Sunday, January 15, 2012

நண்பன் - Hats off விஜய்!


நாம் மனதிற்குப் பிடித்த வாழ்க்கையைத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? ஆசைப்பட்டதைத்தான் படிக்கிறோமா? பார்க்கும் வேலை மனதிற்குப் பிடிக்கிறதா? ரசித்து செய்ய முடிகிறதா? வாழ்க்கையின் முக்கிய தருணங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள் நம்மால்தான் எடுக்கப்பட்டவையா? அவை எல்லாமே நமக்கு முற்றிலும் சம்மதமானவையா?


மூன்று நண்பர்கள், உணர்வுகளால், குடும்ப சூழ்நிலைகளால், நம்பிக்கை, லட்சியங்களால் வேறுபட்டவர்கள். அவர்களின் வாழ்க்கை பற்றி சொல்கிறது படம்!

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு அட்டகாசமான படம்!

ஷங்கர் - ஒரு ரீமேக் படத்திற்கு எதுக்கு ஷங்கர்?
இந்தப்படத்திற்கு ஷங்கர் மாதிரி இயக்குனர்கள்தான் தேவை! ஒரிஜினலின் கதைக்கருவை சற்றும் மாற்றமில்லாமல், 3 இடியட்ஸ் கூறிய விஷயங்களை, ஏற்படுத்திய உணர்வுகளை அப்படியே மாறாமல் தமிழுக்கு கொண்டு வருவதற்கு! இந்தப்படம் ஷங்கரின் கையில் கிடைக்காமல் வேறு யாரிடமாவது சிக்கியிருந்தால், அவ்வளவுதான்!

ஒரு நண்பன் பேசும்போது 3 இடியட்சில் சொன்னதில் அறுபது வீதத்தை அப்படியே சரியாக தமிழில் சொன்னாலே முயற்சி வெற்றிதான் என்றான். ஆனால் ஷங்கர் முழுமையாக சொல்லி விட்டார் என்றே தோன்றுகிறது!


3 இடியட்ஸ் இன் சில காட்சிகளின் கலர் டோன் தமிழுக்கு பரிச்சயமில்லாதது ஆனால் நன்பனில் தமிழுக்கு பழக்கப்பட்ட கலரில்! எதை, எப்படி மாற்றியமைக்க வேண்டும்? எதை மாற்றக்கூடாது என கச்சிதமாகப் புரிந்து கொண்ட ஒருவரால்தான் இது சாத்தியம்! அதற்குத்தான் ஷங்கர்!

(சமீபத்தில் ஒஸ்தி படத்தை ஒரிஜினலான தபாங் இன் கலர் டோனில் எடுத்துப் படுத்தியிருந்தார் தரணி! அதே நேரம் ஒரிஜினலின் மைய இழையான spoof  என்ற விஷயத்தை கோட்டை விட்டிருந்ததையும் கவனிக்க வேண்டும்! எது வேணுமோ அதை விட்டுட்டு...)

இந்தப்படம் வெற்றி பெற்றால் அதற்கான முழுப்பெருமையும் ராஜ்குமார் ஹிரானிக்கே சேரும் என ஷங்கர் கூறியிருந்தார். ஒரு படத்தை கேவலமாக, திரித்து, காப்பியடித்து, தாங்களே உட்கார்ந்து யோசித்த கதை மாதிரி தொலைக் காட்சிகளில் பில்டப் கொடுக்கும் இயக்குனர் திருமக்களுக்கு மத்தியில் ஷங்கர் உயர்ந்து நிற்கிறார்.


ஸ்ரீகாந்த் அப்பாவிடம், ஒரு முறையாவது தன் விருப்பப்படி முடிவெடுக்க அனுமதிக்கும்படி கேட்கும் காட்சியும், ஜீவா கம்பஸ் இண்டர்வியூவில் 'உங்க வேலையை நீங்க வச்சுக்குங்க, என் ஆட்டிட்டியூட்டை நான் வச்சுக் கொள்கிறேன்' எனக்கூறும் காட்சிகளும்! படத்தில் ஸ்ரீகாந்தைக் கூட ரசிக்க முடிகிறது என்றால்..பாருங்க! சாதாரணமாக எனக்கு ஸ்ரீகாந்தை சில நிமிடம் படத்தில் பார்ப்பதே அலர்ஜி!

வசனங்களில் சின்னச் சின்னதாக நிறைய மினக்கெட்டிருக்கிறார்கள்! ஜீவா குடும்பத்தை அறிமுகப்படுத்தும்போது 'அவங்கப்பாவுக்கு பக்கவாதம், அம்மா நார்மலா ஸாரி நிர்மலா!' - சின்ன உதாரணம்!

படத்தில் எனக்கு மிகப்பிடித்த பாடல் 'நல்ல நண்பன் வேண்டுமென்று' இந்தப்பாடலின் இசையில் என்னமோ ஏ.ஆர்.ரஹ்மான் 'டச்' இருப்பதாகத் தோன்றியதாலும் இருக்கலாம்! காட்சியமைப்பும் அருமை!


சீரியசான காட்சிகளிலும் காமெடி கலந்து, குறிப்பா ஜீவா மருத்துவமனையில் இருக்கும் காட்சிகள்!

இலியானா ஏன் இந்தப்படத்துக்கு ஹீரோயினானா? அவரைவிட அக்கா கியூட்டாக இருக்கிறார்!

சத்யராஜ் சீரியசான ஆசாமியாக வந்து காமெடி பண்ணியிருக்கிறார். வரும் காட்சிகள் எல்லாமே கலக்கல்!


நகைச்சுவையில் பின்னியிருக்கிறார் சத்யன். படத்தில் விஜய்க்கு சமமாக, சின்ன சின்ன அசைவுகளில், பார்வையில் லந்து கொடுப்பது செம்ம!  குறிப்பாக சத்யனின் வரவேற்புரை! ஹிந்தியில் அந்தக் காரெக்டர் வாய்க்கவில்லை! அதுவும்போக அதைத் தமிழனாக (ராமலிங்கம்) காட்டி, தமிழன் மேலுள்ள அன்பைக்(?!) காட்டியிருப்பார்கள்! இந்தப்படத்தின் பின் சத்யன் தொடர்ந்து கலக்கட்டும்!


விஜய் - மிகச்சரியான தேர்வு! இந்த இடத்தில் வேறு யாரையும் நினைத்துப் பார்க்க முடியவில்லை. அலட்டலில்லாத, ஆர்ப்பாட்டம் ஏதுமற்ற சிம்பிளான நடிப்பில் அடிச்சுத் தூள் கிளப்பியிருக்கிறார்.

சூர்யா நடித்த கஜினியில் அமீர்கான் நடித்ததால், அமீர்கான் நடித்த 3 இடியட்ஸ் படத்திற்கு  சூர்யாதான் பொருத்தம் என்ற ஒரு வித்தியாசமான லாஜிக்(?!) சிலருக்கு இருக்கலாம். அமீர்கான், சூர்யா இருவரும் நல்ல திறமையான நடிகர்கள் என்பதைத் தவிர இருவருக்கும் வேறு எந்த சம்பந்தமும் இருப்பதாகத் தெரியவில்லை. உயரத்தைத் தவிர!

வழக்கமான அலட்டல், அலப்பரைகள், நான் நினைச்சா இப்பிடி, அப்பிடி, நான் வளர்ந்தது உங்களால்தான் என்று ஆடியன்சை பார்த்து கும்பிட்டுப் பாட்டுப் பாடாமல், ஐம்பது பேரை பந்தாடும் ஹீரோயிசம் இல்லாமல் அமைதியாக விஜய் ஏற்படுத்தும் மாஸ்....இப்படியொரு விஜய்யை யாருக்குத்தான் பிடிக்காது?

விஜய்க்கு இயல்பாகவே இருக்கும் நகைச்சுவை, நையாண்டி இப் பாத்திரத்துக்கு மிகப்பொருத்தமாக! முக்கியமாக விஜய்யின் வயது பற்றிய எந்த உறுத்தலும் வரவில்லை. 3 இடியட்ஸில் அமீர்கானின் வயது சற்று உறுத்தியது. மாதவன் இருந்தும் கூட!

குஷி படத்திற்குப் பிறகு எனக்கு மிகவும் பிடித்த, ஒரு 'நல்ல' விஜய் படம்! பார்க்க வேண்டும் என்று எதிர்பார்க்கவைத்த படம்! குஷியில் கூட சில அலட்டல், பஞ்ச் இருக்கும். இதில் அது எதுவுமே இல்லாமல் அமைதியாக! 

நண்பன் - விஜய்யின் படங்களில் பெஸ்ட்! முழுமையாக இயக்குனரிடம் தன்னை ஒப்படைத்த விஜய்யின் உண்மையான மாஸ்! Hats off விஜய்!   

படம் பார்த்ததில் இருந்து என்னமோ அடிக்கடி சொல்லத்  தோணுது... All is well!


டிஸ்கி 1 : இது நான் எழுதும் மூன்றாவது தமிழ்ப்படம் பற்றிய அனுபவம்! முதல் இரண்டு ஆடுகளம்! மன்மதன் அம்பு! 

டிஸ்கி 2 : 3 Idiots பார்த்தவர்களுக்கும் பிடிக்கும்!

டிஸ்கி 3 : நிச்சயம் பார்க்கவேண்டிய, குறிப்பாக யாழ்ப்பாணத்து அம்மா - அப்பாக்கள், அம்மா -அப்பா ஆகப் போகிறவர்கள் கண்டிப்பாகப்  பார்க்க வேண்டிய படம்!  

30 comments:

  1. கலக்கல் விமர்சனம் அன்பரே !விஜயின் புதிய முயற்சிக்கு வெற்றி வரட்டும்

    ReplyDelete
  2. உண்மையில் சத்தியனின் ஒரு பேட்டியை கேட்கும் போது நினைத்தேன்... அவர் கூறுவதஜல“ அரைவாசி உண்மையாய் இருந்தாலே படம் வித்தியாசமானது தான் என..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    தோட்டப்பயிரைக் காக்கும் இலகு கருவி (உள்ளூர் கண்டுபிடிப்பு)

    ReplyDelete
  3. நல்ல விமர்சனம். படம் பார்க்க முடியலையே ... நம்ம ஊர்ல ரிலீஸ் பண்ணலியே ...

    ReplyDelete
  4. பகிர்வுக்கு நன்றி.
    எனதினிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. மிக அருமையான விமர்சனம் ஜீ! பொங்கல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. நல்ல விமர்சனம், படம் நல்லா வந்திருப்பதா எல்லாருமே சொல்றாங்க, பார்ப்போம், டாகுடர் இதையெல்லாம் மைண்ட்ல வெச்சுக்கிறாரான்னு....!

    ReplyDelete
  7. வழக்கமான அலட்டல், அலப்பரைகள், நான் நினைச்சா இப்பிடி, அப்பிடி, நான் வளர்ந்தது உங்களால்தான் என்று ஆடியன்சை பார்த்து கும்பிட்டுப் பாட்டுப் பாடாமல், ஐம்பது பேரை பந்தாடும் ஹீரோயிசம் இல்லாமல் அமைதியாக விஜய் ஏற்படுத்தும் மாஸ்....இப்படியொரு விஜய்யை யாருக்குத்தான் பிடிக்காது?
    //

    உண்மை தான் வேலாயுதம் எனக்கு கூட கடுப்பினைக் கிளப்பியிருந்தது. அதனை விமர்சனத்திலும் காட்டியிருந்தேன்! ஆனால் நண்பன்! உண்மையில் அழகாக செதுக்கியிருக்கிறார்கள்.;

    ReplyDelete
  8. நன்றாக விமர்சித்திருக்கிறீங்க. விமர்சனத்தின் இறுதி வரிகள் எமது சமூகத்தினைச் சுட்டி, அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதைப் பார்த்தாவது நீ இது தான் படிக்கனும் எனும் நிலமை மாறினால் சந்தோசமே!

    ஸ்ரீகாந்தின் அப்பாவின் நடிப்பும் என்னை வெகுவாக கவர்ந்திருந்தது.

    ReplyDelete
  9. இன்றைய வலைச்சரத்தில் உங்கள் பதிவு பற்றிப் பேசும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.முடிந்தால் பாருங்கள்.

    ReplyDelete
  10. நிச்சயம் பார்க்கவேண்டிய, குறிப்பாக யாழ்ப்பாணத்து அம்மா - அப்பாக்கள், அம்மா -அப்பா ஆகப் போகிறவர்கள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம்! ///


    Hats off ............

    ReplyDelete
  11. பன்ச் டயலாக்குகள் பேசி நடிக்காத காலகட்டத்தில் விஜய் அனைவருக்கும் பிடித்த ஹீரோவாகத் தானிருந்தார். மீண்டும் அப்படி ஒரு விஜய்யைப் பார்க்கும் ஆசையை தங்கள் விமர்சனம் ஏற்படுத்தி விட்டது ஜி. பார்த்துடறேன்.

    ReplyDelete
  12. உங்க ஸ்டைலில் விமர்சனம் கலக்கல்.. இனிமேலதான் பார்க்கனும்..

    ReplyDelete
  13. செம

    >>வசனங்களில் சின்னச் சின்னதாக நிறைய மினக்கெட்டிருக்கிறார்கள்! ஜீவா குடும்பத்தை அறிமுகப்படுத்தும்போது 'அவங்கப்பாவுக்கு பக்கவாதம், அம்மா நார்மலா ஸாரி நிர்மலா!' - சின்ன உதாரணம்!

    ஐ மிஸ்டு திஸ் டயலாக்

    ReplyDelete
  14. ///
    குஷி படத்திற்குப் பிறகு எனக்கு மிகவும் பிடித்த, ஒரு நல்ல விஜய் படம்!
    //

    எனக்கும் அவ்வாறே :). தேவனே! இப்ப விஜயைகூட பிடிக்குது

    ReplyDelete
  15. ஆல் இஸ் வெல் ஜீ!

    ReplyDelete
  16. >> 'அவங்கப்பாவுக்கு ஒரு பக்க வாதம், அவங்க குடும்பத்துக்கு எல்லா பக்கமும் சேதம்.
    அம்மா இருமலா...ஸாரி நிர்மலா!' -

    இப்படி கேட்டததான் நியாபகம்...தவறாகவும் இருக்கலாம்...

    ReplyDelete
  17. //கிளம்பிடோம்ல... said...
    >> 'அவங்கப்பாவுக்கு ஒரு பக்க வாதம், அவங்க குடும்பத்துக்கு எல்லா பக்கமும் சேதம்.
    இப்படி கேட்டததான் நியாபகம்...தவறாகவும் இருக்கலாம்..//

    நீங்க சொல்றது சரி பாஸ்! நான் சொன்னதுதான் தவறு!

    ReplyDelete
  18. மாஸ் என்பதை மறந்து நடுநிலை மனிதர்களையும் விஜயய் ரசிக்க வைத்தது தான் டாப்பு...இதை தொடந்தால் எல்லோரும் பாராட்டுவோம்..நல்ல அலசல் மாப்ள!

    ReplyDelete
  19. //நண்பன் - விஜய்யின் படங்களில் பெஸ்ட்! முழுமையாக இயக்குனரிடம் தன்னை ஒப்படைத்த விஜய்யின் உண்மையான மாஸ்! Hats off விஜய்!//
    ஃபார்முலாவை விட்டு வெளியே வருவதுதான் விஜய்க்கு நல்லது என்பதை உங்கள் விமரிசனம் உறுதி செய்கிறது.தொடரட்டும் இந்த மாற்றம்.
    த.ம.11

    ReplyDelete
  20. குறிப்பாக யாழ்ப்பாணத்து அம்மா - அப்பாக்கள், அம்மா -அப்பா ஆகப் போகிறவர்கள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம்! //

    நிச்சயமாக

    நல்ல படத்தை நல்ல படம் எண்டு சொல்லணும். அதை விட்டிட்டு சிலபேர்… அந்தவகையில hats off ஜி

    ReplyDelete
  21. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  22. அடிக்கடி விமர்சனங்கள் எழுதாவிட்டால் என்ன நல்லாத்தான் எழுதியிருக்கிறிங்க ஜீ....
    பலகாலத்துக்கு அப்புறம் ரசிக்கும்படியான ஒரு விஜய் படம்.
    அப்புறம் இந்த விமர்சனத்தோட High Light
    //டிஸ்கி 3 : நிச்சயம் பார்க்கவேண்டிய, குறிப்பாக யாழ்ப்பாணத்து அம்மா - அப்பாக்கள், அம்மா -அப்பா ஆகப் போகிறவர்கள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம்! //

    ReplyDelete
  23. நல்ல படம்ன்னுதான் சொல்றாங்க.நீங்களும் சொல்றீங்க ஜீ.பாக்கவேணும் !

    ReplyDelete
  24. தளபதி படத்துக்கு அண்ணனே உத்தரவு குடுத்துட்டாரு, கண்டிப்பா பாத்திடுவோம், எனக்கு குஷிய விட, அதே படத்தின் திருத்திய இரண்டாம் பதிப்பு (சச்சின்)பிடிச்சிருந்தது, நீங்க சொல்றபடி பாத்தா இது சச்சின விட பல மடங்கு அட்டகாசமா இருக்கும் போலிருக்கே..

    ReplyDelete
  25. ///தளபதி படத்துக்கு அண்ணனே உத்தரவு குடுத்துட்டாரு, கண்டிப்பா பாத்திடுவோம், எனக்கு குஷிய விட, அதே படத்தின் திருத்திய இரண்டாம் பதிப்பு (சச்சின்)பிடிச்சிருந்தது, நீங்க சொல்றபடி பாத்தா இது சச்சின விட பல மடங்கு அட்டகாசமா இருக்கும் போலிருக்கே..///
    hehehe.... nejamave paaraatturingala illa vaarureengalaane puriyala... but i like it...

    //டிஸ்கி 3 : நிச்சயம் பார்க்கவேண்டிய, குறிப்பாக யாழ்ப்பாணத்து அம்மா - அப்பாக்கள், அம்மா -அப்பா ஆகப் போகிறவர்கள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம்! //
    ahu enna kurippaa yazhpaanatthu appa amma????

    ReplyDelete
  26. விமர்சனம் நல்லா இருக்கு. ஆனா இதுல என் கருத்து கொஞ்சம் மாறுபடுகிறது... இந்த படத்தை அச்சு அசலாக ஒரு வரியைக்கூட விடாமல் தமிழ் படுத்த remake எதற்கு? பேசாம dub பண்ணிருக்கலாமே? கொஞ்சம் லோக்கல் flavours பயன்படுத்தி மெருகேற்றியிருக்கலாமோ?

    ஆனா அனில போய் காலேஜ் ஸ்டுடன்ட் கு பொருத்தமா இருக்கார் நு சொன்னீங்க ல. சூப்பரு(காமெடி???)

    ReplyDelete
  27. //kaaattuboochi
    ahu enna kurippaa yazhpaanatthu appa amma?//
    வரட்டுக் கெளரவத்துக்காக தங்கள் விருப்பங்களை பிள்ளைகள்மேல் திணிப்பதில் குறிப்பிடத் தகுந்தவர்கள்!

    ReplyDelete
  28. //kaaattuboochi
    இந்த படத்தை அச்சு அசலாக ஒரு வரியைக்கூட விடாமல் தமிழ் படுத்த remake எதற்கு? பேசாம dub பண்ணிருக்கலாமே?//

    படம் ஒரு நல்ல விஷயத்தைப் பேசி இருக்கு! அதை நிறையப்பேரிடம் கொண்டுசெல்ல 'டப்' பண்ணி முடியுமா? டப்பிங் படம் என்றாலே என்போல் பலருக்கு அலர்ஜி! ஆமீர்கான் தமிழ்பேசி நடிப்பதில் உள்ள அந்நியத்தன்மை பார்வையாளர்களை ஒன்ற வைக்குமா? அந்தப்படம் நகர்ப்புற, கிராமப்புற மக்களை சென்றடையுமா? எவ்வளவோ குப்பை படங்களை ரீமேக் பண்ணும்போது ஒரு நல்லபடத்தை ரீமேக் செய்வது வரவேற்க வேண்டியதே!

    //ஆனா அனில போய் காலேஜ் ஸ்டுடன்ட் கு பொருத்தமா இருக்கார் நு சொன்னீங்க ல. சூப்பரு(காமெடி???)//

    விஜய்யின் வயது பற்றிய எந்த உறுத்தலும் வரவில்லை!
    3 idiots இல் அமீர்கானின் வயது,அதை மறைப்பதற்கான பிரயத்தனம் சற்றுத் தெரிந்தது!
    அதைத்தான் சொன்னேன் பாஸ்! :-)

    ReplyDelete
  29. GOOD COMMENTS.

    ReplyDelete