Friday, October 11, 2013

நய்யாண்டி



'களவாணி', 'வாகை சூடவா' போன்ற படங்களை எடுத்த இயக்குனர் சற்குணத்தால் 'படிக்காதவன்', 'மாப்பிள்ளை' போன்ற படத்தை எடுக்க முடியுமா? என்று யாராவது கேட்டிருக்கலாம். 'ஏன் முடியாது?' என்று, அதை ஓர் சவாலாக ஏற்று சாதித்துக் காட்டியிருக்கிறார் சற்குணம்! வாழ்த்துக்கள்!

தனுஷ் அவ்வப்போது இயக்குனர் சுராஜின் படங்களில் நடிப்பது வழக்கம்! இப்போது சுராஜ் பிஸி போல. அதனால் அவர் படத்தை சற்குணம் இயக்கியிருக்கிறார். ஆக, சுராஜின் படங்களைவிட நன்றாகவே இருக்கிறது.

சற்குணம் நல்ல இயக்குனர் என்று ரெண்டு நாளைக்கு முன்னர்தான் ஃபேஸ்புக்கில அறிக்கை விட்டேன். அவர் வல்லவர், திறமையானவர்தான் - அதில் மாற்றமில்லை! எல்லாம் என் நேரக் கெரகம்! 

வழக்கம்போல ஊருக்கு வரும் ஹீரோயின், அப்பா பார்க்கும் மாப்பிள்ளையையே கட்டிக்கொள்வதாக வாக்குக் கொடுக்கிறார் - அடுத்த சீனில் ஹீரோவைச் சந்திக்கப் போவது தெரியாமல்! வழக்கம்போல பாட்டி ஊருக்குப் போன பொண்ணு எப்பிடியும் லவ் பண்ணிடுவா என்கிற அடிப்படை அறிவே இலலாத அப்பாவும், வழக்கம்போல லூசுத்தனமா ஊரிலேயே மோசமான ஒருத்தனைப் பெண்ணுக்கு நிச்சயிக்க, வழக்கம்போல ஹீரோ வந்து கூட்டிட்டு ஓட, வில்லன் துரத்த... இறுதியில் சுபம்.

முதற்பாதியில் சூரி, சிங்கம்புலி, இமாம் அண்ணாச்சி, சதீஷ், தனுஷ் என ஒரு நகைச்சுவைப் பட்டாளமே மொக்கை போட்டு சிரிக்க வைக்க முயல்கிறார்கள்! முடியவில்லை. அண்ணாச்சி மட்டும் ரசிக்க வைக்கிறார். இடைவேளைக்கு சற்றுமுன்னர் ஸ்ரீமன், சத்யன் ரகளையை ஆரம்பிக்கிறார்கள். 

"ஏண்டி பாதகத்தி" என்றோர் பாடல் களவாணி படத்தில் வரும் ஒரு பாடலின் சாயலில் கேட்க நன்றாகவே   இருந்தது. ஆனால் படத்தில் பாடல் வரும் இடம்தான் காமெடியாக  இருந்தது. 'என்னது தனுஷ் லவ் பண்ணினாரா?' - என அப்போதுதான் அதிர்ச்சியாகக் கேட்கத் தோன்றியது.

ஓங்கி வளர்ந்த கொடூரமான ஒருத்தனைக் காட்டும்போதே அவன் வயதை உத்தேசித்து, அவன்தான் ஹீரோயினுக்கு அப்பன் பார்க்கப்போற மாப்பிள்ளைன்னு நாங்க நிச்சயம் பண்ணிட்டோம். அதனால் நிச்சயதார்த்தத்தில அவனைப் பார்த்து நஸ்ரியா மட்டும்தான் அதிர்ச்சியாகிறார். (அவர் தமிழ்சினிமாவுக்குப் புதுசு என்று ப்ரெஸ்மீட்டில் சொல்லியிருந்தது ஞாபகம் வந்தது)

படம் தொடங்கி, அரைமணி நேரத்துக்குள்ளேயே அந்தத் தொப்புள் விவகாரம் தொடர்பான சந்தேகம் வந்தது, 'இவங்க எல்லாம் கூட்டுக் களவாணிங்களோ?' யூ டூ சற்குணம்?

உடல்நிலை சரியில்லைன்னு ரெஸ்ட் எடுக்கச்சொல்லி அஃபீஸ்ல லீவ் குடுத்தாங்க. சரி தியேட்டருக்குப்  போய் ரெஸ்ட் எடுக்கலாம்னு போனேன். இரண்டாவது பாதி வேகம், சிரிக்கலாம். ஸ்ரீமன், சத்யனுக்காக படம் பார்க்கலாம்! 

அப்புறம் டிவிடியில் 'களவாணி' படம் பார்க்கிறதா இருக்கிறேன். என்னா படம்யா!

13 comments:

  1. ரெம்ப ஏக்கத்தோடே கேக்கிறேன் ஜி. நஸ்ரியா தொப்புள் ஏதாவது இன்டு இடுக்கில்யாவது தெரிந்ததா?

    ReplyDelete
    Replies
    1. மனசைத் தேத்திக்குங்க மணி! :-)

      Delete
  2. படம் நல்லாயில்லையா ஜி...

    ReplyDelete
    Replies
    1. இயக்குனர் சற்குணம் என்பதால் நான் அதிகம் எதிர்பார்த்துவிட்டேன்... பார்க்கலாம் பாஸ்!

      Delete
  3. வணக்கம்
    ஜீ...

    படம் சில நாட்களுக்கு ஓடிய பின்புதான் பலன் வெளிவரும்........அமைதியாக இருப்போம்...ஜீ

    எனது வலைப்பக்கம்-http://2008rupan.wordpress.com

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. இன்னிக்கு நைட்டு போலாம்னு ஃப்ரண்ட்ஸ்லாம் ப்ளானிங்கு.. இப்போ கொஞ்சம் யோசனையா இருக்கு..!! என்ன பண்றது ஜி..? காசு போச்சேனு ஃபீல் பண்ண வேண்டி வருமோ..?!

    ReplyDelete
    Replies
    1. அப்டியெல்லாம் இருக்காது ஜாலியா போயிட்டு வாங்க எவ்ளோ பண்றோம்! :-)

      Delete
  5. இன்டு இடுக்குலியாவது நஸ்ரியா தொப்புள் தெரியுதா...?என்று கேட்கின்ற தோழர்....ராத்திரியிலும் கூலிங்கிளாஸ் போட்டுக்கிட்டு தடுமாறுகின்ற தோழர்க்கு தெரிஞ்சா என்ன தெரியலைன்னா என்ன...?

    ReplyDelete
  6. ஓ.கே சொல்லுறத சொல்லிட்டீங்கள்.அப்புறம் அவங்க,அவங்க இஷ்டம்,தொப்புள் பாக்கணும் னா,யூ டியூப் போங்க மக்களே!(த்தூ..............ன்னு அப்புறம் துப்புங்க,ஹ!ஹ!!ஹா!!!)

    ReplyDelete
  7. நானும் படம் பார்த்து கடுப்பாகி விட்டேன் ஜீ. அப்போது தோன்றியதை, உலக சினிமா ரசிகனும் பேஸ்புக்கில் சொல்லியிருந்தார் : தொப்புளை இல்லை, நிப்புளை காட்டியிருந்தாலும் இந்தப் படம் ஓடாது!

    ReplyDelete
  8. வாட் எ சேஞ்ச் ஓவர் மாமு :-)

    ReplyDelete
  9. \\'இவங்க எல்லாம் கூட்டுக் களவாணிங்களோ?' யூ டூ சற்குணம்?\\

    தேவையில்லாத பில்டப் கொடுத்தப்பவே தெரியும்...இப்போ மொத்தமா ஊத்திகிச்சா.. :-)))))

    ReplyDelete
  10. ஐயா அறிவு மான்களே உங்க வீட்ல , உங்க ஊர்ல , உங்க ஆபீஸ் ல, ஏன் உங்க மனசுல எவளவு ப்ரொப்லெம் இருக்கு , சரி செய்ய வேண்டியது இருக்கு . அதெல்லாம் விட்டிட்டு எவளோ ஒருத்தி ட தொப்புள் பத்தி இவளவு சிந்தனை & டைம் செலவு பண்ணி விவாதிக்க வேனுமா?? சத்தியமா நாம எங்க இருக்கம் ணு எனக்கு புரியல !!!
    கொஞ்சம் பிரக்டிகல் ஆ இருங்கப்பா..

    ReplyDelete