Monday, February 13, 2012

கவனிப்பு!"ஐந்தரை மணிக்கு ஐட்டம் பஸ் ஸ்டாப்புக்கு வந்துடும்"- அறிவுறுத்தப்பட்டிருந்தேன்.

எனக்கு இது முதல் அனுபவம். உள்ளே இருக்கிற டென்ஷன் கண்களில் தெரிந்து விடாமல் கவனமாக,சுற்றுமுற்றும் போலீஸ் நடமாட்டம் இருக்கிறதா என கவனித்தேன்.

கவனிப்பு என்பது மிக முக்கியமான விஷயம். அதுவும் சில விஷயங்களில்  அதீத கவனிப்புத் தேவை.


அவளின் அடையாளம் - அழகி! ப்ளூ ஜீன்ஸ், வைட்  டீ ஷர்ட்!  டீ ஷர்ட்டின் மார்பில் Shut the front door! என்று எழுதியிருக்கும். ரீபோக் ஷூ அணிந்திருப்பாள்.

அவள்தான் ஐட்டம்! - அப்படி நீங்கள் நினைத்தால், நான் பொறுப்பல்ல!

அவள் தோளில் Laptop பை. அதற்குள் கன கச்சிதமாக அடுக்கப்பட்ட சிறிய பாக்கெட்டுகளில்...ஐட்டம், பிரவுன் சுகர்!


தோ அவள்தானா!எதிர்பார்த்த மாதிரியே என்னருகே வருகிறாள்! ஆனாலும் எதிர்பார்க்கவில்லை - இவ்வளவு அழகாயிருப்பாள் என்று! இவளுக்கு ஏன் இந்த வேலை? இவள் எல்லாம் பணம் சம்பாதிக்க இவ்வளவு ரிஸ்க் எடுக்கணுமா? எவ்வளவு ஈசியா..

எனது அடையாளம் சொல்லப்பட்டிருக்கும். ஆனாலும் கண்டு கொண்ட மாதிரியே காட்டிக்கொள்ளவில்லை - அனுபவசாலி! ஒரு சிறு சலனம்...சிறு கீற்றுப் புன்னகை...ம்ஹூம்!

ஆனால் நான்...அவள் ஒரு 'ம்..' சொன்னால் என் ஜாதகத்தையே ஒப்புவித்து விடுவேனோ எனத் தோன்றியது. வைட்  டீ ஷர்ட்டின் மார்பில் 'Shut the front door!' பார்த்து பாதி திறந்த வாயை மூடிக்கொண்டேன்.

'எதுவும் பேசாமல் உன்னோட பெட்டியை அவள் பக்கத்துல வக்கிறே நம்ம சங்கேத கேள்வி கேட்டு, பதில் கன்ஃபர்ம் பண்றே'

முதல் கேள்வி 'மன்மோகன் உப்பு யூஸ் பண்ணுவாரா?', பதில் மௌனம்!

கேட்டேன். மௌனமாயிருந்தாள்! லேசாகப் புன்னகைத்தது போல் தோன்றியது, பிரமையாகக் கூட இருக்கலாம்.

இரண்டாவது கேள்விதான் உதைத்தது. எதுக்கு இப்பிடி ஒரு கேள்வி? நானெல்லாம் பொண்ணுங்க கிட்ட வலியப் போயி பேசினதே இல்ல! பெயர்கூடக் கேட்காத என்னைப் போய்...கேள்வி இதுதான்!

- ப்ரா சைஸ் என்ன?
- 16 GB

என்ன பார்க்கிறீர்கள்? கேள்விக்கும் பதிலுக்கும் சம்பந்தம் இருந்தா பிறகென்ன சங்கேத வார்த்தை?

அது சரி..எப்படிக் கேட்பது? தயங்கி..ஒருவாறு தொழில் தர்மத்தை(?!) நினைத்து மனதைத் தேற்றித் திடப்படுத்திக் கொண்டு இன்னும் கொஞ்சம் நெருங்கி...

அவள் காதிலிருந்து ஹெட் ஃபோனை அகற்றுவதற்கும், நான்கேட்பதற்கும் சரியாக இருந்தது


'ஏழாக இருக்கலாம்!'

- இது பதிலில்லையே என்கிறீர்களா? அது பதிலில்லை..... அவளின் செருப்பு சைஸ்!

நல்ல கனமான ஹீல்! ஒரே அடியில் வாயில் உப்புக் கரித்தது!

காலையிலிருந்து அஃபீசில் மேலதிகாரியிடம் திட்டு வாங்கியவன், திடீரெனக் காதலி சந்திக்க வர முடியாதென்றதில் காண்டானவன், ஒரு 'பைல்ஸ்' ஆன்டி, பஸ்ஸில் இடித்து ஒரு பெண்ணின் முறைப்பைச் சம்பாதித்த ஆசைமட்டும் நரைக்காத பெரிய மனுஷன், முப்பத்தைந்து  கடந்தும் திருமணம் கூடிவராத பெண்மணி - எல்லோரும் ஏக காலத்தில் சமுதாய அக்கறை கொண்டதில்...
இதற்குமேல் சொல்ல வேண்டுமா?

'அய்யய்யோ என் பெட்டி தொலைந்தால் உயிரோடு விடமாட்டாங்களே...' மனம் அலறியபோது...

கையில் தவறிய எனது பெட்டியுடன், ஏதோ சொல்லிக் கூட்டத்தை விலக்கி, கீழே விழுந்து கிடந்த என்னை நோக்கி எழுவதற்குக் கைகொடுத்தாள் அவள்..

அழகி!
ப்ளூ ஜீன்ஸ், வைட் டீ ஷர்ட்.
Shut the front door!
 தோளில் Laptop பை. முக்கியமாக...ரீபோக் ஷூ!

12 comments:

 1. முதலிலேயே பார்வையைக் கொஞ்சம் கீழே இறக்கியிருந்தால் பிரச்சனையே இல்லையே!நல்ல கதை.

  ReplyDelete
 2. வணக்கம் ஜீ!செருப்பு மார்க் "பாட்டா"வா????

  ReplyDelete
 3. பாஸ் இந்த கதையை ரெண்டு மூணு வாட்டி படிச்சன். ஏன்னா நாம தான் டியூப் லைட் ஆச்சே! நல்லவேளை இப்பவாவது கதை என்னான்னு புரிஞ்சுது. செம அடி போல!

  ReplyDelete
 4. நான் ஒரு ட்யுப் லைட்டு. மூன்று முறை வாசித்த பின் தான் என் கவனிப்பு ரீபோக்கிற்கு வந்தது. கதையும் புரிந்தது. நம்ம லுக்கே தனி இல்ல? ... ஹி ஹி.

  ReplyDelete
 5. அருமை அருமை அது என்ன 16+

  ReplyDelete
 6. நான் கூட பய புள்ளைக்கு எதோ ஆகிப்போச்சின்னு பயந்துட்டேன்...நல்லா தான்யா இருக்கு கதை

  ReplyDelete
 7. சொன்ன விதம்தான் ரசனை ஜீ !

  ReplyDelete
 8. எல்லாத்தையும் பார்த்தவன் , காலை கவனிக்காம விட்டானே?....

  ReplyDelete
 9. நல்லதாம்யா கதை சொல்றிக..

  ReplyDelete
 10. ரெம்ப திரில்லாகதை சொல்லுறீங்க பாஸ்.

  ReplyDelete
 11. என்னமா கதை சொல்றார் ஜீ

  ReplyDelete