Thursday, January 10, 2013

நீ.எ.பொ.வ.- சமந்தாவும், மூக்குத்தியும்!


நீதானே என் பொன் வசந்தம் – நேற்று எதுவும் செய்ய முடியாத ஒரு வெறுமையான, வெறுப்பான பொழுதில் சும்மா பார்த்துக் கொண்டிருந்தேன். 'ஒரு பொண்ணையாவது வாழ்க்கைல லவ் பண்ணினவங்களுக்கு படம் பிடிக்கும்'னு கௌதம் மேனன் சொல்லியிருந்ததால் நான் முதலில் டீசண்டா பார்க்காமல் தவிர்த்திருந்தேன்.

போற போக்கில ஒரு வார்த்தைய தெரிஞ்சோ தெரியாமலோ சொல்லிட்டுப் போறது எவ்வளவு வில்லங்கத்தைக் கொண்டு வந்திடுது பாருங்க.

யாழ்ப்பாணத்தில் நம்மாளுங்க சிலர் கூடவே படிக்கிற ஒரு பொண்ணை 'ச்சூஸ்' பண்ணுவானுங்க. அப்புறம் அது டியூஷன் போகும்போது வீட்டுக்கும் டியூஷனுக்கும், சில பேர் ஸ்கூலுக்கும் ஃபாலோ பண்ணுவானுங்க. அந்தப் பொண்ணு சைக்கிள்ல போகும் இவனுங்க பின்னாடி நாற்பதடி தூரத்தில நாலு கிலோமீற்றர் தூரம் சைக்கிள்ல பின்னாடியே வீடுவரைக்கும் கொண்டுபோய் விடுவாங்க. அத வேற காவியக் காதல்னு அளந்துக்கிட்டிருப்பாங்க. இதில கொடுமை என்னான்னா அந்தப் பொண்ணுக்கு இந்த விஷயம் தெரிஞ்சே இருக்காது.

தெரிஞ்சாலும் அதை ஒரு காவல் நடவடிக்கையா பார்ப்பாங்களே தவிர காதலா பார்க்க மாட்டாய்ங்க. ஏன்னா, அவங்க வீட்டிலருந்து மெயின் ரோடு வரைக்கும் ஏற்கனவே அவங்க வீட்டு நாய் பின்னாடியே வந்து காவல் டியூட்டி பார்த்திருக்கும். அப்புறம்தான் அந்த நாய் டியூட்டிய இவனுங்க வான்டட்டா போயிப் பார்ப்பானுங்க. 

இப்ப என்னடான்னா நீ.எ.பொ.வ. படம் பார்த்ததும் இந்த 'டியூட்டி' பார்த்த பயபுள்ளைங்களுக்கு எல்லாம் பழைய 'காதலிச்ச' ஞாபகம் வந்துட்டுதாம். ஃபீல் பண்ணுறாங்களாமாம். என்ன கொடுமை சமந்தா இது?


பெண்கள் மிக மகிழ்ச்சியாக இருக்கும்போது, தாங்கள் எதிர்பார்த்த ஒரு சின்ன விஷயம் கூட எதிர்பாராத ஒரு தருணத்தில் நிகழ்ந்துவிடும்போது அவர்களின் ரியாக்சன் அவர்களின் நடை மிகச் சின்னச் சின்ன காலடிகளை மிக  வேகமாக வைத்து  கைகளைப் பக்கவாட்டில் உடலோடு இறுக்கிக்கொண்டு, சற்றே பம்மிக்கொண்டு ஒரு சிரிப்பு.. இதையெல்லாம் ஞாபகப்படுத்தியது காபி சாப்பிட ஜீவா அழைத்ததை சமந்தா தன் தோழிகளிடம் சொல்லும் காட்சி.

ஆனா ஒண்ணு, அடிக்கூந்தலில் ஒரு இன்ச் வெட்டிட்டு, அது முகத்தில தெரியும்னு நம்பி 'ஒரு வித்தியாசம் கண்டு பிடி பார்ப்போம்'னு கேட்பாங்க பாருங்க அந்தக் கொடுமைய லவ் பண்ணின பல பேர் அனுபவிச்சிருக்கலாம்.

முதன்முதல் படத்தின் ஸ்டில்ஸ் பார்த்தபோது தோன்றியது சமந்தாவின் மூக்குத்தி, ஆமா அது மூக்குத்திதானே? அவ்வளவு அழகு! மூக்குத்தி ஒரு பெண்ணுக்கு அவ்வளவு அழகாக இருக்குமா? சமந்தா அழகாக இருப்பதால் மூக்குத்தி அழகாகியதா இல்லை..... ஆச்சரியமாக இருந்தது. மூக்குத்தி சில வேளைகளில் தெய்வீகமான ஒரு அழகைக் கொடுத்துவிடுவது உண்மைதான்.

மூக்குத்தி இப்போதெல்லாம் யாரும் அணிவதில்லைப் போலும். பெண்களிடம் மிக அருகிப்போன சமாச்சாரமாகிவிட்டது இல்லையா? என்றேன் நண்பரிடம். "அடப் போங்க பாஸ் மூக்கு என்கிறதே இப்பல்லாம் பெண்களிடம் அருகிப் போயிட்டுது" என்கிறார்.

ஒருவேளை விண்ணைத்தாண்டி வருவாயா ஜெசி மாதிரி நித்யாவும் எல்லோரிடமும் நல்லா ரீச் ஆகியிருக்கும் பட்சத்தில், நம் பெண்களிடையே வெகுவாக அருகிப்போன மூக்குத்தி அணியும் கலாச்சாரம் மீண்டும் துளிர்த்திருக்க வாய்ப்பிருந்தது. ஆனால் அதில் ஓர் ஆபத்துமிருக்கிறது.  அது சமூகத்துக்கு பெரும் அச்சுறுத்தலாகக் கூட அமைந்துவிடக்கூடும். சமந்தாவைப் பார்த்து மூக்குத்தி அணிந்து கொள்வதென்பது பேஸ்புக் ப்ரோபைல் ல சமந்தா போட்டோ போடுறது போல ஈசியான விஷயமல்ல. நமக்கிருப்பது கூட மூக்குத்தானா என்பதை ஒருமுறை உறுதிப் படுத்திக் கொள்வது மிக அவசியம்.

6 comments:

  1. enna boss solla vareenga.nalla irukkunu solrengala?ilainu solrengala?intha style mookuthi ella ponnungalukkum alagaa irukkaathu boss

    ReplyDelete
  2. ஏன்பாஸ் பழசையெல்லாம் ஞாபகப்படுத்திக்கிட்டு... நம்ம பயபுள்ளைங்க எவளவு வதைபட்டாங்கன்னு இப்ப யோசிச்சா புரியுதுபாஸ்.....மூக்குத்தி அது அருகிப்போய்விட்டது என்னமோ உண்மைதான்

    ReplyDelete
  3. வணக்கம்,ஜீ!!!///அந்தக் 'கருமத்த'(நீ.எ.பொ.வ) நீங்களும் பாத்துட்டீங்களா?ஹி!ஹி!ஹீ!!!!!////கொசுறு:இப்போதும் சில சிறு வயதுப் பெண்கள் மூக்குத்தி மேல் 'பாசம்' வைத்திருக்கவே செய்கிறார்கள்!

    ReplyDelete
  4. அசத்தல் ஜீ...எனக்கு ஏனோ இவ்வகை வளையல் மூக்குத்திகள் பிடிப்பதில்லை, குண்டு/கல் மூக்குத்திகளே அழகு.

    ReplyDelete
  5. எனக்கும் படம் பார்க்கும் ஆசையே எழவில்லை. இங்கே ரிலீஸ் ஆகியும் தியேட்டருக்குப் போகவில்லை. இளையராஜா-கௌதம் எனும் பொருந்தாக் கூட்டணியும் ஒரு காரணம்.

    ReplyDelete
  6. அசத்தலா எழுதியிருக்கீங்க ஜீ...

    இன்னும் கிராமங்களில் மூக்குத்தி போடுவது தொடர்கிறது ஜீ..

    ReplyDelete