Tuesday, September 18, 2012

ஃபேஸ்புக் அலப்பறைகள்!வேலைன்னு வந்துட்டா நமக்கு வேற எதுவுமே நினைப்புல இருக்காது அவ்ளோ சின்சியரான ஆளுங்க! அக்கம்பக்கத்தில என்ன நடக்குதுன்னே பாக்காம சமயத்தில கீ போர்டை விட்டுட்டு மேசைல தட்டிட்டு இருப்போம்னா பாருங்க!


நம்ம கன்சல்டன் மாமா ஒருத்தர் திடீர்னு சொன்னார் 'காண்ட்ராக்ட் ட்ராயிங்ஸ் செட் லிஸ்ட் உன்னோட மெயிலுக்கு அனுப்பிறேன் செக் பண்ணுன்னு! சரின்னு மெயில திறந்தா அதிர்ச்சி!

எனக்குக் கல்யாணமாகாமலே குழந்தை வேண்டும்! - அப்பிடின்னு ஒரு பொண்ணு மெயில் அனுப்பியிருக்கு!

முதல்ல அதிர்ச்சியா இருந்தாலும், சுதாரிச்சு யாரு பெத்த பொண்ணோ அதுக்கு என்ன அவசரமோன்னு பதறியடிச்சு ஓடிப்போய்....அப்போ வேலை? அது கிடக்குது இப்ப அதுவா முக்கியம்? ஒரு பதிவனா நமக்கு சமுதாயம்தானே முதல் முக்கியம்? - பார்த்தா அது ஃபேஸ்புக் புண்ணியத்தில் ஏதோ பொழுதுபோக்குத் தளத்தில வந்த கச்சடா (உபயம்-சுஜாதா) நியூஸ்.

அடுத்ததா பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. எனது மெயில் எதையுமே பார்க்க முடியாத அளவுக்கு ஆயிரக்கணக்கில் இப்படியான கச்சடா செய்திகளால் இன்பாக்ஸ் நிரம்பியிருந்தது - ஃபேஸ்புக் புண்ணியத்தில்! பொதுவாகவே நான் அடிக்கடி மெயில் செக் பண்ணுவதில்லை. அதுவேற என் உத்தியோக பூர்வ மெயில் ஐடியா.. சுத்தமா மறந்திருந்ததில் இப்படியாகி விட்டது. ஃபேஸ்புக் எல்லோரிடமும் பிரபலமாக ஆரம்பித்த 2008 இல் தெரியாமல், மெயில் ஐடியையும் எல்லோரும் பார்க்கக் கூடியதாக விட்டு வைத்ததில் தேடிக் கொண்ட ஆப்பு. அப்போதிருந்த சமூக வலைத்தளங்களில் ஃபேஸ்புக் டீசண்டானதாக இருந்தது. இப்போதும் வெளியில் அப்படியே!

வையெல்லாம் பெண்கள் பெயரில் ஆண்கள் செய்யும் உட்டாலக்கடி எனத் தெரியாமல் ஆரம்ப காலத்தில் சில சபலிஸ்டுகள் ஜொள்ளுவிட்டு ஏமாந்திருக்கலாம்.

சங்கீதா என்றபெயரில் 'நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியவை' என்ற தலைப்பில் 'சூர்யா வீட்டில் எந்த பிராண்ட் அப்பளம் சாப்பிடுகிறார்கள்?',  'டீ.ஆர். என்ன சோப்பு உபயோகிக்கிறார்?' போன்ற நாங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய அதிமுக்கியச் செய்திகள் வந்துகொண்டிருந்தன.

பெண்கள் பெயரில் ஆண்களால் உருவாக்கப்பட்டு தமிழ் பேக் ஐடிகள் ஆரம்பத்தில் பெரும்பாலும் ஒரே மாதிரியான பெயர்களைக் கொண்டிருந்தன. யாழ்ப்பாணத்தின் பிரபல பெண்கள் கல்லூரிகளான வேம்படி, இந்து மகளிர் கல்லூரி தான் அவர்கள் படித்த பாடசாலைகளாக இருக்கும். அந்தக் கல்லூரிகள் ஃபேஸ்புக் புண்ணியத்தில் உலக லெவலுக்கு பெயர்(?!) வாங்கிவிட்டன.

இதைவிட யாருமே பொது இடங்களில் படிக்க விரும்பாத இசகு பிசகான மேட்டர்கள் எல்லாம் பெண்கள் பெயரிலிருந்து வந்து கொண்டிருக்கின்றன. இவர்களில் சிலர் யாழ் பல்கலைக் கழகத்தில் படிக்கிறார்களாம். பெண்பெயரில் உலாவரும்போது யாழ் என்ற அடையாளம் கூடுதல் பிரபலத்தைக் கொடுக்கும் என்ற 'மாக்கெட்டிங்' புரிந்து வைத்திருக்கிறார்கள்.

யாராவது எதையாவது செய்து தொலையட்டும் என்று வழமைபோல் நாங்கள் கண்டுகொள்வதில்லை. ஆனால் அவர்கள் பயன்படுத்தும் ப்ரோபைல் படங்கள் எமக்குத் தெரிந்தவர்களாக இருக்கும்போதுதான் சமுதாய அக்கறை பொங்கி,அதிர்ச்சியடைகிறோம். ஒரு போலி ஐடியில் எனக்கு அறிமுகமில்லாத, என்னுடன் படித்த ஒரு பெண்ணின் படம்! ஒரு நிமிஷம் அவர்தானோ என் குழம்பினேன். ஆச்சரியமாக,  இரண்டு பேரையும் ஒரே நேரத்தில் நண்பர்களாகப் பரிந்துரைத்ததில் புரிந்தது!

ரு நண்பர். கொஞ்சம் தமிழில் ஆர்வம் கொண்டவர் போல அவ்வப்போது யாழ்ப்பாணத்திலிருந்து எழுதிவந்தார். சினிமா தளம் ஒன்று ஆரம்பிப்பது குறித்து ஒரு முறை ஸ்டேட்டஸ் போட்டிருந்தார். சினிமாவில் ஆர்வம் இருக்குது போல எதோ சொல்லப்போறார்னு நினைச்சேன். இப்போ தவறாமல் மெயில் வந்துட்டிருக்கு..'பிபாஷா பாசுவின் கவர்ச்சி ஸ்டில்ஸ்', 'காஜல் அகர்வாலின் கலக்கலான படங்கள்'னு டைட்டிலோட! போலியாகப் பெண்பெயர் பயன்படுத்தாமல், சொந்தப் பெயரிலேயே 'கச்சடா' நியூஸ் வழங்கும் அவர் நேர்மை பாராட்டத்தக்கது!

ப்புறம் எங்க கூடப் படிச்சவன் ஒருத்தன் இருக்கான். அவன் ஏதாவது ஒரு ஸ்டேட்டஸ் போடுவான். உதாரணமா 'கோழிக்கால் சாப்பிட்டேன்!' அப்பிடின்னு போட்டு லைக் பண்ணுவான். பின்னாடியே ஒரு பொண்ணு வந்து அத லைக் பண்ணி 'நைஸ் டியர்'ன்னு கமெண்ட். பயபுள்ள திரும்ப வந்து 'தாங்க்ஸ் டியர்!' - அவ்வளவுதான்!
இப்பிடியே கொஞ்சநாள் போயிட்டிருந்திச்சு. இன்னொரு நண்பன் சொன்னான். அவிங்க ரெண்டுபேரும் கணவன்-மனைவி. ஒரே வீட்ல இருந்திட்டு அலப்பறை குடுக்கிறாங்கன்னு! அவங்களும் இந்த உலகத்துக்கு எதையோ சொல்ல வர்றாங்கன்னு புரிந்துகொண்டேன்.

LOL - ஃபேஸ்புக்கில் அதிகம் பயன்படுத்தப்படும் இணைய 'ஸ்லாங்' - Laughing  Out  Loud!

நிறையப்பேர் அதற்கான அர்த்தம் தெரியாமலே பாவிக்கிறார்கள் என்றே தோன்றுகிறது! குறிப்பாக நம்ம இலங்கை நண்பர்கள்..எந்த நாட்டிற்குப் போயிருந்தாலும்! இவர்கள் LOL என்பதை தமிழின் லொள்ளு என்பதாகவே அர்த்தப் படுத்துகிறார்களோ என்றும் தோன்றுகிறது!

ஒரு நகைச்சுவை வீடியோவை, படத்தைப் பார்த்து lol என்பது நியாயம், நடைமுறை! இவனுங்க என்னடான்னா தாங்களே சிரிப்பே வராத எதையாவது சொல்லிட்டு தாங்களே LOL போட்டுக் கொல்றானுங்க! சில வேளைகளில் பரிதாபமா இருக்கு! நல்லவேளை இவனுங்க ROFL பாவிப்பதில்லை. ROFL -Rolling On the Floor Laughing!

நடைமுறையில் தாங்களே ஒரு மொக்கை ஜோக்கடித்து அதற்கு தாங்களே சத்தமாகச் சிரித்துக் கொள்பவர்களை நாங்கள் எப்படிப் பார்க்கிறோம்?

பிரபலாகும் கனவை பலருக்கும்  ஃபேஸ்புக் நிறைவேற்றுகிறது. பக்கத்து அலுவலகத்தில் இருக்கும் பெண். அழகானவர். தன்னை நிறையப்பேர் பார்க்க வேண்டும் கவனிக்க வேண்டும் என்பதில் அதீத ஆசை கொண்டவர். அவரும்  ஏதாவது ஸ்டேட்டஸ் போடுவார். அது 'இன்னிக்கு சனிக்கிழமை' ரேஞ்சில இருக்கும். ஆனால் அதைத் திங்கட்கிழமை எழுதுவார் என்றால் பாருங்க! உடனே ஒரு அங்கிள் ஓடிவந்து லைக் போட்டு, கமெண்ட் போடுவார். அப்பிடியே தொடரும்.

தன்பால் பிறர் கவனத்தை ஈர்க்க அவர் செய்வது அடிக்கடி தன் ப்ரோஃபைல் ஃபோட்டோவை மாற்றிக் கொண்டிருப்பது! அந்தப் பொண்ணு செய்த ஒரே தப்பு என்னை பிரேண்டாக ஆட் பண்ணியது. ஆரம்பத்தில் நான் ஓரிரு பதில் கமென்ட் போட்டதில் " நீங்க எப்பவுமே எனக்கெதிரா பேசுறீங்க" குறைபட்டுக்கொண்டார்.
"உண்மைய சொன்னேன்!"
"மற்றவங்களைப் பாருங்க! எத்தினை லைக் வந்திருக்கு?"
"ஆமா யார் இவனுங்க எல்லாம் யோசிக்கவே மாட்டானுங்களா? அதெல்லாம் உங்க போட்டோக்கு வந்த லைக்...இதெல்லாம் ஒரு பொழைப்பா?" அதை அவர் ஒரு பாராட்டாக.. பெருமையுடன் சிரித்தார்.

அந்தப் பொண்ணுகிட்டப் போய் ப்ரோஃபைல் ஃபோட்டோவ யாராவது தப்பா யூஸ் பண்ணிடுவாங்கன்னு யாரோ சொன்னதுக்கு அது சொல்லிச்சாம் "உனக்குப் பொறாமை".அப்படியே யாராவது பயன்படுத்தினாலும் "நான் அழகா இருக்கிறதுனால தானே என் போட்டோவை யூஸ் பண்றாங்க"ன்னு பாசிட்டிவ்வா திங் பண்ணி பெருமைப் படக்கூடிய ரகம் - இப்படியும் சிலர்!

சமீபத்தில் ஒரு நள்ளிரவு நேரம் சும்மா  ஃபேஸ்புக்கை மேய்ந்ததில் அவரின் குளோசப் முகத்தைப் பார்த்து சற்றே பயந்துதான் போனேன். நிறையப் பேர் நைஸ், வெரிநைஸ் கமெண்ட்ஸ். நானும் ரொம்ப நாளா கமென்ட் பண்ணலையேன்னு நல்லெண்ணத்தில 'அய்யய்யோ!..நா அப்பிடியே ஷாக்காயிட்டேன்' ன்னு கமெண்ட்! மறுநாள் அந்த ஃபோட்டோவையே காணல!

ஃபேஸ்புக்கினால் விளையும் நன்மைகள், தீமைகள் ன்னு யாராவது அலசுவது, ஆராய்வது எல்லாம் சலிப்படையாவே செய்கின்றன. எதை உருவாக்கினாலும் நாம் கொக்குமாக்காகத்தான் பயன்படுத்துவோம் என்பது உறுதியாகத் தெரிந்தபின் அதெல்லாம் எதற்கு?

பேரூத்தில் ஓர் வயதான அங்கிள் பேசும்போது, யாழ்ப்பாணத்தில்   ஃபேஸ்புக்கினால் பெண்கள் காதல் அது இதுன்னு ஏமாந்து போறதாகக் கவலைபட்டார். "அப்படியெல்லாம் இல்லை. தெரிந்தே நடப்பதுதான் அதிகம்!" அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.

"உண்மையிலேயே காதலித்தாலும், வாழ்க்கை, சர்வைவல் என்று வரும்போது அவர்கள் குழப்பிக் கொள்வதில்லை. தங்கள் காதலைத் 'தியாகம்'   செய்து வெளிநாட்டுக்கு சென்றுவிடும் 'தெளிவு' அவர்களிடம் எப்போதுமே இருக்கு!"

"தெளிவு ஹா.. ஹா.. ஹா...நீங்க பாவிக்கிற சொல்லு எனக்குப் பிடிச்சிருக்கு தெளிவு!"

ஏமாறுவதற்கு  ஃபேஸ்புக் எப்போதும் காரணமாக இல்லை. இருக்காது. உண்மையில் அப்படி எதுவுமே தேவையில்லை. ஏமாறுவதற்கு வேண்டிய அறிவு, தன்னம்பிக்கை, விழிப்புணர்ச்சி இருந்தாலே போதும் எப்படியும், எங்கும் ஏமாறலாம்! இப்போது இந்த நிமிஷத்தில் கூட யாராவது  ஃபேஸ்புக்கில் வெற்றிகரமாக ஏமாந்துகொண்டிருக்கலாம்.

25 comments:

 1. பாஸ் கொஞ்சம் பிக்கப் லேட்டு...இனிமேல் உசாரா இருங்க பாஸ் :)

  ReplyDelete
 2. நல்லதொரு பதிவு...
  ////////////////

  இவர்கள் LOL என்பதை தமிழின் லொள்ளு என்பதாகவே அர்த்தப் படுத்துகிறார்களோ என்றும் தோன்றுகிறது!
  //////////////

  இந்த மேட்டர் ரொம்ம சுவாரஷ்யமா இருக்கே...

  ReplyDelete
 3. நிறையப் பேர் நைஸ், வெரிநைஸ் கமெண்ட்ஸ்.////

  எவ்வளவு ஒரு மொக்க போடோவ இருந்தாலும் அப்பிடிதான் கமென்ட் பண்ணுவாங்க.

  ReplyDelete
 4. எனக்கும் கூடப் புடிச்சிருக்கு"தெளிவு"என்ற வார்த்தை!///உண்மையிலேயே காதலித்தாலும் தங்கள் காதலைத் "தியாகம்"செய்து.........................ஹ!ஹ!ஹா!!!!!!!

  ReplyDelete
 5. அப்புறம் ஃபேஸ்புக்ல பெண் தோழிகள் எதுவும் சிக்குச்சா?

  ReplyDelete
 6. இப்பிடித்தான் LAMO என்று அடிக்க,அதென்ன எண்டு விளக்கம் கேட்டு திருப்பி கமெண்ட் அடிக்கிறாங்க, முடியல

  ReplyDelete
 7. LOL என்பதற்கான அர்த்தம் - Laughing Out Loud ஆக இருப்பினும் எம்மவர்களில் மிகப்பெரும் எண்ணிக்கையானவர்கள் lol என்பதை லொள்ளு என அர்த்தப்படுத்தினால் நாமும் அதை லொள்ளு எனத்தான் சொல்கின்றார்கள் என எடுத்துக்கொள்ளலாமே!!! # மொழி தொடர்பாடலுக்குத்தானே!! :-))

  ReplyDelete
 8. இந்த கொடுமைகளை பார்க்க சகிக்காமத்தான் அந்தத்திக்கம் நான் அதிகம் போறதில்லை! :)

  ReplyDelete
 9. //அப்போ வேலை? அது கிடக்குது இப்ப அதுவா முக்கியம்? ஒரு பதிவனா நமக்கு சமுதாயம்தானே முதல் முக்கியம்? ///

  //அதுவேற என் உத்தியோக பூர்வ மெயில் ஐடியா.. சுத்தமா மறந்திருந்ததில்///

  பாஸ் நீங்க நல்ல வருவீங்க பாஸ்... உங்க கம்பேனியும் நல்லாவே வரும்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 10. செம்ம! என்று ஓயும் இந்த அலப்பறை?

  ReplyDelete
 11. எதுக்காக இப்படி அலையுதுகோன்னு புரியலியே...யோவ் மாப்ளே...ஃப்பேஸ்புக்ல வர்ற கமண்டுகள் போஸ்டுகள் எல்லாம் என்னோட ஜிமெயில் கணக்குக்கும் வந்து கொல்லுது...எப்படி தடுப்பது சொல்லுங்க...ஸ்பேமும் பண்ணி பாத்துட்டேன்...ஹூம் முடியல..பிளீச்...டெல்லு மீ!

  ReplyDelete
 12. செம்ம கலாட்டா பதிவு. ROFL. hahaha

  ReplyDelete
 13. ஏமாறுவதற்கு வேண்டிய அறிவு, தன்னம்பிக்கை, விழிப்புணர்ச்சி இருந்தாலே போதும் எப்படியும், எங்கும் ஏமாறலாம்! இப்போது இந்த நிமிஷத்தில் கூட யாராவது ஃபேஸ்புக்கில் வெற்றிகரமாக ஏமாந்துகொண்டிருக்கலாம்.// பாஸ் நீங்க நல்லா வருவீங்க.. :)))

  ReplyDelete
 14. நிச்சயம் உண்மையான சிந்திக்க வேண்டிய பதிவு.....................

  ReplyDelete
 15. சமீபத்தில் ஒரு நள்ளிரவு நேரம் சும்மா ஃபேஸ்புக்கை மேய்ந்ததில் அவரின் குளோசப் முகத்தைப் பார்த்து......................../////அப்புறம் தூங்குறப்போ ஒண்ணும் ஆவலியா?ஐ மீன் கனவு வந்து மிரளலியா????

  ReplyDelete
 16. உங்கள் பகிர்வுக்கு நன்றி

  நன்றி,
  மலர்
  http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
 17. அருமை நண்பரே பேஸ்புக் ஏமாற்றம் இல்லவே இல்லை மற்றவர்கள் அவாறு ஏமாறுவது மூடத்தனம்

  ReplyDelete
 18. இதுவொரு நல்ல விழிப்புணர்வு பதிவு ஜீ

  சன்னிலியோன் படம் சூப்பர்

  முடிந்தால் இண்ட்ரோ கொடுக்கவும்

  ராபல் :-) தமிழில் சொன்னேன் :-)

  ReplyDelete
 19. இப்போ இந்த யாவாரம் தான் நல்லா ஓடுது

  ReplyDelete
 20. முகநூல் பக்கம் அதிகம் போவதில்லை... இருந்தாலும் அறிந்து கொண்டேன்...

  ReplyDelete
 21. மைந்தன் அண்ணா சொல்லி தான் உங்கள் அறிமுகம் , இனிமேல் அடிக்கடி சந்திக்கலாம்! நான் நினைப்பது சரியானால் மைந்தன் அண்ணாவுடன் வெள்ளவத்தை கொமர்ஷியல் வங்கிக்கு அருகில் மைந்தன் அண்ணாவுடன் உரையாடிக்கொண்டிருந்த நபர் நீங்களாகத்தான் இருக்க வேண்டும்.

  ReplyDelete
 22. /////LOL - ஃபேஸ்புக்கில் அதிகம் பயன்படுத்தப்படும் இணைய 'ஸ்லாங்' - Laughing Out Loud!
  ///

  அடங் கொன்னியா? இதுதான் மேட்டரா? lol

  ReplyDelete

Followers

Powered by Blogger.

Follow by Email

Copyright © வானம் தாண்டிய சிறகுகள்.. |