Tuesday, February 21, 2012

ஒரு பதிவரும் சில பெண்களும்!ம்ம அபீஸ்ல செக்ரெட்டரி ஒரு சிங்களப் பொண்ணு! அபீஸ்ல அது மட்டும்தான் ஒரேயொரு பொண்ணு!

அந்தப் பொண்ணு இருக்கே... பார்க்கிறதுக்கு தப்சிக்கு அங்கங்க மானாவாரியா குளவி கொட்டினமாதிரி இருக்கும்!


அதுகிட்ட எந்த பாஷைல பேசினாலும் அதுக்குப் பாதிதான் புரியும்! எப்பவுமே செய்யவேண்டிய வேலைல பாதிதான் செய்யும். அதில பாதி பிழையா இருக்கும்னா பாருங்க! இப்ப என்னடான்னா அதுவும் வேலைய விட்டுப் போயிடிச்சு! டீச்சர் வேலை! எத்தனை குழந்தைகளோட வாழ்க்கை பாழாகப் போகுதோ?

அப்ப தோணிச்சு! தமிழ்ப் பொண்ணுங்களே இல்லாத இடத்திலயே நம்ம வாழ்க்கை போயிட்டிருக்கே! அடுத்த செக்ரெட்டரியா ஒரு தமிழ்ப்பொண்ணு வந்தா நல்லா இருக்கும்ல! வேற ஒண்ணுமில்ல! அபீஸ்ல எல்லாரும் சிங்கள அங்கிள்ஸ்! ஒரு தமிழன் அதுவும் தமிழை வளர்க்கப் பாடுபடுற(?!) ஒரு பதிவன் தமிழ் கதைக்காம இருக்கிறது எவ்வளவு கொடுமை?அப்பிடியே வந்துட்டா மட்டும்? என்ன வழக்கம்போல one  way , உம்மாண்டின்னு பேர் வாங்கிடுவோம்ல!


நாங்க எல்லாம் ஸ்கூல்ல படிக்கிற காலத்தில இருந்தே பொண்ணுங்களையே காணாம தனியாப் படிச்சவய்ங்க! நம்ம ஏரியாலயும் பொண்ணுங்களே கிடையாது! நாம ஒரு புது ஏரியாக்கு போனம்னா அங்க பொண்ணுங்களே இருக்காது! ஒருவேளை நாம வரப்போறது தெரிஞ்சு எல்லாமே ஏரியாவ காலி பண்ணிட்டுப் போயிடுங்களோ  என்னவோ!

**********
'ண்ணா அந்தப் பெடியனை பாரண்ணா என்னை முறைச்சுப் பாக்கிறான்!'
அந்தப் பொண்ணு அண்ணன்காரன் கிட்ட போட்டுக் கொடுத்தது..

என்னைத்தான்!

இதுல ரொம்ப முக்கியமான விஷயம் என்னன்னா நான் அப்போ ரெண்டாப்பு படிச்சிட்டிருந்தேன்!

நாங்க எல்லாம் அப்பவே அப்பிடி!

தென்ன மாயமோ மந்திரமோ தெரியல நம்மளுக்கும், பொண்ணுங்களுக்கும் எப்பவுமே ஆவுறதில்ல! நம்மகூடச் சேர்றவங்களும் அப்பிடியே!

நம்ம நெருங்கிய நண்பன் எவனுக்குமே காதலிகளோ, பெண் நண்பிகளோ இருந்ததில்லை. சிலபேர் லவ் பண்ண ட்ரை பண்ணி பல்ப் வாங்கியிருந்தாங்க! எங்கயாவது தூரத்து நண்பர்கள் ஒன்றிரண்டு பேருக்கு லவ் செட்டானா, நாங்க அவிய்ங்க கூடச் சேர மாட்டோம்! ஏன்னா, அதுக்கு முன்னாடியே அவிங்க எங்ககிட்டயிருந்து விலத்திடுவாங்க!

**********
ருமுறை நம்ம வரலாறு தெரியாத ரொம்பத் தூரத்து(?!) நண்பன் ஒருத்தன் தன்னோட நண்பியும் இருக்கும்போது தெரியாத்தனமா என்னைக் கூப்பிட்டுப் பேசிட்டிருந்தான்.

அந்தப்பொண்ணை நான் பார்த்திருக்கிறேன். எங்க கூடத்தான் படிச்சிட்டிருந்தது. பேசியதில்லை.பயபுள்ள ட்ரை பண்ணிட்டிருந்தானோ என்னவோ தெரியல! நான் வேணாம்னு சொல்லச் சொல்ல, பாண் (பிரெட்) டோஸ்ட் பண்ணி இருந்ததை சாப்பிட தந்தான்!

நல்லாயிருந்திச்சு! அதே நேரம் மனசில...இவங்க ரெண்டுபேரும் ஒரே ஊர். தூர இருந்து படிக்க வர்றாங்க! அப்பிடின்னா விடிய காலைல இதைச் செய்திருக்கணும். பாண் காலை, மாலை ரெண்டு வேளைலதான் வரும்! காலைல போய் பாண் வாங்கிறதெல்லாம் கஷ்டம்! யோசிச்சுக் கொண்டே சொன்னேன்..

'நல்லாருக்கு மச்சான்'
'இவ தாண்டா செய்தது!'

இப்ப என்ன பண்றது? அவன் சொல்லும்போது அந்தப் பொண்ணுகிட்ட ரெண்டு வார்த்தையாவது பேச வேணாமா அதானே மரியாதை? அதனால அந்தப் பொண்ணுகிட்ட பேசினேன்.

'இது நேற்று வாங்கின பாண்தானே?'

**********
று வருஷத்துக்கு முன்னாடி நம்ம அண்ணன்களான பாலா , மணி, நான் மூணுபேரும் கொழும்பு கோல்பேஸ் கடற்கரையில உட்கார்ந்திருந்தோம். எல்லாரும் ஜோடி ஜோடியா இருக்க நாங்கள் மட்டும் பசங்க தனியா!

பாலா அண்ணன் சொன்னார் ' நாங்க பேராதெனியால படிக்கேக்கயும் இப்பிடித்தான் இருந்தோம். இப்பவும் அப்பிடியே இருக்கோம். இன்னும் அஞ்சு வருஷம் கழிச்சு கொழும்பு வந்து பார்த்தா அப்பவும் ஜீ இப்பிடித்தான் இன்னும் ரெண்டு மூணு பசங்களோடதான் பீச்சுல இருப்பான்!

அண்ணனின் தீர்க்க தரிசனத்தை நினச்சு வியந்திட்டிருக்கேன்!

**********

ன்னோட பழைய கம்பனிலயும் எல்லாமே சிங்களப் பொண்ணுங்க! அதில ஒருத்திக்கு நான் ஏதாவது வில்லங்கமா பேச ஆரம்பிச்சதுமே உடனே மொபைலை எடுத்து 119 போலீசுக்கு போன் பண்ணப்போறேன்னு சொல்லும்னா பாருங்களேன்!

அப்ப உச்சகட்ட சண்டை நடந்த நேரம் வேற! அந்த நம்பருக்கு போன் பண்ணினா அப்பீலே கிடையாது வந்து அள்ளிட்டுப் போயிடுவாங்க! நம்ம மேல அந்தப் பொண்ணுக்கு அவ்வளவு அன்பு!

**********
ஜீயைப் பொறுத்தவரைக்கும் பொண்ணுங்க ரெண்டே ரெண்டு வகைதான்!

நம்ம கூட தானா வலியவந்து பேசிட்டு தானா விலத்தி போறவங்க!
நம்ம கூட தானா வலியவந்து பேசும்போது நாம ஏதாவது லொள்ளுத்தனமா பேசி அதனால தெறிச்சு ஓடறவங்க!

அப்பிடீன்னுதான் ரொம்பநாளா நினைச்சுட்டிருந்தேன். இப்போ இன்னும் ரெண்டு வகை..

நாம தெரியாத்தனமா எதையாவது பேசி நம்ம மேல கொலைவெறி ஆனவய்ங்க!
நாம எதுவுமே பண்ணாம நம்ம மேலே  கொலைவெறியோடயே ப்ரோகிராம் பண்ணி பிறந்து வந்தவய்ங்க!

**********
நான் முதன்முதல் வேலை செய்த ஆபீஸ்லயும் நான் மட்டும்தான் தமிழ்! அதில ஹேமா ன்னு ஒரு சிங்கள பொண்ணு! ஸ்ட்ரெயிட் பண்ணின ஹெயார், செம்ம ஸ்டைலா ட்ரெஸ் பண்ணி நல்லா இருக்கும்! நம்ம மேலே ஒரு தனி அக்கறை இருந்திச்சு. அடிக்கடி மற்ற பசங்க கிட்ட நம்மைப் பற்றிப் பேசும். 

நான் காண்ட்ராக்ட் முடிஞ்சு போகும்போது கண்ணில கொஞ்சம் பீலிங்க்சோட மொபைல் நம்பர் கேட்டுச்சு! நானும் குடுத்திட்டு வந்திட்டேன்.

அப்புறம் மூணு மாசம் கழிச்சு யோசிச்சேன். ஹேமா மொபைல் நம்பர் வாங்கிச்சு ஒரு போன் கூடப் பண்ணலையே! அப்புறம் எதுக்கு வாங்கிச்சு? சரியான லூசா இருக்கும் போலிருக்கே!

பக்கத்தில இருந்த நண்பன் சொன்னான் 'நீ போன் பண்ணுடா?'
'அதெப்புடிடா?'
'ஒரு பொண்ணு முதல்ல போன் பண்ணுமாடா..நீ பண்ணு!'
'அதில்லைடா அவளோட நம்பர் தெரியாதுடா'
'என்....னாது?'
அவள்தாண்டா என்னோட நம்பர் வாங்கினாள்! நான் வாங்கலயே!

கேவலமா ஒரு லுக் விட்டுட்டு, 'அறிவுகெட்ட ஜென்மம்! ஒரு பொண்ணு  வலிய போன் நம்பர் கேட்டா, பதிலுக்கு அவள் நம்பர கேட்காம வந்திருக்கிறே உனக்கெல்லாம் ஜென்மத்தில ஒருத்தியும் போன் பண்ண மாட்டாள்!'

அவன் கோபமும் நியாயமாத்தான் இருந்திச்சு! எவ்வளவு விவரமா இருந்திருக்கேடா ஜீ!

**********
போனவாரம் ஒரு அங்கிள் ஆபீசுக்கு வந்தார். பாதித் தலை நரைச்சிருந்தது. 

அவர் இண்டர்வியூக்கு வந்திருக்கார் என்றதும் ஆச்சரியமா  இருந்திச்சு! அடுத்துக் கேள்விப்பட்டது அதிர்ச்சியா இருந்திச்சு! அவர்தான் அடுத்த செக்ரெட்டரியாமாம்! என்ன கொடுமைடா சாமி, எப்பிடித்தான் இப்பிடி யோசிக்கிறாங்களோ? இப்பிடியொரு செக்ரெட்டரிய நான் எந்த ஆபீஸ்லயும் பார்த்ததில்ல!

நானே நொந்துபோய் இருக்க, ஒரு சிங்கள அங்கிள் ஓடி வந்து என்னைச் சந்தோஷப்படுத்திறதா நினைச்சு மேட்டர சொன்னார். அவர் தமிழாமாம்!

ம்ம்ம்...ரொம்ம்ம்ப்ப முக்கியம்!

22 comments:

 1. ஊழிற் பெருவலி யாவுள?!

  ReplyDelete
 2. //அதென்ன மாயமோ மந்திரமோ தெரியல நம்மளுக்கும், பொண்ணுங்களுக்கும் எப்பவுமே ஆவுறதில்ல! நம்மகூடச் சேர்றவங்களும் அப்பிடியே!//

  //பாலா அண்ணன் சொன்னார் ' நாங்க பேராதெனியால படிக்கேக்கயும் இப்பிடித்தான் இருந்தோம். இப்பவும் அப்பிடியே இருக்கோம். இன்னும் அஞ்சு வருஷம் கழிச்சு கொழும்பு வந்து பார்த்தா அப்பவும் ஜீ இப்பிடித்தான் இன்னும் ரெண்டு மூணு பசங்களோடதான் பீச்சுல இருப்பான்!//

  ஹா ஹா ! என்ன கொடுமை சார் இது!

  ReplyDelete
 3. //ஒரு தமிழன் அதுவும் தமிழை வளர்க்கப் பாடுபடுற(?!) ஒரு பதிவன் தமிழ் கதைக்காம இருக்கிறது எவ்வளவு கொடுமை?//

  என்ன ஒரு பற்று

  ReplyDelete
 4. //அவர் தமிழாமாம்!

  ம்ம்ம்...ரொம்ம்ம்ப்ப முக்கியம்!//

  மைல்டா ஒரு டவுட்டு வந்துச்சி சர்தான்

  ReplyDelete
 5. //நம்ம ஏரியாலயும் பொண்ணுங்களே கிடையாது! நாம ஒரு புது ஏரியாக்கு போனம்னா அங்க பொண்ணுங்களே இருக்காது! ஒருவேளை நாம வரப்போறது தெரிஞ்சு எல்லாமே ஏரியாவ காலி பண்ணிட்டுப் போயிடுங்களோ என்னவோ!//


  //நாங்க எல்லாம் அப்பவே அப்பிடி!//

  அப்படியா...ஜந்துவா.. மிஸ்டர் ஜீ.... டூ ஸ்டேப் பேக்...கிட்டகா வந்தா கைமாதான் பீ கேர் புல்

  ReplyDelete
 6. //எவ்வளவு விவரமா இருந்திருக்கேடா ஜீ!//


  ஹி ஹி ஹி நம்பிட்டோம்.

  ReplyDelete
 7. விதி வலியது.....!

  ஹிஹிஹிஹி வேறென்ன சொல்ல.

  ReplyDelete
 8. அந்தப் பொண்ணு இருக்கே... பார்க்கிறதுக்கு தப்சிக்கு அங்கங்க மானாவாரியா குளவி கொட்டினமாதிரி இருக்கும்!//

  இதல்லவா வர்ணிப்பு.. கலக்கிற ஜி

  ReplyDelete
 9. அண்ணனின் தீர்க்க தரிசனத்தை நினச்சு வியந்திட்டிருக்கேன்!//

  நம்பிட்டமாக்கும்..

  ReplyDelete
 10. எங்க போனாலும் நம்ம கேட்டகிரில நிறைய பேர் இருப்பாங்க போல, சேம் பிளட் ஜீ :-)

  ReplyDelete
 11. //'நல்லாருக்கு மச்சான்'
  'இவ தாண்டா செய்தது!'

  இப்ப என்ன பண்றது? அவன் சொல்லும்போது அந்தப் பொண்ணுகிட்ட ரெண்டு வார்த்தையாவது பேச வேணாமா அதானே மரியாதை? அதனால அந்தப் பொண்ணுகிட்ட பேசினேன்.

  'இது நேற்று வாங்கின பாண்தானே?'//
  ஹா ஹா இப்ப புரியுது ஜீ ஐ கண்டதுமே பொண்ணுங்க எதுக்கு அலேர்ட் ஆயிடுறாங்க என்று

  ReplyDelete
 12. // நாங்க எல்லாம் ஸ்கூல்ல படிக்கிற காலத்தில இருந்தே பொண்ணுங்களையே காணாம தனியாப் படிச்சவய்ங்க! நம்ம ஏரியாலயும் பொண்ணுங்களே கிடையாது! நாம ஒரு புது ஏரியாக்கு போனம்னா அங்க பொண்ணுங்களே இருக்காது! ஒருவேளை நாம வரப்போறது தெரிஞ்சு எல்லாமே ஏரியாவ காலி பண்ணிட்டுப் போயிடுங்களோ என்னவோ! //

  இந்த மேட்டர்ல நம்ம ரெண்டு பேர் சிட்டுவேசனும் நல்லா ஒத்துப்போகுது பாஸ் .. ஹி ஹி

  எல்லாம் தலைல எப்படி எழுதியிருக்கோ அப்படித் தான் நடக்கும். ஹ்ம்ம் ... இன்னும் நமக்கு என்ன எழுதியிருக்கோ தெரியல.

  ReplyDelete
 13. வெந்த புண்ல வேலை பாய்ச்சிட்டாங்க போல....

  ReplyDelete
 14. ///'இது நேற்று வாங்கின பாண்தானே?'////

  கடைல வாங்குனதா இருந்தாலும் நல்லதா பாத்து வாங்கி இருக்கீங்கன்னு சொல்லனும்....

  ReplyDelete
 15. என்னே ஒரு கொலவெறி மாப்ள உனக்கு..அவரு என்ன போல வயசான பாவப்பட்ட பய புள்ள போல ஏன்யா!

  ReplyDelete
 16. வணக்கம் ஜி!அருமை,அற்புதம்,ஆனந்தம் எல்லாம் ஒருங்கு சேர்ந்தது ,எனக்கு!ப.ரா விடம் மூன்று மாசம் ட்ரெயினிங் போகவும்,ஹ!ஹ!ஹா!!!!!!!!!

  ReplyDelete
 17. ஜீ....என்ன என்ர பெயரெல்லாம் அடிபடுது.சரி சரி.நீங்க விரும்பினமாதிரியே தமிழ் செக்ரெட்டரியாமாம்.பிறகென்ன.ஒரு தமிழன் அதுவும் தமிழை வளர்க்கப் பாடுபடுற தமிழன்...தமிழை வளருங்கோ!

  ReplyDelete
 18. தமிழ வளர்க்கப் படும் பாடு !ஆஹா புதுசா கட்சி தொடங்கிட்டாப் போச்சு ஹீ

  ReplyDelete
 19. ம்ம்ம்...ரொம்ம்ம்ப்ப முக்கியம்!

  ReplyDelete
 20. ஹா..ஹா..சிரிச்சுக்கிட்டே படிச்சேன்..அப்படியே கொஞ்சம்கூட மாறாமல், நமக்கும் ஒத்துப்போகுதே!

  கலக்கிட்டீங்க ஜீ.

  ReplyDelete
 21. //
  நாங்க எல்லாம் ஸ்கூல்ல படிக்கிற காலத்தில இருந்தே பொண்ணுங்களையே காணாம தனியாப் படிச்சவய்ங்க!
  //

  எனக்கும் அவ்வாறே.. என்ன செய்றது தலையெழுத்து அப்படி..

  By the way, லயன் comeback ஸ்பெஷல் பம்பலபிட்டி கோயில் கடைக்கு வந்திருக்கிறதா சொன்னாங்க.. முடியமுன் வாங்கிடுங்க..

  ReplyDelete
 22. இன்னும் அஞ்சு வருஷம் கழிச்சு கொழும்பு வந்து பார்த்தா அப்பவும் ஜீ இப்பிடித்தான் இன்னும் ரெண்டு மூணு பசங்களோடதான் பீச்சுல இருப்பான்!

  ரசிச்சு படிச்சேன்.. சிரிப்பு கடைசி வரை உதட்டிலிருந்து விலகாமல்.

  ReplyDelete

Followers

Powered by Blogger.
Copyright © வானம் தாண்டிய சிறகுகள்.. |