Friday, January 25, 2013

காதல் தியாகிகள்!


தியாகம் என்பதும் ஒருவகை போதைதான். நான் தியாகி என்று சொல்லாமல், அல்லது அவையடக்கத்துடன்(?!) சொல்லிக் கொள்வதில் ஒரு அளவு கடந்த மகிழ்ச்சி கிடைப்பதாகத் தெரிகிறது. ஆனால் பாருங்கள், பலருக்கு தியாகம் செய்வதற்கு வசதியான சுதந்திரப் போராட்டங்கள் அமைவதில்லை. 'நான் ஒரு தியாகி' என்று உயிருடன் இருந்து சொல்லக்கூடிய உத்தரவாதமான சுதந்திரப் போராட்டம் எங்கேயும் நடப்பதில்லையே!

அந்தக் குறையைக் காதல் தீர்த்து வைக்கிறது. காதல் தியாகிகள் பலர் நம்மிடையே பரவலாக வாழ்கிறார்கள். இருப்பினும் காதலில் தியாகம் செய்கிறார்களா?தியாகம் செய்யப்படுகிறார்களா என்பது ஆராயப்படவேண்டியது.

அலுவலகத்தில் காதல் தியாகியான நண்பன் ஒருவன். அவனின் தியாகம் தொடர்பில் அவனுக்கு எக்கச்சக்கமான பெருமை இருந்தது. தன் காதல் வரலாற்றை அன்றைக்கும் யாருக்கோ புதுசா, உருக்கமாகச் சொல்லிக் கொண்டிருந்தான். அவன் கெட்ட நேரம் நானும் அங்கே  இருந்து தொலைத்துவிட்டேன்.

"ரெண்டுபேரும் மூணு வருஷம் சின்சியரா லவ் பண்ணினோம். அவளுக்கு திடீர்னு வெளிநாட்டு மாப்பிள்ளை பார்த்தாங்க. எனக்கு அப்போ வேலையில்ல. எனக்கொரு வேலை கிடைச்சா அவள் வீட்ல சொல்லியிருக்கலாம். நானும் வேலைக்கு எவ்வளவோ ட்ரை பண்ணினேன். கிடைக்கல. இப்ப பார் எல்லாம் இருக்கு. அவ கட்டிப் போன அடுத்த வருஷமே எனக்கு வேலை கிடைச்சிட்டுது. கொஞ்சநாள் எல்லாமே வெறுத்துப் பொய் இருந்தேன். ஏதோ அவள் நல்லா இருந்தாச் சரின்னு.... அவள் நிறைய பீல் பண்ணினாள். என்ன செய்யிறதுன்னு கேட்டாள்.  நான்தான் பிரிஞ்சிடலாம்னு சொன்னேன்.நான் சொன்னதாலதான் அவள் அந்த மாப்பிள்ளையைக் கட்டினாள்"

"இரு இரு என்னமோ உதைக்குதே" என்றேன். ஃபீல் பண்ணிக்கொண்டிருந்த பயபுள்ளைகள் எல்லாம் என்னை ஒருமாதிரியாகப் பார்த்தர்கள்.

'தேவையா இது எனக்கு?ஏழு வருஷமா தியாகிங்கற நினைப்பில , மிதப்புல இருக்கிறவனை எதுக்கு குழப்பிவிடணும்?' ஆனாலும், ஒருவனின் அறியாமையைப் போக்க வேண்டிய சமூகப் பொறுப்பு(?!) இருக்கே!

"சரி மாப்பிள்ளை பாக்கேக்க அவள் என்ன கேட்டாள்ன்னு சொன்னே ?"

"என்ன செய்யிறதுன்னு"

"இது.. இது.. என்ன செய்யறதுன்னு கேட்டாளே அங்கயே உன் லவ் பணால் ஆயிடுச்சு! லவ் பண்ணிட்டு, என்ன செய்யிறதுன்னு கேட்கிறதே போங்காட்டம். அப்பவே அவள் என்ன செய்யிறதுன்னு ஒரு முடிவு எடுத்துட்டாள்ன்னு அர்த்தம்.."

"அதெப்பிடி எனக்கு வேலையில்ல நாங்க எப்பிடி?"

"ரெண்டு வருஷம் வெயிட் பண்ண முடியாதா? இருபத்திரண்டு வயசுதானே அப்போ! சரி விடு லவ் பண்ற விஷயத்தை அவங்க வீட்ல யாருக்காவது சொன்னாளா?"

"இல்ல எப்படி சொல்றது?"

"அது! அங்கதான் இருக்கு மேட்டர்! எங்கே வீட்ல சொன்னா அவங்க வீட்டுக்காரரே வெயிட் பண்றோம்னு சொல்லிட்டு, வெளிநாட்டு மாப்பிள்ளைய வேணாம்னு சொல்லிடுவாங்களோன்னு.."

"அப்பிடியானவளா இருந்தா எதுக்கு என்கிட்டே வந்து என்ன செய்யிறதுன்னு கேட்டிருப்பாள்?"

"இது பொயிண்ட்! ஏன்னா ஒருத்தனை ஏமாத்திட்டோம்னு உறுத்தாம வாழணுமில்ல. இப்பிடிக் கேட்டதால அவளும் உன்னை ஏமாத்தல! நீயும் தியாகியாகிட்டே! அத வேற பெருமையா சொல்றே. இதத்தான் ஒரு சொல்லு பல மாங்காய்ன்னு பெரியவங்க சொல்லுவாங்க ...நாட்டில மாங்காய்களுக்கா பஞ்சம்?

"சரி நீ சொல்ற மாதிரியே வச்சுப்போம் சப்போஸ் நான் இல்லைன்னு சொல்லியிருந்தா?"

"சொல்ல மாட்டேன்னு தெரியும்"

"அதெப்பிடி?"

"தப்பா எடுத்துக்காத மச்சி! மூணு மாசம் பழகின எனக்கே தெரியுது, மூணு வருஷம் லவ் பண்ணின அவளுக்குத் தெரியாதா.....நீ ஒரு கேணைன்னு..."

"சரி சரி முறைக்காத ஆக்சுவலா நீ தியாகியே இல்ல. மிக மோசமாக வஞ்சிக்கப்பட்ட ஒரு அபலை ஆண்.."

"ஆனா ஒண்ணு மச்சி! ஏமாந்ததே தெரியாம ஏழு வருஷமா தியாகிங்கிற மிதப்போட வாழ்ந்திருக்க பாரு  ச்சே! அத நினச்சாதாண்டா என்னால தாங்க முடியல!"

"..."

"இத இப்பிடியே விடக் கூடாது மச்சி நைட் நீ  பார்ட்டி வைக்கிறே.. எல்லாரும் தண்ணியப் போட்டுத் துக்கத்தை அனுஷ்டிக்கிறோம்!"

"அப்புறம் வேற யாராவது காதல் தியாகிங்க இருந்தா லைன்ல வந்து உங்க கதையச் சொல்லுங்க"

9 comments:

  1. /ஆனா ஒண்ணு மச்சி! ஏமாந்ததே தெரியாம ஏழு வருஷமா வாழ்ந்திருக்க பாரு ச்சே அத நினச்சாதாண்டா என்னாலயே தாங்க முடியல!"///

    காமடியன்னு தெரியாமலே பவர் ஸ்டார் இருப்பது போல!:v

    ReplyDelete
  2. //அப்புறம் வேற யாராவது காதல் தியாகிங்க இருந்தா லைன்ல வந்து உங்க கதையச் சொல்லுங்க//
    பொண்ணுங்க சொல்லத் தொடங்கினா தாங்க மாட்டீங்கப்பா.உங்க நண்பர் ரொம்ப நல்லவருதாங்க.

    ReplyDelete
  3. வணக்கம் ஜீ! உண்மைய சொல்லியிருக்கிறீங்க.சி..... பொங்கியிருக்கிறதில இருந்தே தெரியுது.////"இத இப்பிடியே விடக் கூடாது மச்சி நைட் நீ பார்ட்டி வைக்கிறே! எல்லாரும் துக்கத்தை அனுஷ்டிக்கிறோம்"////என்னது "அனுஷ்"டிக்கிறீங்களா?ஹ!ஹ!ஹா!!!!

    ReplyDelete
  4. காதலித்தவர்களையே கல்யாணம் பண்ணிக்கொண்டாலும்
    அவர்கள் இருவருமே தியாகிகள் தான்...!!

    ஹா..ஹா..ஹா..!!

    ReplyDelete
  5. "தியாகம் என்பது ஒருவகை போதை."

    கம்பராமாயணத்தில் ஜடாயுவை பற்றி கம்பன் எழுதும்போது
    "தன் உயிர்புகழ்க்கு விற்ற சடாயு" என்று ஒரு விவரிப்பார்.
    புகழுக்கு உயிரை எவனாவது கொடுப்பான, அது சரியா என்று சின்னவயதில் யோசித்ததுண்டு .. இந்த பதிவுக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை .. ஆனா உங்கட முதல் வரி இதை சொல்ல தூண்டினது .. வாழ்த்துக்கள் பாஸ்!

    ReplyDelete
  6. தம்பி ஜீ, உங்களுக்கு ஒரு பிஃகரும் மாட்டலைங்கிற ஆத்திரத்துல, அந்த தியாகி டவுசரை அவுத்தது சரியா?...



    ReplyDelete
  7. ஆனால் யோசிச்சுப் பார்க்கும்போது, நாமளும் தியாகிதான்னு தோணுது..நம்மளால ஒரு பொண்ணு வாழ்க்கை கெட்டுடக்கூடாதுன்னு வாழ்க்கைல காதல்-ங்கிற வார்த்தையைவே யூஸ் பண்ணாம வாழ்ந்திருக்கமே!

    ReplyDelete
  8. x=2 என நிறுவுவதற்கு உறவுகள்(காதல், நட்பு) ஒன்றும் கணிதமல்ல. பெரும்பாலான காதல் கதைகள் ஒரே மாதிரியாக இருந்தாலும் அவற்றின் சூழ்நிலை ஒவ்வொன்றுக்கும் வேறுபாடும்..தனியே ஒருவர் தனது மூன்று வருடக்காதலை மூன்று நிமிடத்தில் சொன்னதை வைத்து நாம் எந்த முடிவையும் எடுக்க முடியாது.

    காதலர்கள் தமது காதலைப்பற்றி சொல்ல வந்தால் ஒன்று கேட்கனும் இல்லை கேக்காமல் செல்ல வேண்டும்..அதற்கு முடிவோ இல்லை பஞ்சாயத்தோ எங்களால் சொல்ல முடியாது அப்படி சொன்னாலும் அதை அவர்கள் மனது ஏற்றுக் கொள்வதில்லை,அவர்களது எண்ணப்படியே நடப்பார்கள்...இதனால் நான் இப்பொழுதெல்லாம் அடுத்தவர் காதலுக்குள் மூக்கை நுழைப்பதில்லை. :)

    அப்புறம் சமந்தா,காதல் ,திரைப்படங்கள் ,பெண்கள் தவிரவும் இன்னும் அதிகமா உங்ககிட்ட இருந்து எதிர்பார்க்கிறோம் ஜீ. :)

    ReplyDelete
  9. ஹா... ஹா...
    தியாகி.... எல்லாரும் எதாவது ஒருவகையில் தியாகிதான்... அதில் காதலும் இருக்கலாம்.

    ReplyDelete