Thursday, August 2, 2012

தமிழ்ப் பெண்களின் அம்மாக்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்?


"தம்பி இந்த 'சீட்'டை கொஞ்சம் சரிச்சு விடுங்க"

பேரூந்தில் எனது இருக்கைக்கு அருகில், நடையை அடுத்த இரு இருக்கைகளில் யன்னலோரத்தில் அவர், கையில் குழந்தை. பக்கத்து இருக்கையில் எனக்கு அருகாமையில் அந்தப் பெண்.

எனது பெண்ராசி காரணமாக நான் பெண்களுக்கு உதவி செய்வதில் யோசிப்பதால், "அந்த பட்டனை ப்ரெஸ் பண்ணிட்டே சரியுங்க"


அந்தப் பெண் ட்ரை பண்ணி முடியல. "தம்பி நீங்க ஒருக்கா சரிச்சு விடுங்க" அவர் அவளின் சித்தப்பாவாகவோ, மாமாவாகவோ இருக்கலாம். உதவினேன்.

ள்ளிரவில் பஸ் நிறுத்தியபோது கேட்டாள் "இது எந்த இடம்?"

அப்போது, பக்கத்திலிருந்தவர் அவளைப் பார்த்த  ஒரு பார்வையில் அவர், அவள் உறவினராக இருக்க முடியாதென்பது தெரிந்தது. சிவப்பா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான் என்பதுபோல், கையில் குழந்தை வைத்திருக்கும் ஆண்களெல்லாம் நல்லவர்கள் என்பது தமிழ்ப் பெண்களின் தொன்றுதொட்ட நம்பிக்கை. பின்னால் நாலைந்து இருக்கைகள் தள்ளி அவள் தாய் அமர்ந்திருந்தார்.


அதிகாலை.... கொழும்பு நெருங்கியபோது கேட்டாள்

"நீங்க என்ன செய்றீங்க படிக்கிறீங்களா? வேலை செய்றீங்களா?"

இங்க பார்ரா படிக்கிற மாதிரியா தெரியுது.."வேலை செய்றேன்"

"என்ன பீல்ட்? எஞ்சினியரிங்கா?"

"ம்ம்ம்..சிவில்"

நானும் ஏதாவது பதிலுக்கு பேசணுமில்ல அதனால கேட்டேன் "நீங்க என்ன செய்றீங்க?" 

கேட்ட உடனேயே உறைத்தது... சின்னப்பெண் இது என்ன வேலைக்கா போகப்போகுது வழக்கம்போல சொதப்பியா... ஜீ ராக்ஸ்!

அந்தப்பெண் சற்றே முறைப்பது போல புருவத்தைச் சுருக்கி "நான் படிக்கிறேன்..எனக்குப் பதினாறு வயது"


ற்று நேரம் கழித்து மீண்டும்..

"எனக்கும் எஞ்சினியரிங் தான் பிடிக்கும் ஏரோநாட்டிகல் செய்ய ஆசை"

ஒரு பொண்ணு ஏரோநாட்டிகல் பற்றிப் பேசி பார்த்ததில்லை. ஆச்சரியமாக இருந்ததால் கவனித்தேன். மிக அழகான பெண். விகல்பமில்லாமல் மிக இயல்பாக வெள்ளந்தியாகப் பேசிக்கொண்டிருந்தது.நிறையப் பேசியது, முழுவதும் படிப்பு பற்றியே!  

ஆச்சரியமாக இருந்தது.முதல்பார்வையில் நான் சிநேக பூர்வமான ஆளில்லை என நண்பர்கள் சொல்வார்கள். யாரும் வந்து ஈசியாகப் பேச மாட்டார்கள் என்று. அது உண்மைதான். ஒருவேளை என்னைப் பார்த்ததும் சின்ன வயதில் செத்துப்போன அண்ணன் ஞாபகம் வந்திருக்குமோ?

நம்ம தமிழ் தமிழ்ப் பெண்களின் அம்மாக்கள் குணம் தெரிந்ததால்  நான் இயன்றவரை பேசுவதைத் தவிர்த்தேன்.அந்தப் பெண் விடவில்லை.. நான்ஸ்டாப்பாக பேச, வெறுமனே கேட்டுக் கொண்டிருந்தேன்.  

பேரூந்தில் கணிசமாகக் கூட்டம் குறைந்திருந்தது. வெள்ளவத்தை நோக்கி வரும்போது... 

"அம்மா மேத்ஸ் படிக்க விடமாட்டா, எஞ்சினியரிங் கிடைச்சா பீல்டில வேலை செய்யணும், கேர்ள்சுக்கு அது சரி வராதுன்னு.."

"யார் சொன்னது அப்பிடியெல்லாம் கிடையாது..எஞ்சினியரிங்ல எவ்வளவோ இருக்கே அப்பிடியே சிவில் கிடைச்சாலும் சைட்ல வேலை செய்யனும்னு அவசியமில்லையே? ஏதாவது கன்சல்டன்ட்ஸ்ல வேலை கிடைச்சா ஈசிதானே?" என்றேன்.

"ம்ம்ம்..ஆனா அம்மா விடமாட்டாங்க அக்காவுக்கு பேராதெனியால எஞ்சினியரிங் கிடைச்சுது..அம்மா படிக்க விடேல்ல..அங்க பாய்ஸ் நிறைய இருப்பாங்க அவங்க கூட பழகனும்னு.."

என்னாது... எஞ்சினியரிங் பசங்க எல்லாம் கேர்ள்ஸ் கூட பழகுறாங்களா? இதைக்கேட்டா நம்ம பயபுள்ளைக எல்லாம் கதறி அழுவானுகளேன்னு தோணிச்சு..அதிர்ச்சில  எதுவும் பேசல. அடுத்து வந்திச்சு..

"அதால அக்காவ கொழும்பில பிரைவேட் இன்ஸ்டிட்டியூட்ல ஐ.டி. படிக்க விட்டிருக்கா.. அக்கா ஹாஸ்டல்ல இருக்கா அவவப் பார்க்கத்தான் வர்றோம்"

என்னா விவரம்டா! என்ன ஒரு அறிவு! என்ன ஒரு ராஜதந்திரம்! மனதுக்குள் வியந்து போனேன்.

அந்த ஆண்டியை ஒருதரம் பார்க்க வேண்டும் என்ற ஆவலை எவ்வளவு முயன்றும் தடுக்க முடியவில்லை. சமீப காலத்தில் நான் இதுபோன்ற அறிவு ஜீவிகள் யாரையும் சந்திக்கவில்லை என்பதால ஆவலுடன் திரும்பிப் பார்த்தேன். ஆன்டியும் பார்த்துவிட, பாவம் அது அந்தப் பொண்ணுக்கு ஆப்பாகி விட்டது!

பொண்ணு யாருடன் பேசுகிறாள் என்று ஆன்டிக்கு அதுவரை தெரிந்திருக்கவில்லைப் போலும். பின்னாலிருந்து அழைப்பு வர அந்தப்பெண் எழுந்து போய்த் தாயுடன் அமர்ந்துகொண்டாள். மெல்லிய குரலில் ஏதோ பேசினார்கள் பாவம் அந்தப்பெண்! நல்ல டோஸ் விழுந்திருக்கும் என்று நினைக்கிறேன். 

அந்த ஆன்டியையும் குறை கூற முடியாது. அறிமுகமில்லாத ஒரு பையனிடம் தன் பெண் பேசுவதைப் பார்க்கும் எந்த அம்மாவும் அப்படித்தான் நம் சூழலில் நடந்து கொள்வது வழக்கம்.

அதுவும் நம்மள பார்த்த உடனேயே நல்ல ஒரு மதிப்பான(!), மரியாதையான(?!) ஒரு 'அபிப்பிராயம்' ஏற்பட்டிருக்கலாம். பெற்ற அம்மாவுக்கே அப்பிடி ஒரு 'அபிப்பிராயம்' இருப்பதால் மற்ற அம்மாக்கள் பற்றி நான் கவலைப்படுவதாக இல்லை.

அதென்னமோ தெரியல! பரட்டைத் தலையும், தாடியும்தான் இப்போதெல்லாம் ஹீரோக்களின் அடையாளம் என்பதை எம்ஜிஆர், சிவாஜி படம்பார்த்து வளர்ந்த அம்மாக்கள் புரிந்துகொள்ளவே மாட்டேன் என்கிறார்கள்.

என்னைப்போல  யாரோ ஒருத்தனைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டியதில்லை. வரக்கூடிய சந்தேகம் நியாயமானதுதான். ஆனாலும் தன் பெண்ணைப் பற்றி புரிந்து கொள்ள வேணாமா?

பக்குவமாக, ஆறுதலாக எடுத்துச் சொல்லலாம். முரட்டுத்தனமாக வறுத்தேடுப்பதால் பெண் பிள்ளைகளைத் திருத்தலாம்(?!) என நினைக்கிறார்கள். ஒருவகையில் திருந்தி விடுகிறார்கள் என்பது உண்மைதான்.... அதாவது தாய்க்கு தெரியாமல் திருட்டுத்தனம் செய்ய ஆரம்பிக்கிறார்கள்!

பெரும்பான்மையான தமிழ்ப்பெண்களின் அம்மாக்கள் எப்போதும் இரண்டு வகையாகவே இருக்கிறார்கள்.

ஒன்று, அதீத கட்டுப்பாடும் எச்சரிக்கையுணர்வும் கொண்ட அம்மாக்கள் மேற்சொன்ன ஆன்டி போலவே இருக்கிறார்கள். அதிபுத்திசாலித்தனமான, வியக்கத்தக்க முடிவுகளையெல்லாம் போகிற போக்கில் எடுக்கிறார்கள்.

இன்னொரு வகையினர் - முன்னொரு காலத்தில் கொழும்பில் "என்ர மகளுக்கு நிறைய பாய்பிரண்ட்ஸ் இருக்கினம்" என்று முகத்தில் பெருமை பொங்க சொல்லிக்கொண்டிருந்த ஒரு கூட்டம்.

அந்தக்கூட்டம் இப்போ பரிணாம வளர்ச்சியடைந்து "அவ எந்த நேரமும் பேஸ்புக்ல தான் இருப்பா" என்று பெருமையாக அலுத்துக் கொள்கிறது. இதில பெருமைப்பட என்ன இருக்கோ?

சிலர் மட்டுமே இயல்பாக வாழ்கிறார்கள். 

24 comments:

  1. ////ஆச்சரியமாக இருந்தது.முதல்பார்வையில் நான் சிநேக பூர்வமான ஆளில்லை என நண்பர்கள் சொல்வார்கள். யாரும் வந்து ஈசியாகப் பேச மாட்டார்கள் என்று. அது உண்மைதான்./////

    ஒருவேள இருட்டுல சரியா பாத்திருக்க மாட்டாளோ?

    ReplyDelete
  2. ////என்னாது... எஞ்சினியரிங் பசங்க எல்லாம் கேர்ள்ஸ் கூட பழகுறாங்களா? இதைக்கேட்டா நம்ம பயபுள்ளைக எல்லாம் கதறி அழுவானுகளேன்னு தோணிச்சு../////

    கதறி அழுகுறதா........ தூக்குலயே தொங்கிடுவானுங்களே.....?

    ReplyDelete
  3. ////அந்த ஆண்டியை ஒருதரம் பார்க்க வேண்டும் என்ற ஆவலை எவ்வளவு முயன்றும் தடுக்க முடியவில்லை./////

    நம்ம ராசிக்கு இதெல்லாம் தேவையா....? இல்ல தேவையாங்கிறேன்..... ஏதோ கடலைய போட்டமா, போன் நம்பர வாங்குனோமான்னு இல்லாம..... ஏன் இந்த விபரீதம்?

    ReplyDelete
  4. ////"அதால அக்காவ கொழும்பில பிரைவேட் இன்ஸ்டிட்டியூட்ல ஐ.டி. படிக்க விட்டிருக்கா.. அக்கா ஹாஸ்டல்ல இருக்கா அவவப் பார்க்கத்தான் வர்றோம்"/////

    இன்னேரம் அக்கா போன் நம்பர் வாங்கி இருக்கனுமே...?

    ReplyDelete
  5. கண்காணிப்பு இல்லை என்றால்... கெட்டுத் தான் போவார்கள்...

    தன் பெண் சீரழிகிறதை தெரிந்த எந்த தாயும், தாயாக இருக்க முடியாது...

    ReplyDelete
  6. பாஸ் ஹேப்பி பர்த்டெ, இப்போ தான் ஃபேஸ் புக்கில் விபரம் அறிந்தேன் ;-0

    ReplyDelete
  7. >>பன்னிக்குட்டி ராம்சாமி said...

    ////அந்த ஆண்டியை ஒருதரம் பார்க்க வேண்டும் என்ற ஆவலை எவ்வளவு முயன்றும் தடுக்க முடியவில்லை./////

    நம்ம ராசிக்கு இதெல்லாம் தேவையா....? இல்ல தேவையாங்கிறேன்..... ஏதோ கடலைய போட்டமா, போன் நம்பர வாங்குனோமான்னு இல்லாம..... ஏன் இந்த விபரீதம்?


    இன்னும் நீங்க ஃபோன் நெம்பர்லயே இருங்க, ஜி வீட்டு நெம்பர் வரை வந்துட்டார்

    ReplyDelete
  8. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ////அந்த ஆண்டியை ஒருதரம் பார்க்க வேண்டும் என்ற ஆவலை எவ்வளவு முயன்றும் தடுக்க முடியவில்லை./////

    நம்ம ராசிக்கு இதெல்லாம் தேவையா....? இல்ல தேவையாங்கிறேன்..... ஏதோ கடலைய போட்டமா, போன் நம்பர வாங்குனோமான்னு இல்லாம..... ஏன் இந்த விபரீதம்?
    ///////////////////////
    அதானே அந்த ஆண்டி நெம்பரை வாங்கி அண்ணன்கிட்ட கொடுத்திருங்க ஜீ!

    ReplyDelete
  9. >>>>>பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ////ஆச்சரியமாக இருந்தது.முதல்பார்வையில் நான் சிநேக பூர்வமான ஆளில்லை என நண்பர்கள் சொல்வார்கள். யாரும் வந்து ஈசியாகப் பேச மாட்டார்கள் என்று. அது உண்மைதான்./////

    ஒருவேள இருட்டுல சரியா பாத்திருக்க மாட்டாளோ?<<<<
    அட ஆமால்ல! :-)

    ReplyDelete
  10. >>>>பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ////அந்த ஆண்டியை ஒருதரம் பார்க்க வேண்டும் என்ற ஆவலை எவ்வளவு முயன்றும் தடுக்க முடியவில்லை./////

    நம்ம ராசிக்கு இதெல்லாம் தேவையா....? இல்ல தேவையாங்கிறேன்..... ஏதோ கடலைய போட்டமா, போன் நம்பர வாங்குனோமான்னு இல்லாம..... ஏன் இந்த விபரீதம்?<<<<<

    தப்புத்தேன்...தப்புத்தேன்! :-)

    ReplyDelete
  11. >>>>பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ////"அதால அக்காவ கொழும்பில பிரைவேட் இன்ஸ்டிட்டியூட்ல ஐ.டி. படிக்க விட்டிருக்கா.. அக்கா ஹாஸ்டல்ல இருக்கா அவவப் பார்க்கத்தான் வர்றோம்"/////

    இன்னேரம் அக்கா போன் நம்பர் வாங்கி இருக்கனுமே...?<<<<<

    மாம்ஸ் நான் சீரியஸா பேசிட்டிருக்கேன்!

    வேணாம் வலிக்குது! :-))

    ReplyDelete
  12. @சி.பி.செந்தில்குமார்
    வாழ்த்துக்களுக்கு நன்றி பாஸ்!

    ReplyDelete
  13. யோவ் ப்ளாக் எழுதுறத நிறுத்திட்டு நாவல்,சிறுகதை தொகுப்புகள் என்று எப்போ புஸ்தகம் எழுத ஆரம்பிக்க போகிறீங்க?பொறாமையா இருக்கு உங்க எழுத்த பாக்க!

    ReplyDelete
  14. //மைந்தன் சிவா said...
    யோவ் ப்ளாக் எழுதுறத நிறுத்திட்டு நாவல்,சிறுகதை தொகுப்புகள் என்று எப்போ புஸ்தகம் எழுத ஆரம்பிக்க போகிறீங்க?பொறாமையா இருக்கு உங்க எழுத்த பாக்க!//

    யோவ்! ஏன்யா? ஏன்?? நல்லாத்தானே போயிட்டிருக்கு? :-)

    ReplyDelete
  15. பிறந்த நாள் வாழ்த்துக்கள்,
    நானும் சிவில் தான்,
    நீங்க ஆண்ட்டிய எந்த மாதிரி பார்த்துருந்தா உங்களை கரேக்டா ஜட்ஜ் பன்னிருப்பாங்க...?

    ReplyDelete
  16. ம்ம்... அருமையான எழுத்து

    ReplyDelete
  17. உஷார் பண்ண முடியாத வருத்தம் உங்க எழுத்துக்களில் தெரிகிறது போல...

    ReplyDelete
  18. //என்னைப்போல யாரோ ஒருத்தனைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டியதில்லை. வரக்கூடிய சந்தேகம் நியாயமானதுதான். ஆனாலும் தன் பெண்ணைப் பற்றி புரிந்து கொள்ள வேணாமா?

    சரியான கேள்வி. ஆனாலும் இப்போ ஊடகங்களில் வெளிவரும் செய்திகளைப்பார்த்தால் வாசலை தாண்டியவுடனேயே பெரிய ஆபத்துகள் காத்திருப்பது போலவே உள்ளது. என்ன செய்ய?

    ReplyDelete
  19. பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜீ.. நீங்க வழக்கம் போல கலக்குங்க...

    ReplyDelete
  20. தாமதமான பிறந்தநாள் வாழ்த்துகள் ஜீ, (ஹி..ஹி.. இப்பத்தான் தெரிஞ்சது!)

    ReplyDelete
  21. பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜீ...
    அருமை... அருமை....

    ReplyDelete
  22. பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொந்தமே!!!
    இயல்பு தவறி போனதால் தானே அவர்கள் பிள்ளைகளும் இலகுவில் தவறுகிறார்கள்.என்று தான் இதையெலடலாம் அவர்கள் புரிவார்களோ???ஃவாழ்த்துக்கள் பகிரிவிற்றகாய்.ஸ


    எனக்கொரு பதில்!!!!!

    ReplyDelete
  23. வணக்கம் ,
    உங்களை எம்மோடும் இணைத்துக்கொள்ளுங்கள்.
    நன்றி.
    www.thiraddu.com

    ReplyDelete
  24. நன்றாயிருக்கிறது ஜீ.

    ReplyDelete