Thursday, April 19, 2012

என்னா பார்வை!

என்ன பார்வைடா சாமி! இப்படியொரு பார்வையை நான் வாழ்க்கைல சந்திச்சதேயில்ல!

பொதுவா பொண்ணுங்க நம்மளைப் பார்த்தாலே முறைச்சுத்தான் பாப்பாய்ங்க அதெல்லாம் நமக்கு ஒரு பெரிய விஷயமே இல்ல! ஆனாலும் இந்த வாட்டி ரொம்ப கொலவெறியோட, கொடூரமா!

ஒரு கணநேரப் பார்வையில எப்படி அவ்வளவு வெறுப்பை, கோபத்தை வெளிப்படுத்த முடியும்? ஒட்டுமொத்த உக்கிரத்தையும் அப்படியே கண்களில் தேக்கி, எதிராளியை நோக்கித் தாக்க முடியும்? ஆச்சரியப்பட்டுப் போனேன்! அசிங்கப்பட்டதையே ஆச்சரியமா பாக்கிறம்னா அப்ப நாங்கெல்லாம் எவ்வளவு நல்லவய்ங்க?

அதில பாருங்க அழகான பொண்ணுங்க கோபமா முறைச்சா அதோட தாக்கம் ரொம்ப அதிகம்! ஆனா நம்ம சிநேகா அக்கா மாதிரியும் சில பொண்ணுங்க இருக்கு! கோபமா பாக்குதா, ரொமான்ஸ் லுக்கு விடுதான்னே வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாம!


அந்தப் பொண்ணும் ரொம்ப அழகா இருந்திச்சு! ஆனா நிச்சயமா கோபமாத்தான்..சம்பவம் எப்பிடி நடந்திச்சுன்னா...

நானும் நம்ம தோஸ்து கன்சல்டன்ட் மாமாவும் (நம்ம அபீஸ்ல இருக்கிற சிங்கள மாமாக்கள்ல வயசு குறைஞ்சவர்) பின்னேரம் நகர்வலம் வந்துட்டு இருக்கோம்! தோஸ்துக்கு வெத்திலை போடற பழக்கம் இருக்கு! அப்பிடியே அசை போட்டுட்டே வர்றாரு! லேசா மழை தூறிட்டு இருக்கு!

அந்த ரோட்டால ஏதோ கோயில்லருந்து சுவாமி ஊர்வலம் வரப்போகுது. வீட்டு வாசல்ல பூரண கும்பம்லாம் வச்சு, ரெடியா நின்னுட்டிருக்கு அந்த அழகான பொண்ணு! அவங்க வீட்டு வாசல்ல இருந்து அஞ்சு மீட்டர் தள்ளி மழை வெள்ளம் தேங்கி நிக்குது! இப்ப கரெக்டா நாம ரெண்டுபேரும் சீன்ல என்டர் பண்றோம்! அதுவரைக்கும் அங்கே ஒரு பொண்ணு நிக்கிறதையே நான் காணல! அதுக்கப்புறமும் நம்ம தோஸ்து காணல!

திடீர்னு நம்ம தோஸ்து எதிர்பாராத விதமா அந்த வெள்ளத்தில வெத்திலைச் சாறை  -\'புளிச்..!'/ - நான் அரண்டு போய் சுற்றுமுற்றும் பார்க்க...அப்பத்தான் கும்பம், குத்துவிளக்கு, பொண்ணு எல்லாம் வியூல வருது!

மைண்ட் வாய்ஸ் - ஒரு குத்துவிளக்கே குத்துவிளக்கு ஏற்றி வைத்திருக்கிறதே... அடடே ..ஏ.. .அ... அய்யய்யோ..ஓ!!

கோபம் வராதா? சாமிய எதிர்பார்த்து நிக்கேக்க ஒரு ஆசாமி வந்து இப்பிடி துப்பினா? எவ்வளவு கோபம் வரும்? கெட்டவார்த்தைல திட்டணும்போல இருக்காதா? மனசுக்குள்ள நிச்சயமா திட்டியிருக்கும்! - வெளிப்படையா திட்டினாக்கூட நியாயம்தான்! முறைச்சதில தப்பே இல்ல! ஆனா....அதுக்கு அந்தாளைத்தானே முறைக்கணும்? என்னை ஏன்? ஒரு நியாயம் நீதி வேணாமா? என்னதான் நியாயத்துக்காக முறைச்சாலும், முறைக்கிறதில ஒரு நியாயம் வேணாமா?

இந்த இடத்தில நம்ம வரலாற்றை ஒருமுறை திரும்பிப் பார்த்தா...
காலங்காலமா இப்பிடித்தான் நடந்துட்டு வருது. நான் எதுவும் பண்ணாமலே தாய்க்குலங்களோட அன்பைச் சந்திக்கவேண்டியிருக்கு! சும்மாவே எனக்கும் அவிய்ங்களுக்கும் ஆவுறதில்ல! அதனால ஒதுங்கியே போயிடுறது! ஆனாலும், நம்ம கூட இருக்கிறவனுகள் எவனாவது அப்பப்ப தேரை இழுத்து தெருவில விட்டுருவானுகள்.

அவுனுங்க ஸ்டார்ட் மியூசிக் சொல்லிவைக்க அந்த நேரம் பாத்து நான் கரெக்டா சிக்கிடுவேன் பூ மிதிக்க! முன்னாடியெல்லாம் ரொம்ப பீல் பண்ணுவேன்! அப்புறம் அதுவே பழகிப்போய் அப்பிடியே விட்றா விட்றா சூனா பானான்னு போயிட்டே இருப்பம்!

அப்பிடியே தோஸ்தைப் பார்த்தேன்!
வெள்ளையா, முன்வழுக்கை, சுருட்டை முடி! தாடி, தொப்பை - அதைக் கவர்பண்ணி டைட்டா ஒரு அழுக்கு நிற டீ.ஷர்ட்! பார்த்தா படிச்சவன் மாதிரியா இருக்கான்? இவனெல்லாம் ஒரு எஞ்சினியர்ன்னு யாராவது நம்புவாங்களா? கால்ல விழுந்து அழுது கெஞ்சிக் கேட்டாலும் நம்ப மாட்டாய்ங்க! ஒருவேளை பழைய மலையாளப் படங்கள்ல வர்ற வில்லன்கள் இப்பிடி இருந்திருக்கலாம்!

யோசிச்சுக் கொண்டிருந்த நேரத்தில அவனைவிட மோசமா இன்னொருத்தனைப் பார்த்து பயந்துட்டேன். கறுப்பா, சீப்பே படாத தோள்வரை வளர்ந்த பரட்டைத்தலை, தாடி! அப்பிடியே வெட்றாய்ங்க, கொல்றாய்ங்கன்னு கத்திட்டே மதுரைக் கதைகள்ல வர்ற அடியாளுங்க மாதிரியே! அதிர்ச்சியாயிட்டேன் - ஏன்னா.. தண்ணீல தெரிஞ்ச அந்த உருவம் - அது நான்தாங்கோ!  - நாம இப்பிடியா இருக்கோம்?! எனக்கே இப்பிடின்னா... 

நல்லவேளையா அந்தநேரம் லேசா மழை தூறிட்டு இருந்ததால இந்நேரம் உசிரோட இருந்து டைப் பண்ணிட்டு இருக்கேன்! இல்லைன்னா எரிஞ்சு போயிருப்பேன்! அவ்வளவு உக்கிரமான பார்வை!

அப்புறமா மனசைத்தேத்தி யோசிச்சதில ஒரு ஆச்சரியமான விஷயம்! எப்பிடியும் அந்தப் பொண்ணுக்கும் கண்ணகிக்கும் 98.7 சதவீதமாவது டீ.என்.ஏ ஒத்துப் போகும்னு தோணுது! சரி நமக்கெதுக்கு? அதெல்லாம் விஞ்சானி சுபா  ஏரியால்ல!

போனவாரம்...
நானும் தோஸ்தும் நகர்வலம் வரும்போது ஒரு இடத்தில தோஸ்து வெத்திலைய 'புளிச்!' நான் அரண்டுபோய்....பார்க்கல! கொஞ்சம் தள்ளி ஒரு பொண்ணு நிக்கிறது அவுட் அப் போக்கஸ்ல தெரியுது. மறுபடியுமா? நான் திரும்பவேயில்ல யாருகிட்ட...சிக்குவமா நாங்க!

15 comments:

 1. ஹா ஹா .. எப்படில்லாம் சிக்க வேண்டி இருக்கு ..
  பார்த்துங்க நண்பா ..

  ReplyDelete
 2. //அரசன் சே said...

  ஹா ஹா .. எப்படில்லாம் சிக்க வேண்டி இருக்கு ..
  பார்த்துங்க நண்பா ..

  //

  சிங்கம் சிக்காதுல ???????

  ReplyDelete
 3. நல்லாயிருக்குங்க ரசிச்சேன்..

  ReplyDelete
 4. நகர்வலம் நல்லாருந்துருக்கும் போல ஒரு பெண்ணோட முறைப்புல

  ReplyDelete
 5. ரசனையான பதிவு..சுவாரஸ்யமாக உள்ளது, மிக்க நன்றிங்க

  ReplyDelete
 6. துப்பு இல்லாதவனே அப்படின்னு உங்களை யாரும் இனி சொல்ல முடியாது.....ஹிஹி!

  ReplyDelete
 7. பாஸ் வயசு போனாலும் குமரன் என்று நினைப்பு போல சினேஹா அக்காவா எடுடா மனோவின் அருவாளை அதுவும் கொழும்பில் மாப்பூ வான் வரும் . வெத்திலை வேற நக்கல்! ம்ம்ம்ஹீ

  ReplyDelete
 8. செம காமெடி :p எப்பிடி எல்லாருமே ஒரே மாதிரி இருக்கிறோம்!

  ReplyDelete
 9. ஜீ...அனுபவிங்க அனுபவிங்க !

  ReplyDelete
 10. துர்பார்க்கு துப்பாமலே தூவும் மழை!!!

  ReplyDelete
 11. வணக்கம் ஜீ!பாருங்கள்,ஒருத்தராவது அனுதாபமாக எழுதியிருக்கிறார்களா?அட,நம்ம ஊருப் பொண்ணு,ஹேமா!அதுக்குக் கூட உங்களைப் பார்த்தால் ..........................சரி,சரி விடுவம்.ஊர் வம்பு நமக்கெதுக்கு?விஷயத்துக்கு வருவோம்:இந்தக் குரு மாற்றத்தின் பின்னாவது உங்களுக்கு தாய்க் குலங்களின் அருட்பார்வை கிட்ட இறைவனை இறைஞ்சுகிறேன்!Ha!Ha!Haa!!!!!!

  ReplyDelete
 12. அய்யோ அய்யோ செம்ம காமடி

  ReplyDelete
 13. hii.. Nice Post

  Thanks for sharing

  Best Regarding.

  chicha.in

  ReplyDelete
 14. என்னவோ போங்க...ஜீ!

  ReplyDelete

Followers

Powered by Blogger.

Follow by Email

Copyright © வானம் தாண்டிய சிறகுகள்.. |