Wednesday, October 26, 2011

ஏழாம் அறிவும் போதி தர்மனும்!


ஏழாம் அறிவு பாடல் வெளியீட்டு விழாவில் தமிழர்கள் மறந்துபோன அல்லது தெரிந்து கொள்ளாமலே போய்விட்டஒரு தமிழனின் வரலாறைச் சொல்கிறோம்.

படம் வெளிவந்தபின் ஒவ்வொரு தமிழனும் பெருமைப்படலாம் என்று போதிதர்மன் பற்றிக் குறிப்பிட்டார் இயக்குனர் முருகதாஸ்!

போதிதர்மன் பல்லவ வம்சத்தைச் சேர்ந்த தமிழ் பௌத்த இளவரசன். கி.பி. 6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அவரே குங்பூ கலையை உருவாக்கி சீனர்களுக்கு சொல்லிக் கொடுத்தார் எனக் கூறுகிறார்கள்.

போதிதர்மன்  பற்றி ஓஷோ குறிப்பிட்டிருப்பதை வாசித்திருக்கிறேன்.  ஓஷோவை வெறித்தனமாக  வாசித்த காலமது!

போதிதர்மன் மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர் என்கிறார்கள். ஜென் மதத்திற்கும் ஏதோ ஒரு வகையில் காரணகர்த்தா போதிதர்மன் என்கிறார்கள். அது உண்மையெனில் அவரின் நகைச்சுவை குறித்த கூற்று முற்றிலும் உண்மையாக இருக்கும்!தீர்க்கமான பார்வையும் பெரிய கண்களும் உடையவராம்! - இந்த விஷயத்தில் சூர்யா மிகப் பொருத்தமான தேர்வு!


போதிதர்மன் சீனா சென்றபோது அங்குள்ள துறவிகள் எல்லாரும் மனவலிமை,தியானம் போன்றவற்றில் சிறந்து விளங்கினாலும் உடல் வலிமையைப் பொறுத்தவரையில் நோஞ்சான்களாகவே இருந்ததால், அவர்களுக்கு உடலைப் பராமரிக்கும், ஆராதிக்கும் வழிமுறைகள் பற்றி கற்றுக் கொடுப்பதற்காக உருவாக்கப்பட்டதே குங்பூ என்கிறார்கள்! திருடர்கள் காட்டு விலங்குகளிடமிருந்து தற்காத்துக் கொள்ளவும்!

பொதுவாக உடல் மெலிந்திருப்பது, வலுவின்றி இருப்பதுதான் துறவிகளின் 
அடையாளம் என்றகொள்கை/மூட நம்பிக்கை  எங்கும், என்றும்  இருந்திருக்குமோ?

ஆனாலும் நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள் மனதை செம்மைப் படுத்துவதற்கு உடலைச் சரியாகப் பேணுவதும் ஒரு வழியென! 'உடலை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே' எனும் ஈற்றடிகளில் முடியும் பாடலில் (திருமந்திரம்?!) சொல்லப்பட்டிருப்பது அதுதான்!

அவர் உருவாக்கியது குங் பூ என்ற பெயரில் இல்லாமல் இருந்தாலும் குங் பூ வின் ஆரம்ப நிலையாக இருந்திருக்கலாம்.

குங்பூ வின் அசைவுகள், தாக்குதல் முறைகள் எல்லாம் மிருகங்கள், பறவைகளை அவதானித்து அதன் அடிப்படையில் உருவானவை எனச் சொல்கிறார்கள்.

போதிதர்மன் கரடு முரடான தோற்றம் உடையவர் என்று சொல்கிறார்கள். (சந்தேகமிருந்தால் படத்தை நல்லாப் பாருங்க) கையில் எப்பொழுதும் ஒரு முரட்டுத் தடியை வைத்திருப்பாராம்! சூர்யாவும் வைத்திருந்தார்.

தமிழன் வரலாற்றை எந்தத் தமிழ் இயக்குனர் திரைப்படமாக்குவதாகச் சொன்னாலும் வயிற்றில் புளியைக் கரைப்பது போன்ற உணர்வு உண்டாவது கொஞ்சமாவது தமிழர் வரலாறு தெரிந்தவர்கள், தமிழுணர்வு கொண்டவர்களுக்கு வழமையானதுதான்!

ஏற்கனவே இயக்குனர் செல்வராகவன் சோழ சாம்ராஜ்யத்தை கதறக் கதற வன்கலவி செய்ததை நாம் பார்த்திருந்தோம். இவர்கள் தமிழர்கள் வரலாற்றை எடுக்கிறேன் பேர்வழி என்று ஏற்கனவே மேலை  நாடுகளில் அப்பிடி இப்பிடி 
இருக்கும் தமிழன் இமேஜை மேலும் டமேஜ் ஆக்கும் நடவடிக்கையாகவே இருக்கும். கிட்டத்தட்ட ஏன் முற்றிலுமே காட்டுமிராண்டிகள் போன்றே சித்தரித்திருந்தார் செல்வராகவன்!

படித்தவர்களுக்ககப் படமெடுக்கும்(?!) மணிரத்னம்  பொன்னியின் செல்வனைத்   திரைப்படமாக்கப் போவதாக அறிவித்தபோது மன உளைச்சலுக்கு ஆளானவர்களில் நானும் ஒருவன்.

போதி தர்மன் பற்றி ஏராளமான விஷயங்கள் இருக்கலாம். அதில் குங் பூவை மட்டும் எடுத்துக் கொண்திருப்பார்கள் எனத் தோன்றியது. படத்தின் டிரெய்லரைப் பார்த்தபோது! (ஆனாலும் எனக்கு ஏமாற்றமாகவே இருந்தது)

ஒரு அந்நிய நாட்டவனின் ஏதோ ஒரு சதித்திட்டத்தை முறியடிக்க வேண்டியுள்ளது. விஞ்சானியான சுருதி ஹாசன், சூர்யாவின் டீ.என்.ஏ போதிதர்மனுடைய டீ.என்.ஏ உடன் கொஞ்சம் ஒத்துப்போவதை அவதானித்து அவற்றைத் தூண்டி, சூப்பர் பவருள்ள ஆளா மாற்றி வில்லனுடன் மோத விடுகிறார்கள்? அல்லது அந்த முயற்சியையும் வில்லன் தடுக்க முயல்கிறான்? - இதுதான் கதை என டிரெய்லர் கூறுகிறது!

இடையிடையே ஸ்ருதியோடு, ஹாரிஸ் ஜெயராஜின் துணையுடன் நவீன போதிதர்மன் டூயட் பாடுவதைக் காண நானும் ஆவலாயுள்ளேன்!


சில சந்தேகங்கள். தெரிந்தவர்கள் சொன்னால் நல்லது!

போதிசத்துவர் ஏற்று ஒருவர் இருந்ததாகக் கேள்வி. அவரும் போதிதர்மனும் ஒருவரா?
போகர் - போதிதர்மன் இவர்களுக்கிடையில் ஏதும் ஒற்றுமை உள்ளதா? இருவரும் ஒருவரா?

போதி தருமனுக்கும் சிக்ஸ் பேக் இருந்தததா? - பார்த்தா அப்படித் தோணவேயில்லை!

படத்தின் டிரெய்லரைப் பார்த்தபோது, சில இடங்களில் ஏனோ தசாவதாரம் தவிர்க்க முடியாமல் ஞாபகத்துக்கு வந்து தொலைத்து  பீதியைக் கிளப்பியது!  

31 comments:

 1. வணக்கம், தங்களுக்கும், தங்களது குடும்பஉறவுகளிற்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 2. இன்னும் படம் பாக்கலையா நீங்க.
  நானும் பக்கல,

  ReplyDelete
 3. நீங்க கெட்ட கேள்வி எதுக்கும் எனக்கு பதில் தெரியாது.
  போதி தர்மனை பத்தி நீங்க சொல்லிய தான் நான் தெரிஞ்சிக்கணும்..

  ReplyDelete
 4. இனிய காலை வணக்கம் சகோ,
  பெரும் எடுப்பில் ட்ரெயிலர் காண்பித்து விட்டு, லாஜிக் தவறினை தருவது தான் எம் தமிழ் இயக்குனர்களின் பணி....

  ReplyDelete
 5. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய இன்பத் தீபாவளி நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

  ReplyDelete
 6. ஹ ஹா, சினிமா சம்பந்தப் பட்ட பதிவுகளுக்கு பின்னூட்டம் இடுவதில்லை என்ற என் கொள்கையை தளர்த்திக் கொள்கிறேன்... அருமையாக சாடி இருக்கிறீர்கள்... உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைத்தால் தனி பதிவு போடவும்... பதிலை நானும் தேடுகிறேன்

  ReplyDelete
 7. போதியவர்மன்October 26, 2011

  போதிதர்மனாக நடித்தது சூர்யாவிற்கு ஒரு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தக்கூடும். சூர்யாவின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கவும் கூடும். ஆனால் போதிதர்மனின் உருவத் தோற்ற அமைப்புடன் சூர்யா ஒத்துப்போகவில்லை. அந்தப் பாத்திரத்திற்கு சரத்குமார் நடித்திருப்பாரானால் மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும். போதிதர்மனை கண்முன்னே நிறுத்தியிருக்கும்.

  ReplyDelete
 8. முதல் பேதி ச்சே ச்சீ போதிவர்மன்...

  ReplyDelete
 9. எல்லா ஓட்டும் போட்டாச்சி ஹி ஹி...

  ReplyDelete
 10. நானும் எதிர்பார்க்கிறேன் மாப்ள!

  ReplyDelete
 11. போதி தருமனுக்கும் சிக்ஸ் பேக் இருந்தததா?

  ha.. ha... nalla kelvi...

  Deepavali vazhththukkal.

  ReplyDelete
 12. மாப்ள இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 13. நியாயமான ஆதங்கங்கள் தான் எப்படி படத்துல எடுத்திருக்காங்கன்னு இன்னிக்கு விமர்சனங்களை வெச்சு யூகிக்க முடியல.....
  தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஜீ!

  ReplyDelete
 14. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும்

  இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஜீ

  ReplyDelete
 15. //
  படத்தின் டிரெய்லரைப் பார்த்தபோது, சில இடங்களில் ஏனோ தசாவதாரம் தவிர்க்க முடியாமல் ஞாபகத்துக்கு வந்து தொலைத்து பீதியைக் கிளப்பியது!

  //

  எனக்கும் அவ்வாறே.. எனக்கு டிரைலர் இருந்த ஆர்வத்தினை கெடுத்ததுதான் மிச்சம்.. படமாவது உருப்படியாக இருந்தால் நல்லம்..

  ReplyDelete
 16. படம் பார்த்து விட்டேன் நண்பரே!போதி தர்மனை மட்டும் பிரதானப்படுத்தி சரித்திரப்படமாக கொடுத்திருந்தால் மொத்தக்குழுவினருக்கும் கோவில் கட்டி கும்பிடலாம்.ஒரு மாமனிதன் வாழ்க்கையை மிக மொண்ணையாக காட்டி குறைப்பிரசவம் ஆக்கியிருக்கிறார்கள்.

  ReplyDelete
 17. ///படித்தவர்களுக்ககப் படமெடுக்கும்(?!) மணிரத்னம் பொன்னியின் செல்வனைத் திரைப்படமாக்கப் போவதாக அறிவித்தபோது மன உளைச்சலுக்கு ஆளானவர்களில் நானும் ஒருவன்./// அதுக்கு மாற்றீடாக தானே இராவணன் என்ற ஒரு படத்தை எடுத்து சீதைக்கும் ராவணனுக்கும் கனெக்சன் கொடுத்தவர் )))

  ReplyDelete
 18. தங்களுக்கும்,தங்களது குடும்பஉறவுகளுக்கும் இனிய தீபத் திருநாள் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 19. வணகம் ஜீ
  உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும்
  தீபாவளி நல் வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 20. ஜீ நீங்கள் நினைப்பது சரிதான் போலும் படத்தைப்பற்றி வரும் விமர்சனங்கள் கவலையளிக்கின்றது.,!!!

  ReplyDelete
 21. கருத்துகளும், வாழ்த்துக்களும் சொன்ன நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!

  ReplyDelete
 22. ஏழாம் அறிவு படம் பற்றி இப்படி ஒரு கண்ணோட்டமா...செம ரசனை பையன் ஜீ நீ..ஓஷோ சொல்லிருந்த விஷயத்தை முருகதாஸ் படிச்சிருந்தால் இன்னும் சில சீன்ஸ் develop பண்ணிருப்பாரு..:-))

  ReplyDelete
 23. படம் பார்க்க ஆவலாய்க் காத்திருக்கிறேன்.உங்களின் விமர்சனம் இன்னும் ஆவலை அதிகரிக்க வைக்கிறது ஜீ !

  ReplyDelete
 24. படத்தில் முதல் 5 ரீலை கட் பண்ணிட்டா ஒரளவு தேறிடும்

  ReplyDelete
 25. நல்ல பதிவு.
  நன்றி.

  ReplyDelete
 26. படம் பார்த்தேன்.விறுவிறுப்பான கதை அமைப்பு.விவாதங்கள் எதுவும் இன்று வரை ஆரம்பிக்கவில்லை!தடை முயற்சியும் இல்லை.பார்ப்போம்!

  ReplyDelete
 27. சி.பி.செந்தில்குமார் said...
  படத்தில் முதல் 5 ரீலை கட் பண்ணிட்டா ஒரளவு தேறிடும்.///அடிமடியிலேயே கைவைக்கச் சொல்கிறீர்களே?

  ReplyDelete
 28. செமயான ஆத்ங்கத்துடன்கூடிய விமர்சனம். சரித்திரமும் வசூலும் அவசரத்தில் இணைந்து பெற்ற குறைப்பிரசவம் 7 ம் அறிவு

  ReplyDelete
 29. படம் எனக்கு பிடித்துள்ளது

  ReplyDelete
 30. படம் வந்தாச்சே ...ஜீ.
  பாத்துட்டு விமர்சனம் பண்ணுங்க. ( நமக்கு காசு மிச்சம் )

  ReplyDelete

Followers

Powered by Blogger.

Follow by Email

Copyright © வானம் தாண்டிய சிறகுகள்.. |