரப்படம் எடுப்பவர்கள் ஆயிரம் மைல் கடந்து சரித்திரம் நடந்த இடத்துக்குச் சென்று பிடிப்பார்கள்.இருநூறு மைலில் இருக்கும் தஞ்சாவூர். அங்கே செல்லவில்லை. அதற்குக் காரணம் தஞ்சைக் கோயிலில் இன்று இருக்கும் எலெக்ட்ரிக் கம்பங்களும், கம்பிகளும் நியான் விளக்குகளும் என்று சொல்லப்படுகிறது. செட் அமைக்கச் செலவிட்ட பணத்தில் பத்தில் ஒரு பங்கு செலவழித்து அந்த உறுத்தும் விளக்குகளையும், கம்பங்களையும் அகற்றிவிட்டு படம் எடுத்துவிட்டு மறுபடி அவற்றை அமைத்திருக்கலாம்.

வர்ணப்படம் என்றால் பிரேமுக்குப் பிரேம் ஏழு வர்ணங்களும் கசிந்தாக வேண்டும் என்று நினைப்பவர்களைத் திருத்துவது கடினம். தமிழ்சினிமா ஒரு ஸ்ட்ரெட்ச் கேஸ். நான் சமீபத்தில் படம் எடுப்பதாக இல்லை.

**********

ரேடியோ நாடகங்கள் பற்றிக் கூறும்போது..
ரேடியோ நாடகங்களே ஒரு தனிப்பட்ட ஜாதி. அவற்றை எழுதுபவர்கள் நிறையப் படிக்கவேண்டும். நிறையக் கேட்க வேண்டும் 'Sorry wrong number' என்ற பதினைந்து நிமிஷ ரேடியோ நாடகம் அமெரிக்காவையே கலக்கியது. நூற்றுக் கணக்கான தடவை அது ஒலிபரப்பட்டது. பின் மேடையேற்றப்பட்டது. பின் சினிமாவாகக்கூட எடுக்கப்பட்டது. நாடகத்தில் ஒரே ஒரு பெண். ஒரு டெலிபோன் அவ்வளவுதான். படிக்க ஆரம்பித்தால் முடிக்கும்வரை நம் உடலும் உள்ளமும் பதறும்.

ஆல் இந்தியா ரேடியோவில் நாடகம் எழுதுபவர்கள் இந்த நாடகத்தைப் படிப்பது நலம். படித்தால் பலர் தொழிலை விட்டுவிட வாய்ப்பு இருக்கிறது.

கவிதை எழுதுபவர்கள் நிறையக் கிளம்பியிருக்கிறார்கள். அன்று என் நண்பரும் கவிஞருமான கீகீ யை (அவரது புனைபெயர்) பார்த்ததும் சரேலென சந்தில் மறைந்தேன். அவர் என்னைத் துரத்தி ஒரு மூலையில் மடக்கி பைக்குள்ளிருந்து ஒரு காகிதத்தை எடுத்து ஒரு நேரிசை வெண்பா எழுதியிருப்பதாகச் சொன்னார். அந்தக் கவிதையை எழுதிக் கீழே...(அடிக்க வராதீர்கள் கீகீ தான் எழுதினார். நான் எழுதவில்லை)

**********

மலின் இருபத்து மூறாவது வயதில் ஒரு மலையாளப் படப்பிடிப்பில் அவரைச் சந்தித்தது பற்றிக் கூறிவிட்டு சுஜாதா சொன்னது...
'உரக்கப் பேசும் உரக்க நடிக்கும் தமிழ்சினிமாவில் சற்று மென்மையாகக் கற்பனையுடன், நம்பும்படி நடக்கும் கமல்ஹாசனிடம் தமிழில் நவசிநிமாவின் உதயத்தை எதிர்பார்க்கிறேன்!'.

தேசிய விருது பெற்ற மலையாளப் படம் ஒன்றைப் பார்த்துவிட்டு கூறியிருப்பார்..
பாதிப்படம் இருட்டிலேயே கடந்தது. ஒரு ஆள் சாப்பிடுகிறார் என்றால் ஒருகவளம் இரண்டு கவளம் வரை தாங்கலாம். முழுக்க சாப்பிட்டுவிட்டு புறங்கையை நக்கும் வரையா காட்டுவார்கள்? ரியலிசம் என்றால் இத்தனை ஸ்லோவாக இருக்க வேண்டும் என்று எந்த மடையன் சொன்னான்? அவார்டு பிலிம் காரர்கள் காதில் பூச்சுற்ற ஆரம்பித்து விட்டார்கள். மலையாளத்தில் இப்படிப் படம் எடுத்தால் மலையாளம் தெரியாத ஜட்ஜூகள் உத்தரவாதமாக பரிசு கொடுக்கும் இந்த மோசடியை முதலில் உடைக்க வேண்டும்.

**********

யிரின் மதிப்புப் பற்றி இப்படி....
அந்தக் காலகட்டத்தில் இடம்பெற்ற ஒரு விமான விபத்தையும், ஒரு பஸ் விபத்தையும் பற்றிக் கூறிவிட்டு,  பஸ் விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு தாராளமாக தலா ரூ. 2500 வழங்கப்பட்டது. விமான விபத்துப் பயணிகளுக்கு ஆளுக்கு ஐந்து லட்சம்.
இறந்தாலும் மேன்மக்கள் மேன்மக்களே!

வெகுஜன இதழ்களின் தீபாவளி மலர்களின் வடிவமைப்புப் பற்றியும் அவற்றுக்கிடையிலுள்ள பொதுத் தன்மைகள் குறித்துச் சொன்னபின்...
'ஆனந்த விகடனும் கல்கியும் ஒன்றையொன்று மிஞ்சுகின்றன. எடை போட்டுப் பார்த்ததில் கல்கி தீபாவளி மலருக்குத்தான் பரிசு. எட்டு அவுன்ஸ் அதிகம்!'

**********

பாலசந்தருடன் பணியாற்ற இருந்தது பற்றிகூறி ஒரு டிஸ்ட்ரிபியூட்டர் உடனான சந்திப்புப் பற்றிக் (கற்பனை) கூறுகிறார். (அப்போதைய சூழ்நிலை)


அறிமுகம் : இவர்தாங்க சுஜாதா நம்ம படத்துக்கு கதை எழுதுகிறார்.
டிஸ்ட்ரி: அப்படியா சந்தோஷம். கதை எதில் வந்திருக்கு? குமுதத்திலயா?
நான் : இல்லீங்க. எதிலும் வரல. புதுசா எழுதுறேன்.
டிஸ்ட்ரி: (வேறுவிதமான) அப்படியா? அப்ப ஒன்னு செய்யுங்க, படம் ரிலீசாவதற்குள் எதிலாவது போட்டுடுங்க ஏன்னா இன்னி தேதிக்கு பத்திரிகையில் வந்த கதைகள்தான் ஓடுது!
நான் : (அந்த இடத்தைவிட்டு ஓடுகிறேன்)


ஏராளமான சுவாரஷ்யங்கள் 'கணையாழியின் கடைசிப் பக்கங்களில்'!

தமிழ்வாசக மனநிலை பற்றி அன்று அவர் கூறியிருப்பது இன்று வரையிலும் அப்படியே இருப்பதாகத் தோன்றுகிறது!

இருபது, முப்பது வருடங்களுக்கு முன்னர் கூறிய விஷயங்கள் பல இன்னுமே அப்படியே இருக்கின்றன. பல அவர் சொன்னது போலவே மாற்றமடைந்தும் இருக்கின்றன.

காலங்கடந்து நிற்கும் எழுத்துக்கள்! இன்னும் முப்பது வருஷம் கழித்து வரும் ஒரு இளைஞன்கூட ரசிக்கக் கூடிய எழுத்துநடை!

நிறைய விஷயங்களுக்கு அவர் முன்னோடிதான்! எண்பத்தெட்டாம் ஆண்டில் கம்ப்யூட்டரில் தமிழில் எழுதுகிறார்.

லா.சா.ராவின் பாற்கடல் கதையைப் படிக்குமாறு சொல்லியிருக்கிறார் படிக்க வேண்டும்!

சுவாரஷ்யமான சித்தர் பாடல்கள் சிலதைப் பற்றிச் சொல்கிறார். பின்பு, 'சித்தர் பாடல்களில் இருக்கும் பெண்களைப் பற்றிய விஷயங்களை மற்றொரு சமயம் எழுதுகிறேன்' இப்படி எழுதியிருக்கிறார் சுஜாதா? - பின்பு எழுதினாரா? யாராவது தெரிவித்தால் நலம்!

சுஜாதா - என்றும் எங்கள் மனதில் வாழ்ந்துகொண்டிருப்பார்!

26 comments:

 1. அருமையான பகிர்வு..சுஜாதா என்னை மிகவும் கவர்ந்த எழுத்தாளர்..நன்றி.
  சீக்ரட் விண்டோ : திகிலூட்டும் மர்ம பட விமர்சனம்..

  ReplyDelete
 2. சுஜாதா...! தொழிநுட்பத்தையும் தனக்கு அகப்பட்ட விஞ்ஞானத்தையும் எளிய வழியில் தந்தவர். அதுபோக, ஸ்டைலிசான கதை சொல்லி!!

  ReplyDelete
 3. அருமை அருமை சுஜாதா டெரர்னு இப்ப தான் தெரியுது

  ReplyDelete
 4. //லா.சா.ராவின் பாற்கடல் கதையைப் படிக்குமாறு சொல்லியிருக்கிறார் படிக்க//http://azhiyasudargal.blogspot.com/2010/09/blog-post_27.html

  ReplyDelete
 5. @சேக்காளி
  மிக்க நன்றி! நானும் அழியாச்சுடர்களில்தான் தேடணும்னு இருந்தேன்! மீண்டும் நன்றி பாஸ்! :-)

  ReplyDelete
 6. சுஜாத்தாவின் வெற்றியே எளிய முறையில் வாசகர்களை கவர்ந்த எழுத்துநடைதான்.கற்றதும் பெற்றதும் பல விடயங்கள் சொன்ன தொடர் .பல்சுவையாக பதிவு இட்டு  ஜீ கலக்கிவிட்டார் .

  ReplyDelete
 7. ஓகோ நீங்களும் சுஜாதா விசிறியா? நல்லா விசுக்கியிருக்கிறிங்க.

  ReplyDelete
 8. எளிமை, இனிமை சுவாரசியம் தேவையற்ற அதிக வார்த்தைப்பிரயோகங்கள் இன்மை, எதையும் வித்தியாசமாக நோக்கும் அவரது பார்வை, விஞ்ஞானம் முதல் சங்ககால இலக்கியங்கள்வரை அவருக்கு இருக்கும் பரந்த அறிவு என சுஜாதா ஒரு பல்கலைக்கழகம்.

  ReplyDelete
 9. அருமையான ஞாபக மீட்டல் பதிவு

  ReplyDelete
 10. சுஜாதா சொல்லாமலே சொன்ன சலவைக்காரி ஜொக் மறக்கமுடியாது

  ReplyDelete
 11. என் எழுத்தை பார்த்தால், நான் சுஜாதாவின் எழுத்துக்களை வாசிக்காதவன் என்பது தெரியவரும். ஹி ஹி

  ஆனால் அவரின் புத்தகங்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன். கிடைக்கவில்லை.

  ReplyDelete
 12. அவரை ரெம்ப பிடித்து போக இதுவரை எனக்கேதும் காரணம் இருந்ததாக தோணவில்லை ))

  நல்ல பதிவு க.க. பக்கங்களில் இன்னும் நிறையா ரசிக்கும் படி இருக்கும் முக்கியமாக கதையை விமர்சிப்பவர்கள் பற்றி ))

  அவரைப்பற்றி இப்போது *&@*&@ அவர்கள் சொல்லும் குறைகள் எல்லாம் அடிவயிறு எரிந்து சொல்லுவது. தன்னால் முடியவில்லையே அல்லது அறிவியல் புனைவு எழுதினால் ஒருத்தன்கூட படிக்க மாட்டிகிறானே என்ற பொறாமை ))

  யார் எப்படி சொன்னாலும் இன்னும் அதிகமாகவே சுஜாதா வாழ்கிறார்.

  ReplyDelete
 13. மிக அருமையான ஒரு எழுத்தாளர். வாழ்ந்த காலத்தில் சரியாக கவனிக்கப்படாமல் போய் விட்டாரோ என்று தோன்றுகிறது. நீங்கள் சொல்வது போல பதிவர்களுக்கெல்லாம் அவர்தான் முன்னோடி.

  ReplyDelete
 14. சிறப்பான பதிவு ! நன்றி நண்பரே !

  ReplyDelete
 15. சூப்பர்.. அவர் பிறந்தநாளை முன்னிட்டு நானும் ஒரு பதிவு போடலாம்னு பாத்தேன்.. நேரம் இல்ல.. நல்ல எழுதி இருக்கீங்க..

  ReplyDelete
 16. Sujatha ... no one replace ur dialogs... Ore variyil vaasaganai purinthu kolla vaikkum paangu... superb... Katrathum petrathum - wonderful work

  ReplyDelete
 17. கணையாழி கடைசிப்பக்கத்தை மறக்க முடியாது.

  ReplyDelete
 18. Very good. Liked some of the quotes that you gave from his writings

  ReplyDelete
 19. சுஜாதா பற்றிய பகிர்வு வெகு அருமை. அதுலயும் ராஜராஜ சோழன் படத்தப் பற்றிய அவர் கருத்துக் கண்டிப்பாய் யோசிக்க வேண்டியது

  ReplyDelete
 20. //மிக அருமையான ஒரு எழுத்தாளர். வாழ்ந்த காலத்தில் சரியாக கவனிக்கப்படாமல் போய் விட்டாரோ என்று தோன்றுகிறது//
  கடைசி வரை சிறப்பாக வாழ்ந்தவர் தான்.என்ன இன்னும் கொஞ்ச நாள் வாழ்ந்திருந்தால் நம்மை இன்னும் மேம்படுத்தியிருப்பார்.

  ReplyDelete
 21. மாமனிதருக்கு அஞ்சலி.

  ReplyDelete
 22. நெறய நிகழ்ச்சிகளை தொகுத்து இருக்கீங்க நன்றி மாப்ள!

  ReplyDelete
 23. இனி சுஜாதா போல் ஒருவர் கிடைப்பது கடினம். அற்புதமான எழுத்தாளர்.

  ReplyDelete
 24. ?>>>>>>>>>சுஜாதாவின் எழுத்துக்களில் எப்போதும் கலந்திருக்கும் நக்கல், நையாண்டி, எள்ளல் போன்றவைதான் என்னை மிக மிகக் கவர்ந்தவை. எவ்வளவு சீரியசான விஷயங்களையும் போகிற போக்கில் அலட்டிக் கொள்ளாமல் நக்கலாக, பிளாக் ஹியூமராக கூறிச் செல்வது அவரின் தனித்தன்மை. முக்கியமாக அவரின் சுய எள்ளல்!

  i also his fan

  ReplyDelete
 25. இப்பொழுதான் இந்தச் சில மாதங்களாகத்தான் நான் வாசிப்புலகில் காலடி எடுத்து வைத்திருக்கிறேன். சுஜாதா அவர்களின் சில கட்டுரைகள், கதைகள் வாசித்ததிலிருந்து உங்களைப் போலவே எனக்கும் மிகப் பிடித்துப்போனார். அவரின் எழுத்துக்களை நேசிக்க ஆரம்பித்துத் தேடிக்கொண்டிருக்கிறேன் படித்துக்கொண்டும். :)))

  ReplyDelete
 26. வாழ் நாளில் ஒரே ஒரு முறை ஓர் எழுத்தாளனுக்காக மனம் கலங்கியது என்றால் அது சுஜாதாவுக்காக! அவர் நம்மைவிட்டு நீங்கிய செய்தியை கேட்டபோது!(இத்தனைக்கும் நான் அவரின் முழுமையான வாசகனே அல்ல)

  ReplyDelete

Followers

Powered by Blogger.
Copyright © வானம் தாண்டிய சிறகுகள்.. |