Thursday, April 21, 2011

பிரபஞ்சத் தளபதி ஜீ..! (பெயர்க்காரணம் -தொடர்பதிவு)


கண்களைத் திறக்க முயன்று... முடியவில்லை..மெதுவாக மிக மெதுவாக..!
பேரொலியுடன் மின்னல் வெட்டி, வானம் கிழிந்து திடீரெனப் பொழியும் பெருமழை! முன்னாள் ஒரு ஜோடிக்கால்கள்.... விழிகள் விடிய ஒன்று, இரண்டு, நான்கு பத்தாகிப் பலவாகி...! மெல்லத் தரையில் கையூன்றி, அண்ணாந்து வான்பார்த்து எழமுயல... சூழ்ந்த மக்கட்கடலின் குரலொலி அலையென ஆர்ப்பரிக்கிறது 'ஜீ...! ஜீ...!! ஜீ...!!!'

ஒக்கே கட் கட்! இத்தோட நிறுத்திக்குவம்!

என்ன பாக்கிறீங்க? புரியலையா? எனக்கு அப்பிடி ஜீ...ன்னு பேர் வந்ததுன்....
ஏய் ஏய் ஏய்! நோ பேட் வேட்ஸ்! அமைதியா இருக்கணும் கொந்தளிக்கப்படாது!

அது பாத்தீங்கன்னா ஆக்சுவலா மக்களா எனக்கு விரும்பக் கொடுத்....
டாய்..! அழப்படாது! அசிங்கமா இல்ல? ? என்ன சின்னப்புள்ளத்தனமா இருக்கு?

எப்பவுமே நாலு பேருக்கு நல்லது...

யாரப்பா கல்லைத்தூக்குறது? வேணாம். பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்! 
கல்லைத் தூக்கினவங்க எல்லாம் கீழ போடுங்க....!

நான் சொல்றத கேட்டுட்டு அப்புறம் எல்லாரும் கல்லோட தானைத் தலைவன், பதிவுலக விடிவெள்ளி எனது அருமை அண்ணன் செங்கோவியப் போய்ப்பாருங்க! (நா இல்லீங்க எல்லாம் அவருதான்!)

அண்ணன்தாங்க சும்மாருந்த என்னை தொடர்பதிவுக்கு கூப்புட்டாருங்க!

இப்ப ஒரு பிளாஷ் பேக்! (எல்லாரும் மேல பாருங்க!)

முதல்ல என்னை ஜீன்னு நண்பன் எபி தான் கூப்டுட்டு இருந்தான். ஏன்னு தெரியல ஒரு மருவாதை (சான்சே இல்ல!..ஒருவேளை அப்பிடித்தானோன்னு ஒரு நப்பாசை?) 
அப்புறம் தமிழ்ப்படங்கள்ல தாதாவை, ரௌடிங்க, கேடிங்க தலைவனை அப்பிடி கூப்டுறத பாத்ததும்தான் புரிஞ்சுது! (நண்பேன்டா!)

கொஞ்சம் கொஞ்சமா அந்தப் பேர் நண்பர்சிட்ட பரவி, அதாவது நம்ம ஏரியால உள்ளவர்களிடம்.மற்றவர்களுக்கு தெரியாது நம்ம மறுபக்கம்! (எப்பூடி பில்டப்பு? பில்டப் புயல் எஸ்.ஏ.சி. எல்லாம் கிட்ட நெருங்க முடியுமா? ) 

ஒருடைம்ல (அது என் போதாத காலம்! கொழும்பிலருந்து யாழ் போய் சிக்கி சீரழிஞ்சு..வேணாம் அந்தக்கதை சொன்னா தாங்கமாட்டீங்க!) பாத்தீங்கன்னா எங்கவீட்டுப்பக்கம் என்னோட ஒரிஜினல் பேர் தெரியாம ஜீ என்றால்தான் தெரியும். ஆனா நம்ம வீட்டில தெரியாது! 

ஒருநாள் எங்க பக்கத்து வீட்டு ஆன்டி ரோட்ல என்னப்பாத்து ஜீன்னு கூப்புட்டுக் கதைக்க அந்தநேரம் பாத்து அந்தப்பக்கமா வந்த அப்பா என்னை ஒரு மாதிரியா ஆச்சரியமா பாத்தார்! (அது ஆச்சரியமா இல்லை வழக்கம்போல அப்பாக்கள் மகனைப்பார்க்கும்....சரி விடுங்க பாஸ் இதெல்லாம் நமக்குப் புதுசா?) 

அப்புறம் தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு நானும் என்னால முடிஞ்ச்ச்ச்ச அளவுக்கு ஏதாவது பண்ணிடணும்னு முடிவுபண்ணி பதிவுலகத்துக்கு வந்தப்போ பெயர் வைக்கிறதுல சின்ன குழப்பம்!

அதுல பாருங்க நான் ரொம்ப நல்லவனா இருக்கிறதால (அப்பாடா சொல்லிட்டோம்ல...அட நம்புங்கப்பா!) உண்மைய எல்லாம் எழுதிடுவேன்கிறதால ஒரு பாதுகாப்பான பேர் தேவைப்பட, நம்ம ஒரிஜினல் பேரையும் சேர்த்து உமாஜீ ன்னு யோசிச்சு, அப்புறம் அதவிட ஜீ நல்லாருக்கோன்னு எனக்குத் தோணிச்சு! (உங்களுக்கு கேவலமாத் தோணினா அத அண்ணனிடம் சொல்லவும்!)

அப்பிடியே காமெராவைப் Pan பண்ணிக் கீழே கொண்டுவாங்க...

இதுதாங்க நடந்தது!

ஆனா ஒண்ணு ஒரு வரலாற்றுப் பதிவ எழுத வைச்ச, வாய்ப்புக்கொடுத்த அண்ணனுக்கு நான் நன்றி சொல்லியே ஆகணும் என்ன இருந்தாலும் வரலாறு முக்கியம் இல்லையா? 

அப்புறம் என்ன நண்பர்ஸ்...அப்பிடியே அண்ணனைப் போய்ப் பாருங்க முக்கியமான விஷயம்..... கல்லை மறந்துடாதிங்க!  

   




30 comments:

  1. //இப்ப ஒரு பிளாஷ் பேக்! (எல்லாரும் மேல பாருங்க!)//

    என்ன கல்லு வந்துரும்னு பயமா....

    ReplyDelete
  2. அடங்கொன்னியா........!

    ReplyDelete
  3. எப்படி இப்படியெல்லாம்...

    ReplyDelete
  4. சூழ்ந்த மக்கட்கடலின் குரலொலி அலையென ஆர்ப்பரிக்கிறது 'ஜீ...! ஜீ...!! ஜீ...!!!'//

    என்ன சந்தோசமான கனவோ!

    ஹி..ஹி...

    ReplyDelete
  5. உங்க நண்பி, மற்றும் பக்கத்து வீட்டு ஆண்டியின் உபயமா இந்தப் பெயரு.. ஹி...ஹி...

    ReplyDelete
  6. சுவாரசியமாய் எழுதியிருக்கிறீர்கள் சகோ. கல்லு கைவசம் இருக்கு. ஆனால் அதனை எப்படி எறிவதென்று தான் தெரியவில்லை.

    ReplyDelete
  7. பிரான்ச தளபதி ஜீ வாழ்க...

    ReplyDelete
  8. //சூழ்ந்த மக்கட்கடலின் குரலொலி அலையென ஆர்ப்பரிக்கிறது 'ஜீ...! ஜீ...!! ஜீ...!!!'//

    :)))

    ReplyDelete
  9. ஆனா ஒண்ணு ஒரு வரலாற்றுப் பதிவ எழுத வைச்ச, வாய்ப்புக்கொடுத்த அண்ணனுக்கு நான் நன்றி சொல்லியே ஆகணும் என்ன இருந்தாலும் வரலாறு முக்கியம் இல்லையா? //
    தன்னம்பிக்கை ஜொலிக்குது.

    ReplyDelete
  10. ஒக்கே கட் கட்! இத்தோட நிறுத்திக்குவம்!
    //
    செம கலக்கல் ஒப்நிங்கா இருக்கே

    ReplyDelete
  11. தலைப்பிலயே அசத்திட்டீங்க பாஸ்

    ReplyDelete
  12. (அது என் போதாத காலம்! கொழும்பிலருந்து யாழ் போய் சிக்கி சீரழிஞ்சு..வேணாம் அந்தக்கதை சொன்னா தாங்கமாட்டீங்க!)//
    எவ்வளவோ கேட்டுட்டோம் இதை கேட்கமாட்டமா

    ReplyDelete
  13. ஒருநாள் எங்க பக்கத்து வீட்டு ஆன்டி ரோட்ல என்னப்பாத்து ஜீன்னு கூப்புட்டுக் கதைக்க அந்தநேரம் பாத்து அந்தப்பக்கமா வந்த அப்பா என்னை ஒரு மாதிரியா ஆச்சரியமா பாத்தார்!//
    ஆரம்பத்துலியே கதை முடிச்சிட்டாரே

    ReplyDelete
  14. 7கதாநாயகியா அடேயப்பா தலைவருக்கு மச்சம்தான்

    ReplyDelete
  15. ஸ்டில் கூட இன்னும் விடமாட்டேன்கிராணுக...

    ReplyDelete
  16. ஒ....இதுதான் வாழும் வரலாறே..ங்கறதுக்கு அர்த்தமா....! :-))

    ReplyDelete
  17. ஜீ.ஓ.கே.சார்..

    ReplyDelete
  18. Thalapathi Vaazhka :)

    ReplyDelete
  19. அப்புறம் என்ன நண்பர்ஸ்...அப்பிடியே அண்ணனைப் போய்ப் பாருங்க முக்கியமான விஷயம்..... கல்லை மறந்துடாதிங்க!



    ......"நல்ல" தம்பி! :-))))))

    ReplyDelete
  20. அந்த யாழ் போய் கேட்ட வரலாற்றை தனி பதிவா போடுங்க பாஸ் ஹிஹிஹி

    ReplyDelete
  21. இப்போ தான் வர முடிஞ்சது!

    ReplyDelete
  22. //சூழ்ந்த மக்கட்கடலின் குரலொலி அலையென ஆர்ப்பரிக்கிறது 'ஜீ...! ஜீ...!! ஜீ//.......சூப்பர்..கலக்கிட்டீங்க!

    ReplyDelete
  23. // ஜீன்னு கூப்புட்டுக் கதைக்க அந்தநேரம் பாத்து அந்தப்பக்கமா வந்த அப்பா // நொந்திருப்பாரு..

    ReplyDelete
  24. //ஒரு வரலாற்றுப் பதிவ எழுத வைச்ச, வாய்ப்புக்கொடுத்த அண்ணனுக்கு நான் நன்றி சொல்லியே ஆகணும் // எப்படியோ, உங்க வரலாறுல இனி என் பேரும் இடம்பெறும்!

    ReplyDelete
  25. அப்புறம் என்ன நண்பர்ஸ்...அப்பிடியே அண்ணனைப் போய்ப் பாருங்க முக்கியமான விஷயம்..... கல்லை மறந்துடாதிங்க!

    அண்ணன இப்படியா மாட்டி விடுறது.. நல்ல தம்பி.1;)))

    ReplyDelete
  26. எல்லாரையும் உசுப்பேத்தி உசுப்பேத்தியே ரணகளப்படுத்தும் செங்கோவிக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்படுகிறது. அதை இவர் ஏக காலத்தில் 'அனுபவிக்க' வேண்டும்.

    ReplyDelete
  27. உங்களை மாதிரி நல்ல தம்பியை நான் பார்த்ததே இல்லை ஹி ஹி

    ReplyDelete
  28. கடவுளே காப்பாத்து!!

    ReplyDelete