Friday, October 29, 2010

எந்திரன்

08 -10 -2010 வெள்ளி இரவு மணி 10.00௦௦
சவோய் சினிமா.  நல்ல கூட்டம். 


வழமையாக ஆங்கில மற்றும் படு மொக்கையான ஹிந்தி, சிங்களப் படங்கள் மட்டுமே திரையிடுவார்கள். 


இலங்கையிலேயே வசதியான இருக்கைகள், சிறந்த ஒலி, திரையமைப்புக் கொண்ட திரையரங்கு. 
இலேசான மழையையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசை. 
குடும்பமாக, நிறையப் பெண்களும். சகோதர மொழி பேசுபவர்களும் பலர் இருந்தார்கள்.
இப்போ நாங்களும்.


முக்கால்வாசி அரங்கு நிறைந்திருந்தது.
படம் ஆரம்பித்தபோது ஒன்றிரண்டு விசில் சத்தங்கள் மட்டுமே!


கதை?

Artificial Intelligence கொண்ட ரோபோ ஒன்று கெட்டவன் கையில் சிக்க, என்னவாகிறது?
மேலோட்டாமாக இப்படித்தான் தோன்றும். இப்படித்தான் சொல்லப் படுகிறது.


ஆனா கொஞ்சம் உட்ட்கார்ந்து யோசிச்சவாறே (!?)  பார்த்தா,


Artificial Intelligence கொண்ட ரோபோவுக்கு ஒரு பெண்ணின் மேல் காதல் வர, என்னவாகிறது?


ஆக, என்னதான் ஹாலிவுட் ல கிராபிக்ஸ் செய்தா என்ன...சுஜாதா எவ்வளவுதான் யோசிச்சு எழுதினா என்ன...நாங்கள் காதலையும், காதல் தோல்வியையும் தாண்டி யோசிக்க மாட்டோம்.


ஆனா வழமையான ரஜினி படங்களின்போது ஏற்படும் தாத்தா பேத்தியுடன் ஆடுவதுபோன்ற எண்ணங்கள் ஏற்படவில்லை. அவர் ஒரு விஞ்ஞானியாக இருப்பதால், வயது தோற்றம் எல்லாம் ஒக்கே.


ஒரு விஞ்ஞானியை கல்லூரி மாணவி லவ் பண்ணலாம் தப்பே இல்லை. ஆனா கொடுமையைப் பாருங்க கல்லூரி மாணவியாக ஒரு ஆன்டி (ஐஸ்).


ஐஸ் இன்னொரு ரோபோ போலவே வருகிறார். அனாவசியமாக நெளிந்து நெளிந்து நடக்கிறார். வளைந்து ஆடுகிறார். முழுக்க முழுக்க செயற்கைத்தனமாக இருக்கிறார்.
'காதல்ரத்து' செய்யப்போவதாகக் கூறும்போது அவரது முகபாவம்,...'தம்பி டீ இன்னும் வரல!'


'காதல் அணுக்கள்' பாடல் விஷூவலாக பார்த்ததுமே பிடித்துக் கொண்டது. பின்னணி இசை படு சொதப்பலாக, பிற்பாதியில் இரைச்சல், எரிச்சல். 


ஒரு விஞ்ஞானியின் அசிஸ்டெண்டுகளாக அறிவு முதிராத சந்தானமும், கருணாசும்....முடியல!


படுமொக்கையான வில்லன் விஞ்ஞானி. ஒரு மாசம் டைம் கொடுங்க ரோபோவை செய்து, பார்சல் கட்டித் (!?) தர்றேன்னு சொல்றார்!...என்ன கொடுமை சார்!


வில்லன் ரோபோ அசத்தல். ஏனோ எனக்கு மூன்று முகம் 'அலெக்ஸ் பாண்டியன்' ஞாபகம் வந்திச்சு.


ரஜினி தவிர யாராலும் நடிக்க முடியாது மீறி நடித்தால் ஊத்தியிருக்கும். நல்லவேளை அஜித் நடித்திருந்தால்..? அதுவும்  ஆடு மாதிரி கத்துற அந்த சீன்?


நாட்டின் பாதுகாப்பிற்காக ஒரு ரோபோவை உருவாக்கும் விஞ்ஞானி...தனது காதலிக்குப் பொழுது போகவில்லை என்பதற்காக அவளுடன் அனுப்பி வைக்கிறார். 


இது போல் சிந்திக்க ஒரு தமிழனால் மட்டுமே முடியும். பெருமையா இருந்திச்சு.


வசனம் - சுஜாதா, ஷங்கர் குழுவினர்
வழமையான ஷங்கர் படங்கள் போல் வசனங்களில் சுஜாதாவின் 'டச்' தெரியவில்லை. அப்போ டைட்டில்ல மட்டும்தான் சுஜாதாவா?
அவர் எழுதிய கதை, திரைக்கதை  இதுதானா?
அவர் பெயரை டைட்டில்ல போடாமலே விட்டிருக்கலாமோ?


இன்னொரு புதுமை, ஹீரோ சண்டைபிடிக்கும்போது, பஞ்ச டயலாக் பேசும்போது, ஆடும்போது விசிலடித்து காதுகளைப் பதம் பார்க்கும் ரசிக்கக் கண்மணிகள் கிராபிக்ஸ், விறுவிறுப்பு காரணமாக அதையெல்லாம் மறந்து, பேஸ்த்தடித்தும், என்ன நடக்குதென்றே தெரியாமல் பேந்தப் பேந்த விழித்தவாறும் இருந்தார்கள்.. 


இது சூப்பரா இருந்திச்சு!              

4 comments:

  1. பார்வை நல்லாயிருக்க.... சங்கர் சுஜாதா விசயத்தில் ஏதோ குறை விட்டது போல ஒரு உணர்வு.. தமிழில் அவர் விஞ்ஞான கதைகளுக்கு ஒரு முன்னோடி...

    ReplyDelete
  2. என்ன பாஸ் அப்படி சொல்ட்டிங்க ..மஸ்தா கீது. எப்படி சொல்றேன்னா எந்திரன்ல வந்திருக்கிற பல வசனங்களை சுஜாதா எழுத்துக்கள்ள ஏற்கெனவே படிச்சிருக்கேன்

    ReplyDelete
  3. நன்றி உங்கள் வருகைக்கு சித்தூர்.எஸ்.முருகேசன்!
    அதேதான் பாஸ்! நாங்க வாசிச்சிருக்கிறோம். ஆனா இந்தியன், முதல்வன், அந்நியன் போன்ற டச் இல்லை. அதான் ஷங்கர் குழுவினரின் கைங்கர்யமோ!

    ReplyDelete
  4. ஆனா கொடுமையைப் பாருங்க கல்லூரி மாணவியாக ஒரு ஆன்டி (ஐஸ்)....

    உங்கள் விமர்சனத்தை ரசித்தேன்.

    ReplyDelete