Tuesday, December 6, 2011

விஜயின் துப்பாக்கி, மயக்கம் என்ன? - பஸ்ல உட்கார்ந்து யோசிச்சது!
பேரூந்தில்.... 
கடந்த ஞாயிறு நம்ம இருக்கைல உட்காரும்போது எனக்கு பக்கத்தில யன்னலோரமா ஒரு அங்கிள்! பார்க்க டீசண்டா இருந்தார். ஆனா கொஞ்சம் நம்ம பக்கம் திரும்பின மாதிரியே உட்கார்ந்திருந்தாரா? என்னடா ஏன் இப்பிடி இருக்கார்னு அந்தப்பக்கம் திரும்பினா...

அந்தப்பக்கம் நாலைந்து இளம் கன்னியாஸ்திரிகள் இருந்தாங்க! அட பயபுள்ள அவிங்களையா சைட் அடிக்குது? என்ன கொடுமை பரம பிதாவே!

ஒருவேளை அவரோட மகள் யாராவது கன்னியாஸ்திரியா போயிருக்கக் கூடுமோ? அதான் ஒரு தந்தைப் பாசத்தோட பார்த்திருப்பாரோ?- எதையும் எடுத்தவுடன் தப்பா நினைக்கக் கூடாதில்ல? எது எப்படியோ நடுவில நந்தி மாதிரி நாம எதுக்கு? அந்த யன்னலோர இருக்கையை எனக்குக் கொடுத்தா நல்லா இருக்குமேன்னு யோசிக்க, என்ன ஆச்சரியம் அவரே கேட்டார்!

அதுக்கப்புறம் நான் அவரை டிஸ்டர்ப் பண்ணல! நம்ம எல்லாரையும் டிஸ்டர்ப் பண்ண பஸ்காரங்க ஏதோ ஒரு மொக்கைப் படத்தைப் போட்டாய்ங்க. பொன்வண்ணன் வந்து தமிழ் வாத்தியார் மாதிரி திருக்குறளா சொல்லிட்டிருந்தாரு. அதிசயமா நான் ஆரம்பத்திலேயே தூங்கி, இரவு முழுவதும் நல்ல தூக்கம்! - சமீபத்தில இது ஒரு சாதனைதான்!

துப்பாக்கி
விஜய் - முருகதாஸ் இணையும்படம் 'துப்பாக்கி'யாம்!
முதல்ல 'மாலை நேர மழைத்துளி' என்று சொன்னார்கள்! நல்லதொரு பெயர்!கவிதைத்தனமா கவுதம் மேனன் ஸ்டைல்ல இருந்திச்சு! அப்புறம் ஆக்க்ஷன் படம்னதும் மாத்திட்டாங்க போல! இப்போ பேரரசு ஸ்டைல்ல பேர் வச்சுட்டாங்க! 'துப்பாக்கி'ய விட 'பீரங்கி' ன்னு வச்சிருந்தா இன்னும் மாஸ் அதிகமாயிருக்கும்னு தோணுது! நல்லபடியா மிஸ் பயராகாம சுட்டா சரி!


Push & Pull குளறுபடி!
அதென்னவோ தெரியல அப்பப்போ PushPull கன்பியூஸ் பண்ணுது!
Push - தள், Pull - இழுன்னு எல்லாருக்கும் தெரியும்! அதில ஒண்ணும் பிரச்சினை இல்லை. அலுவலகங்கள், கடைகளில் வெளியிலிருந்து உட்பக்கமாக தள்ளும்படியாகவே கதவுகள் அமைப்பது முறை! அதுவும் பிரச்சினை இல்லை.

எங்கே வில்லங்கம் ஆரம்பிக்குதுன்னா நமக்கு நல்லாப் பழகின எங்க அலுவலகத்திலேயே அவசரமா கதவைத் திறக்கும்போது கதவில Pullன்னு எழுதியிருக்கிறதைப் பார்க்கலேன்னா ஒக்கே! பார்த்துட்டோம்னா அவ்வளவுதான் நம்ம கண்ட்ரோல் இல்லாமலே யோசிக்காம Pullலைத் தள்ளிடறேன்.

ஒருவேளை நம்ம மூளை புல் - தள் ஒத்த சொற்கள் என்று உச்சரிப்பின் அடிப்படைல புரோகிறாம் பண்ணி வச்சிருக்குமோ? எதையும் யோசிக்காம கை இயல்பாகவே தள்ளிடுதோ? 

அவசரமா அக்கம்பக்கம் பார்த்து, யாராவது பாத்திருப்பாங்களோ ? பல்பு நிச்சயமாயிடுச்சான்னு யோசிக்கவேண்டியிருக்கு! நமக்கு மட்டும்தான் இந்தப்பிரச்சினையா அல்லது எல்லாருக்கும் இருக்குமா?


மயக்கம் என்ன? - பஸ்ல உட்கார்ந்து யோசிச்சது!
'மயக்கம் என்ன' பார்த்தப்போ ஒரு விஷயம் தோணிச்சு! தனுஷோட பிரண்ட முதல்ல பார்த்த உடனேயே இது ஒரு கேன! இதோட கேர்ள் பிரண்ட வேற யாராவது ஈஸியா லபக்கிடுவான்னு எல்லாருக்கும் தெரிஞ்சிடுது. போதாக்குறைக்கு அந்தப் பொண்ணே ஒரு சீன்ல அவனைப் போய் யாராவது லவ் பண்ணுவாங்களான்னு கேட்குது!


ஒரு நல்ல பர்பெக்டான பிரண்டைக்காட்டி, அவனை விட்டுட்டு தனுஷை அந்தப்பொண்ணு லவ் பண்றமாதிரி காட்டியிருந்தா, இன்னும் நல்லா, யதார்த்தமா இருந்திருக்கும்.

பர்பெக்டா இருக்கிறவனத்தானே பெண்கள் விரும்புவாங்க? அப்பிடி ஒருத்தனை விட்டுட்டு சோப்ளாங்கியா இருக்கிறவன எப்பிடி லவ் பண்ணுவாங்க? அதில லாஜிக்கே இல்லையே? இதுல என்ன யதார்த்தம்? என்றெல்லாம் யாராவது கேட்டால்,

ஸாரி பாஸ், நீங்க 'யூத்' கிடையாது! நடைமுறை வாழ்க்கையை நீங்க பார்க்கல! உங்களைச் சுத்தி என்ன நடந்திட்டிருக்குன்னு கவனிக்கல! அவ்வளவுதான் சொல்ல முடியும்!

லாஜிக்!
சினிமா பாத்துட்டு லாஜிக் இல்லைன்னு சொல்றோம்! ஆனா நம்ம வாழ்க்கைல நடக்கிற நிறைய விஷயத்துக்கு சுத்தமா எந்த லாஜிக்குமே  இருகிறதில்ல! நாங்களும் அதைக் கண்டுகொள்வதில்லை!

28 comments:

 1. மாப்ள ரொம்ப குசும்பா போச்சி...யூத் மேட்டருக்கு சொன்னேன் ஹிஹி!

  ReplyDelete
 2. நமக்கு மட்டும்தான் இந்தப்பிரச்சினையா அல்லது எல்லாருக்கும் இருக்குமா?//

  நிறையபேருக்கு இருக்கு இந்த பிரச்சனை

  ReplyDelete
 3. நிறைய தகவல்(நக்கல்)

  அனைத்திலும் வாக்களித்தேன்

  தமிழ் மணம் முதல் வாக்கு

  ReplyDelete
 4. //'துப்பாக்கி'ய விட 'பீரங்கி' ன்னு வச்சிருந்தா இன்னும் மாஸ் அதிகமாயிருக்கும்னு தோணுது! நல்லபடியா மிஸ் ஃபயராகாம சுட்டா சரி!
  //

  யாரு அந்த மிஸ் .. யப்ப பயர் ஆவாங்க?

  ReplyDelete
 5. அந்த அங்கிளுக்கு என்ன கஷ்ட காலமோ? ஏன்யா? வை திஸ் கொலை வெறி?

  ReplyDelete
 6. Push & Pull குளறுபடி எனக்கும் இருக்குத்தான்

  ReplyDelete
 7. ஜீ...!


  பேரூந்து பயணங்கள் சுவாரஸ்யமான சம்பவங்களை அடிக்கடி வழங்கக்கூடியது. ஆனால், இந்த சைட் அடிச்ச விசயம் கொஞ்சம் ஓவர்.

  துப்பாக்கி.... நோ கொமன்ட்ஸ். ஏனென்டா செங்கோவி சொன்னதை விட பெரிசா ஒன்றுமே சொல்லிட முடியாது துப்பாக்கி பற்றி!!

  Push & Pull அவ்வப்போது பல்ப் வாங்கிய அனுபவம் உண்டு. அதுவும் அவசரத்தில் தள்ளும் போது.....? ஹிஹிஹி.

  மயக்கம் என்ன..... யுத் கேள்வி கொஞ்சம் சிந்திக்க வைக்கிது.

  லொஜிக் பல தருணங்களில் எங்கள் வாழ்க்கையிலேயே இருப்பதில்லை.

  ReplyDelete
 8. ரெட்டைகுழல் துப்பாக்கி'ன்னு வச்சா இன்னும் நல்ல வரவேற்பு இருக்குமே...!!!

  ReplyDelete
 9. அட நீங்க வேற!இங்க பிரான்சில கூட இந்தப் பிரச்சின இருக்கத் தான் செய்யுது.இழுக்கிறது,தள்ளுறது தான்!"புஸ்சே","ரிரே" ன்னு போட்டிருப்பாங்க!பிரஞ்சுக்காரங்களே இழுக்க வேண்டியத இழுக்காம தள்ளிப் பாத்துட்டு,மூடியிருக்குன்னு விட்டுட்டுப் போயிடுவாங்க,ஹி!ஹி!ஹி!!!!!

  ReplyDelete
 10. பேருந்து பயணஙகள் எப்போதும் அனுபவத்தை கற்றுக்கொடுக்க கூடியது...


  நல்ல வேலை அதுல விஜயகாந்த் படம் ஏதும் போடல...

  ReplyDelete
 11. துப்பாக்கி-ன்னு வச்சதுக்கு எவ்வளவு சவுண்டு இருக்கும்ன்னு தெரியல...

  இன்னும் பீரங்கின்னு வச்சா அவ்வளவுதான்..

  ReplyDelete
 12. எதுக்கும் ஒரு முறை தள்ளி அப்புறம் இழுத்து பார்த்திட வேண்டியதுதான்...

  ReplyDelete
 13. லாஜிக்தான் வாழ்கை அனுபவத்தைச் சொல்லுது ஜீ !

  ReplyDelete
 14. ஜீ பாஸ்... மயக்கமென்ன... பற்றிய கமெண்ட்ஸ் ரெம்ப ரசித்தேன்...
  அப்புறம் உங்களா யார் சொன்னாங்க..... யூத் இல்லைண்ணு..?? அவ்வவ்

  ReplyDelete
 15. மயக்கம் என்ன... உங்களுக்கும் செங்கோவிக்கும் ஒரே அனுபவம் தந்திருக்கு.... ஹீ ஹீ

  ReplyDelete
 16. பேருந்தில் தொடங்கி சினிமா, ஜி.கே.சினிமான்னு போய் கடைசியில் லாஜிக் இல்லாம முடிச்சாச்சு!சரி!

  ReplyDelete
 17. துப்பாக்கி சரியில்லியே? ஒருவேள டாகுடர் போலீஸ் கமிசனரா இருந்துக்கிட்டு ரவுடியா நடிச்சு எல்லாத்தையும் காப்பாத்துவாரோ?

  ReplyDelete
 18. பல்பு அனுபவம் நிறைய பேருக்கு இருக்கு.நிறைய பேருக்குன்னா அட புரிஞ்சுக்கங்கப்பா..

  யூத்துன்னு காட்டனும்னா இப்படியெல்லாம் சமாளிக்கணும் போல

  ReplyDelete
 19. இப்ப புதுசா ஒரு தகவல் வந்திருக்கு!"துப்பாக்கி" ங்கிறத,"டுப்பாக்கி" ன்னு மாத்திட்டாங்களாம்!

  ReplyDelete
 20. வணக்கம் நண்பா,
  நல்லா இருக்கீங்களா?

  முதியவர்கள் என்றாலும் முகத்துக்கு நேரே பொண்ணுங்க இருந்தா சும்மா இருப்பார்களா?
  ஹே...ஹே..

  துப்பாக்கி: பொறுத்திருப்போம்.

  புஸ் & புள்... எனக்கும் இதே கன்பியூசன் இருக்கு...

  மயக்கம் என்ன: மாத்தி யோசித்திருக்கிறீங்க.

  ரசித்தேன்.

  ReplyDelete
 21. உங்க லாஜிக் புரியுது... பொண்ணுங்க எப்பயுமே கடைந்தெடுத்த பொறுக்கிப்பயலை சல்லடை போட்டு தேடிக்கண்டுபிடித்து காதலிப்பார்கள்... ஒரு சில exceptional cases இருக்கலாம்...

  ஒருவேளை பொறுக்கிகளை திருத்துவதில் உள்ள சந்தோஷம் அதற்கு காரணமாக இருக்கலாம்... இப்படி பொறுக்கியாக இருந்த சில நண்பர்கள் காதலியால் நல்ல பிள்ளையாகி பார்த்திருக்கிறேன்...

  ReplyDelete
 22. Pull-இழு...இதை என் மனமும் ஏற்றுக் கொள்வதே இல்லை... உங்க லாஜிக் சரியாத்தான் இருக்கு..

  ReplyDelete
 23. 'துப்பாக்கி'ய விட 'பீரங்கி' ன்னு வச்சிருந்தா இன்னும் மாஸ் அதிகமாயிருக்கும்னு தோணுது!//

  இந்தக் குசும்பு தான்யா உன்கிட்ட பிடிச்சது

  ReplyDelete
 24. ஒருவேளை நம்ம மூளை புல் - தள் ஒத்த சொற்கள் என்று உச்சரிப்பின் அடிப்படைல புரோகிறாம் பண்ணி வச்சிருக்குமோ? எதையும் யோசிக்காம கை இயல்பாகவே தள்ளிடுதோ?

  எங்க ஜிஎம் ஒரு தடவை 2 கதவையும் பிடிச்சுகிட்டு புல் புஷ் பண்ணாரே பார்க்கலாம்.. ஏதோ கதவையே கழற்றப் போகிற மாதிரி.. எல்லாருக்கும் இருக்கு இந்த பிரச்னை..

  ReplyDelete

Followers

Blog Archive

Powered by Blogger.

Archives

Follow by Email

Copyright © வானம் தாண்டிய சிறகுகள்.. |