Saturday, June 4, 2011

இசைப்புயல் மீது மீண்டும் ஒரு புழுதி வாரியிறைப்பு!


சர்ச்சைகளும், வீண் குற்றச் சாட்டுக்களும் ரஹ்மானுக்கு ஒன்றும் புதிதல்ல! திரையுலகிற்கு வந்த காலம் தொட்டே சர்ச்சைகள் விடாது துரத்தினாலும் அவற்றைச் சற்றும் கலங்காமல் சிறு புன்னகையால் புறந்தள்ளி விட்டுத் தொடர்ந்தும் சிகரங்களைத் தொட்டுக்கொண்டு!.

ரஹ்மானுக்கு ஆஸ்கார் கிடைத்து, இவ்வளவு நாட்கள் கடந்து இப்போது ஒரு இந்திவாலா (இஸ்மாயில் தர்பார்) ரஹ்மான் மீது புழுதியை வாரித் தூற்றிய்ருக்கிறார்! ரஹ்மான் காசு கொடுத்து ஆஸ்கார் வாங்கியிருக்கிறார் என்பது அவரது சந்தேகமாம்! 'உண்மையில் திறமை இருந்தால் ரோஜா, அல்லது பம்பாய்க்கு வாங்கியிருக்க வேண்டியதுதானே?' எனக்கேட்டிருக்கிறார்.

முதன்முறையாக ஹிந்தி சினிமா உலகில் ஒரு தமிழன் நின்று தொடர்ந்து வென்றுகொண்டிருக்கும் ஒரு தமிழன்! அதற்குமுன் சிலர் வென்றிருந்தாலும் நிற்க முடியவில்லை. இங்கு திறமையுள்ள என்ற அடிப்படையில் பார்ப்பதால் நடிகைகள் பற்றிப் பேச வேண்டியதில்லை!

இந்திய சினிமா என்றாலே ஹிந்தி சினிமாதான் என்றே வெளிநாட்டவரால் (இப்போதும் அப்படியா? - இல்லை என்றால் காரணம் ரஜினி!) நோக்கப்படும் சூழலில் இந்தியாவின் மிகப்பெரிய, புகழ்பெற்ற டெக்னீசியன்களெல்லாம் தமிழராகவோ அல்லது தென்னிந்தியராகவோதான் இருக்கிறார்கள்.      

பொதுவாகவே வட இந்தியர்கள் தமிழர்கள் அல்லது தென்னிந்தியர் மீது துவேஷம் கொண்டவர்கள் என்று சொல்வார்கள். இப்போதெல்லாம் வெளிக்காட்டிக் கொள்ளாது நாகரீகமாக நடந்து கொண்டாலும் சமயங்களில் உண்மை பல்லிளித்து விடுகிறது!

தமிழிலேயே ஆரம்பகாலத்தில்   பெரும் சர்ச்சைகளைச் சந்தித்த ரஹ்மான் ஹிந்தியில் எவ்வளவு சிக்கல்களை எதிர்கொண்டிருப்பார் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை!

ஒரு கட்டத்துக்கு மேல் எதுவுமே செய்ய முடியாமல் தோற்றுப்போய் ஒரு மகா கலைஞனின் வளர்ச்சியைப் பிரமிப்போடு அங்கீகரித்தாலும், அல்லது அங்கீகரிக்க வேண்டிவந்தாலும், உள்ளுக்குள் நீறுபூத்த நெருப்பாக ஒருவித எரிச்சல் இருந்து கொண்டே இருக்குமோ?

ரஹ்மானுக்கு ஒஸ்கார் கிடைத்தபோது மீண்டும் நாகரீகமான முறையில் தங்கள் வயிற்றெரிச்சலையும், பொச்சரிப்புகளையும் காட்டிக்கொண்டார்கள். இதில் ஒட்டுமொத்தமாகப் படத்தின்மீதும் குற்றச்சாட்டு கூறப்பட்டது - இந்தியாவின் வறுமையைக் காசாக்கிவிட்டார்கள் என்று!
உண்மையிலேயே ஜெய்ஹோ விருதுக்குத் தகுதியான பாடல் தானா என்று, சில கேள்விகள்!

எனது நண்பனொருவன் கேட்டான் ரஹ்மானின் பாடல்களிலேயே ஜெய்ஹோ தான் சிறந்ததா? உணமையிலேயே உனக்கு அவ்வளவு பிடித்திருக்கா அந்தப்பாடல்?
இல்லை! நிச்சயமாக இதைவிட எத்தனையோ பாடல்கள், ரோஜா, பம்பாய் படங்களின் பின்னணி இசை என்பவை ஸ்லம் டாக் மில்லியனரை விட மேலானவை. ஆனால் படங்களும் பேசப்படவேண்டுமே! 

ரஹ்மானின் திறமைக்கு கிடைத்த ஒரு அங்கீகாரமாக ஆஸ்கார் கருதப்படலாமேயன்றி இதுதான் மாஸ்டர் பீஸ் என்று அர்த்தப் படுத்திக் கொள்ளவேண்டியதில்லை. அதே நேரத்தில் கிடைக்கவில்லை என்றால் திறமை இல்லையென்றோ அர்த்தமில்லையே!    

எத்தனையோ பேருக்கு அவர்களின் தலைசிறந்த படைப்புகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டிருக்கவில்லை. சத்யஜித்ரேக்கு அவரது படைப்புகளுக்கென்று தனியாக இல்லாமல், வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கார் கிடைத்தது போல்! விருது கிடைக்கும்போது அது அவர்களுக்கான உண்மையான அங்கீகாரமாக இருக்கவேண்டும்!  கலைமாமணி, பத்மஸ்ரீ போல அல்லாமல்!

வயிற்றுப் புகைச்சல் காரணமாக எவனாவது போகிறபோக்கில் எதையாவது கொளுத்திப்போட்டுவிட, நம்மாளுகளுக்கு அது போதாதா? எங்கடா சந்தர்ப்பம் கிடைக்குமென்று இருப்பவர்கள் இனி மறைமுகமான நக்கல், நையாண்டிகளை ஆரம்பித்து விடமாட்டார்களா?

காலத்துக்குக் காலம் ரஹ்மான் மீது இவ்வாறான சர்ச்சைகள் கிளம்புவதும், அதே வேகத்திலேயே புஸ்வாணமாகி விடுவதும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

ஆழ்ந்த இறைபக்தி, இடைவிடாத தேடல், தன்னடக்கமேயுருவான புயல்,  மிக இயல்பாகத் தன்முன்முடி கோதுவது போலவே எதையும் அமைதியாக, அநாயாசமாகக் கடந்து செல்லும்!    

ரஹ்மான் பற்றிய ஓர் பதிவு! முதல்வன்!

34 comments:

  1. // விருது கிடைக்கும்போது அது அவர்களுக்கான உண்மையான அங்கீகாரமாக இருக்கவேண்டும்!

    ஆழ்ந்த இறைபக்தி, இடைவிடாத தேடல், தன்னடக்கமேயுருவான புயல், மிக இயல்பாகத் தன்முன்முடி கோதுவது போலவே எதையும் அமைதியாக, அநாயாசமாகக் கடந்து செல்லும்! //

    நல்லதொரு நியாயமான பதிவு.
    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. இசை மனதில் நின்று
    உயிர் வளர்க்கும்
    மறந்துவிடாதீர்கள்

    http://sidaralkal.blogspot.com/2010/01/blog-post_06.html
    pls see this
    its enough.

    ReplyDelete
  3. AnonymousJune 04, 2011

    ரஹ்மானின் திறமைக்கு கிடைத்த ஒரு அங்கீகாரமாக ஆஸ்கார் கருதப்படலாமேயன்றி இதுதான் மாஸ்டர் பீஸ் என்று அர்த்தப் படுத்திக் கொள்ளவேண்டியதில்லை.//
    சரியான கணிப்பு..நானும் அதுதான் சரி என நினைக்கிறேன்!

    ReplyDelete
  4. AnonymousJune 04, 2011

    ஏ.ஆர்.ரஹ்மான் இந்தியாவிற்கு குறிப்பாக தமிழ்கத்திற்கு பெற்று தந்த கவுரத்தை வரலாறு சிறப்பாக பதிவு செய்துவிட்டது...பொறாமைக்காரர்கள் உளறிவிட்டு போகிறார்கள்

    ReplyDelete
  5. சர்ச்சைகளை கிளப்பவேண்டும் என்றே சிலர் அலைவார்கள், அதன்மூலம் தாங்கள் பெரியவர்கள் என்று காட்டிக்கொள்ளலாம், அல்லது சில காழ்ப்புணர்ச்சிகளை காட்டலாம் என்று நினைப்பார்களோ தெரியாது. அனால் திறமையான, ஒருவர் பற்றி பெரும்பான்மையோனொர் நல்ல அபிப்பிராயங்களையே கொண்டிருப்பார்கள். தெய்வங்களும் என்றும் உண்மையின் பக்கமே நிற்கும்.

    ReplyDelete
  6. விடுங்க பாஸ்.. காய்ச்ச மரம்தானே கல்லெறிபடும்

    ReplyDelete
  7. புகழ் வரும்போது, பொறாமை வருவது தவிர்க்க இயலாது.

    ReplyDelete
  8. ரஹ்மான் எனும் திறமையாளர், தமிழன் மீது இனத்துவேசத்தின் அடிப்படையில் முன் வைக்கப்படும் ஹிந்தி மொழிப் பற்றாளரின் குற்றச்சாட்டுத் தான் இது. இவற்றயெல்லாம் தாண்டி ரஹ்மான் வெற்றி பெறுவார் என்பது நிஜம்.

    ReplyDelete
  9. பொறாமையாலும் ,இயலாமையினாலும் வந்த விச அம்புகள் புயலை ஒன்றும் செய்ய முடியாது....

    ReplyDelete
  10. அழகான விளக்கம் தல...ரகுமானின் இத்தனை உழைப்புக்கும் கிடைத்த்கா ஒரு ஆறுதல் பரிசே ஆஸ்கார்!!

    ReplyDelete
  11. வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்..

    ReplyDelete
  12. அவர் வழக்கம் போல அமைதியாக தன் சாதனைகளால் இத்தகைய விமர்சனங்களுக்கு பதில் அளிப்பார்...!

    ReplyDelete
  13. சந்திரனை பாத்து Dog குலைச்ச மாதிரில்ல இருக்கு இது...

    ReplyDelete
  14. AnonymousJune 04, 2011

    விடுங்க பாஸ் ரகுமானின் திறமை பற்றி நமக்கு தெரியாதா என்ன!!!

    ReplyDelete
  15. ஒரு லெஜெண்டை பற்றி குறை கூறுவதால் பெரியாளாகி விடலாம் என நினைக்கின்றனர் பலர்! அவர்களை கவனிக்காம விடுறதே மேல்!
    நான் எழுதிய இரண்மாவது பதிவே ரகுமான் ஒஸ்கார் வெண்டதை பற்றியதே
    A.R.Rahman, Slumdog Millionaire, Oscar

    ReplyDelete
  16. இவ்ளோ நாளும் புகைஞ்சிருக்கு உள்ளுக்குள்ள.இப்பத்தான் நாத்தத்தைக் கக்குறாங்க.வயித்தெரிச்சல்காரங்க !

    ReplyDelete
  17. விடுங்க நண்பா...வட இந்தியர்களின் மனப்போக்கும் காழ்ப்புணர்ச்சியும் இங்கு வாழ்ந்து அனுபவிக்கும் தென்னிந்தியர்களுக்கு நன்றாகவே தெரியும். காமன்வெல்த் பாட்டிற்கும் இதையே தான் செய்தார்கள். சூரியனைக் கை மறைப்பதில்.

    ReplyDelete
  18. ///ரஹ்மானின் திறமைக்கு கிடைத்த ஒரு அங்கீகாரமாக ஆஸ்கார் கருதப்படலாமேயன்றி இதுதான் மாஸ்டர் பீஸ் என்று அர்த்தப் படுத்திக் கொள்ளவேண்டியதில்லை.///
    இது தான் உண்மை . இஸ்மாயில் தர்பார் பேட்டி பார்த்தேன் .அதில் அவரின் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கமும் பொறாமையும் கண்டேன் உண்மை காணவில்லை

    ReplyDelete
  19. AnonymousJune 05, 2011

    Or aarokkiyamaana ookkamana Pathivil keezhkaanum pengalai izhivu paduthum vaarthaigal thevaiyaa nanbare?.. "Ingu thiramai endru paarthaal nadigaihalai patri pesa vendiyathillai"

    ReplyDelete
  20. \\ரஹ்மான் காசு கொடுத்து ஆஸ்கார் வாங்கியிருக்கிறார் என்பது அவரது சந்தேகமாம்!\\ இந்தப் படத்தின் இசை ஆஸ்கார் விருதை மட்டுமல்லாது, அதற்க்கு முன்னதாகவே Golden Globe, BAFTA என உலகின் முக்கியமான திரை இசை விருதுகள் என கருதப் படும் அத்தனையும் தட்டிச் சென்றது. ஆஸ்கார் விருதுக்கப்புரமும் கிராமி விருதையும் பெற்றது. ஆஸ்கார் தேர்வுக் குழுவில் மட்டுமே மூவாயிரம் நடுவர்கள். இத்தனை பேருக்கும் காசு குடுத்து ஓட்டு வாங்க இது கருணாநிதி ஆட்சியில் நடந்த தமிழ சட்டமன்ற இடைத் தேர்தலா என்ன? கற்பனைக்கும் கூட எல்லை வேண்டாமா? என்னதான் வயிதெரிச்சல் என்றாலும் இப்படியா பழி போடுவான் ஒருத்தன்? நிச்சயம் மனோ வியாதி பிடித்தவனாகவே இருப்பான்.

    ReplyDelete
  21. \\'உண்மையில் திறமை இருந்தால் ரோஜா, அல்லது பம்பாய்க்கு வாங்கியிருக்க வேண்டியதுதானே?' எனக்கேட்டிருக்கிறார்.\\ அதாவது, ரஹ்மானுக்கு ஆஸ்கார் வாங்கும் திறமை இருக்கிறது என்பதை அவரை அறியாமலேயே ஒப்புக் கொள்கிறார், என்னதான் வயிறு எரிந்தாலும் உண்மை வெளிவந்து விட்டது.பேஷ்.. பேஷ்..

    ReplyDelete
  22. \\ஒரு கட்டத்துக்கு மேல் எதுவுமே செய்ய முடியாமல் தோற்றுப்போய் ஒரு மகா கலைஞனின் வளர்ச்சியைப் பிரமிப்போடு அங்கீகரித்தாலும், அல்லது அங்கீகரிக்க வேண்டிவந்தாலும், உள்ளுக்குள் நீறுபூத்த நெருப்பாக ஒருவித எரிச்சல் இருந்து கொண்டே இருக்குமோ? ரஹ்மானுக்கு ஒஸ்கார் கிடைத்தபோது மீண்டும் நாகரீகமான முறையில் தங்கள் வயிற்றெரிச்சலையும், பொச்சரிப்புகளையும் காட்டிக்கொண்டார்கள்.\\ இந்த எரிச்சல் இசைத் துறைக்கு சம்பந்தேமேயில்லாத ஒலக நாயகன், ஓஸ்கார் நாயகன் என்று தன்னைத் தானே சொல்லிக் கொண்டவருக்கே இருக்கு, இசைத் துறையில் உள்ளவர்களுக்கு இருப்பதில் வியப்பேயில்லை.

    ReplyDelete
  23. இஸ்மாயில் தர்பார்- அவர்களே, உம்மிடமும் காசு இருக்கிறதே, கொடுத்து நீயும் ஒரு ஆஸ்கார் வாங்கலாமே? Better see a Psychologist fast.

    ReplyDelete
  24. ஏ.ஆர் ரஹ்மான் ஆஸ்கார் வாங்கிய போது வடநாட்டு திரையுலகம், ரஹ்மானை தென்னிந்தியர் என்று சொல்லாதீர்கள், அவர் இந்தியர் என்று சொல்லுவதில் தான் பெருமை உள்ளது என்றெல்லாம் பாடம் நடத்திக் கொண்டாடினார்கள், இப்ப ஒரு நார்த்தின்டியன் இசையமைப்பாளர் நாயி..ரஹ்மான் பணம் கொடுத்து விருது வாங்கியதாகக் கொச்சைப்படுத்தி இருக்கு, வட இந்திய திரையுலத்தினர் ஒருவரும் அவனுக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை, தமிழ் திரையுலகில் இருந்து ஒரே ஒருவர் தான் இதுவரை கண்டனம் தெரிவித்துள்ளார்,
    http://thatstamil.oneindia.in/movies/interview/2011/05/30-rahman-denies-ismail-darbar-allegation-oscar-aid0136.html
    http://thatstamil.oneindia.in/movies/news/2011/06/03-oscar-award-kalaipuli-thanu-ismail-darbar-aid0091.html
    :(

    நம்ம ரஹ்மானை பழித்த 'இஸ்மாயில் தர்பார்' என்னும் டாக்கை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன், நாம வேற அவிங்க வேறன்னு அவங்க தான் எப்போதும் புரிய வைக்க முயற்சி செய்கிறார்கள். #இந்திய தேசியவியாதிகள் பார்வைக்கு

    https://profiles.google.com/106124798961425054828/posts/NmitTmatL7t

    ReplyDelete
  25. ரஹ்மானின் திறமை இப்போ உலகம் அறிஞ்சது.. யார் என்ன சொன்னாலும் அவர் பெயர் கெட்டுப்போகாது..

    ReplyDelete
  26. திறமைக்கு கிடைத்த அங்கீகாரங்களில் ஒன்று ஆஸ்கார். ரஹ்மானுக்கு கொடுத்ததால் ஆஸ்காருக்குதான் பெருமை. அதனால்தான் மற்ற கலைஞர்களுக்கு பொறாமை.

    ReplyDelete
  27. அவனுக்கு வயிதெரிச்சல் சார்

    ReplyDelete
  28. //
    ரஹ்மானுக்கு ஒஸ்கார் கிடைத்தபோது மீண்டும் நாகரீகமான முறையில் தங்கள் வயிற்றெரிச்சலையும், பொச்சரிப்புகளையும் காட்டிக்கொண்டார்கள். இதில் ஒட்டுமொத்தமாகப் படத்தின்மீதும் குற்றச்சாட்டு கூறப்பட்டது - இந்தியாவின் வறுமையைக் காசாக்கிவிட்டார்கள் என்று!
    உண்மையிலேயே ஜெய்ஹோ விருதுக்குத் தகுதியான பாடல் தானா என்று, சில கேள்விகள்!
    //
    same அவனுக்கு வயிதெரிச்சல் சார்

    ReplyDelete
  29. ரகுமான் பற்றிய தெளிவான பதிவு. எது கிடைக்கவேணுமோ அது கொஞ்சம் நேரம் தாழ்த்தி கிடைத்துள்ளது. ஆனால் கிடைக்கவேண்டிய ஆளுக்குதான் கிடைத்திருக்கிறது.

    ReplyDelete
  30. ரஹ்மானுக்குக் கிடைத்த விருது, ஜெய்ஹோவிற்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த அவரது உழைப்புக்கும் திறமைக்கும் கிடைத்த விருதாகவே எடுத்துக்கொள்ள வேண்டியது தான்.

    ரோஜா, பம்பாய்க்கு ஏன் கிடைக்கவில்லை என்று கேள்வி எழுப்புவோர், ரோஜா-பம்பாயின் பாடல்களும் ஆஸ்காருக்கு தகுதியானவையே என்று மறைமுகமாக ஒத்துக்கொள்கிறார்கள் இல்லையா...அப்போது ஏன் இவர்கள் ரஹ்மானுக்கு ஆஸ்கார் கொடு என குரல் எழுப்பவில்லை? நீங்கள் சொல்வது போல் இவர்களை ஒரு பொருட்டாக மதியாமல் செல்வதே சரி!

    ReplyDelete
  31. அவரை குறை சொல்ல யாருக்கும் தகுதி இருப்பதாக தெரியவில்லை..அவர் நல்ல திறமையுள்ளவர் என்பதை விட அருமையான மனிதர்...

    அப்படியும் குறை சொன்னால் நீங்கள் சொன்ன எல்லா எரிச்சல்கல்களும் அவர்களுக்கு இருக்குமே தவிர..ரஹ்மான மீது தப்பில்லை..அதுவும் இந்த விசயத்தில்..he is great and gentle in all time.

    ReplyDelete
  32. Rahman ignored his comment.But oscar commite sent a notice to that stupid!!

    ReplyDelete
  33. AnonymousJuly 06, 2011

    ஆஸ்கார் விருது முந்தைய வருட திரைப்படங்களுக்கே தரப்படும் அதுவும் அமெரிக்காவில் திரை இடப்பட்ட ஆங்கில படங்களுக்கே தரப்படும். மற்ற மொழி படங்கள் foreign language category இல் சேர்த்துக்கொள்ளப்படும்.

    Passion of christ திரைப்படம் ஆங்கிலத்தில் படம் பிடிக்க படாததினால் அது வேற்று மொழிப்படமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

    வட மாநிலத்தவர்களுக்கு தென் மாநிலதவர்களை பற்றி நிறைய விஷியாங்கள் தெரியாது. டெல்லி பாம்பே போன்ற நகரங்களில் வசிப்பவர்கள் superiority complex ஓடு இருப்பதை கவனித்து இருக்கிறேன். அனால் எல்லோரும் அப்படி இல்லை. பதிலுக்கு பதில் கொடுத்தல் அடங்கி விடுவார்கள்.

    ReplyDelete
  34. AnonymousJuly 06, 2011

    ஏ. ஆர். ரஹ்மான அமெரிக்காவில் வந்து கச்சேரி நடத்தினால் அவர் ஹிந்தி பாடல்களையே பாடுவார். ஒன்றோ இரண்டோ தமிழ் பாடல்கள் மட்டுமே பாடுவார். அந்த விதத்தில் அவர் தமிழ் மொழி பற்று எவ்வளவு தூரம் என்று தெரியவில்லை.

    ReplyDelete