ஒரு பெண் சம்பந்தப் படுத்தப்பட்டு, பாலியல் தொல்லையோடு தொடர்புபடுத்தி மேற்கொள்ளும் எந்த ஆதாரமுமற்ற குற்றச்சாட்டு ஒன்றே சாமானியன் ஒருவரின் வாழ்க்கை முழுவதற்கும் தண்டனை தரப் போதுமானது - நம் சமூகத்தில்!
பேரூந்தில் ஒரு பெண் கணவனுடன் முன் இருக்கையில். இருவரும் ஏதோ மெல்லிய குரலில் பேசுவதும் கணவன் சற்று எரிச்சலுடன் பேசுவது போலவும் தெரிந்தது. முடிவில் மிகுந்த சலிப்புடன் எழுந்து நின்றார்.
காதல் என்ற உணர்வு எப்படியெல்லாம் உருவாகிறது? அது உடல் சார்ந்த தேவைகளின் அடிப்படையாகக் கொண்டு மட்டும்தான் நிகழ வேண்டுமா? ஒருவர் மீது கொள்ளும் சிறு அக்கறையைக் காதல் என்று சொல்ல முடியாதா? அப்படியானால் அது திருமணமாகாதவர்களுக்கு இடையிலே மட்டும்தான் எழ வேண்டுமா?
வாழ்க்கையில் அனுபவத்தைப் போல எதுவும் பாடம் கற்றுக் கொடுப்பதில்லை. ஆனாலும் கற்ற பாடத்தை மீண்டும் பிரயோகிக்க, இரண்டாவது சந்தர்ப்பம் ஒன்றை வாழ்க்கை வழங்குவது மிகக் குறைவு.