Wednesday, February 6, 2013

தெய்வீக இசை!

யாழ்ப்பாணத்தில் தொலைகாட்சி என்றால் தூர்தர்ஷன் மட்டுமாகவே இருந்த 98 -98 காலப்பகுதி. வெள்ளிக் கிழமைக்குக் காத்திருப்போம். எட்டு மணி ஒளியும் ஒளியும்'  நிகழ்ச்சிக்கு ஆறு மணியிலிருந்தே ஹிந்தி நியூஸ் எல்லாம் பார்த்துக் காத்திருக்க, முத்து முத்தாக நான்கு பாடல்கள் போடுவார்கள்! அநேகமா விஜயகாந்த், சத்தியராஜ், பிரபு, சரத்குமார் பாடலாக இருக்கும்.

அதே வெள்ளிக்கிழமை இரவு பத்து மணிக்கு ஒரு படம் போடுவார்கள் அதப் பாக்கிறதுக்கு எத்தனை போராட்டங்கள், சோதனைகள்! மின்வெட்டு காரணமாக பத்து மணிக்கு வரும் மின்சாரம் சரியான நேரத்துக்கு வராது. வெறுத்துப் போய் இருப்போம்! மின்சாரம் சரியான நேரத்தில வந்துட்டா...ஒளிபரப்பு நிலையத்தினர் ஹிந்தில இருந்து, தமிழுக்கு மாற்றி இருக்க மாட்டார்கள்! ஹிந்திப் படத்தை இருபது நிமிடம் பார்த்துக் கொண்டிருக்க திடீர்னு தமிழுக்கு மாற்றுவார்கள். என்ன படம்னே தெரியாது! அநேகமா அப்படியான படம் தான் போடுவாங்க. எப்போதாவது எல்லாமே சரியாக இருந்தால், வாழ்க்கையில் கேள்விப்படாத படமா இருக்கும், 'வா ராஜா வா!'


இவ்வளவு கொடுமைகளிலும் அவ்வப்போது நல்ல படங்களைப் பார்க்கும் வாய்ப்பை வழங்கியது தூர்தர்ஷன். 

மொக்கைப் படம், பார்க்கவேண்டாம் என்று முடிவு செய்த பின்னரும் ஒரேயொரு விளம்பரத்துக்காக மட்டும் காத்திருந்து பார்த்திருக்கிறேன். அப்படியொரு இசை. ஹிந்தி வரிகள் என்ன விளம்பரமென்றும் அப்போது தெரியாது. கவிதா கிருஷ்ணமூர்த்தியின் குரல், மயக்கும் அந்தப் புல்லாங்குழல். கண்களை மூடிக் கேட்கும்போது, அப்படியே அலேக்காகத் தூக்கி ஒரு மலையுச்சியில் நிற்க வைக்கும் உணர்வைக் கொடுத்தது. 

இசை தெய்வீகமானது என உணர்ந்துகொள்ள இதுபோன்ற இசைத்துணுக்கு ஒன்றே போதுமானது!





நீண்ட நாட்கள் மறந்து போயிருந்த இந்த இசை, சில வருடங்களுக்கு முன்னர் இன்னொரு தெய்வீக இசையைக் கேட்டபோது (Water படம் பார்க்கும்போது) மீள நினைவுக்கு வந்தது. ஆனாலும் இன்றுதான் மேற்கண்ட விளம்பரத்தை you tube ல் தேடிக் கண்டுகொண்டேன்.

அந்த Water  படப் பாடல். Naina Neer - Water

5 comments:

  1. அந்த நாட்களில் ஒரு படம் பார்க்க படும் அவஸ்தை இருக்குதே..அப்பப்பா

    குளிர் காலங்களில் மட்டும் தான் எங்களுக்கு தூர்தர்ஷன் பிடிக்கும்..அதுவும் தமிழ் இல்ல என்றால் ஐயோ...

    ReplyDelete
  2. அது ஒரு காலம் பாஸ்

    ReplyDelete
  3. Sometimes for our disaster, they might telecast old MGR movies :) ... Anyway in Sundays they used to telecast award winning movies. I watched Mogamul, Anthi Manthaarai and many other other lang classics from that slot.

    ReplyDelete
    Replies
    1. உண்மை நான் கருத்தம்மா, அந்திமந்தாரை எல்லாம் அப்படித்தான் பார்த்தேன். ஞாயிற்றுக்கிழமை மதியநேரத்தில்!

      Delete