Monday, April 25, 2011

அன்னாரின் பரமாத்மா சாந்தியடையட்டும்! - நம்மவர்


சாய்பாபாவின் திடீர்மறைவு பலரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கும். அன்னாரின் ஆத்மா (பரமாத்மா?) சாந்தியடைய எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டிக்கொள்கிறேன்!

அதென்ன திடீர் மறைவு எல்லாருக்குமே இறப்பு எதிர்பாராமல்தான் நிகழுமென்றாலும், முக்காலமும் உணர்ந்த பகவான் தன்னுடைய ஜாதகம் குறித்து உணர்ந்து கூறியது பொய்த்துப் போனது அவரை ஒரு மனிதனாக மட்டுமே பார்த்த எனக்கே கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது என்றால் நம்பிக்கையுடன் கும்பிட்டவர்களுக்கு எவ்வளவு அதிர்ச்சியா இருக்கும்?

புத்தன் ,யேசு, அல்லா, விஷ்ணுவின் தற்காலத்திய பிரதிநிதி, தொடர்பாளராக அறிவித்துக் கொண்ட, அற்புதங்கள் நிகழ்த்திய பகவான் அவசரமாக பத்துவருடங்கள் முன்னதாகவே தனது அவதாரத்தை முடித்துக் கொண்டது நிச்சயம் அவரது பக்தர்களுக்கு ஏற்றுக்கொள்ளமுடியாத துயரம்தான்.

மனிதாபிமான அடிப்படையில் ஒரு நல்லமனிதனாக அவர் செய்த நல்ல காரியங்களை எந்த ஒரு பக்தனோ கூறி நான் கேட்டதில்லை. மாறாக ஒரு தேர்ந்த தந்திரக்காரராக அவர் செய்த வித்தைகளின் அடிப்படியில் அவரைக் கடவுளென்று நிறுவ முயன்றதே பலருக்கு அவர்பால் சம்பந்தமே இல்லாமல் ஒரு எரிச்சலுணர்வை ஏற்படுத்தி இருக்கும்.

பேச்சுக்கொருதரம் 'பகவான் என்ன சொல்லியிருக்கிறார் என்றால்' என்றே ஆரம்பித்து எதிரிலிருப்பவனை உள்ளூர அழவைத்தும், அதுக்கும் மேலேயும் போய், பகவான் சொன்ன நீதிக்கதைகள், குட்டிக்கதைகள் கூறிக் கடுப்படித்தும் வந்த, விரும்பி மூளைச்சலவை செய்துகொண்ட பக்தர்கள்!

எனது அனுபவத்தில் யாழ்ப்பாணத்தில் நான் சந்தித்த பக்தர்களில் பெரும்பான்மையானோரை இலகுவாக வகைப்படுத்திவிட முடியும்! 

வேறு பொழுதுபோக்குகள் இல்லாதவர்கள், புதுசு புதுசாக யாரையாவது கண்டறிந்து கும்பிடத் துடிக்கும் வித்தியாசமான தேடல்(?) மிக்கவர்கள், வாழ்க்கைக்கான பொருளாதாரக் கவலைகள் ஏதுமற்றவர்கள், ஏதாவது ஒரு விஷயத்தைத் தேடிப்பிடித்துக் கவலைப் படுபவர்கள், ஏதோ தனக்கு மருத்துவர்காளால் கண்டறியப்படாத வியாதி இருப்பதாகத் தாங்களாகவே  நினைத்து மற்றவர்களிடம் புலம்பிக் கொள்பவர்கள், கொலஸ்ட்ரோல், சுகர் பிரச்சினைகளுக்காக உணவுக்கட்டுப்பாட்டை பின்பற்ற விரும்பாதவர்கள், உடலை வளைத்து பயிற்சி செய்ய விரும்பாதவர்கள், அமைதியாக வாய்மூடி மௌனித்திருக்க முடியாதவர்கள், கண்மூடி கால்மணிநேரம் தியானம் செய்ய விரும்பாதவர்கள்.

இவர்களுக்கிடையான முக்கியமான  ஒரே பொது இயல்பு - தமிழர்களின் பிரத்தியேக சிறப்பம்சமான நல்ல வாசிப்புப் பழக்கமே இல்லாதவர்கள்! 

தங்கள் எல்லா உபாதைகளையும் பஜனை பாடியே தீர்த்துக் கொள்ளமுடியும் என நம்பிய இந்த அப்பாவி ஆத்துமாக்களுக்கு யார் ஆறுதல் சொல்வது?

இன்னொரு பாபா வருவர் என்றார்களே, அவர் ரெடியாகிட்டாரா?

அதுவரை எல்லாம் வல்ல(?!) அம்மா பகவானை வேண்டிக்கொள்வோம்! (இப்போ அவங்கதான் யாழ்ப்பாணத்தில் பிரபலமாம்!)

இந்துக்களில்,மிகுந்த பக்தியுணர்வு கொண்டவர்களே மிகப்பெரிய நாத்திகவாதிகளாகவும் இருக்கிறார்கள் - அவர்கள் தான் கடவுளை நம்பாமல் மனிதனைக் கடவுளாக்கி வணங்குகிறார்கள்! 

25 comments:

 1. //அதுவரை எல்லாம் வல்ல(?!) அம்மா பகவானை வேண்டிக்கொள்வோம்! (இப்போ அவங்கதான் பிரபலமாம்!)//
  Hahhhaa :)

  ReplyDelete
 2. சாந்தியடைய எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டிக்கொள்கிறேன்!

  ReplyDelete
 3. கடவுளுக்கே சாவா? ஹா.....ஹா...... நம்ப முடியலையே!!

  ReplyDelete
 4. Wow..Fentastic Post jee..Particularly i like these lines.."
  //வேறு பொழுதுபோக்குகள் இல்லாதவர்கள், புதுசு புதுசாக யாரையாவது கண்டறிந்து கும்பிடத் துடிக்கும் வித்தியாசமான தேடல்(?) மிக்கவர்கள், வாழ்க்கைக்கான பொருளாதாரக் கவலைகள் ஏதுமற்றவர்கள், ஏதாவது ஒரு விஷயத்தைத் தேடிப்பிடித்துக் கவலைப் படுபவர்கள், ஏதோ தனக்கு மருத்துவர்காளால் கண்டறியப்படாத வியாதி இருப்பதாகத் தாங்களாகவே நினைத்து மற்றவர்களிடம் புலம்பிக் கொள்பவர்கள், கொலஸ்ட்ரோல், சுகர் பிரச்சினைகளுக்காக உணவுக்கட்டுப்பாட்டை பின்பற்ற விரும்பாதவர்கள், உடலை வளைத்து பயிற்சி செய்ய விரும்பாதவர்கள், அமைதியாக வாய்மூடி மௌனித்திருக்க முடியாதவர்கள், கண்மூடி கால்மணிநேரம் தியானம் செய்ய விரும்பாதவர்கள்.

  இவர்களுக்கிடையான முக்கியமான ஒரே பொது இயல்பு - தமிழர்களின் பிரத்தியேக சிறப்பம்சமான நல்ல வாசிப்புப் பழக்கமே இல்லாதவர்கள்! //

  ReplyDelete
 5. என்னத்தை சொல்ல போங்க...

  ReplyDelete
 6. அவரிடம் கடவுள் அருள் இருந்ததா இல்லயா தெரிய வில்லை...

  அவரின் சமுக சேவைக்கு நான் ரசிகன்..
  கிருஷ்ணா நதி சென்னை வர அவர் 300 கோடி செலவு செய்தார்..
  அது நம் ஊருப்பக்கம்தான் சென்னை வருது..

  ReplyDelete
 7. அவரின் சமூக சேவைகள் பலரை பயனடைய செய்யும்.

  ReplyDelete
 8. இறுதி வரிகள் புதுசு ஜீ.நன்று

  ReplyDelete
 9. (பரமாத்மா?) சாந்தியடைய எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டிக்கொள்கிறேன்!
  இறைவன் இறந்துவிட்டார்!!

  ReplyDelete
 10. அப்பக்கூட...... சாந்தி......... அடையட்டும் என்குறீங்க... சாமியார்கள் எப்பொழும் எங்கு போனாலும் பெண்கள் சகவாசம் விடாது போல.....

  ReplyDelete
 11. தங்கள் எல்லா உபாதைகளையும் பஜனை பாடியே தீர்த்துக் கொள்ளமுடியும் என நம்பிய இந்த அப்பாவி ஆத்துமாக்களுக்கு யார் ஆறுதல் சொல்வது? THIS LINE ABSOLUTELY FANTASTIC.

  ReplyDelete
 12. கடைசி டிஸ்கி நச்...மக்கள் நல்லவரை விட மேஜிக் மேனையே விரும்புகிறார்கள் இல்லையா ஜீ?

  ReplyDelete
 13. யோவ் மாப்ள என்னைப்பொறுத்தவரை அவர் பேருல நடந்து வந்த பல நல்ல விஷயங்களால பல ஏழை மாணவர்கள் இன்னைக்கு நல்ல நிலையில் இருக்காங்க...நாம அத நெனச்சி சந்தோஷப்படுவோமே!

  ReplyDelete
 14. கனடாத் தமிழர்கள் பலர் சத்ய சாய் பக்தர்கள் ----- அதனால் இங்கு சத்ய சாய் பாபாவுக்கு இரங்கல் தெரிவிக்கும் அரசியல் வாதிக்குத் தான் அவர்கள் வோட்டுப் போடுவோம் என அறிவித்துவிட்டார்கள். அதுமட்டுமில்லாமல் அம்மா பகவானுக்கு கனடா டயமண்ட் விருதுக் கொடுக்கனுமாம் ! என்னக் கொடுமை சார்

  ReplyDelete
 15. வேறு பொழுதுபோக்குகள் இல்லாதவர்கள், புதுசு புதுசாக யாரையாவது கண்டறிந்து கும்பிடத் துடிக்கும் வித்தியாசமான தேடல்(?) மிக்கவர்கள், வாழ்க்கைக்கான பொருளாதாரக் கவலைகள் ஏதுமற்றவர்கள், ஏதாவது ஒரு விஷயத்தைத் தேடிப்பிடித்துக் கவலைப் படுபவர்கள்,//
  super poinds

  ReplyDelete
 16. நானும் சொல்றேன்...மனோ பாஸ் ..,அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டாரு

  ReplyDelete
 17. அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும் ...................
  ஓட்டுக்காக தலைவர்கள் கூட நாத்திகம் துறக்கும் பொது நமக்கென்ன வந்தது ............

  ReplyDelete
 18. ம்...உண்மையான பதிவு.அவர் தான் 96 வயதில்தான் இறப்பேன் என்றாரம்.
  அதுதான் அவர் பக்தர்கள் இன்னும் அவர் வாழ்வார் என்று எதிர் பார்த்தார்களாம்.சாமியோ என்னவோ தெரியேல்ல.உதவிகள் செய்திருக்கிறார்போல.நல்ல மனிதராக வாழ்ந்திருக்கிறார்.ஆத்ம சாந்திக்குப் பிரார்த்திப்போம் !

  ReplyDelete
 19. >>அன்னாரின் ஆத்மா (பரமாத்மா?) சாந்தியடைய எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டிக்கொள்கிறேன்!

  hi hi ஹி ஹி

  ReplyDelete
 20. எனக்கும் இதெல்லாம் நம்பிக்கையில்லை. ஆனாலும் மற்ற நண்பர்களுக்காக‌ அன்னாரின் ஆத்மா (பரமாத்மா?) சாந்தியடைய எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டிக்கொள்கிறேன்!

  ReplyDelete
 21. //ஏதாவது ஒரு விஷயத்தைத் தேடிப்பிடித்துக் கவலைப் படுபவர்கள், ஏதோ தனக்கு மருத்துவர்காளால் கண்டறியப்படாத வியாதி இருப்பதாகத் தாங்களாகவே நினைத்து மற்றவர்களிடம் புலம்பிக் கொள்பவர்கள், //


  இந்த வரிகள் ரொம்பவே ரசிக்கும்படியாவும் , உண்மையாவும் இருக்குங்க. உண்மைலேயே நிறைய பேர் இப்படித்தான். அடுத்தவனுக்கு அவ்ளோ பிரச்சினை இருக்கு , நமக்கு ஒண்ணு கூட இல்லையேனு இல்லாத பிரசிணையத் தேடித் பிடிச்சு அதுக்காக வருத்தப்படுவாங்க. உண்மைலேயே ரொம்ப சிரமம்தாங்க :-))

  ReplyDelete
 22. நான் பதிவுக்கு லேட் சகோ,

  ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுவோர் இருப்பார்கள் என்பது போல,
  மக்களிடத்திலும், எம் சமூகத்திலும் இந்த நம்பிக்கைகள் இருக்கும் வரை, இப்படிப் பல சாயி பாபாக்கள் புதிதாக உருவாகிக் கொண்டே இருப்பார்கள்.

  ReplyDelete
 23. //இந்துக்களில்,மிகுந்த பக்தியுணர்வு கொண்டவர்களே மிகப்பெரிய நாத்திகவாதிகளாகவும் இருக்கிறார்கள் - அவர்கள் தான் கடவுளை நம்பாமல் மனிதனைக் கடவுளாக்கி வணங்குகிறார்கள்! //

  nice lines

  ReplyDelete

Followers

Blog Archive

Powered by Blogger.

Archives

Copyright © வானம் தாண்டிய சிறகுகள்.. |