திடீரென்று அஃபீஸ் மானேஜர் அங்கிள் தொலைபேசினார். "உன் சம்பளம் கொண்டுவந்திருக்கிறேன். கீழே இறங்கி வர முடியுமா?"
'ச்சே நாட்டில இந்த மாதிரி நாலு நல்ல மனுஷங்கள் இருக்கிறதாலதான் காலைல அந்தக் குளிர் குளிருது போல' நினைத்துக் கொண்டே போய் வாங்கிக் கொண்டேன். அங்கிள் கேட்டார். "ரெண்டுநாள் லீவ் என்ன பண்ணினே? கேர்ள் ஃபிரண்டை மீட் பண்ணினியா?"
ஏன்? எதுக்கு? இப்பதானய்யா நல்ல மனுஷன்னு நினைச்சேன் அப்பிடின்னு ஒரு நொந்துபோன பார்வை பார்க்க, அங்கிள் ஹி ஹின்னு சிரிச்சுட்டு போயிட்டார். அங்கிளுக்கு நம்ம வரலாறு தெரியும். முதன்முதல் வேலைக்குச் சேர்ந்ததிலிருந்து தாத்தாக்கள், மாமாக்களுடன் மட்டுமே பேரதிருஷ்டம் வாய்க்கப்பெற்ற என்னைப் பார்த்து அந்தக் கேள்விய?... வெறுப்பேத்துறாராம்!
* * * * * * * * * *
"டேய்! ஆறுமணியாகுது. அஞ்சுமணிக்கே போகாம இன்னும் இங்கயிருந்து என்ன செய்யிற? உனக்கு கேர்ள் ஃபிரண்ட் இல்லையா?" - பாலா. வெளிநாட்டிலிருந்து வந்த கன்சல்டண்ட்.
அப்பதான் ஒரு விஷயம் புரிஞ்சுது. ஆறுமணிக்கெல்லாம் உலகம் எங்கயோ போயிட்டிருக்கு. நாமதான் நாவலர் ரோட்லயே நிக்கிறம். அலுவலகம் நாவலர் ரோட்டில இருந்தது. என் முதல் வேலை. நான்தான் அங்கே சின்னப்பையன்.
இந்த 'கேர்ள் ஃபிரண்ட்' கேள்வியை முதன்முறை என்னைப் பார்த்துக் கேட்டவர் பாலாதான். அவர் ஆரம்பிச்சது...என்மேல இவ்வளவு நம்பிக்கை வச்சு, இவனுக்கும் ஒரு கேர்ள் ஃபிரண்ட் இருக்கும்னு நம்புறாங்க பாருங்க. அந்த நம்பிக்கை பெரிய விஷயம். லைட்டா பெருமையா வேற இருக்கும். ஆனா அந்த நம்பிக்கைய நாமளே பொசுக்கிறோம்னு நினைக்கும்போதுதான் வருத்தமா இருக்கும்.
உடன் வேலை பார்க்கும் சிங்கள அங்கிள்கள் அறிமுகமானவுடன் கேட்கும் மிக முக்கியமான கேள்வி "உனக்கு கேர்ள் ஃபிரண்ட் இருக்கா?" எங்கு சென்றாலும் இந்தக் கேள்வியில் மட்டும் மாற்றமில்லை. கவனித்துப் பார்த்ததில் அவர்கள் அதனை வாழ்வின் அத்தியாவசியப் பொருளாக நினைப்பவர்கள். நம்மவர்கள் பலர் அதை ஆடம்பரப் பொருளாக நினைத்துக் கொண்டிருந்தார்கள் - அதாவது எது கிடைக்கவில்லையோ அது ஆடம்பரம் என்ற நம்பிக்கையில்!
கேர்ள் ஃபிரண்ட் இல்லாததெல்லாம் ஒரு பிரச்சினையா? என நொந்துபோகும் அளவுக்கு அவுட்சோர்சிங் வேலை பார்க்கையில் இந்த விஷயம் ஆப்பு வைத்தது. சிங்கள நண்பர்கள் ஐந்து மணிக்கே காதலியைச் சந்திக்க 'டாண்' என்று கிளம்பிவிட நம்மாளுங்க 'நீ போய் என்ன பண்ணபோறே சும்மாதானே சுத்திட்டிருக்கே?' என்றொரு பார்வை பார்ப்பார்கள். என்போன்ற வேலைக்கு வாழ்க்கைப்பட்ட விளங்காத பயல்கள் எல்லாம் சமயத்தில், ஒன்பது, பத்து மணிவரை இருந்து எவனுக்கோ உழைத்துக் கொடுத்தோம்.
* * * * * * * * * *
அஞ்சு வருஷத்துக்கு முதல், அலுவகலகத்தில் வேலை செய்த பெண் தன் மாஸ்டர்ஸ் கம்ப்ளீட் பண்ணி விட்டதாகக் கூறி, தன்னுடன் அவளது இன்ஸ்டிடியூட் வருமாறு அழைத்தாள். அது அலுவலகத்திற்கு சற்று அருகிலேயே இருந்தது. முதலில் மறுத்தாலும் ரொம்பவே கெஞ்சிக் கேட்டுக் கொண்டதால் (மக் டோனால்ட்ஸ்ஸில் ட்ரீட்!) அந்த அன்புக்குக் கட்டுப்பட்டு போனாப் போகுதுன்னு சம்மதித்தேன்.
பக்கத்தில் நடந்து கொண்டிருந்தவள் திடீரென்று கேட்டாள், "உடம்பு சரியில்லையா?"
"அப்பிடியில்லயே!"
"நல்லாத்தானே இருந்ததே? ஏன் முகம் ஒரு மாதிரியா இருக்கு?"
"அப்பிடியா?"
"என்னமோ பேயறைஞ்ச மாதிரி!"
"ஓ! அ..அ.. ஆக்சுவலி மை ஃபேஸ்.... ஓல்வேய்ஸ் லைக் எ பேயறைஞ்ச ஃபேஸ்யா யூ நோ...."
"ஹேய் ஃபர்ஸ்ட் டைம் ஒரு பொண்ணுகூட நடந்து போறே.. அதானே?"
ச்சே! என்ன ஒரு அவமானம்! எனக்கு வந்திச்சு பாருங்க கோபம். அப்பிடியே பாதிவழில திரும்பியிருப்பேன். ஆனா மக் டோனால்ட்ஸ் என்ற ஒரே வார்த்தைக்காக அந்த அவமானத்தைத் தாங்கிக் கொண்டேன். அப்பல்லாம் இதுமாதிரி இடங்கள்ள எல்லாம் ஓசிலதான் சாப்பிடுவதென்பது என் கொள்கை. மனுஷனுக்கு மானமா, கொள்கையான்னு வரும்போது கொள்கைதானே முக்கியம்?
கேர்ள் ஃபிரண்ட் இல்லாம இருக்கிறது அவ்வளவு பெரிய குற்றமாய்யா? ஏழு வருஷத்துக்கு முன்னாடி பாஸ்போர்ட் அஃபீஸ்ல கூட இதுமாதிரி ஒரு சம்பவம் நடந்திச்சு. ஆனா அது இந்தளவுக்கு இல்ல.. அதுக்கும் மேல! ரொம்ப மோசமா அவமானப்படுத்திட்டான்.
இத்தாலில இருந்து வந்த ஒரு சிங்கள பயபுள்ள. மிக உருக்கமா ஒரு பார்வை பார்த்து "ஏன்? உனக்கு ஏதாவது பிரச்சினையா?"
ஒரு நிமிஷம் நானே என்னை நினைச்சு பயந்து போயிட்டேன்.
* * * * * * * * * *
திருகோணமலையிலிருந்த ஓரிரவில் ரெசிடெண்டில் ஒரு பார்ட்டி. உற்சாகமாக நானும், என்னைவிட பத்து வயது அதிகமான என் சிங்கள தோஸ்துவும், ஒரு தமிழ் அண்ணனும் தனியாகப் பேசிக்கொண்டிருக்கையில்..
"உமா கொழும்புல போய் வீக்கெண்ட் என்ன பண்ணுவே? கேர்ள் ஃப்ரெண்டை மீட் பண்ணுவியா?"
கொஞ்சநேரம் எதுவுமே புரியாமல் முழித்துவிட்டு, ஒரு மாதிரியாக பொத்தாம் பொதுவாகத் தலையசைத்தேன்.
"என்னது, கேர்ள் ஃப்ரெண்ட் இல்லையா? பொய் சொல்லாதே!"
"இதில பொய் சொல்ல என்ன இருக்கு? இல்ல!"
இல்லையா? நீங்க உடனே யாரையாவது லவ் பண்ணுங்க. லைஃப்ல ஒரு இண்டரெஸ்ட் வரும்" - இது தமிழ் அண்ணன்.
"என்னது உடனயா? என்ன பாஸ் பக்கத்து கடைல போய் பரோட்டா சாப்பிட்டு வர்ற மாதிரி அவ்ளோ ஈசியா சொல்லிட்டீங்க?"
"சரி இப்ப உனக்கு கேர்ள் ஃப்ரெண்ட் இல்ல! இதுவரைக்கும் எத்தனை பேர்?" - தோஸ்து.
டேய் ஜீ... புயபுள்ள உன்னை உசுப்பேத்தி அழவைக்கலாம்னு ட்ரை பண்ணுது சூதானமா இருடா.. யாருகிட்ட?
"எப்பவுமே இருந்ததில்ல!"
"எப்பிடி? ஏன்?"
சற்று நேரம் ஆழ யோசிப்பதுபோல பாவனையிலிருந்து மிக சீரியசான முகபாவனையுடன் ஆரம்பித்தேன்.
"சார் சின்ன வயசில இருந்தே ரொம்ப டீசண்டு! சாருக்கு இதெல்லாம் பிடிக்காது! சார் ரொம்ப ஸ்ரிக்டு! சார் பொண்ணுங்கள எல்லாம் சகோதரிகளா.."
எந்த நேரத்திலும் தோஸ்து குபீரென்று சிரித்துவிடலாம் எனத் தோன்றியதால் ரூட்டை மாத்தி உருக்கமாகப் பேச ஆரம்பித்தேன்.
"நாங்கெல்லாம் இந்த சமுதாயத்தைப் பற்றியே எப்பவும் சிந்தித்துக் கொண்டு வாழுறதால.."
பேரரசு கமலுக்குக் கதை சொல்லப் போன மாதிரியே ஒரு ரியாக்சன் வந்திச்சு அங்கயிருந்து. சரி விலாவாரியா சொல்லிடுவோம்.
"நாங்க எல்லாம் உங்கள மாதிரி சூழ்நிலைல வளரேல்ல. யாழ்ப்பாணத்தில சின்ன வயசிலருந்து பள்ளிக்கூடத்தில தனியாவே வளர்க்கப்படவங்க. பாஸ் லவ் உங்களுக்கு பரோட்டா சாப்பிடுற மாதிரி இருக்கலாம். நானெல்லாம் ஒண்ணாப்பு படிக்கேக்க கூடப்படிச்ச பொண்ணுங்க கிட்டப் பேசினதுக்குப் பிறகு, இன்னொரு பொண்ணுகிட்ட ஹாய், ஹலோ சொல்லும்போது 24 வயசாயிட்டுது. முடியுமாய்யா? நான் மட்டுமில்ல எங்க ஃபிரண்ட்ஸ் எல்லாப் பயலுகளும் இப்பிடித்தான். அதிலயும் நாங்க மாத்ஸ்(Maths) படிச்சவங்க. மாத்ஸ் படிச்சவங்க எப்பிடியிருப்பாங்க தெரியுமா?
அது ஒரு தனி கூட்டம். சேவல் பண்ணை. காய்ஞ்சு... காய்ஞ்சு போய் இருப்பாங்க. பொண்ணுங்க கூட எல்லாம் யாருமே பேச மாட்டாங்க. மற்றவனைப் பேசவும் விடமாட்டோம். அப்பிடியே போய்ப் பேசினாலும் மாத்ஸ் பொண்ணுங்க பதில் பேசுவாங்களான்னு எவனுக்கும் தெரியாது. அவளவள் தன்னை ஔவையார், காரைக்கால் அம்மையார் ரேஞ்சில நினச்சுட்டு இருப்பாளுங்க. அற்ப மானிடர்களேன்னுதான் எங்களைப் பாப்பாளுங்க. எப்பவாவது ஒரு ஆர்ட்ஸ், கொமர்ஸ் பொண்ணு வந்து அபூர்வமா யாராவது ஒருத்தன மனுசனா மதிச்சு ஒரு வார்த்தை பேசினா போதும். அட் எ டைம்ல ஒம்பது பேர் பாய்ஞ்சு விழுந்து பதில்சொல்லப் போய், கடைசில ஒருத்தனும் பேசமுடியாது. மொத்தமாக் காரியத்தையே கெடுத்துடுவானுங்க.
ஒரு பொண்ணை லைட்டா சைட் அடிச்சாலே, கடைக் கண்ணாலயே கவனிச்சு, கண்ணகி கசின் மாதிரியே ஒரு லுக் விடுவாளுங்க. யாருமே கேக்குறதுக்கு இல்லைன்னு வேற வழியே இல்லாம ஒரு அட்ரஸ்... வெறும் அட்ரஸ் கேக்க போயிருப்போம் என்னமோ அட்டெம்ப்ட் டு ரேப்புக்கு அப்ளிகேஷன் போட வந்த மாதிரியே அப்பிடி ஒரு டெரர் ஃபேஸ் காட்டுவாளுங்க. ஆணியப் புடுங்கவே வேணாம் ஆளவிடுன்னு ஓடிவந்திருவோம்.
எப்பவாவது, ஏதாவது ஒரு பொண்ணைப் பார்த்தா, பிடிச்சிருந்தா, நல்லாருக்கே லவ் பண்ணினா எப்பிடியிருக்கும்? அப்பிடீன்னு லைட்டா, ரொம்ப மைல்டா ஒரு யோசனை வரும். அப்பிடியே மைண்ட் வொய்ஸ்ஸ கரெக்டா காட்ச் பண்ணி, காறித் துப்பிட்டுப் போயிடுவாளுங்க!
நீங்க வேற! நாங்க வேற! நீங்க எல்லாம் ஹிந்திப் படம் பார்த்து அதையே ஃபெலோ பண்றவங்க. லைஃப வாழுறவங்க. பதினஞ்சு வயசுலயே கேர்ள் ஃபிரண்ட்! லவ்சு! நாங்கெல்லாம் தமிழ்ப்படம் பார்த்து வளர்ந்தவங்க. எங்களுக்கு சமுதாயம்தான் முக்கியம். நாப்பது வயசில சமுதாயத்துக்காக போராடுற ஹீரோவ இருபது வயசு பொண்ணு துரத்தி துரத்தி லவ் பண்ணுவாங்க. அத நம்பியே முப்பத்தஞ்சு வயசு வரைக்கும் சும்மாவே சுத்திட்டு திரியுற எத்தின பேரு இருக்காங்க தெரியுமா?
நாங்களும் ஒரு காலத்தில, எப்பிடியும் அடுத்த முறையாவது வலண்டைன்ஸ் டேயக் கொண்டாடுறம்னு சைலண்டா சபதம் போட்டுட்டுத் திரிஞ்சவங்கதான். ஒண்ணும் நடக்கல! எவளும் சிக்கல! ஊரில எல்லாப் பொண்ணுங்களும் விவரமா இருந்தா பாவம் பசங்க என்னதான்யா பண்ணுறது? என்னமோ பொண்ணுங்க எல்லாம் லைன்ல வந்து நிக்கிறமாதிரியும், நாங்க என்னமோ வேணாம்னு சொல்லிட்டுத் திரியிறமாதிரியும் பேசுறீங்க? சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு?"
- தொடர்ந்து ஆக்ரோசமாக உரையாற்றினேன். ஊடக அனுசரணை - டீச்சர்ஸ்!

* * * * * * * * *
இதையெலாம் மறந்திருந்தேன். நேற்று அதிகாலை எட்டுமணிக்கே தூங்கிக் கொடிருந்த என்னை ஃபோன் செய்து எழுப்பிய சிங்கள கன்சல்ட்டண்ட் மாமா ஒருவர் கேட்டார், "எப்பிடியிருக்கே? வைரல் ஃபீவர்ன்னு கேள்விப்பட்டேன். இப்ப எப்பிடி?"
"பரவால்ல"
"அப்புறம் வலண்டைன்ஸ் டே எப்பிடிப் போச்சு? கேர்ள் ஃபிரண்டை மீட் பண்ணினியா?"
யோவ் நீங்கெல்லாம் லீவ் நாள்ல ஃபோன் பண்ணி சம்பந்தமில்லாம ரொம்ப அக்கறையா விசாரிச்சாலே தெரியும்யா அஃபீசுக்கு வரச்சொல்லப் போறீங்கன்னு.. அதையெல்லாம் பொறுத்துக் கொள்ளலாம்.
அதுக்கேன்யா என்னைப் பாத்து அந்தக் கேள்விய..?
அதுக்கேன்யா என்னைப் பாத்து அந்தக் கேள்விய..?
#Labels: Valentine's day, அனுபவம், சினிமா, யாழ்#
ReplyDeleteஉங்களுக்கு சினிமா தந்த அனுபவம் பாழ் !
த ம 1
//நானெல்லாம் ஒண்ணாப்பு படிக்கேக்க கூடப்படிச்ச பொண்ணுங்க கிட்டப் பேசினதுக்குப் பிறகு, இன்னொரு பொண்ணுகிட்ட ஹாய், ஹலோ சொல்லும்போது 24 வயசாயிட்டுது. முடியுமாய்யா?//
ReplyDeleteசெம்ம. நாங்க கொஞ்சம் பெட்டெர், ரெண்டாவது வாட்டி பேசுறப்போ வெறும் 21 வயசுதான் ஆச்சு. ....
அங்கயுமா? இருங்க இதுல செங்கோவியண்ணன் நிலைமை என்னன்னு பாக்கணும்! :-)
Delete30 வயசு தம்பி..அப்போத்தான் கல்யாணம் ஆச்சு!
Deleteநல்லவேளை அரேஞ்சுடு மேரேஜ்ன்னு ஒரு சிஸ்டம் இருக்கு. இல்லைன்னா, நம்ம பொழைப்பு நாறியிருக்காது?
Deleteஐ லைக் திஸ் திங்கிங்.. விடு விடு சூனா பானா, அண்ணே அழுதுடுவாறு..
Deleteஹாரிபோடர் ஆல்சோ டீல்ட் வித் த சேம் பிராப்ளம்.. திஸ் சாப்டர்..
ReplyDeletebtw , மீ இஸ் த ஹாரிபோடர்...
நமக்கு எல்லாம் பிப்ரவரி 29 வாலண்டைன்ஸ் டே வந்தாலுமே, வக்கணையா பத்து வாலண்டைன்ஸ் டேஸ் மிஸ் பண்ணுவோம்ஜி.. விடுங்க பாஸ்...
இது நல்லாருக்கே பாஸ்! :-))
Deleteஇவ்வளவு நாளும் நீங்க எழுதுறதப் படிச்சு மைல்ட் சிரிப்பு தான் வரும்!இன்னிக்கு,ஹ!ஹ!!ஹா!!ன்னு சிரிச்சு ஒய்ப் மேலயும்,கீழையும் பாக்குறாங்க!(தாங்க்'ஸ் வாய் விட்டு சிரிச்சு,நோய் விட்டுப் போனதுக்கு!)
ReplyDelete:-)) வாங்க பாஸ்... பாத்து ரொம்ப நாள் ஆச்சு!
Deleteஓம் தம்பி.கொஞ்ச நாளா .................சரி விடுங்க.பதிவுலகம் மட்டும் தான் இப்போ!
Deleteகேர்ல் ஃபிரெண்டா எங்கே எங்கே ?
ReplyDeleteஉம்............ஆச,தோச,அப்பளம்,வட!ஹ!ஹ!!ஹா!!!///நல்லாருக்கீங்களா,மனோ?ஐ ஆம் ஆல் ரைட்.
Deleteஅப்ப கேர்ள் பிரண்டே இல்லையா ஜி...
ReplyDelete