Tuesday, December 20, 2011

ஒஸ்தி, பெண்கள் ஜாக்கிரதை! - என்னா கொலவெறி?ஒஸ்தி!
ஸ்ல ஒஸ்தி போட்டாங்க! படத்தின் ஹீரோ ஒப்பனிங் மிக அருமையாக இருந்தது! தேவையே இல்லாமல் ஒரு கட்டடத்தை உடைத்துக்கொண்டு ஜீப் பாயுது! ஜீப் பாயும்போதே..ஹீரோ ஜீப்லருந்து வெளியே பாய்ந்து, அப்படியே முன்பக்கத்தில் உட்கார்ந்து கொள்கிறார்! இயக்குனர் தரணி, பேரரசுவின் குரு என்பதை நாம மறக்கக்கூடாது!

சிம்பு சைலண்டா எப்பிடி அடியாட்களை அடித்தார் எனக் காட்டும்போது, பார்க்கிறவங்களுக்கு எல்லாம் ஊமைக் குத்தா வலி! அந்தக் காட்சிகள்ல 'டைரக்டர் டச்' (ஆமா அப்பிடீன்னா என்ன?) தெரிஞ்சுது! ஹீரோ ஒப்பனிங் பாடல்லயே தூங்கித் தொலைச்சுட்டதால படத்தை/ரிச்சாவை மிஸ் பண்ணிட்டேன்!

அடுத்தாப்ல தரணி தேசிய விருது வாங்கிறமாதிரி படம் எடுக்கப்போறதா சொல்லிட்டுத் திரியுறாப்ல!

மெய்யாலுமே 2012 ல உலகம் அழிஞ்சிடும்போல இருக்குலே!


பெண்கள் ஜாக்கிரதை!
ன்னதான் காட்டுக்கத்தல் போட்டு எச்சரிக்கையா இருங்க உங்கள் பாதுகாப்பை நீங்கள்தான் உறுதி செய்து கொள்ளவேண்டும் இப்படியெல்லாம் லிஸ்ட் போட்டு, படம் போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், யாரும் காதில வாங்கிறதாத் தெரியல! அதது பாட்டுக்கு நடந்துகிட்டுத் தானிருக்கு! பப்ளிக்கிலயும் வந்திடுது!

ஒருவேளை என்னதான் ஆகப்போகுது...போனாப் போகுதுன்னு லூஸ்ல விட்டுடுறாங்களோ?

முகப்புத்தகத்தின் சுவரில் அராத்து எழுதிய வரிகள்...

'இத்தனை ஸ்கேண்டல்கள் வந்தும் பெண்களின் அஜாக்கிரதையைப் பார்த்தால் பெண்புத்தி Fun புத்தியோ என சந்தேகம்!'

என்னமோ போங்க!


பெண்கள்! - ரொம்ப ஜாக்கிரதை! - நான் என்னைச் சொன்னேன்!
னக்கும், பெண்களுக்குமான ராசி அப்பிடி யோசிச்சாலும் புரிபடாதது! முன்பின் தெரியாத பெண்கள் கூட என்மேல் காட்டும் அன்பு அற்புதமானது! அளவிட முடியாதது!
தெரியாத பெண்களே அப்பிடீன்னா..கொஞ்சமாவது தெரிஞ்ச பொண்ணுங்க?

பீஸ்ல ஏகப்பட்ட ஆணி! அந்தப்பக்கம், இந்தப்பக்கம் திரும்பாம உட்கார்ந்து, புடுங்கி, டயர்டாகி இடைல எழுந்து தண்ணி குடிக்கப் போனேன். 

நாம பாட்டுக்கு வழக்கம்போல பரட்டைத்தலை, கொஞ்சம்தாடி, கொஞ்சம் யோசனையோட பேய்த்தனமா போயிட்டிருந்தேனா.. 

நம்ம பக்கத்து பில்டிங் ஆபீஸ் பொண்ணு வழிமறிச்சுது! என்னடா வில்லங்கம் ரூட்ல கிராஸ் பண்ணுதேன்னு யோசிக்க...

ரொம்ப சீரியஸா வந்து ஒரு கேள்வி கேட்டுச்சு பாருங்க..

'ஜீ, உங்களுக்கு இந்த லைப் பிடிக்கலேன்னா நீங்க செத்துப் போயிட்டு, அடுத்த ஜென்மம் எடுத்து சந்தோஷமா வாழலாமே..'

ஒரு நிமிஷம் ஒண்ணுமே புரியல! காதுல கீ.. ன்னு கவுதம் மேனன் பட சவுண்ட் கண்டினியூவா கேட்ட மாதிரி இருந்திச்சு! என்னாங்கடி நடக்குதிங்கே?

அப்புறம் எனக்கு வந்திச்சு பாருங்க கோபம்! 

வந்த கோபத்துல..

பேசாம போய் ஐஸ் வாட்டர எடுத்து 'மடக் மடக்'குன்னு குடிச்சிட்டு வந்துட்டேன்!           

என்னா கொலவெறி?


என்ன கொடுமை சார்?
ம்ம தளத்துக்கு எப்பிடியெல்லாம் search  பண்ணி ஆளுங்க வர்றாங்கன்னு பார்த்தேன்.

A walk to remember ,போதிதர்மன், hummer , Malena,  கரிகாலன், சினிமா பரடைசோ - இப்பிடில்லாம்! இதெல்லாம் சரி!

எனக்கே தெரியாம, புதுசா ஒண்ணு இருந்திச்சு பாருங்க ஆடிப்போயிட்டேன். அது - திரிஷா வீடியோ! - இதெப்பிடி வந்திச்சு? நான் எங்கே எழுதினேன்?

எனக்கு கூகிள் மேல பயங்கரக் கோபம்!

ஒரு நியாயம் வேணாமா?

அவனே ஒழுங்கா விளக்கமில்லாமத்தானே கூகிள்ல சர்ச் பண்றான்? கொஞ்சம்கூட மனச்சாட்சியே இல்லாம அந்தப் பச்சப்புள்ள மனசை நோகடிக்கலாமா? ஒரு உண்மையான தேடலோட வர்றவன் இங்க ஒண்ணுமே இல்லைன்னதும் எவ்வளவு மனசு கஷ்டப்படுவான்? கொஞ்சம் விவரமா இருக்கவேணாமா?

என்ன கொடுமை கூகிள் சார்? 
ஒஸ்தி, பெண்கள் ஜாக்கிரதை! - என்னா கொலவெறி? | வானம் தாண்டிய சிறகுகள்..

45 comments:

மதுரன் said...

//பஸ்ல ஒஸ்தி போட்டாங்க!// என்ன பாஸ் சொல்லுறீங்க

MANO நாஞ்சில் மனோ said...

அடுத்தாப்ல தரணி தேசிய விருது வாங்கிறமாதிரி படம் எடுக்கப்போறதா சொல்லிட்டுத் திரியுறாப்ல!

மெய்யாலுமே 2012 ல உலகம் அழிஞ்சிடும்போல இருக்குலே!//

தரணியை வச்சி பவர்ஸ்டார ஹீரோவா போட்டு ஒரு படம் பண்ணி கேரளாவுக்கு அனுப்புனா என்ன...?

ஜீ... said...

//மதுரன் said...
//பஸ்ல ஒஸ்தி போட்டாங்க!// என்ன பாஸ் சொல்லுறீங்க//
படம் போட்டாங்க பாஸ்! ஏன் பாஸ்?

ஜீ... said...

//MANO நாஞ்சில் மனோ said...
தரணியை வச்சி பவர்ஸ்டார ஹீரோவா போட்டு ஒரு படம் பண்ணி கேரளாவுக்கு அனுப்புனா என்ன...?//

சூப்பர் ஐடியா பாஸ்! தரணியும், பவரும் இணைஞ்சா செம்ம டெரரா இருக்கும்லே!

மதுரன் said...

//படம் போட்டாங்க பாஸ்! ஏன் பாஸ்?// படம் இப்பத்தானே வந்திச்சு.. ஒருவேளை திருட்டு விசிடியோ

கார்த்தி said...

முழுசா படம் பாக்காம தரணி கிண்டல் பண்ணும் ஜீன் போக்குக்கு பலத்த கண்டனங்கள்!!

ஜீ... said...

//மதுரன் said...
படம் இப்பத்தானே வந்திச்சு.. ஒருவேளை திருட்டு விசிடியோ//அதே!

ஜீ... said...

//கார்த்தி said...
முழுசா படம் பாக்காம தரணி கிண்டல் பண்ணும் ஜீன் போக்குக்கு பலத்த கண்டனங்கள்!!//
இதென்னது? புதுசா ஆரம்பிச்சிருக்காங்களோ? :-)

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

பகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள்.

சாய் பிரசாத் said...

எனக்கு படம் பிடித்திருந்தது...
கூகுள் எனக்கும் இதுமாதிரியான எசகுபிசகு விட்டிருக்கிறது.

மருதமூரான். said...

சூப்பர் ஜீ...!

அராத்தின் பேஸ்புக் வரிகள் நானும் படித்தேன். அதில் “பயங்கர“ உண்மையிருக்கிறது.

ஆமாங்க பக்கத்து ஆப்பிஸ் பொண்ணுக்கு உங்க மேலே ஏதோ வந்திடிச்சுப்போல. இல்லாட்டி இப்படியெல்லாம் அந்தப்பிள்ளையை யாரு கேட்கச் சொன்னா?! இதுக்குப் பின்னால துப்பறியவேண்டிய கதையொன்று இருக்குது போல.


கலக்கலாக இருக்கு பாஸ்.

ஜீ... said...

//மருதமூரான். said...
ஆமாங்க பக்கத்து ஆப்பிஸ் பொண்ணுக்கு உங்க மேலே ஏதோ வந்திடிச்சுப்போல. இல்லாட்டி இப்படியெல்லாம் அந்தப்பிள்ளையை யாரு கேட்கச் சொன்னா?//

எவன் சிக்குவான்? உசுப்பேத்தி விடலாம்னே குரூப்பா திரியறாங்க போல! சூதானமா இருடா ஜீ!

சி.பி.செந்தில்குமார் said...

>>அவனே ஒழுங்கா விளக்கமில்லாமத்தானே கூகிள்ல சர்ச் பண்றான்? கொஞ்சம்கூட மனச்சாட்சியே இல்லாம அந்தப் பச்சப்புள்ள மனசை நோகடிக்கலாமா? ஒரு உண்மையான தேடலோட வர்றவன் இங்க ஒண்ணுமே இல்லைன்னதும் எவ்வளவு மனசு கஷ்டப்படுவான்? கொஞ்சம் விவரமா இருக்கவேணாமா?

haa haa ஹா ஹா செம செம

ஹேமா said...

ஜீ...அப்போ படம் பாக்காதீங்கன்னு சொல்றீங்க.நேரமிச்சம்.சொன்னதுக்கு நன்றி !

ஜீ... said...

//சி.பி.செந்தில்குமார்
haa haa ஹா ஹா செம செம// :-)

ஜீ... said...

//ஹேமா said...
ஜீ...அப்போ படம் பாக்காதீங்கன்னு சொல்றீங்க.நேரமிச்சம்.சொன்னதுக்கு நன்றி !//

நான் அப்பிடி சொல்லல! :-)
பலபேர் நல்லாயிருக்குன்னு சொல்றாங்க! ஏதோ பாத்து செய்யுங்க!

ரஹீம் கஸாலி said...

பஸ்ல போட்டாங்களா? buzz-தான் மூடியாச்சே?

KANA VARO said...

அடங்கோ! ஜீ பதில் போடுராப்பல..

KANA VARO said...

யோவ்! எனக்கு அசின் வீடியோப்பா.. என்ன கொடுமை கூகுள் சார்.

ஜீ... said...

//ரஹீம் கஸாலி said...
பஸ்ல போட்டாங்களா? buzz-தான் மூடியாச்சே?//
பேரூந்துங்கோ பாஸ்! :-)

ஜீ... said...

//KANA VARO said...
யோவ்! எனக்கு அசின் வீடியோப்பா.. என்ன கொடுமை கூகுள் சார்//

ஏன்யா? ஏன்? இங்க என்ன நேயர் விருப்பமா போகுது? :-)

சென்னை பித்தன் said...

//ஒரு உண்மையான தேடலோட வர்றவன் இங்க ஒண்ணுமே இல்லைன்னதும் எவ்வளவு மனசு கஷ்டப்படுவான்? கொஞ்சம் விவரமா இருக்கவேணாமா?//
அதானே!நல்லாக் கேட்டீங்க!
த.ம.10

மைந்தன் சிவா said...

ஒவொரு பஸ் பயணமும் ஒவ்வொரு பதிவை தருகிறது..ஹிஹி அராத்தின் ஸ்டேடஸ் பார்த்தேன் நானும்,,,செம!

நிரூபன் said...

வணக்கம் பாஸ்,

ஒஸ்தி இன்னமும் பார்க்கலை.

பெண்களின் அலட்சியப் போக்கு! வெறி பிடித்தலையும் ஆண்களுக்குத் தீனியாக அமைகிறது. நீங்கள் சொல்வது போல எப்போது தான் பெண்கள் பட்டுத் தெளியப் போகிறார்களோ((((;

ஆப்பிசில பல்பு வேற குடுக்கிறாளுங்க..
இனி உங்களைச் சுத்தி ஒரே ரசிகைங்க பட்டாளம் தான் இருக்கும் என நினைக்கிறேன்.

என்ன கொடுமை சார்..
திரிஷா வீடியோ மோகம் இன்னுமா நம்ம ஆளுங்களுக்கு விட்டுப் போகலை.

சுவையான தொகுப்பு பாஸ்.

துஷ்யந்தன் said...

அதெப்பெடி பாஸ்... உங்களுக்கு மட்டும் இவ்ளோ லொள்ளு லொள்ளு எழுத வருது..... உங்கள் பதிவுகளை படித்து முடிக்கும் வரை ஏன் படித்த பின் கூட ஒரு சிறு புன்னகை உதட்டில் தவழ்ந்த வடியே இருக்கு பாஸ் :)

ஜீ... said...

//சென்னை பித்தன் said...
அதானே!நல்லாக் கேட்டீங்க!//
சேம் ஃபீலிங்? நன்றி பாஸ்!

ஜீ... said...

//மைந்தன் சிவா said...
ஒவொரு பஸ் பயணமும் ஒவ்வொரு பதிவை தருகிறது//
பதிவு தருதோ இல்லையோ! ஒரு மொக்கைப்படத்தைப் பாக்க வச்சிடுறாங்க! ஆனா தெலுங்கு டப்பிங் படத்துக்கு, தமிழ் எவ்வளவோ பரவாயில்ல! :-)

ஜீ... said...

//நிரூபன் said...
ஆப்பிசில பல்பு வேற குடுக்கிறாளுங்க//
விடுங்க பாஸ்! ஒரு வீரனுக்கு (பதிவனுக்கு) இதெல்லாம் ஜகஜம் இல்லையா? :-)

ஜீ... said...

//துஷ்யந்தன் said...
அதெப்பெடி பாஸ்... உங்களுக்கு மட்டும் இவ்ளோ லொள்ளு லொள்ளு எழுத வருது..... உங்கள் பதிவுகளை படித்து முடிக்கும் வரை ஏன் படித்த பின் கூட ஒரு சிறு புன்னகை உதட்டில் தவழ்ந்த வடியே இருக்கு பாஸ் :)//

அய்யோ என்னைக் கலாய்ச்சிடாங்களே! :-)

விக்கியுலகம் said...

எ”லெ” மாப்ளே...கொன்னுட்ட போ ஹிஹி!

ஜீ... said...

//விக்கியுலகம் said...
எ”லெ” மாப்ளே...கொன்னுட்ட போ ஹிஹி!//
நன்றி மாமோய்! :-)

அம்பலத்தார் said...

ரசித்துப்படித்தேன், சின்னச்சின்ன விடயங்களையும்கூட சுவாரசியமாக எழுதுகிறது லேசான காரியமல்ல நகைச்சுவைகலந்த உங்க எழுத்து உண்மையிலேயே நல்லாயிருக்கு வாழ்த்துக்கள் ஜீ

அம்பலத்தார் said...

அதற்குள் ஒஸ்தியா? புதுப்பட ரிலீசுடன் கூடவே திருட்டுவீடியோவும் வெளியாயிடுதா என்ன?

ஜீ... said...

//அம்பலத்தார் said...
அதற்குள் ஒஸ்தியா? புதுப்பட ரிலீசுடன் கூடவே திருட்டுவீடியோவும் வெளியாயிடுதா என்ன?//
ஆமா பாஸ்! இரண்டும் ஒரேநேரத்தில வந்திடும்!

மதுமதி said...

எழுத்தின் நடை பிரமாதம் வாழ்த்துகள்..செத்தபின்புதான் தெரிந்தது..

தர்ஷன் said...

Boss நான் இப்ப படிப்பிக்ககுள்ள, எல்லோரும் ஒஸ்தி பார்த்தீங்க இல்ல, அதுல சிம்பு ஜீப்ல ஏறி நிலத்தை நோக்கி சுட்டதும் ஜீப் உடனே மேலே கிளம்புமே அதுதான் நியூட்டனின் மூணாம் விதி அப்படின்னு சொல்லித்தான் படிப்பிக்கிறேன்

ஜீ... said...

//@தர்ஷன் said...
நியூட்டனின் மூணாம் விதி அப்படின்னு சொல்லித்தான் படிப்பிக்கிறேன்//

அட அதைத்தான் இப்பிடி ரிஸ்க் எடுத்து படத்தில சொல்லியிருக்காங்களா? இது தெரியாம தப்பா....அப்போ படத்தை கண்டிப்பா பாக்கணும் பாஸ்! :-)

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை.
பகிர்விற்கு நன்றி நண்பரே!

க.சுரேந்திரகுமார் said...

தமிழ்நாட்டுக்கே ஆப்புதான் தரணியெல்லாம் டாப்புதான்... அது நெசமாத்தான் இருக்கும் போலிருக்கே?? ...

யூடியூப்பில் ஒரு றிவியூ வீடியோ பார்த்தேன் அதில் யாரோ சொன்னாங்க நீங்க படம் பார்க்கும்போது சந்தானத்தை ஹீரோவாயும் சிம்புவை காமெடியனாகவும் பார்ததீங்கன்னா படம் சூப்பராய் இருக்கும் என்று....

அப்புறம் உங்க பதிவு நச்சுன்னு இருந்துச்சுங்க.... ஆனாலும் ஒரேயொரு குறை அந்த சட்டை கிழியிற சீனைப் பத்தி ஒண்ணுமே சொல்லலயே????

Mahan.Thamesh said...

படம் படு போர் அப்பிடின்னு சொல்லுறிங்களா பாஸ் ; பகிர்வுக்கு நன்றி

மழை said...

தமிழ் நாடே ஒரே கொலவெறியா கிடக்கு இதுல ஒஸ்தி வெறி வேறயா?

♔ம.தி.சுதா♔ said...

/////முன்பின் தெரியாத பெண்கள் கூட என்மேல் காட்டும் அன்பு அற்புதமானது! அளவிட முடியாதது!////

யோவ் உடம்பில எத்தனை மச்சமையா இருக்கிறது...

♔ம.தி.சுதா♔ said...

அடடா ஒஸ்தி உங்க மனசையும் நாஸ்தி பண்ணிடிச்சா...

அது தான் நான் இன்னும் பார்க்கல..

மனசாட்சி said...

ஜீ.....பிடிச்சிருக்கு எழுத்து நடை - தொகுத்து எழுதியதும்.

பாராட்டுக்கள்.

சிவகுமாரன் said...

ஜீ கிட்ட த்ரிஷா வீடியோ இருக்குன்னு யாரோ சொன்னாங்கப்பா