சமீபத்தில் யாழ்ப்பாணத்துக்கு ஒரு எதிர்பாராத அவசரப்பயணம் செய்யவேண்டியிருந்தது. டிக்கட் புக் பண்ணப் போறதிலருந்து வழக்கமான ப்ரொசீஜர் ஆரம்பிச்சுது.
என்னதான் சொகுசு பஸ் என்று சொன்னாலும் அதில ஏதாவது கோல்மால் பண்ணி வச்சிடுவாங்க நம்மாளுங்க. ஒன்றரை வருஷம் தொடர்ந்து, வார இறுதியில் ரெண்டுநாள் திருமலை - கொழும்பு பயணம் (சொகுசு பஸ்தான்) செய்ததில் முள்ளந்தண்டு டமேஜ் ஆகிட்டுதோன்னு டவுட் வர்ற அளவுக்கு நொந்துபோயிருந்தேன். இருக்கை மிகச்சரியாக முதுகுக்கு இம்சை கொடுக்கக்கூடிய சாய்விலிருக்கும். அதைவிட குஷன் ரஃபா, வழுக்கும். இதுல ஏ.சி வேற நடுச்சாமத்தில 10 டிகிரி செல்சியஸ்ல இருக்கும். வேறு சொகுசு பஸ் இல்லாததால் அது ஒன்றே கதி. வெளியில பார்க்க பஸ் புதுசா, சூப்பரா இருக்கும் என்பது முக்கியமானது.(இதைப்பார்த்தே பலபேர் யாழ்ப்பாணத்துக்கும் அதே பஸ் நிறுவனத்தில் டிக்கட்போட்டு நொந்துபோய் வர்றாங்க)
யாழ்ப்பாணத்துக்கு ஓடுகின்ற பெரும்பாலான பேரூந்துகள் வாங்குற காசுக்கு மோசம் செய்யாதவை - அவை பார்க்க பழசாக இருந்தாலும்!
ஆனாலும் நம்ம ராசி இருக்கே! அதனால எப்பவும் முன்னேற்பாடா டிக்கட் போடும்போது, நல்ல கம்ஃபோர்ட்டபிளான்னு நாலு தரம் கேட்டு கன்ஃபர்ம் பண்ணி, அவன் பஸ் படம் முதற்கொண்டு காட்டி எங்களை நம்ப வச்சு, அதிலயே(?!) சீட் எல்லாம் செக் பண்ணி, சரின்னு காசைக் கொட்டி டிக்கட் போடுவம்.
இதுல போனமுறை டிக்கட் காசு வழமையைவிட நூறு ரூபா குறைவா இருக்க, "நல்ல பஸ்தானே?"
"சுப்பர் பஸ் தம்பி"
"அப்ப ஏண்ணே குறைவா இருக்கு?".
'அட காசு குறைவா இருக்கிறது ஒரு குற்றமாய்யா?' அதிர்ச்சியாப் பார்த்தார்.
பஸ்ல ஏறினதும் சீட்ல இருந்து பார்த்து சொன்னமாதிரியே இருக்கு ஏமாத்தலன்னு நிம்மதியாகி, அப்பிடியே லைட்டா திரும்பி பார்த்தா பக்குன்னு இருக்கும். நம்ம ஏழரை பிரகாரம், வழக்கம்போல பின் சீட்ல ஒரு ஆன்டியும் பொண்ணுமோ, இல்ல ரெண்டு பொண்ணுங்களோ இருக்கும்.
என்ன சோதனை! பெண்ணாதிக்க வாதியா இருப்பாங்களோ,சீட்டைப் பதிச்சா சவுண்டு விடுவாளுகளோன்னு கொஞ்சநேரம் பம்மிட்டே இருக்கணும். அதால அவங்களுக்கு எந்தப்பிரச்சினையும் இருக்காது என்கிறது வேற விஷயம். சரியான இடைவெளி இருக்கும். இருந்தாலும் என்னமோ அவங்க மடிலயே சாய்ஞ்சாமாதிரி ஒரு கண்ணகி எஃபெக்ட் குடுப்பாங்க. என்ன, சிலபேர் காலைத்தூக்கி சீட்ல வச்சிருக்கிறது மாதிரியான குரங்கு சேட்டை பண்ணிட்டு இருப்பாங்க. பாவம், அவங்களுக்கு கஷ்டம்தான்.
சரின்னு வெய்ட் பண்ணி பஸ்காரன் பின்பக்கம் வரும் டைம் பார்த்து சீட்டை சரிப்பம். அப்ப பஞ்சாயத்து வந்தா, அவனே விளக்கத்த குடுப்பான். நாம அனாவசியமா வாயத் திறக்க வேண்டியதில்ல பாருங்க!
ஒருமாதிரி அப்பாடான்னு சாய்ஞ்சு ரெஸ்டுக்குப் போனா, அப்பத்தான் வந்த பக்கத்து சீட்காரன் அவன் சீட்டை நிரப்பி, பத்தாததுக்கு நாம சீட்லயே பாதி பங்கு கேட்கிற மாதிரியே மேல விழாத குறையா ஒட்டிட்டு இருப்பானுங்க. அப்ப வரும் பாருங்க ஒரு காண்டு!
'ஏண்டா கடல் பன்னி மாதிரி உடம்ப வளர்க்கத் தெரியுது ஒரு கரப்பான் பூச்சி சைசுக்காவது மனச்சாட்சிய வளர்க்கமாட்டீங்களாடா?அடுத்தவன இமசை பண்ணாம இருக்கப் பழகவே மாட்டீங்களாடா? ஒன்றரை சீட் தேவைப்படுறவனெல்லாம் எப்பிடிறா கூசாம ஒரு சீட் மட்டும் புக் பண்ணி வர்றீங்க? ஏண்டா காசு வாங்குறீங்க இல்ல.. ஒரு சீட்டுக்கு காசு வாங்கிட்டு அரை சீட்ல எப்பிடிறா இருக்கவைப்பீங்க? பக்கத்துல மனுஷ சைஸ்ல யாரையாவது இருத்த மாட்டீங்களா? லொறில, டிப்பர்ல போறவன எல்லாம் ஏண்டா பஸ்ல ஏத்துறீங்க?' - அப்பிடீன்னு ஃபேஸ்புக்ல பொங்குறதுக்கு நிறையக் கேள்விகள் மனசுல தோணும். வெளில கேக்க முடியாது, ஊருக்குப் போகணுமா இல்லையா?
இந்த இடத்தில்தான் ரெண்டு இருக்கைக்கும் நடுவில இருக்கிற மடக்கி விடக்கூடிய Hand rest முக்கிய இடம்பெறும். இந்த ஹான்ட் ரெஸ்ட் இருக்கே .. சும்மா இருக்கிறவன எல்லாம் ஓவர் நைட்ல சிவாஜி, கமல் ரேஞ்சுக்கு கொண்டுபோயிடும். எவனொருவன் முதல்ல தத்ரூபமா தூங்கிறமாதிரி 'காரெக்டராவே' மாறிடுறானோ அவனுக்கே அது கிடைக்கும். அந்த ஹான்ட் ரெஸ்ட்டை அமுக்கி ரெண்டுபேருக்கும் இடையில ஒரு எல்லையைப் போடும்போது ஒரு வில்லத்தனமான சிரிப்பு இயல்பாவே வரும்.
இவ்வளவு துன்பத்தையும் எதிர்கொண்டு அல்லது எஸ்கேப்பாகி, நிம்மதியா சாய்ஞ்சா, கரெக்டா அந்த நேரத்தில் படத்தைப் போடுவானுங்க. ஒருத்தன் நிம்மதியா, வசதியாத் தூங்கிக் கொண்டு போகத்தானே இப்பிடியான பேரூந்தை தெரிவு செய்வான். பிறகு படம் போட்டு இம்சை பண்றதுக்குப் பெயர் மேலதிக வசதியா? அப்படித்தான் பலரும் நம்புகிறார்கள்.
அன்றைக்கும். சற்றுத் தள்ளியிருந்த யாரோ ஒரு அறிவு ஜீவி குரல் கொடுத்தார் "தம்பி படத்தைப் போடுங்கோ!". பின்பு சொன்னார் "இதுக்கும் சேர்த்துத்தானே காசு வாங்குறாங்கள் இல்ல பார்த்துக் கொண்டு போவம் ஹே ஹே ஹே" - சிரிப்பு வேற! குடுத்த காசு வேஸ்ட் ஆகக்கூடாதுன்னு வலுக்கட்டாயமா நித்திரை முழிச்சு படம் பாக்கிறவன்லாம் இருக்கானுங்க போல.
நிறையநாளா பஸ் பயணம் டச் விட்டுப் போனதில் தூக்கமே வரவில்லை.'சென்னையில் ஒருநாள்' படம் போட்டிருந்தார்கள். சவுண்ட் சரியாக கேட்கவில்லை. வசனங்கள் கேட்க வேண்டிய அவசியமும் பெரிதாக இருக்கவில்லை. நல்லாத்தான் போயிட்டிருந்தது. திடீர்னு வெள்ளைச்சட்டை போட்டுக் கொண்டு சூர்யா வந்ததும் குழம்பிப் போனேன். ஏதாவது அப்பள விளம்பரமோ அல்லது பல்பொடி விளம்பரமாக இருக்குமோ என. சானலை மாத்துங்கப்பா என மனசு கூச்சலிட்டது. ஒரு கட்டத்தில சூர்யா படத்துக்கு தியேட்டருக்குப் போயிட்டே விளம்பரம் பார்க்கிறமாதிரி மக்கள் ஃபீல் பண்ணப் போகிறார்கள்.
விறுவிறுப்பாக படம் போய்க்கொண்டிருக்க, இடையிடையே படு ஸ்லோவாக ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார். கைகளை உயர்த்தி ஆத்து ஆத்து என்று ஆத்திக் கொண்டிருந்தார். அநேகமா சாதிக்க வேணும், துணிஞ்சு நிக்கவேணும், போராட வேண்டும், தன்னம்பிக்கை, கடமை இப்படி ஏதாவது சொல்லியிருப்பார் என நம்புகிறேன். படம் முடிஞ்ச பிறகும் விடாமல் சொற்பொழிவு ஆத்திக் கொண்டிருந்தார். எதுக்கு இந்தக் கொடூரமான ஐடியா?
யோசித்துக் கொண்டேயிருக்கும்போது இரண்டாவது படத்தை ஆரம்பிச்சாங்க..
'ஏண்டா ஏன்? வழக்கமா ஒன்றுதானே? நான் வர்றது தெரிஞ்சு பிளான் பண்ணீட்டாங்களா?' மனசு அலறியது.
ஆரம்பமானது.. பல மொக்கையான, கேவலமான, மொண்ணைத்தனமான, கேனத்தனமான, மானங்கெட்டதனமான காதல் காட்சிகளுடன் பெருவெற்றி பெற்ற சிங்கம்!
ReplyDelete'ஏண்டா ஏன்? வழக்கமா ஒன்றுதானே? நான் வர்றது தெரிஞ்சு பிளான் பண்ணீட்டாங்களா?' மனசு அலறியது.//
ஹா ஹா ஹா ஹா ஹா....
அப்ப சிங்கமும் பாத்திட்டீங்கள்!முதல் படம்........................ பேரே சொல்லேல்லையே?ஹா!ஹா!!ஹா!!!ஹா!!!!
ReplyDeleteஇந்த பஸ் விஷயம் இன்னும் மாற இல்லையா? ... ரெண்டு வருடத்துக்கு முதல் போன போது "இளைஞன்" என்று ஒரு படம் போட்டு நூடில்ஸ் ஆனேன். ஹெட் போன்ல பாட்டு கேட்டாலும் அதுக்கும் மேலால இளைஞன் சத்தம் போட, குலுக்கினாலும் பருவாயில்லை எண்டு பின் சீட்ல போய் இருந்தனான் ... அது ஒரு துன்பியல் சம்பவம்.
ReplyDeleteஉங்களை போன்ற ஒரு இளைஞனுக்கு "இளைஞன்" படம் பிடிக்காமல் போனது ஆச்சர்யமே :P
Delete