"உனக்கு சிங்களப்பாட்டு பிடிக்குமா?"
அலுவலகத்தின் உணவு வேளையின்போது சிங்களப் பொண்ணு ஒண்ணு கேட்டது.
"பிடிக்காது" - உடனடியாக உறுதியாக மறுத்தேன்.
யாரும் பேசவில்லை. கொஞ்சநேரம் அமைதியாக இருந்தது.
"ஏண்டா இப்பிடி கதைக்கிறே?" - நண்பன் ஒருத்தன் ரகசியமாகக் கேட்டான். இறுதிப் போர் நடைபெற்ற காலம் என்பதால் நண்பர்கள் எல்லாம் யோசிச்சுத்தான் பேசுவார்கள் - என்னைத்தவிர!
"இளையராஜா, ரஹ்மான் கேட்டு வளர்ந்துட்டு அதையெல்லாம் பாட்டுன்னே என்னால சொல்ல முடியாது"
அதே அலுவலகத்தில் ஒரு சிங்கள நண்பன் ரிங் டோனாக ஒரு பாட்டு வைத்திருந்தான் 'ஆதரே' என்று ஆரம்பிக்கும். சிங்களப்பாடல்களில் ஆதரே எழவு ('லவ்'வாமாம்) இல்லாமல் பாடல்களே இருக்காது என்னுமளவிற்கு அந்தச் சொல் இருக்கும்.
'ஆதரே...' - ஒரு பெண் நடுங்கிக் கொண்டே பாடுவார். அந்தப்பாட்டுக்கு நான் சிச்சுவேசன் சொல்லிக் கொண்டிருந்தேன்.
"மார்கழி மாதம்... அதிகாலை நாலுமணி...நல்ல குளிர். வாசலில ஆர்மி சோதனை செய்ய வந்திருக்கு! ஐடென்டிட்டி கார்ட்ட வேற எங்க தேடியும் கிடைக்கல! குளிர், பயம், பதட்டம் எல்லாம் சேர்ந்து நடுங்கிக்கொண்டு பாடின பாட்டுத்தான் இது!"
* * * * * * * * *
நல்ல பாடல்கள் சிலவும் ஆங்காங்கே வந்திருக்கின்றன.
2000 ஆண்டுகளில் இராஜ், பாத்யா & சந்துஷ் வருகைக்குப் பின்னர் சிங்களத்தில் ஒரு சில இனிமையான பாடல்களைக் கேட்க முடிந்தது. தெளிவான, துல்லியமான ஒலிப்பதிவு -தமிழ்நாட்டில் செய்வதாகச் சொல்கிறார்கள். மிக முக்கியமாக கம்போசர் ஒரு தமிழர் - சியாமளங்கன்.
2006 இல் கொழும்பு நகரப் பேரூந்துகளில் அடிக்கடி ஒரு பாடல்! கேட்டதும் பிடித்துக் கொண்டது. அருமையான கம்போசிங். இதுவரை நான் கேட்ட சிங்களப் பாடல்களில் பெஸ்ட் என்று இதைத்தான் சொல்வேன்.
அப்போது எங்கள் அலுவலகத்தில் ஒரு பெண் செம்ம ஸ்டைலாக எப்போதும் காதில் ஐபாட்டுடன் அவரிடம் இந்தப்பாட்டு பற்றிக் கேட்டேன். தெரிந்திருக்கவில்லை. வெகுஜனங்களுக்கு டப்பா பாட்டுக்கள் தான் பிடிப்பதாகத் தெரிகிறது.' அப்புறம் என்னத்த இப்பிடிக் கேக்கிறாள்?' ஐப்பாடை இதற்குமேல் யாரும் கேவலப்படுத்த முடியாதெனத் தோன்றியது.
* * * * * * * * *
நகரப் பேரூந்துகளில் காதில் ஹெட் போனுடனே அவதரித்ததுபோல பலர் உலா வருகிறார்கள். அவர்கள் ரசிப்பது எதை எனத் தெரியவில்லை. ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் வைத்திருப்பது சைனாக்காரனின் 'தரமான' போன்கள் என்பது தனிச்சிறப்பு. இலங்கையில் சைனா சத்தமில்லாமல் ஒரு 'சீப்'பான புரட்சியை ஏற்படுத்திக் கொண்டிருப்பதை எதிலும் காண முடிகிறது.
சிங்களவர்கள் எப்போதும் ஹிந்திப் பாடல்களையும் ஹிந்திப்படங்களையுமே அதிகம் ரசிப்பவர்கள். ஹிந்திப் படங்கள் போல படமெடுக்க முயற்சித்து தமக்குத் தாமே சூடு போட்டுக் கொள்கிறார்கள். அதுபரவாயில்லை. எங்களை எந்த விதத்திலும் பாதிக்காது - யார் அதையெல்லாம் பார்த்தது? ஆனால் ஹிந்தி, தமிழ்ப் பாடல்களை ட்யூனைக் காப்பியடித்து மொழிமாற்றிப்பாடி பொதுமக்கள் காதுகளில் சுடுவதுதான் தாங்க முடியவில்லை. 'என்னடி ராக்கம்மா' மற்றும் எம்.எஸ்.வியின் பாடல்கள் உட்பட பல பழைய பாடல்கள் எல்லாம் இப்போ சிங்கள லேட்டஸ்ட் ஆல்பங்களில் சிக்கிச் சீரழிகின்றன. அதைத் தாங்களே இசையமைத்ததுபோல ஒரு பெருமையும் சில நண்பர்களுக்கு இருப்பதைக் காண முடிகிறது. முப்பது, நாற்பது வருஷத்துக்கு முதல் வந்த தமிழ்ப்பாட்டுடா என்றால் நம்புகிறார்கள் இல்லை.
வரலாற்றுப் பின்னணி
அவர்கள் ஒரு ஸ்டாண்டர்ட் 'பீட்' வைத்திருக்கிறார்கள். தொண்ணூற்றைந்து வீதமான பாட்டுகள் அதே! ஏன் அப்படி? அதற்கு வரலாற்று ரீதியான காரணம் இருக்கிறது.
சிங்களவர்கள் தமிழர்கள் போலல்ல. வரலாற்றை மறக்காதவர்கள். வரலாற்றை ஞாபகப்படுத்த, கற்பிக்க அவர்களுக்கு ஒரு முருகதாஸ் தேவையில்லை. அடிக்கடி அப்டேட் செய்தும் கொள்கிறார்கள். கி.மு. எழுநூறில விஜயன் - வட இந்தியாவிலிருந்து துரத்திவிடப்பட்ட இவனின் வழித்தோன்றல்கள்தான் சிங்களவர்கள் - இப்ப வரலாற்ற (அப்டேட்) மாத்திட்டானுகளான்னு தெரியல! அவர்கள் இலங்கைக்கு வந்தப்போ, கப்பல்ல பாட்டுப்பாடி இருக்காங்க. அப்போ போட்டஅந்த 'பீட்'டை தான் இன்னமும் போட்டுட்டிருக்காய்ங்க!
* * * * * * * * *
சில பாட்டுக்களைக் கேட்கும்போது ஆச்சரியம் தாங்க முடியாது. இசைல எங்காவது அபஸ்வரம்னு ஒண்ணு வரலாம். முழுசா அபஸ்வரத்திலயே எப்பிடி இசையமைக்க முடியும்? அப்படியொரு அவலமான மியூசிக். ஆனா பாடுறவங்க என்னமோ பெரிசா ரசிச்சு தலையசைச்சு சீன் போட்டு பாடுறதை டீ. வில எப்பவாவது பார்க்கும்போது செம்ம காமெடியா இருக்கும்! வீட்ல வேலை இல்லாத ஆன்டிங்க, அங்கிள்ஸ் எல்லாம் டி.வில வந்து கும்பலா கூடிக் கும்மியடிக்கிற நிகழ்ச்சிகள் சில இருக்கு. எவ்வளவு கேவலமான பாட்டுக்கும் படு சீரியஸா தலையசைத்து தங்கள் பாட்டைத் தாங்களே சிலாகித்து பாடுவாங்க பாருங்க - எப்பிடித்தான் முடியுதோ?
யார் யாரெல்லாம் எந்த நம்பிக்கையில் பாடுகிறார்கள்? எதுவும் புரியவில்லை. தன்னம்பிக்கையின் உச்சம் இதுதான் என்பேன். நூறு ரூபாய்க்கு ரோடில் விற்கும் மைக், ஒரு ரொம்ப சீப்பான கீபோர்ட், ஒரு அக்டோபேட் அல்லது ஒரு பழைய பிளாஸ்டிக் வாளியைக் கவுத்து வைப்பது இன்னும் உசிதம். கேட்க சகிக்காத குரலா? நடுக்கமும் சேர்ந்தால் மேலதிக தகைமை.! ட்யூன் - ஆமா அப்படீன்னா என்ன? என்று கேட்பவரா? அவர்தான் அதற்குச் சரியான ஆள். சிங்கள இசைத்துறையில் பிரபலமாக சாத்தியம் இருக்கிறது.
இனப்பிரச்சினையில் எவ்வளவோ சொல்ல முடியாத கொடுமைகளை, இழப்புகளை, மன உளைச்சல்களை சின்ன வயதிலிருந்தே அனுபவித்திருகிறேன். ஆனால் அதையெல்லாம் தாண்டி இப்போது எனக்கு உச்சபட்ச கொடுமையாகத் தோன்றுவதே சிங்களப் பாடல்கள்தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
* * * * * * * * *
கடந்த வாரம்....
பஸ்ல ஒருவர் பிளாஸ்டிக் கஞ்சிரா(?!) போன்ற ஒன்றை வைத்து அடித்துக்கொண்டே பாட்டுப்பாடிக் கொண்டிருந்தார். கொழும்பு நகரப் பேரூந்துகளில் இது வழக்கமான காட்சிதான். ஆனால் நன்றாகவேயிருந்தது.
"மச்சான் என்னமாப் பாடுறாண்டா..இவங்க ஆல்பம் கேட்கிற மாதிரியே நல்லா இருக்குல்ல? அதுக்கு ஈக்குவலா இருக்கு!" - நண்பன் சிலாகித்துச் சொன்னான்.
"மச்சி பாசிட்டிவ் திங்கிங் நல்லதுதான் ஆனா இது ரொம்ப ஓவர்.."
"எதுக்கு இப்ப சம்பந்தமில்லாம கதைக்கிறே?"
"நீ சொன்னது என்னமோ உண்மைதான். ஆனா இந்தப்பாட்டு ஆல்பம் மாதிரி இருக்குன்னு சொலாதே..சரியாச் சொல்லு அவங்க ஆல்பம் எல்லாம் பிச்சைக்காரங்க பாடுற மாதிரியே இருக்கு!"
எனக்கு எல்லா இசையும் பிடிக்கும், அது எனக்கு தெரியாத மொழியில் இருந்தால் கூட ரசித்து இருக்கிறேன்.. இசை பற்றிய நல்ல அலசல் பதிவு...
ReplyDelete//முப்பது, நாற்பது வருஷத்துக்கு முதல் வந்த தமிழ்ப்பாட்டுடா என்றால் நம்புகிறார்கள் இல்லை//
ReplyDeleteஹீ ஹீ.. நமக்கும் சுராங்கனி எல்லாம் குடுத்துருக்காங்கல்ல... சமீபத்துல கூட ஒரு டாக்டர் படத்துல வருமே இன்னொரு பாட்டு!!
nicee
ReplyDeleteசிங்களப் பாடல்கள் எப்படி இருக்குமோ தெரியவில்லை... அந்தக் காலத்தில் எங்களுக்கு இலங்கை வானொலியே துணை...
ReplyDeleteஅண்ணன் தூக்கி வைத்தாரா?இல்லை கலக்கி அடித்தாரா?யாராச்சும் சொல்லுங்கப்பா.. :)
ReplyDeleteஎன்னவோ சீரியசாகத்தான் ஜீ சொல்ல வருகிறார் போல என்று பார்த்தால்.............................!இங்கேயும் சிலர் இருக்கிறார்கள்,என்ன ஒரு இசை ஜாம்பவான்கள் சிங்களவர் என்று சிலாகிக்க!
ReplyDeleteஅருமையான பதிவு பாஸ்!
ReplyDeleteநல்லா ரசிச்சு ரசிச்சுப் படிச்சேன்! அவர்களின் அந்த பீற் “வன் ரூ த்ரீ பீற்” மற்றும் “சிக்ஸ் எய்ட் பீற்” என்று இசை தெரிந்த நண்பன் ஒருவன் சொன்னான்!
எல்லாப் பாட்டுக்கும் அதே பப்பரபப்பாதானே! ஒரு வரைட்டி, புது மெட்டு, ஒன்றுமே கிடையாது!
மற்றது தமிழ் பாடல்களைக் கொச்சைப்படுத்துவது!
அப்டி போது போது போது என்று ஒரு பாட்டு கேட்டேன்! ரொம்ப கேவலமா இருந்தது!
மாம்ப்ழம் விக்ற கண்மா உன் ம்ன்சுக்ள என்மா என்று ஒரு அற்புதமான பாடலையும் இரண்டு சிங்கள இளைஞர்கள் பாடியதைக் கேட்ட்டேன்!
அவர்களைக் குறை சொல்லியும் பயன் இல்லை! - சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்...!
//அவர்கள் ஒரு ஸ்டாண்டர்ட் 'பீட்' வைத்திருக்கிறார்கள். தொண்ணூற்றைந்து வீதமான பாட்டுகள் அதே! ஏன் அப்படி? அதற்கு வரலாற்று ரீதியான காரணம் இருக்கிறது.//
ReplyDeleteபீட்டும் அப்படித் தான். வரிகள் அதைவிடக் கொடுமை. சம்பந்தமேயில்லாமல் எதையெதையோ சேர்த்து வச்சு உளறுவாங்க பாருங்க. நாரசாரம்.
பஸ்ஸில் சிங்களப்பாடல்களைக் கேட்கும்போது என் மனதில் என்னென்ன தோன்றுமோ, அதெல்லாம் சொல்லியிருக்கிறீங்க ஜீ.
சிறுநேரப் பிரயாணம் என்றால் தாங்கிக் கொள்ளலாம். எங்கள் ஊருக்கு கொழும்பில் இருந்து போவதென்றால் கிட்டத்தட்ட 6 மணி நேரம். போகும் பாடல்கள் மியுசிக்கல் ஷோ என்ற பெயரில் போடும் பைலாப் பாடல்கள் தான். அதிலும் தமிழ் ஆங்கிலப் பாடல்களை கழுதைக் குரலில் பாடும்போது ... ராமா ராமா தான். நிலைமையை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள்.
ஆனால் எனக்கு ரனிது, பாத்தியா சந்தோஷ் (சில), இராஜ் அவர்களின் பாடல்கள் பிடிக்கும். வித்தியாசமாக நல்ல மெலடியாக இருக்கும் பாடல்கள். அண்மையில் பஸ்ஸில் கேட்ட இந்தப் பாட்டும் ரசிக்கவைத்தது. உங்களுக்கு பிடிக்குமா தெரியவில்லை. கேட்டுப் பாருங்கள். :)
https://www.youtube.com/watch?v=CrMMOoEE790
ஹா ஹா அருமையான நக்கல் நடை.
ReplyDelete()
-------------------
சீரியசாகச் சொன்னால், அருமையான நக்கல் நடை. Keep it up உ.
kalakkal
ReplyDeleteசிங்களத்திலும் நிறைய சிறந்த பழைய பாடல்கள் உள்ளன.அவற்றைக் கேட்கும் சந்தர்ப்பம் இல்லாததால்தான்
ReplyDeleteநாம் சிங்களப் பாடல்களை கேவலமாக பேசுகிறோம். இலங்கைத் தமிழ்ப் பாடல்களோடு ஒப்பிடும் போது
சிங்களப் பாடல்கள் ஆயிரம் மடங்கு நல்லது
பல இடங்களில் சிரிக்க வச்சிட்டுது ஜீ....
ReplyDeleteஇருந்தாலும் சில பாடல்களின் இசை என்னை மயக்கியதை நான் மறுப்பதற்கில்லை லஸ்ஸன, ரப்பட்ட, குக்கு கூ கூ ஏதே தெரியவில்லை அடிக்கடி முணுமுணுக்க வைத்தவை...
ஆனால் அரைத் மாவை அரைக்க நான் கூட தயாரில்லை
யாழ்ப்பாணம் - கொழும்பு பஸ்ல கேட்டதில்லையா பாஸ் மெய் சிலிர்க்கும்....
ReplyDeleteஉண்மைதான்,ஆனால் இப்போது வருகின்ற பாடல்கள் நன்றாக இருக்கின்றது சகோ.
ReplyDeleteஇராஜ்,ரொஷான் பெர்னாண்டோ வின் பாடல்கள் கேக்கும் ரகம்.
கேட்டுப் பாருங்கள்.
அவர்கள் இலங்கைக்கு வந்தப்போ, கப்பல்ல பாட்டுப்பாடி இருக்காங்க. அப்போ போட்டஅந்த 'பீட்'டை தான் இன்னமும் போட்டுட்டிருக்காய்ங்க!ஃஃஃஃஃஃஃஃஃ
ReplyDeleteஅது என்னமோ சரி தான் பாஸ்....!நானும் நினைச்சது இது என்னடா ஒரு பீட் எண்டு!
இப்ப தான் புரியுது.வாழ்க தலைவா நீங்க...!
கலக்கல் ஜீ.. சிங்கள பாடல்கள் சம்பந்தமாக நிறையபேரின் மனநிலையை அப்படியே சொல்லிவிட்டீர்கள்,,
ReplyDelete//அவர்கள் ஒரு ஸ்டாண்டர்ட் 'பீட்' வைத்திருக்கிறார்கள். தொண்ணூற்றைந்து வீதமான பாட்டுகள் அதே!.//
அதே அதே.. ஏதாவது மியுசிக்கல் சோ என்றாலே அந்த பீட்கள் புகுந்து விளையாடும் அந்தக்கொடுமைய எங்க போய் சொல்றது! அதேபோல் கிரிக்கெட் மெட்ச் என்றாலே ஒரே பீட்டை வாசித்து உயிரை வாங்குவார்கள்..
தூர பஸ் பயணங்கள் அவர்கள் இசையோடு பயணிப்பது மிகக்கொடுமை! அவ்வப்போது ஒரு சில நல்ல மெட்டுக்கள் வருவதுண்டு..
அடப்பாவி மனுஷா..நாளைக்கு விடுதலைப்புலிகளின் கைக்கூலி சீமான் , வைக்கோல், நெடுமாறன் போன்ற தேசத்துரோகிகள் உங்கள் வீட்டு முன்பு உண்ணாவிரதம் இருந்தாலும் இருப்பார்கள்...ஜாக்கிரதை .
ReplyDeleteசந்த பாயல அருமையான பாடலை அறிமுகம் செய்ததுக்கு நன்றி ஜீ!
ReplyDeleteசகோதரமொழியில் பல நல்ல பாடல்களும் வருகின்றது ஆனால் துள்ளிசையை மட்டும் சில பயணங்களில் அதிகம் ஒலிபரப்புவது கொடுமைதான்!
ReplyDeleteஅடிக்கடி சில நல்லபாடல்கள் நான் கேட்பேன் தனித்துவமான அவர்களின் இசையோடு இருப்பதால்!
வியாபாரப்போட்டியில் அன்னிய இசையை அவர்களும் ஆதரிப்பது அவர்களின் பாரம்பரிய இசை தொலைத்துவிடும் என்பது பலரின் கணிப்பு!ம்ம்
எங்கள் 'பேரா..." நாட்களில், லியத்தம்பராய்....
ReplyDeletehttps://www.youtube.com/watch?v=ld_x0oT7TiM
(
Konakirilliye from Karunaratne Diyulgane is a wonder. Ahasa Usata, Dham Patinla etc. by Gunadasa kapuge... There are quite a few melody singers and thousands of sweet melodies in Sinhala .. you have to go searching for them instead of judging by the songs played in buses. By the way, Iraj, Bhathiya and their Crap are much worser compared to the Sinhala melodies.
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteநல்ல பதிவு ஜீ! கதம்பமாக பல உணர்வுகள் கிளர்ந்தன எனக்குள்.
ReplyDeleteமிகவும் அருமை!
ReplyDeleteநன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
//வரலாற்றை ஞாபகப்படுத்த, கற்பிக்க அவர்களுக்கு ஒரு முருகதாஸ் தேவையில்லை.// செம
ReplyDeleteஇதென்ன பாஸ் நான் யாழ்-கொழும்பு பஸ்ல எவ்வளவு கொடுமையை தாங்கிக்கொண்டு வந்திருப்பம்
Nice post. முன்னைய சில சிங்களப் பாடல்களும் அருமையானவைதான். ஆனால், அவை பாடல்கள் போல இல்லாமல் வரிவரியாக கதை சொல்வதுபோல இருக்கும். பிரதி பண்ணுவதில் பழைய இந்தி, தமிழ் பாடல்களில் ஆரம்பித்து, இப்போதை தமிழ் சினிமாப் பாடல்வரை அவர்கள் விட்டுவைப்பதில்லை. தீபாவளி படத்தில் வரும் "காதல் வைத்து" பாடலை சுட்டுப்போட்டிருக்கிறார்கள், கிடைத்தால் கேட்டுப்பாருங்கள்!
ReplyDelete