Sunday, November 7, 2010
சுஜாதா இலக்கியவாதியே இல்லை!
சுஜாதா இலக்கியவாதி இல்லையாம், சொல்கிறார்கள் இலக்கியவாதிகள் என்று கூறப்படுகிற, கூறிக்கொள்கிற பலரும்.
இலக்கியத்திற்கென்று அவர் என்ன செய்தார்? அவர் என்னதான் சாதித்தார்? என்றெல்லாம் கேள்விகள் கேட்கிறார்கள் பலர்.
இதப் பற்றி நானும் உட்கார்ந்து யோசிச்சப்போ (!?) தான் ஒரு விஷயம் விளங்கிச்சு.
இலக்கியம்னா என்ன?
பள்ளியில் படிக்கும் போது தமிழ் இலக்கியம்னு ஒரு பாடம்.
அது அப்படி இருக்கும்?
தமிழ் நன்றாக எழுதப் படிக்கத் தெரிந்த, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட நமக்கே ஒரு ஆசிரியரின் துணை இல்லாமல் விளங்கிக் கொள்ள முடியாத ஒரு பாடம்.
அப்பதான் புரிஞ்சுது இலக்கியம்னா விளங்கக்கூடாது!
சாதாரண ஆட்களுக்கு விளங்காத மாதிரி எழுதுறவன் தான் இலக்கியவாதி.
சுஜாதா தான் எல்லோருக்கும் விளங்கிறமாதிரி எழுதுவாரே!
விடலாமா?...அவனவன் உசுரைக்குடுத்து அடுத்தவனுக்கு விளங்காம எழுதுறான்!
சிலபேர் எழுதுவாங்க பாருங்க, தமிழ் எழுத்துக்கள் தான் இருக்கும்... ஆனா வாசிச்சா எஸ்பஞோல்,ஹீப்ரு மாதிரி இருக்கும்.
எங்களுக்கே, எங்கள்மேல் சந்தேகம் வந்துவிடும் எங்களுக்கு தமிழ் தெரியுமா? நாங்கள் தமிழர்தானா? என்று.
எழுத்துக்கள் எப்பவுமே ஐம்பது வருஷம் பின்தங்கி இருக்கணும்.வாசிச்சா நமக்கும் நரை கூடி, கிழப்பருவம் எய்தின ஒரு உணர்வு வரணும். அதுதான் இலக்கிய எழுத்து!
ஆனா சுஜாதாவை பாருங்க, இந்தக்காலத்தில இளைஞர்கள் எப்படிக் கதைப்பார்கள், காதலிப்பார்கள்....அப்படியே எழுதினார்..என்றும் இளமையான எழுத்துக்கள்!
இலக்கியவாதின்னா ஒரு நூறு பேருக்கு மட்டும்தானே தெரிஞ்சிருக்கணும்? நிறையப் பேருக்கு தெரிஞ்சா அப்புறம் எப்பிடி?
இலக்கியவாதி எழுத்தை மட்டுமே தொழிலா கொண்டிருக்கணும்..அப்போ நிச்சயமா சோத்துக்கு சிங்கிதான்! நம்மவர்களின் வாசிப்பு பழக்கம்...தெரியுமே!
இவர் என்னடான்னா...எழுத்தை தனது ஆத்ம திருப்திக்காக....என்ன நியாயம் இது?
சரி, இதையெல்லாம் கூட போனா போகுதுன்னு விட்டுடலாம். ஆனா அவர் ஒண்ணு பண்ணினார் பாருங்க...
எத்தனை மேலை நாட்டு, உள்ளூர் இலக்கியவாதிகளையும், கவிஞர்களையும், சிந்தனையாளர்களையும் சும்மா போகிற போக்கில எங்களுக்கு அறிமுகம் செய்திருப்பார்? (சாதாரண கணேஷ்-வசந்த் கதைகளில் கூட, நீட்ஷே, சில்வியா பிளாத் போன்றவர்களை)
இதெல்லாம் ஒரு தமிழ் இலக்கியவாதி செய்கிற காரியங்களா? எந்த இலக்கியவாதியாவது செய்திருக்கிறார்களா? செய்யலாமா இப்படி?
இப்ப சொல்லுங்க.. சுஜாதா இலக்கியவாதி இல்லைத்தானே?
புறம் பேசுபவர்கள் என்றும் உண்டு . இதையெல்லாம் சுஜாதாவே சட்டை செய்யவில்லை. விட்டுத் தள்ளுங்கள் குப்பைகளை
ReplyDeleteஎன்ன சொல்றதுன்னே தெரியலை! சில பேர் இப்படித்தான் ஏதாவது சொல்லனும்னு பேசுவாங்க!
ReplyDeleteசுஜாதா அவர்களின் கதைகளை உண்மையாக படித்தவர்/ரசித்தவர் எவரும் அவரை இப்படி பேச மாட்டார்கள்!
என்னை பொறுத்த வரை இலக்கியம் என்பது காலம் கடந்து நிற்பது.. சுஜாதாவின் எழுத்துக்கு இப்போது இரண்டாவது தலைமுறை ஓடிக் கொண்டிருக்கிறது. இருக்கிற காலத்திலேயே எலக்கியம் படைத்தவர்கள் புத்தகத்தையெல்லாம் படிப்பதற்கு ஆளில்லாம் இருக்கு..
ReplyDelete@LK
ReplyDelete//இதையெல்லாம் சுஜாதாவே சட்டை செய்யவில்லை//:)
நன்றி உங்கள் வருகைக்கு!
@எஸ்.கே
நன்றி!:)
@Cable Sankar
ReplyDelete//என்னை பொறுத்த வரை இலக்கியம் என்பது காலம் கடந்து நிற்பது.. சுஜாதாவின் எழுத்துக்கு இப்போது இரண்டாவது தலைமுறை ஓடிக் கொண்டிருக்கிறது. இருக்கிற காலத்திலேயே எலக்கியம் படைத்தவர்கள் புத்தகத்தையெல்லாம் படிப்பதற்கு ஆளில்லாம் இருக்கு..//
உண்மை உண்மை! நன்றி பாஸ்!! :)
இவர் கற்றதும் பெற்றதும் மிக அருமையான அனுபவப் பதிவு.
ReplyDelete@யோகன் பாரிஸ்(Johan-Paris)
ReplyDeleteநன்றி!
@ers
நன்றி!
என் ஆசான் சுஜாதா பற்றி எழுதியதற்க்கு நன்றி...நன்றி...நன்றி...
ReplyDeleteநன்றி உலகசினிமாரசிகன், உங்கள் வருகைக்கு நன்றி!
ReplyDeleteசுஜாதா பற்றிய ஆரோக்கியமான பார்வை.
ReplyDeleteஅருமை.. பொறி பறக்கிறது..
ReplyDeleteசுஜாதா ரசிகன் என்று சொல்வதில் பெருமை எனக்குள்ளது /எனக்கும் உள்ளது
LOSHAN
www.arvloshan.com
@Dr.எம்.கே.முருகானந்தன்
ReplyDeleteநன்றி!
@LOSHAN
நன்றி LOSHAN! உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்!
நையாண்டி தனத்தோட சொல்லவந்ததை நச்சுனு சொல்லி இருந்திங்க...சுஜாதா சுஜாதா தான்...இப்போ கூட மீண்டும் ஜீனோ படிச்சிட்டு இருக்கேன்..வாழ்த்துக்கள் ஜீ!!
ReplyDelete@ஆனந்தி
ReplyDelete//மீண்டும் ஜீனோ படிச்சிட்டு இருக்கேன்//
:))
நன்றி!
விமர்சகர்கள் சொல்வது எல்லாம் ஒரு மதிப்பீடு தான். முடிவு இல்லை. கேபிள் சங்கர் சொல்வது போல் காலம் தான் பதில் சொல்லும். அவர் பல விஷயங்களை தொட்டு எழுதியதால் கட்டாயம் ஏதாவது ஒன்றிக்காக மேற்கோள் காட்டப்பட்டுக் கொண்டே இருப்பார் என்று நினைக்கிறேன்.
ReplyDelete//எத்தனை மேலை நாட்டு, உள்ளூர் இலக்கியவாதிகளையும், கவிஞர்களையும், சிந்தனையாளர்களையும் சும்மா போகிற போக்கில எங்களுக்கு அறிமுகம் செய்திருப்பார்? (சாதாரண கணேஷ்-வசந்த் கதைகளில் கூட, நீட்ஷே, சில்வியா பிளாத் போன்றவர்களை)//
ReplyDeleteநான் எட்டாம் வகுப்பு படிக்கும் போதே எங்களூர் லைப்ரரியில் நீட்ஷேவை கரைத்து குடித்தவன். இருபது வருடங்களுக்கு முன்பே சில்வியா பிளாத்தின் கவிதைகளில் கவித்துவம் இல்லை என்பதை கணித்திருக்கிறேன் என்றெல்லாம் எழுதி தன்னுடைய இலக்கிய மேதமையை வெளிப்படுத்தியிருந்தால் ஒரு வேளை 'இலக்கியவாதிகள் என்று கூறப்படுகிற, கூறிக்கொள்கிற பலரும்' சுஜாதாவை ஒரு இலக்கியவாதியாக ஏற்றுக் கொள்வார்களோ?
சுஜாதாவின் புகழை இனி யார் நினத்தாலும் குறைக்கவே முடியாது. அவர் எழுத்து சாகா வரம் பெற்ற ஒன்று. தமிழ் பத்திரிகை, வலையில் எழுதுபவர்களில் 95% பேரின் நடை சுஜாதா உருவாக்கித் தந்த ஒன்று. அதனால் இந்த மாதிரி குரைப்பவர்களைப் புறந்தள்ளவும்.
ReplyDelete//இலக்கியம்னா என்ன?
பள்ளியில் படிக்கும் போது தமிழ் இலக்கியம்னு ஒரு பாடம்.
அது அப்படி இருக்கும்?
தமிழ் நன்றாக எழுதப் படிக்கத் தெரிந்த, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட நமக்கே ஒரு ஆசிரியரின் துணை இல்லாமல் விளங்கிக் கொள்ள முடியாத ஒரு பாடம்.//
யாரோ எதோ சொன்னார்கள் என்பதற்காக நம் இலக்கியங்களை இகழவேண்டிய அவசியம் இல்லை.
பி.காம் படித்த ஒருவர் மேற்படிப்பு படிக்கும் போது ஆசான் தேவையே இல்லை எனக்கு தான் டெபிட் கிரெடிட்-ன்னா என்னான்னு தெரியுமே என்று சொல்லமுடியுமா ? கலையோ அறிவியலோ ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு ஆசான் தேவை.
தலைப்பை பார்த்து கொதித்துபோய் இடுக்கினேன் ஆஹா இது நம்ம பாட்டி....
ReplyDeleteசுஜாதாவை விமர்சனங்களிற்கு அப்பாற்பட்டவர் ... அவரது வாசகர்கள் மட்டுமே அவரின் தனித்தன்மையை உணர்ந்தவர்கள்... விளம்பரத்திற்கு ஆசைபட்டு அவரை குறை கூறுபவர்களை பற்றி சுஜாதாவே நிறைய இடத்தில கூறியிருக்கிறார் ... சுஜாதாவின் வாசகனாக இருப்பதை எப்போதும் பெருமையாக நினைக்கிறேன்... நான் வலை பூ எழுத ஊக்கம் தந்தது சுஜாதாவின் எழுத்துக்களே...
ஜு மிக சரியாக சொன்னீங்க.......சுஜாதா இலக்கியவாதியே இல்லை. தமிழ் எழுத்துலகில் புரட்சியை ஏற்படுத்திய புரட்சிவாதி
ReplyDelete@ ரிஷபன்Meena
ReplyDelete//யாரோ எதோ சொன்னார்கள் என்பதற்காக நம் இலக்கியங்களை இகழவேண்டிய அவசியம் இல்லை.//
வாஸ்தவமான ஒன்று. நன்றி
nice...you are right...vittu thallunga...prayojanama ethavathu discuss pannalaam...
ReplyDelete