த்ரிஷாவும்
நண்பர்களும் நள்ளிரவு தாண்டிய அகாலவேளைகளில் நடுவீதியில் கூடிக் கும்மாளமடிப்பது குறித்து ஏரியா வாசிகளுக்குப் புகார்கள் இருந்தன.
ஆனாலும் பெரிய இடத்தில் வைத்துக்கொள்ளக் கூடாது என்கிற ஒரே காரணத்துக்காக அமைதி
காத்தார்கள்.
அப்புமணி குறித்து யோசிக்கும்போது, ‘பெரிய
இடம்’ என்பதை விடப் ‘பெரிய வாய்’ என்பது சரியாக இருக்கலாம். வாயைத்திறந்தால்,
தமிழ் மொழிப் பரிச்சயமே இல்லாத த்ரிஷாவின் நண்பர்களே தெறித்து ஓடிவிடுவார்கள். மற்றபடி,
த்ரிஷா பற்றியதோ, திரிஷாவுக்கும் எனக்குமான முதல் சந்திப்பு பிள்ளையார் கோவிலில்
நடந்ததைப் பற்றியதோ அல்ல இந்தப்பதிவு. கெட்டவார்த்தைகள் பற்றியது. த்ரிஷா பற்றிப்
பின்னர் பார்க்கலாம்.
இப்போது நினைத்தால் வெட்கமாகவும், வேதனையாகவும் இருக்கிறது.
என்ன மாதிரியான இலக்கிய வறட்சி மிக்க சூழலில் வளர்ந்திருக்கிறேன்? ஒன்பது வயதில்
ஒருவனுக்குக் கெட்டவார்த்தை தெரியாமல் இருப்பது எவ்வளவு கொடுமையானது? அதுவரை காதில்
விழுந்ததிலையா அல்லது கவனிக்கவில்லையா? அந்த இடம்பெயர்வு மட்டும் இல்லையென்றால் இந்தக் குறைந்தபட்ச விழிப்புணர்வு கூட
இருந்திருக்காதே!
என்னைவிட வயதொன்று குறைந்த என்
விளையாட்டுத் தோழி. அவளுக்குத்
தெரிந்திருந்தது. எனக்குத்தான் தெரியவில்லை. என்ன ஒரு அவமானம் பாருங்கள்.
அதைவிடக் கொடுமை, அவள் தம்பி தூஷணத்தில் மிகுந்த புலமை
பெற்று விளங்கியதாகப் பேசிக்கொண்டார்கள். அப்போதெல்லாம் எனக்குத் தெரிந்த ஆகச்
சிறந்த கெட்ட வார்த்தையான சனியன், மூதேவியை எப்போதாவது வாய்தடுமாறிச் சொன்னாலே அம்மாவால் கடுமையாகத்
தண்டிக்கப்பட்ட எனக்கு அது மேலும் ஆச்சரியத்தைக் கொடுத்தது, அவன் வயது.
மூன்று வயது ! இந்தச் சின்னவயதில் என்ன ஒரு ஞானம்! என்மனதில் அவனுக்குத் திருஞான சம்பந்தருக்குச் சமமான இடத்தை வழங்கச் சித்தமாயிருந்தேன்.
மூன்று வயது ! இந்தச் சின்னவயதில் என்ன ஒரு ஞானம்! என்மனதில் அவனுக்குத் திருஞான சம்பந்தருக்குச் சமமான இடத்தை வழங்கச் சித்தமாயிருந்தேன்.
அவன்தான் என் அப்போதைய ஒரே நம்பிக்கை.
அவனைக் குருவாகக் கொண்டு சீண்டி, உசுப்பேத்தி அவன் உதிர்க்கும் முத்துக்களைப் பொறுக்கிவிடலாம் என ஐடியா வந்தது.
ஆனால் என் நேரம்! அவன் தூஷண பிரசங்கத்தை சமீப காலத்தில்தான் நிறுத்தியிருந்தான்.
அவன் சித்தப்பா, மாமா
அத்தைகள் என்று வருவோர் போவோர் எல்லாரும் மேற்கொண்ட சரமாரியான தாக்குதல்களை
அடுத்து, தனது போராட்ட
வழிமுறையை மாற்றியிருந்தான். அதாவது இரசாயன ஆயுதப் பிரயோகத்தில் ஈடுபடத் தொடங்கியிருந்தான்.
எதிரி மீது துப்பிவிடுவது! ஆக, என் நம்பிக்கைகள் எல்லாம் தகர்ந்துபோய் வாழ்ந்துகொண்டிருந்த அந்த நாளில்தான்
அந்த நல்ல சேதியைத் தோழி பகிர்ந்துகொண்டாள். அருகாமையில் ஒரு வீட்டு மதிற்சுவரில்
யாரோ கெட்டவார்த்தைகள் எழுதியிருக்கிறார்கள் என்றாள்.
இந்த இடத்தில் விவரமாக இருப்பதாக
நினைத்துக்கொண்டு, அப்பாவித்தனமான முகபாவனையோடு கேட்டேன்.
"என்ன எழுதியிருக்கு?"
"தூஷணம்"
"அதான் என்ன எழுதியிருக்கு"
“அதான் தூஷணம்"
"எப்பிடி.. எழுதியிருக்கு?”
"அதச் சொல்லக்கூடாதே" -
அவள் என்னைவிட விவரமாக இருந்தாள்.
பெண்கள் எப்போதுமே எந்த வயதிலுமே
எங்களைவிட விவரமாகத்தான் இருக்கிறார்கள்.
"நீயே போய்ப் பார். மூண்டாவது
வீடுதாண்டி ஒழுங்கை முடக்கில இருக்கிற மதில்ல எழுதிருக்கு" உதவிக்
குறிப்புகள் தந்தாள்.
புதிய விஷயத்தைக் கற்றுக்கொள்ளும், ஆவல், தேடலுடன் சிட்டாய்ப்
பறந்தேன். திரும்பி வரும்போது 'பாத்துட்டியா' என்பதுபோல
தலையசைத்துப் புன்னகைத்தாள். என் முகத்தில் தெரிந்த ஒளி அவளுக்கு நம்பிக்கையைக்
கொடுத்திருக்க வேண்டும். நானும் ஒரு மாதிரி உண்டு, இல்லை,
பொய், மெய், நன்மை, தீமை எல்லாம் கடந்த, நடுவில் இருக்கக்கூடிய
ஞானச்சிரிப்பு சிரித்துவைத்தேன்.
ஆனால், முகத்தில் தெரியும் ஒளி ஞானம் பெற்றதால் மட்டுமே
வருவதில்லை. நாம் வாங்கிய பல்பும் ஒளியைக் கொடுக்கும் அல்லவா? அந்த மதிற்சுவர்
முழுவதும் என்னென்னமோ எல்லாம் எழுதியிருந்தது. அதில தூஷணத்தை எங்க போய்க்
கண்டுபிடிக்கிறது?
கெட்டவார்த்தை பேசுபவர்கள் எல்லோரும்
கெட்டவர்கள் என்றொரு பொதுவான நம்பிக்கை சிறுவயதில் பள்ளி நாட்களில் எனக்கும்
இருந்தது. இப்போதும்கூட பலருக்கும் இருக்கலாம். சரமாரியாக வார்த்தைக்கு வார்த்தை
அடைமொழியாகப் பேசும் ஒருவன்,
சினிமாப்பாடல்களை செந்தமிழில் மாற்றிப் பாடும் நண்பனொருவன் என பல
விற்பன்னர்கள் நம்மோடு படிப்பார்களில்லையா?
எங்கள் பள்ளியில் ஒரு பீ.டி.
வாத்தியார் புதிதாக வந்திருந்தார். பொதுவாக இங்க்லீஷ் வாத்தியார்களுக்கு பள்ளியில்
ஒரு மதிப்பு இருப்பதுபோல பீ.டி.வாத்தியார்கள் மீதும் ஒரு பார்வை இருந்தது.
அவர்களைக் கைகழுவி விட்டதுபோல என்ன செய்தாலும் யாரும் கண்டுகொள்வதில்லை. எப்போதோ
துவைத்த ட்ராக் சூட் அணிந்துகொண்டுதான் பள்ளிக்கு வருவார். வாயில் தமிழ் துள்ளி
விளையாடும். சாதாரணமாக அவரால் பேச முடியாதோ என்பதுபோலிருக்கும் அவர் பேச்சு.
பள்ளிக்கு அவர் வந்து அப்போதுதான் ஒரு
வாரம் ஆகியிருந்தது. எங்கள் வகுப்போடு பரிச்சயமாகியிருந்தார். காலையில் வரிசையாகச்
சென்றுகொண்டிருந்தபோது ரணகளமாக கமெண்ட் அடித்தார். "பெரிய ஆக்களாடா நீங்க? ட்ரவுசரையும் மாட்டிக்
கொண்டு, சூத்தையும் ஆட்டிக்கொண்டு போறதப் பாரு!"
அன்று உதைபந்தாட்டப் பயிற்சி. “பந்தை
நிலத்தில் வைத்து சுயாதீனக் காலை பந்துக்குப் பக்கவாட்டில் வைத்து, இயங்கும் காலை
பின்னோக்கி இழுத்து உள்ளங்கால் வளைவால் மெதுவாக உருட்டவேண்டும்” என்றார்.
பின்பு, "எங்க நான் சொன்னதைச்
சொல்லு" - ஒருவனிடம் கேட்டார்.
அவன் சொல்ல ஆரம்பித்தான், "பந்தை நிலத்தில் வைத்து
சுகயீனக் காலை பக்கவாட்டில" என்றபோதே புரிஞ்சு போச்சு. ஒருத்தன்
சிக்கிட்டான்.
"டேய் என்னது சுகயீனக்காலா"
வாத்தி டென்ஷனாகி, சீரியசாகக்
கேட்பதுபோல,
"இங்க வேற யாருக்காவது சுகயீனக் கால் இருக்கா?"
"இங்க வேற யாருக்காவது சுகயீனக் கால் இருக்கா?"
யாரோ ஒரு அப்பாவி அதை நம்பி
"சேர் எனக்கிது வாதக் கால்" என்றான்.
எல்லாரும் சிரிப்புடன் வாத்தியையே பார்த்துட்டு இருந்தோம். வாத்தி, "ஹூம் இனி ஒவ்வொருத்தனா சொல்லுவானுகள் வாதக்கால், ஓதக்கொட்டை!”
எல்லாரும் சிரிப்புடன் வாத்தியையே பார்த்துட்டு இருந்தோம். வாத்தி, "ஹூம் இனி ஒவ்வொருத்தனா சொல்லுவானுகள் வாதக்கால், ஓதக்கொட்டை!”
முன்பு வேலைசெய்த அலுவலகத்தில்
ஆங்கிலத்தில் கெட்ட வார்த்தைகள் பிரவாகமாக ஓடும். ஒவ்வொரு வார்த்தைக்கும்
அடைமொழியாக கெட்டவார்த்தையாக பேசியிருக்கிறேன். அப்போதுதான் உணர்ந்தேன். நம்
சொந்தமொழியில் பேசாமல் ஆங்கிலத்தில் பேசிக்கொள்ள எந்தவித மனத்தடையும்
இருப்பதில்லை. பின்பு தமிழிலும். என் பொறுமையின் எல்லையைத் தாண்டச்செய்யும்போது
வேறு சரியான தமிழ் வார்த்தைகள் கிடைப்பதில்லை. உண்மையைச் சொன்னால் நான் கெட்ட
வார்த்தைகளில் சரமாரியாக உரையாடியது எல்லாம் ஒருசில பெண்களுடன் மட்டும்தான் என்பதை
நினைக்கும்போது ஒரு மாதிரியாகத்தானிருக்கிறது.
சில வருடங்களுக்குமுன் முன்,
யாழ்ப்பாணம் கசூரினா கடலில் குளித்துக் கொண்டிருந்தோம். கரைக்குச் சமீபமாக ஒரு
ஏரியாவில் மீனவர்கள் வலை கட்டி மீன் பிடிக்கும் செட்டப் செய்திருந்தார்கள்.
அதற்குள் ஆர்வக் கோளாறுத்தனமாக சிலர் சென்றுவிட்டார்கள். "டேய்.." குரல்
கேட்டது. கரையிலிருந்து ஒருவர் சிறு கட்டுமரத்தில் வந்தார். கையிலிருந்த
துடுப்பினால் ஓங்கி தண்ணீரில் அடித்து எல்லோரையும் வெளியே அனுப்பினார். கூடவே
செந்தமிழ்ப்பாட்டும். குடித்திருந்தார். அவர் கோபம் நியாயமானது. அந்தத் துடுப்பு
மட்டும் தவறுதலாக மேலே பட்டுவிட்டால், பத்து நாளைக்கு எழும்ப முடியாது என்பதால் எல்லோரும் சிரித்துகொண்டு அவசரமாக
வெளியேறினார்கள். நாங்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம்.
அந்தக் கூட்டத்தில் ஒரு
வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவர் இருந்தார். யாழ்மக்கள் வெளிநாட்டுக்காரர்
விஷயத்தில் மறப்போம், மன்னிப்போம்
கொலகையையே கடைப்பிடிப்போம். அதுபோல அவர்களும் எந்த முட்டாள்தனமான காரியமென்றாலும்
முன்னின்று முகம்கொடுப்பார்கள். அப்படித்தான் நடந்த தவறுக்கு அவராகவே விளக்கம்
கொடுக்க முன்வந்தார்.
"இல்ல நாங்கள் வந்து வெளிநாட்டில
இருந்து வந்ததால.."
“அவர் வெளிநாட்டு பு--- அவரும் அவற்ர ஸ்டைல் பு-- கழுத்தில ஒரு சங்கிலிப் பு--- அதில சு-- ஆட்டிக் கொண்டு
வந்திட்டார் விளக்கம் குடுக்க!”
பாராட்டு வாங்கியவர் உட்பட, எல்லாரும் சிரித்தார்கள்.
சரி ஒற்றை வார்த்தையில் முடிக்கலாம்
என்று நினைத்துச் சொன்னார், "Sorry"
"ம்ம்ம் அவற்ற இங்கிலீஷ் பு----!"
மீண்டும்
த்ரிஷாவுக்கே வருவோம்.
அன்றொருநாள்
காலை நேரத்தில் பிள்ளையார் கோவிலுக்குப் போனபோது ‘த்ரிஷா வெளில போ வெளில..’ என்று
சுதா அய்யா குரல் விரட்டியது. த்ரிஷா பதில் சொல்லாமல் போக மனமில்லாததுபோல
பார்த்துக் கொண்டிருந்தது. ஆச்சரியம் தாங்கவில்லை. என்னவொரு பொருத்தம். வெள்ளையாக, உயரமாக வெடவெடவென ஸ்லிம்மாக இளமையாக. யார்
வைத்திருப்பார்கள் அந்தப் பெயரை. என் ஆச்சரியம், யோசனை பற்றிக் கண்டுகொள்ளாமல் த்ரிஷா ஓடிப்போய்விட்டது.
அப்புமணி
வீட்டில் நாலைந்து நாய்கள் இருந்தன. வேறு யார் பெயர்களும் தெரியாது.
எல்லாவற்றுக்கும் காரண, அகாரணப்
பெயர்கள் இருந்திருக்க வேண்டும். குறிப்பாக எந்தவொரு கோபமான தருணத்திலும் அவற்றின்
பெயர் கொண்டே மரியாதையாக அழைக்கபட்டார்கள் என்றும் பின்னர் தெரிந்தது. பாருங்கள், அதுவும் திரிஷாவின் மூலமாகத்தான்!
ஓர்
மழைக்கால மாலை. இருளடைந்திருந்த அப்புமணி வீட்டு வராந்தாவில் அவர் தூங்கிக்
கொண்டிருந்ததை நாங்கள் யாரும் காணவில்லை. எங்கிருந்தோ த்ரிஷா ஓடிவர, பின்னாலேயே த்ரிஷாவின் ஆண் நண்பர்கள் பத்துப்
பன்னிரண்டுபேர் பின்னாலேயே ஓடி வந்தார்கள். த்ரிஷா அப்புமணியைக் கண்டிருக்க
வேண்டும். லாவகமாக அவரைத் தாண்டிப்பாய்ந்து ஓடிவிட்டாள். சுவாரசியமாகத்
துரத்திகொண்டுவந்த நண்பர்கள் அப்புமணி தூங்கிக்கொண்டிருந்ததைக் கவனிக்காமல்,
அப்புமணி மீது இடறி விழுந்து புரண்டெழும்பினார்கள்.
என்ன
நடந்ததென்றே தெரியாமல் எக்கச்சக்க அதிர்ச்சியுடன் பதறி எழுந்துகொண்ட அப்புமணி
அவிழ்ந்த சாரத்தை இறுக்கப் பிடித்துக்கொண்டு ஆக்ரோசமாகக் கத்தினார்.
“இவள்
த்ரிஷா பு---- தான் ஓ---காக இஞ்ச எல்லாரையும் கூட்டிக்கொண்டு வந்துட்டாள்”
0 Comments:
Post a Comment