Friday, October 8, 2010

எந்திரனில் சுஜாதா?

'எந்திரன் படம் அமரர் சுஜாதாவிற்கு சமர்ப்பிக்கப் பட்டிருக்கலாம்'

'ஆகக் குறைந்தது 'டைட்டில்' போடும்போது அவரது படத்தைப் போட்டு அஞ்சலி செலுத்தப்பட்டிருக்கும்'

இப்படியெல்லாம் எந்திரன் அறிவிக்கப்பட்டபோதே எதிர்பார்த்தேன், வரும்வரை. (அதெல்லாம் அவரது பங்களிப்புகளுக்கு போதாது என்பது வேறு விஷயம்)
அப்படி எதுவும் நடக்கவில்லையாம்.

அதனாலேயே எனக்கும் படம் பார்க்கும் ஆவல் போய்விட்டது. இன்னும் பார்க்கவில்லை.
ஷங்கருமா இப்படி?...சுஜாதா சார் எனக்கு அப்பா மாதிரி..எந்த நேரத்திலையும் எனக்கு எந்தப்பிரச்சினைக்கும் தீர்வு சொல்வார்..இப்படி எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். இறுதியாக இரங்கல் கூட்டத்திலும் கூட.

யாரைத்தான் நம்புறதோ?
அதைவிடக் கொடுமை...
வசனம் -  சுஜாதா-ஷங்கர்-கார்க்கி
அதிலயும் பங்கு போட்டாச்சா?
அப்போ நிறைய சொதப்பல் வசனங்கள் இருக்குமோ?

எந்திரன் ஹாலிவுட் ஐத் தாண்டிவிட்டது! மிஞ்சி விட்டது!
ஹாலிவுட் க்கே சவால்! தமிழர் பெருமையை உலகுக்கு எடுத்துக் காட்டிவிட்டது!
தமிழன் சாதித்து விட்டான்! தலை நிமிர்ந்து விட்டான்!

-என்றெல்லாம் ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறார்கள்! கத்துகிறார்கள்! கூவுகிறார்கள்! கதறுகிறார்கள்! புளகாங்கிதம் அடைகிறார்கள்! ஆனந்தக் கூத்தாடுகிறார்கள்!
அவர்களுக்காக...

எந்திரனின் கிராபிக்ஸ்,அனிமேஷன் துறைகளைகளில் பணியாற்றியது,
ஹாலிவுட் இன் முன்னணி நிறுவனமான Stan Winston Studio. 

இவர்கள் பணியாற்றிய படங்கள் சில,
Avatar, Batman returns,Terminator I & II, Aliens, Predator, Jurassic Park

பணத்தைக் கொட்டிக்கொடுத்தால், நம்ம ஊர் சிங்களப் படங்களைக் கூட ஹாலிவுட் படம் மாதிரி எடுக்கலாம். கதை? பார்த்துவிட்டு எழுதுவேன்.

ஒரு ஹாலிவுட் நிறுவனம் கிராபிக்ஸ் செய்தா..அது ஹாலிவுட் படம் மாதிரிஇல்லாம? இராம.நாராயணன் படம் மாதிரியா இருக்கும்?
     

10 comments:

  1. சுஜாதா இல்லாதது படத்தைப் பார்த்தால் தெரிகிறது. நல்லவேளை அவருக்கு சமர்ப்பணம் செய்யவில்லை இந்தப் படத்தை

    ReplyDelete
  2. சரியாக சொன்னீர்கள் .. ஒரு இயந்திரத்தை அவமானப்படுத்திய படம் .. சுஜாதா எனும் மாமனிதரையும் சேர்த்து :

    ReplyDelete
  3. சுஜாதா அவர்களின் புகழ் என்றென்றும் மறையாது!

    ReplyDelete
  4. எந்திரன் படத்தின் கதை அமரர் சுஜாதா எழுதியவற்றை தழுவியது,திரைக்கதை கூட அவர் அமைத்தது தானாம்.ஆனால் கதை,திரைக்கதை,இயக்கம் - சங்கர் எனத்தான் டைட்டிலில் போடுகிறார்கள்.

    ReplyDelete
  5. @பின்னோக்கி
    @S.Sudharshan
    @M.S.E.R.K.
    @எஸ்.கே
    @அருண்
    நன்றி! உங்கள் வருகைக்கும், கருத்துக்குகளுக்கும்! :)

    ReplyDelete
  6. 150 கோடியை விழுங்கியதே அந்த ஹொலிவூட் நிறுவனம்தான். மற்றப்படி இந்தப்படத்தில் அந்தளவு செலவுசெய்ய வேண்டிய தேவை இல்லை. இந்தப்பணத்திற்கு வளரும் திறமையுள்ள இயக்குனர்கள் கதாசரியர்களை வைத்து 50 தரமான படங்கள் எடுத்திருந்தால் அதிலாவது 200கோடி லாபம் கிடைத்திருக்கும். இதை சங்கரின் மற்றப்படங்கள் போல் இரண்டாம் முறை பார்பதற்கு தூண்டவில்லை. சண்பிக்சர்ஸ்ஸிற்கு கோவிந்தா கோவிந்தாதான் போல!!!

    ReplyDelete
  7. @மாதேவி
    @Tharshan
    நன்றி! உங்கள் வருகைக்கும், கருத்துக்குகளுக்கும்! :)

    ReplyDelete
  8. சகோதரா எனக்கும் இந்த அழுத்தம் இருக்கிறது...
    ஃஃஃஃஃஃபணத்தைக் கொட்டிக்கொடுத்தால், நம்ம ஊர் சிங்களப் படங்களைக் கூட ஹாலிவுட் படம் மாதிரி எடுக்கலாம். கதை? பார்த்துவிட்டு எழுதுவேன்.ஃஃஃஃஃ
    ஆனால் சிங்களப் படத்தை தயாரிப்பவர் விரும்ப மாட்டார் என நினைக்கிறேன்.. அப்படங்கள் ஈரானியப் படங்கள் போல் மிகவும் இயற்கையோடு ஒன்றியவை (செயற்கைத் தனம் மிக மிகக் கறைவு)

    ReplyDelete