Wednesday, September 28, 2011

POSITIVE THINKING!


து என்ன மாயமோ மந்திரமோ தெரியல. நான் எதைப் பிளான் பண்ணினாலும் அது ஒண்ணுமே சரியா ஆவுறதில்ல!

இதுவே தொண்ணு தொட்டு தொடர்ந்திட்டு இருக்கிறதால என்னால எதையுமே பாசிடிவ்வா திங்க் பண்ணவே முடியிறதில்ல!

நண்பர் ராஜனின் தன்னம்பிக்கை என்னை அடிக்கடி பிரமிக்க வைக்கும். பாசிட்டிவ் திங்கிங் பற்றி அவரிடம்தான் கற்றுக் கொள்ளவேணும்!

சமீபத்தில பார்த்த ஒரு நியூஸ் அதிகம் கவர்ந்தது! பிரமிக்க வைத்தது! பாசிட்டிவ் திங்கிங்க் என்றால் என்ன என்பதைக் கற்றுக் கொடுத்தது!

2011 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுக்காக (பிறநாட்டுப் படங்கள்) இந்தியாவில இருந்து 'ஆதாமிண்டே மகன் அபு' என்ற மலையாளப் படம் போகுதாம். செலக்சனுக்கு ஐந்து தமிழ்ப்படங்கள் போயிருக்கு. அதில் ஆடுகளமும் ஒன்று. ஆடுகளத்தின் கதை, காரெக்டர்கள் தவிர்த்து சில சீன்களில் வேற்று மொழிப்படங்களின் சாயல், பாதிப்பு இருந்தது - அதை இயக்குனர் வெற்றிமாறனும் நேர்மையாக, டைட்டிலிலேயே ஒப்புக் கொண்டிருந்தார். அது செலக்ட் ஆகாவிட்டாலும் அது ஒரு தரமான படம்தான் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை!

விஜயின் தன்னம்பிக்கை!
அந்த செய்தி அவ்வளவு முக்கியமல்ல. இந்த செலக்சனுக்கு எந்திரன், கோ, தமிழ்சினிமாவின் மாபெரும் காவியம் தெய்வத்திருமகள் எல்லாம் போயிருக்கு. எந்திரன், கோ படங்களை விட்டுடலாம் - பல படங்களின் சீன்கள் இருக்கு.

ஆனா தெய்வத்திருமகள் - இதுதான் என்னைப் பிரமிக்க வைத்தது! ஒரிஜினலில் நடிச்ச Seen Penn க்கு ஆஸ்கர் நாமினேட் பண்ணினாங்க. கிடைக்கல! ஆனா அதே படத்தை கேவலப்படுத்திற மாதிரி எடுத்து அதை ஆஸ்காருக்கு அனுப்ப ட்ரை பண்ணிய டைரக்டர் விஜயின் ஒரே மன தைரியத்தை வியந்து பாராட்டாமல் இருக்க முடியல!

என்ன ஒரு நம்பிக்கை! பாசிட்டிவ் திங்கிங்க் இன் உச்சகட்டம் என்று இதனைக் கூறலாமா? இதைவிட வேறு என்ன உதாரணத்தைக் கூறமுடியும்?

ஆனாலும் இதப் பார்த்த உடனே ஆரண்ய காண்டம் படத்துல வர்ற டைப்ல ஒரு வசனம் ஒன்று ஞாபகத்துக்கு வந்திச்சு!
'இவனுங்க எல்லாம் லூசுங்களா இல்ல லூசுங்க மாதிரி நடிக்கிறானுகளா?'    


நீ
நெகடிவ்வா திங்க் பண்றதாலதான் அப்படியே நடக்குது எப்பவுமே பாசிட்டிவா திங்க் பண்ணுன்னு அட்வைஸ்கள், எதிர்மறையான எண்ணங்கள் கூடாது, எமது எண்ணங்களின் படியேதான் எல்லாம் நடக்கின்றன அப்பிடி இப்பிடின்னு நிறைய தன்னம்பிக்கைக் கட்டுரைகளை மானாவாரியா கண்ணில பட்டாலும் சின்ன வயசுல அறியாத பருவத்தில இதையெல்லாம் நம்பி வாசிச்சிருந்தாலும், ஒண்ணும் வேலைக்காகல!

ஆனா ஒண்ணு அடுத்தவனுக்கு அட்வைஸ் பண்றமாதிரி நிறைய விஷயம் கிடைச்சுது! இருந்தாலும் அது எனக்குப் பிடிக்காதுங்கிறதால பண்றதில்லை!

மனுஷன் கண்டு பிடிச்சதிலயே ஓரே நேரத்தில சொல்றவனுக்கு அல்வா சாப்பிடுறமாதிரியும், கேக்குறவனுக்கு விளக்கெண்ணையக் குடிச்ச மாதிரியும் இருக்கிற ஓரே விஷயம் அட்வைஸ் தான்!

அப்புறம் நம்ம அனுபவத்தில இருந்து பிரக்டிகல் திங்கிங்க்னு ஒரு விஷயத்தை அட்வைஸ் பண்றவங்களுக்கு சொல்லத் தொடங்கினேன். அதாவது நடைமுறைல நம்மளுக்கு எல்லாமே நெகட்டிவ்வாவே நடக்கும்போது நான் பிரக்டிகலா பேசுவதெல்லாம் நெகட்டிவ்வா தானே தோன்றும்? நம்ம ராசி அப்பிடி!


சி
ல வருடங்களுக்கு முன் கொழும்பில நான் வேலை செய்த கம்பெனியில் என்னோட காண்ட்ராக்ட் முடிஞ்சுது! அதே கம்பெனில அடுத்த ஒப்பந்தத்தில சைன் பண்ணி வேலையைப் பொறுப்பெடுக்கச் சொன்னாங்க. அதே நேரத்தில இன்னொரு கம்பெனில இருந்தும் வேலை ரெடி அடுத்தவாரம் அப்பாயின்ட்மென்ட் லெட்டர் வந்து வாங்குன்னாங்க. சரி இடையில ஒரு வாரம் ரெஸ்ட் எடுக்கலாம்னு யாழ்ப்பாணம் போனேன்.

அவ்வளவுதான்! நான் யாழ் போய் இறங்கி ரெண்டு மணிநேரத்தில்  A-9 வீதியை மூடிட்டாங்க. அப்புறம் மூணு மாசம் திரும்பி வர முடியாம அங்கேயே சிக்கி, வேலையும் போய், நொந்து நூடுல்ஸாகி....! இதுமாதிரி நிறைய இருக்கு.

என்னோட நண்பன் கொழும்பில நாங்க வேலை செய்த கம்பெனியோட கிளையன்டிடமே வேலைக்குப் போனான் கனடாவுக்கு! போகும்போது சொன்னான், 'அடுத்ததா நீ வர்றே...போனதும் எப்படியும் நான் ட்ரை பண்றேன்..நீயும் ட்ரை பண்ணு'ன்னு சொன்னான். என்னோட ராசி தெரிஞ்சாலும் அவன் இவ்வளவு நம்பிக்கையா சொன்னதால நானும் பாசிட்டிவ்வா திங் பண்ணினேன்.

அவன் போய் மூணுமாசம் இருக்கும் ரிசர்சன் வந்திட்டுது. அதோட விட்டிருந்தா ஓக்கே..சரியா ஒரு வருஷம் கழிச்சு, நம்ம கம்பெனியோட கிளையண்டுகள் எல்லாம் வீட்டில ரெஸ்ட் எடுக்க...கொஞ்ச நாள்ல நானும் வெள்ளவத்தைல வெட்டியா சுத்திட்டிருக்க வேண்டியதாப் போச்சு!

அப்பிடி ஒரு அசம்பாவிதம் நடக்கும்னு நான் நினைக்கவே இல்ல!ஆனா பாருங்க ஒரு அசம்பாவிதத்தின் விளைவா பல அசம்பாவிதங்கள் நிகழலாம்! அதில ஒண்ணுதான் நான் பதிவெழுத வந்தது!


நா
ம ஒண்ணைப் பிளான் பண்ணி ஆரம்பிக்கும்போதே, எனக்கே தெரியாம பயங்கர ட்விஸ்ட்டோட ஒரு கிளைமாக்ஸ் ஆப்பு ரெடியாகிடுது!

இதில முதல் சீன் மட்டும்தான் நாம பிளான் பண்ணி அப்பிடியே ஸ்டார்ட் ஆகும். அப்புறம் ஸ்டார்ட்டிங் - கிளைமாக்ஸ் இந்த ரெண்டுக்கும் நடுவில இருக்கிற சீன்ஸ், ட்விஸ்டுகள், ஆக்க்ஷன்கள், டைமிங் இதெல்லாம் நம்ம கண்ட்ரோல்லயே இருக்கிறதில்ல! யார் இவ்வளவு கச்சிதமா ஸ்க்ரீன் ப்ளே எழுதுறாங்க?

அதில ஒரு ஆச்சர்யம் என்னன்னா நம்ம நெருங்கிய நண்பர்கள் சிலருக்கும் நம்மள மாதிரியே நடந்து தொலைக்குது! இதைப்பற்றி நானும் நண்பர் ராஜனும் உட்கார்ந்து யோசிச்சதில் ரெண்டு பேருக்குமே நிறைய ஒற்றுமை - தவிர பல உண்மைகள் தெரிய வந்திச்சு! இந்த இடத்தில நண்பன் சிவம்பிள்ளை பற்றிச் சொல்லயே ஆகணும்!

நண்பன் சிவம்பிள்ளை இருக்கானே...அவன் எந்த பிசினஸ் ஆரம்பிச்சாலும் அவனுக்கு மட்டுமில்ல ஏற்கெனவே யாழ்ப்பாணத்தில அந்தத் தொழில்ல இருக்கிற எல்லாருக்கும் சேர்த்து படுத்துக்குதுன்னு சொன்னான். கடைசியா சந்திச்சப்போ புதுசா ஒரு பிசினஸ்(?!) பிளான் பற்றி சொன்னான்.

அதாவது ஒரு பிசினஸ் தொடங்குறதா இருந்தா, ஏற்கனவே அந்தத் தொழிலில இருக்கிறவங்களோட ஒரு பேச்சுவார்த்தை நடத்துறது. "இத பாருங்க நான் தொழில் தொடங்கினா எனக்கு மட்டுமில்ல நம்ம எல்லாருக்கும் சேர்த்து ஊத்திக்கும்! அதனால எனக்கு ஒரு அமவுண்ட் செட்டில் பண்ணினா நான் தொழில் தொடங்க மாட்டேன். அது உங்க எல்லாருக்குமே நல்லது. என்ன சொல்றீங்க?" 


எதையும் பாசிட்டிவ்வாக எடுத்துக் கொள்வது!

இது நடைமுறைக்கு கொஞ்சம் ஒத்துவரும். ஆனா பழக்கப் படுத்திக் கொள்ளவேணும்! நம்ம தல சுஜாதா சொன்ன மாதிரி 'புத்திக்குத் தெரியுது ஆனா மனசுக்குத் தெரியல' - இப்பிடித்தான் நாம இருக்கிறோம்! புத்தி, மனசு ரெண்டுமே ஒண்ணா இருந்தாத்தான் இரு சாத்தியம். ரொம்ப அடிபட்ட அப்புறம் வேற வழியில்லாம வரும் மனநிலை என்று இதைக் கூறலாமா?

ஞானிகள், துறவிகள் (சமயங்களில் போலிச்சாமியார்களும்) சொல்வது போல அது நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே! என்று எடுத்துக் கொள்வது!   

நானும் நண்பர் ராஜனும் சேர்ந்து எங்க அனுபவங்களை வச்சு நிறைய ஆராய்ச்சி(?!) பண்ணினதில கிடைச்ச முடிவுகளின்படி, முயற்சி எப்பவாவது திருவினையாக்கும், நம்ம உழைப்பு எப்படியும் யாருக்கோ உயர்வு தரும் என்பது போல இசகு பிசகாகவே இருந்திச்சு!

சூப்பர் ஸ்டார் சொன்னது!
என்னதான் நாங்க கடுமையா முயற்சி செய்தாலும், அதையும் தாண்டி ஏதோ ஒண்ணு இருக்கு! அதைத்தான் ஸ்டார் இருக்கணும்/அடிக்கணும்னு நாங்கள் கூறிக்கொள்வோம்!

ஆனால் இதை நம்ம சூப்பர் ஸ்டார் எப்பவோ சொல்லிட்டார்!
நமக்குக் கிடைக்கணும்கிறது கிடைச்சே தீரும். கிடைக்காதது என்னதான் தலைகீழா நின்னாலும் கிடைக்காது!
எவ்வளவு சிம்பிளா சொல்லிட்டார்! இங்க இன்னொரு கேள்வி வருது!

நம்மைச் சுற்றி நடப்பது எல்லாமே ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது எனப்பலரும் சொல்கிறார்கள். அது உண்மை எனும் பட்சத்தில், எல்லாமே மிகத் திருத்தமாகத் தயாரிக்கப்பட்ட டிசைன்ஸ் என்றால் நாம் செய்வதற்கு என்ன இருக்கிறது வேடிக்கை பார்ப்பதைத் தவிர?

இது ஒரு நியாயமான கேள்வி! ஆனா அதுக்கு அநியாயமா ஒரு பதில் ஏற்கனவே சொல்லி வச்சிருக்காங்க! கடமையைச் செய் பலனை எதிர்பாராதேன்னு! விளைவு எப்படி இருந்தாலும் நாங்க முயற்சி செய்வதை கைவிடக்கூடாது!
ஆகவே எதையும் பாசிட்டிவ்வாக எடுத்துக் கொள்வோம்! ஆப்புகள் அடிபட்டாலும் வலிக்காதமாதிரியே வெளியில் சிரித்துக் கொள்வோம்!



தையும் பாசிட்டிவ்வாக எடுத்துக் கொள்வதில் நம்ம நண்பர் சத்யனை அடிச்சுக்க முடியாது! இருந்தா மனுஷன் அப்பிடி இருக்கணும்!

வெள்ளவத்தை - ஒரு பிரபல கடையில நண்பர்கள் எல்லாரும் பால் ஓடர் பண்ணினோம். வந்திச்சு. குடிச்சா..

"டேஸ்ட் ஒரு மாதிரி இருக்கே" - நான்.

"அது... மைலோ போட்டிருக்கிறாங்க" - சத்யன்.

"நாங்க போடச் சொல்லலயே?"

"அவங்களா போட்டிருக்காங்க போல...நல்லதுதானே!" - சத்யன்.

சர்வர் வர இது பற்றி ஒருத்தன் கேட்டான். அவர் அசடு வழிஞ்சு கொண்டே,

"அது....வந்து... பால் கொஞ்சம் தீய்ஞ்சு போச்சு!"

41 comments:

  1. மனுஷன் கண்டு பிடிச்சதிலயே ஓரே நேரத்தில சொல்றவனுக்கு அல்வா சாப்பிடுறமாதிரியும், கேக்குறவனுக்கு விளக்கெண்ணையக் குடிச்ச மாதிரியும் இருக்கிற ஓரே விஷயம் அட்வைஸ் தான்!
    >>>>>>>>>>

    மாப்ள இதான் டாப்பு...அழகான பகிர்வுக்கு நன்றி...நான் அந்த போட்டோவ சொல்லல ஹிஹி!

    ReplyDelete
  2. ஒண்ணும் புரியலையே ஒண்ணு மட்டும் தெரியுது நாட்டுல பாதி பேர் பாசிடிவ் திங்க் பண்ணுறதில்லை, பாதி பேர் நெகடிவ் திங்க் பண்ணுறாங்க ஹி ஹி ஹி

    ReplyDelete
  3. ஆஹா...பல்சுவை மழை பொழிஞ்சிருக்கீங்களே...ஏன் தம்பி, அந்த ராஜன் நான் இல்லைல்ல?

    ReplyDelete
  4. // 'இவனுங்க எல்லாம் லூசுங்களா இல்ல லூசுங்க மாதிரி நடிக்கிறானுகளா?' //

    மத்தவங்களை லூசுன்னு நினைக்கிறாங்களோ?

    ReplyDelete
  5. //இதில முதல் சீன் மட்டும்தான் நாம பிளான் பண்ணி அப்பிடியே ஸ்டார்ட் ஆகும். அப்புறம் ஸ்டார்ட்டிங் - கிளைமாக்ஸ் இந்த ரெண்டுக்கும் நடுவில இருக்கிற சீன்ஸ், ட்விஸ்டுகள், ஆக்க்ஷன்கள், டைமிங் இதெல்லாம் நம்ம கண்ட்ரோல்லயே இருக்கிறதில்ல! யார் இவ்வளவு கச்சிதமா ஸ்க்ரீன் ப்ளே எழுதுறாங்க? ///

    அவன் தான்...அவனே தான்.

    ReplyDelete
  6. //அதாவது ஒரு பிசினஸ் தொடங்குறதா இருந்தா, ஏற்கனவே அந்தத் தொழிலில இருக்கிறவங்களோட ஒரு பேச்சுவார்த்தை நடத்துறது. 'இத பாருங்க நான் தொழில் தொடங்கினா எனக்கு மட்டுமில்ல நம்ம எல்லாருக்கும் சேர்த்து ஊத்திக்கும்! அதனால எனக்கு ஒரு அமவுண்ட் செட்டில் பண்ணினா நான் தொழில் தொடங்க மாட்டேன். அது உங்க எல்லாருக்குமே நல்லது. என்ன சொல்றீங்க?' //

    சூப்பர்யா..இது பிஸினஸ்.

    ReplyDelete
  7. தமிழ்மணம் இனைச்சி ஓட்டும் போட்டாச்சு, பதிவும் சூப்பர் மக்கா...!!!

    ReplyDelete
  8. ஆக்க பூர்வமான சிந்தனை இருந்தால்,திரிந்த பாலும்,மைலோ ஆகும்!:)

    ReplyDelete
  9. உங்க வாழ்வில் இத்தனை சறுக்கல்களா...அத்தனையும் நேர்கொண்டு வானம் தாண்டி சிறகுகள் அடித்து பறப்பதுக்கு என் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  10. ////ஆகவே எதையும் பாசிட்டிவ்வாக எடுத்துக் கொள்வோம்! ஆப்புகள் அடிபட்டாலும் வலிக்காதமாதிரியே வெளியில் சிரித்துக் கொள்வோம்!////

    நம்மள மாதிரி இந்தப் பொடியங்களும் ரொம்ப நல்லவங்க. எவ்வளவு வாங்கினாலும் தாங்குவாங்கள்.


    அதுசரி...! அமலாபாலின் படத்துக்கும் மைலோவுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா. எனக்கு ஒண்ணுமே புரியுதில்ல.

    ReplyDelete
  11. நேர்மறை என்பது எதிர்மறையாக மாறவும் வாய்ப்பிருக்கிறது... அனைத்தும் நல்லதுக்கே என்று எண்ணுவது நேர்மறை என்று நினைத்தால் அது எனக்கு எதிர்மறை... நான் எதிர்மறை என்று நினைத்தால் அது நேர்மறை... கொண்ட கொள்கை வகுக்கும் பாடம் அது... என் மேலாளர் என்னிடம் கூறியது, எதையும் உன்னால் முடியும் நு நினை அது தான் நேர்மறை என்றார்.. என்னால் முடியாததை முடியாது என்று நான் சொன்னால் அது நேர்மறை என்றேன் நான்...

    ReplyDelete
  12. மனுஷன் கண்டு பிடிச்சதிலயே ஓரே நேரத்தில சொல்றவனுக்கு அல்வா சாப்பிடுறமாதிரியும், கேக்குறவனுக்கு விளக்கெண்ணையக் குடிச்ச மாதிரியும் இருக்கிற ஓரே விஷயம் அட்வைஸ் தான்!//

    அழகா நச்சுன்னு சொல்லிட்டீங்க நண்பா

    ReplyDelete
  13. //'இத பாருங்க நான் தொழில் தொடங்கினா எனக்கு மட்டுமில்ல நம்ம எல்லாருக்கும் சேர்த்து ஊத்திக்கும்! அதனால எனக்கு ஒரு அமவுண்ட் செட்டில் பண்ணினா நான் தொழில் தொடங்க மாட்டேன். அது உங்க எல்லாருக்குமே நல்லது. என்ன சொல்றீங்க?'//

    அட இந்த அப்ரோச் கூட நல்லா இருக்கே...

    ReplyDelete
  14. டைரக்டர் விஜய்யின் தன்னம்பிக்கைக்கு எல்லையே இல்லையே....

    ReplyDelete
  15. சைக்கில் கேப்புல ஒட்டினீங்க பாருங்க ஒரு லாரி, அந்த தெய்வத்திருமகள் மேட்டர்தான், எம்புட்டு பாதிக்கப்பட்டிருக்கீங்கன்னு புரியுது...

    பாசிடிவ் தின்கிங்க்னு சொல்லிட்டு ஆப்புக்கள் பத்தி சொல்லியிருக்கீங்க, ஆனா அத்தன ஆப்புலயும் ஒரு பாசிடிவ் விஷயம் இருக்கு, நீங்க பதிவெழுத வந்தது, எங்களுக்கு பாசிடிவ், உங்களுக்கு எப்பிடின்னு நீங்களே முடிவு பண்ணுங்க சார்,

    ReplyDelete
  16. அனுப்பியிருக்குற நாலு படங்களும் மசாலா குப்பைகள் தான் ஆடுகளம் உட்பட...

    ReplyDelete
  17. @விக்கியுலகம்
    நன்றி மாம்ஸ்!

    @ஜ.ரா.ரமேஷ் பாபு
    :-)

    //MANO நாஞ்சில் மனோ said...
    தமிழ்மணம் இனைச்சி ஓட்டும் போட்டாச்சு, பதிவும் சூப்பர் மக்கா...!!!// மிக்க நன்றி!

    //சென்னை பித்தன் said...
    ஆக்க பூர்வமான சிந்தனை இருந்தால்,திரிந்த பாலும்,மைலோ ஆகும்!:)// உண்மை பாஸ்! :-)

    //ரெவெரி said...
    உங்க வாழ்வில் இத்தனை சறுக்கல்களா// விடுங்க பாஸ்! பழகிருச்சுல்ல! :-)

    @suryajeeva
    ஆகா நிறைய சொல்றீங்க பாஸ்! :-)

    @M.R
    நன்றி நண்பா!

    @கடம்பவன குயில்
    நன்றி!

    ReplyDelete
  18. //செங்கோவி said...
    ஆஹா...பல்சுவை மழை பொழிஞ்சிருக்கீங்களே...ஏன் தம்பி, அந்த ராஜன் நான் இல்லைல்ல?//
    இல்லண்ணே! ஆனா உங்க வயசுதான் அவருக்கும்!

    //அவன் தான்...அவனே தான்//
    அவன்தானா அது? எனக்கு அப்பவே டவுட்டு! :-)

    //மருதமூரான். said...
    நம்மள மாதிரி இந்தப் பொடியங்களும் ரொம்ப நல்லவங்க. எவ்வளவு வாங்கினாலும் தாங்குவாங்கள்// நீங்களுமா?

    //அதுசரி...! அமலாபாலின் படத்துக்கும் மைலோவுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா. எனக்கு ஒண்ணுமே புரியுதில்ல//
    மைலாவ விடுங்க பாஸ்! பாலுக்கு சம்பந்தம் இருக்குல்ல! :-)

    //Philosophy Prabhakaran said...
    அனுப்பியிருக்குற நாலு படங்களும் மசாலா குப்பைகள் தான் ஆடுகளம் உட்பட...//
    அப்படியா? உங்கள் கருத்துக்கு நன்றி!

    //Dr. Butti Paul said...
    ஆனா அத்தன ஆப்புலயும் ஒரு பாசிடிவ் விஷயம் இருக்கு, நீங்க பதிவெழுத வந்தது, எங்களுக்கு பாசிடிவ், உங்களுக்கு எப்பிடின்னு நீங்களே முடிவு பண்ணுங்க சார்//
    பாஸ் நீங்க நல்லபடியா பேசுறீங்களா நக்கலான்னு தெரியல இருந்தாலும் நன்றி! :-)

    ReplyDelete
  19. ///மனுஷன் கண்டு பிடிச்சதிலயே ஓரே நேரத்தில சொல்றவனுக்கு அல்வா சாப்பிடுறமாதிரியும், கேக்குறவனுக்கு விளக்கெண்ணையக் குடிச்ச மாதிரியும் இருக்கிற ஓரே விஷயம் அட்வைஸ் தான்!////

    இதை என் Face Book status ஆக்கிட்டேன். நன்றி.
    last joke superb .
    அழகான எழுத்து நடை. அருமையான பதிவு..

    ReplyDelete
  20. //மனுஷன் கண்டு பிடிச்சதிலயே ஓரே நேரத்தில சொல்றவனுக்கு அல்வா சாப்பிடுறமாதிரியும், கேக்குறவனுக்கு விளக்கெண்ணையக் குடிச்ச மாதிரியும் இருக்கிற ஓரே விஷயம் அட்வைஸ் தான்!//

    Super.

    Positive Thinking Arumai.

    ReplyDelete
  21. பாசிட்டிவ் திங்க்கிங்க்குக்க் நெகடிவ் ஓட்டா? என்ன கொடுமை இது?

    ReplyDelete
  22. உங்க வாழ்வில் இத்தனை சறுக்கல்களா.

    என்ன கொடுமை சார் இது

    ReplyDelete
  23. //சே.குமார் said..
    Super.
    Positive Thinking Arumai.// thanks!

    //சி.பி.செந்தில்குமார் said...
    பாசிட்டிவ் திங்க்கிங்க்குக்க் நெகடிவ் ஓட்டா? என்ன கொடுமை இது?//
    ஆமா பாஸ்! பாருங்க! :-)

    //வைரை சதிஷ் said...
    உங்க வாழ்வில் இத்தனை சறுக்கல்களா.
    என்ன கொடுமை சார் இது//
    இதெல்லாம் சப்பை மேட்டர் பாஸ்!:-)

    ReplyDelete
  24. ////'இவனுங்க எல்லாம் லூசுங்களா இல்ல லூசுங்க மாதிரி நடிக்கிறானுகளா?' //////

    இது செமயா மேட்ச் ஆகுது அவனுகளுக்கு!

    ReplyDelete
  25. POSITIVE THINKING! இதைப்பற்றி எழுதியே பலபேர் ரொம்ப உயரத்திற்குப்போயிட்டாங்க. ஆமா அவங்க POSITIVE THINKING செஞ்சுதான் இருக்காங்க

    ReplyDelete
  26. நம்ம ஆளுங்க THINK பண்ணவே மாட்டானுக. அப்புறம் எங்கே POSITIVE THINKING செய்கிறது.

    ReplyDelete
  27. /////நண்பன் சிவம்பிள்ளை இருக்கானே...அவன் எந்த பிசினஸ் ஆரம்பிச்சாலும் அவனுக்கு மட்டுமில்ல ஏற்கெனவே யாழ்ப்பாணத்தில அந்தத் தொழில்ல இருக்கிற எல்லாருக்கும் சேர்த்து படுத்துக்குதுன்னு சொன்னான்.///////

    இது பயங்கரமா இருக்கே? அவரை எங்கூர்ல வந்து ஒரு நகைக்கடை ஆரம்பிக்க சொல்லுங்க......

    ReplyDelete
  28. ஜீ... said...
    //Dr. Butti Paul said...
    ஆனா அத்தன ஆப்புலயும் ஒரு பாசிடிவ் விஷயம் இருக்கு, நீங்க பதிவெழுத வந்தது, எங்களுக்கு பாசிடிவ், உங்களுக்கு எப்பிடின்னு நீங்களே முடிவு பண்ணுங்க சார்//
    பாஸ் நீங்க நல்லபடியா பேசுறீங்களா நக்கலான்னு தெரியல இருந்தாலும் நன்றி! :-)//

    நல்லத்தான் சொல்றேண்ணே.. இதுல போய் காமெடி பண்றதுக்கு நான் என்ன பிரேம்ஜியா இல்ல டைரெக்டர் விஜயா?

    ReplyDelete
  29. ஆனா பாருங்க யாரோ இதுக்கும் மைனஸ் ஓட்டுப்போட்டு உங்க செண்டிமெண்டை ப்ரூஃப் பண்ணிட்டாங்க...... எஞ்சாய்ய்ய்......!

    ReplyDelete
  30. இனிய இரவு வணக்கம் பாஸ்,

    நான் கொஞ்சம் பிசியாகிட்டேன்,
    மன்னிக்கவும்.

    ReplyDelete
  31. பாஸிட்டிவ் திங்கிங் பற்றிய அருமையானா விளக்கம்.

    நம்மாளுங்க வெள்ளைக்காரங்க படத்தை சுட்டே...அவங்களிடம் விருது வாங்கும் அளவிற்கு சாதுரியமாக ஏமாத்துறாங்களே..

    முடியலை..

    உங்கள் வாழ்வியலோடு பாசிட்டிவ் விடயங்களை ஒப்பிட்டுச் சொல்லிய விதம் அருமை..


    புளிச்ச பால் குடிச்ச ஜோக்...கலக்கல் தல.

    ReplyDelete
  32. அந்த சத்தியன் கான்டாக்ட் டீடெயில்ஸ் கெடைக்குமா?? மனுஷனா பக்கத்துல வச்சிகிட்டா சூப்பரா இருக்கும்பா!!!

    ReplyDelete
  33. ////முயற்சி எப்பவாவது திருவினையாக்கும், நம்ம உழைப்பு எப்படியும் யாருக்கோ உயர்வு தரும்///
    200% உண்மை.....

    ReplyDelete
  34. பகிர்வுக்கு பாராட்டு பாஸ்

    ReplyDelete
  35. //அம்பலத்தார் said...
    நம்ம ஆளுங்க THINK பண்ணவே மாட்டானுக. அப்புறம் எங்கே POSITIVE THINKING செய்கிறது//
    இதுவும் நல்லாத்தானிருக்கு! :-)

    //Dr. Butti Paul said...
    நல்லத்தான் சொல்றேண்ணே.. இதுல போய் காமெடி பண்றதுக்கு நான் என்ன பிரேம்ஜியா இல்ல டைரெக்டர் விஜயா?//
    ஓ! இப்ப அவரும் காமெடில சேர்ந்துட்டாரா! :-)

    //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ஆனா பாருங்க யாரோ இதுக்கும் மைனஸ் ஓட்டுப்போட்டு உங்க செண்டிமெண்டை ப்ரூஃப் பண்ணிட்டாங்க...... எஞ்சாய்ய்ய்......!//
    ஆமா மாம்ஸ்! பாருங்க எப்புடியெல்லாம் இருக்கிறானுங்க! :-)

    //நிரூபன் said...
    உங்கள் வாழ்வியலோடு பாசிட்டிவ் விடயங்களை ஒப்பிட்டுச் சொல்லிய விதம் அருமை..//
    ம்ம்ம்..அருமையா தான்யா இருக்கும்! :-)

    //மொக்கராசு மாமா said...
    ////முயற்சி எப்பவாவது திருவினையாக்கும், நம்ம உழைப்பு எப்படியும் யாருக்கோ உயர்வு தரும்///
    200% உண்மை.....//
    ரைட்டு மாமோய்! :-)

    //மாய உலகம் said...
    பகிர்வுக்கு பாராட்டு பாஸ்//
    நன்றி பாஸ்!

    ReplyDelete
  36. சுவையாக பொசிட்டிவ் சிந்தனைகளை சொல்லியிருக்கிறீங்க விஜய் செமதில்லான டைரக்டர் !

    ReplyDelete
  37. நல்ல ரசனையான பதிவு....... மாத்தி யோசிச்சிங்களோ... ஹீ ஹீ

    கலக்கல்...



    யாருப்பா... இங்கே மைனஸ் ஓட்டு போட்டா,,?

    ReplyDelete
  38. சிந்திக்க வைக்கிறது உங்கள் கருத்து

    ReplyDelete
  39. பகிர்வுக்கு நன்றி,, நல்ல கருத்துக்கள்

    ReplyDelete
  40. ரொம்பவே யோசிச்சிட்ட்டீங்க போல!

    ReplyDelete
  41. baas, unga pathivilla irukkira thingsa appidiye eathukitta athu 'positive thinking'a 'negative thinking'a?

    ReplyDelete