Tuesday, June 19, 2012

வெள்ளைக்கார அக்கா, பேய்வீடு - பஸ்ல உட்கார்ந்து யோசிச்சது!



பேரூந்தில் என் இருக்கைக்கு முன் இருக்கையில் ஒரு வெள்ளைக்கார ஜோடி!

படம் ஆரம்பித்தார்கள் அரவான்! ஒரே நேரத்தில் பலர் பேசுவது அல்லது கத்துவது அல்லது கூவுவது, மற்றும் அடிக்கடி குளோசப்பில் பசுபதி மற்றும் பலரின் சிவப்பேறிய வாய் எனக் குதூகலமாக ஆரம்பித்தது. 

அரவான் நல்ல படமென்பது வேறு. ஒரு பேரூந்துப் பயணத்தில் பார்க்க முடியுமா என்பதை நம்மாளுங்கதான் யோசிக்கணும்! தமிழ் தெரிந்த எங்களுக்கே இரைச்சல் தாங்க முடியவில்லைன்னா... அக்கா வேகமாக எழுந்து சென்றார். சவுண்ட் குறைக்கப்பட்டது. நண்பர் சொன்னார் என்ன இருந்தாலும் வெள்ளைத் தோலுக்கென்று ஒரு தனி மரியாதை இருக்கத்தான் செய்யுது. உண்மைதான் இதெல்லாம் நாங்க சொன்னா நடக்குமா?

இயல்பாகவே நம்மவர்களுக்கு ஒரு ஒரு வெள்ளைத் தோலுக்கு மதிப்பளிக்கும், வளைந்து கொடுக்கும் குணம் வாய்க்கப் பெற்றிருக்கிறது. இது ஜெனட்டிக்கலாக நம் முன்னோரிடமிருந்து கடத்தப்பட்டு வருகிறதுபோலும்.

ஆனாலும் அக்கா தலைக்கு மேலே ஒரு ஸ்பீக்கர் இருந்ததால் அவஸ்தைப் பட்டுக்கொண்டே இருந்தார். நம்மாளுங்க வேற சவுண்டைக் குறைக்கிறதும் கொஞ்சநேரத்தில மறுபடியும் கூட்டுறதுமா நம்ம 'பூர்வீக புத்தி'யைக் காட்டிட்டு இருக்க, பத்து நிமிஷத்துக்கொருதரம் எழுந்துபோய் புகார் செய்துகொண்டிருந்த அக்கா ஒரு கட்டத்தில டயர்ட் ஆகி, தன்னோட யன்னலோர சீட்டை, தம்பிக்கு மாத்தி, அந்த சீட்டும் செட்டாகாம திரும்பத் திரும்ப சீட் மாத்தி, அவனை வேற இம்சைப்படுத்தி...! ஆனா பாருங்க அந்தத் தம்பிய நினைச்சா ரொம்பப் பாவமா இருந்திச்சு எவ்வளவு பொறுமை? சின்ன முகச்சுழிப்பு இல்லை! அக்காக்கு அடக்கமா, பணிவா குடும்பத்துக்கு ஏற்ற பயபுள்ள!

எப்பிடி சிக்கினானோ? அவனை நினைச்ச ரொம்பப் பாவமா...நம்மாளுங்கதான் அப்பிடீன்னா வெள்ளைக்காரனுக்கும் அதே நிலைமைதானா?

சரி நம்ம எல்லாரையும் பற்றி அவங்க என்ன யோசிச்சிருப்பாய்ங்க? இவனுங்க படமும் அப்பிடி! இவனுங்களும் அப்பிடியேதானா !?  

* * * * * * * 
க்கத்துக் கோவில் திருவிழா! காலையில் கொஞ்ச நேரம் அதிகமாத் தூங்கலாம்னா நித்யஸ்ரீ அதட்டி எழுப்பிவிட்டார்!

அப்பர் தாச மார்க்கத்தில இறைவனை எஜமானனா பாவிச்சு, சுந்தரர் சக மார்க்கத்தில தோழனாப்பாவிச்சு, மணிவாசகர் தலைவன் - தலைவியா இறைவனை வழிபட்டதா சொன்னாய்ங்க!

ஒரு வேளை நித்யஸ்ரீ பாடுறது வாத்தியார் மார்க்கமா இருக்குமோ? இறைவனை மாணவனாப் பாவித்து... பக்திப் பாடல்கள்லயும் ஒரு அதட்டல், சின்ன கண்டிப்பு தெரியுது!

* * * * * * *
கமெண்ட்ஸ்!
சமீபத்தில்தான் நண்பன் படம் பார்த்துட்டு பார்த்தி ஒரு கமென்ட் அடிச்சான். வழமையா விஜய் படம் பார்க்காத அவன் ஒரே கமெண்டிலேயே நச்சுன்னு!  படம் பார்க்கும்போது அவனுக்கு தோணிச்சாம்...
'இந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் உங்கள் விஜய்!'

தியேட்டர் கமெண்ட்ஸ் சில வேளைகளில் ரகளையாக இருக்கும்! ஆனால் 'கலாச்சாரம் புகழ்' யாழ்ப்பாணத் தமிழர்களின் அதிகரிப்பிற்கேற்ப தியேட்டர்களில் செந்தமிழ் வார்த்தைப் பிரயோகம் அதிகரித்ததும், குறிப்பாக ஹீரோயின் அறிமுகத்தின்போது, பாடல்களின் போது, செம்மொழி அர்ச்சனைகள் இடம்பெறுவதும் தமிழ்ப்படங்கள் ஓடும் தியேட்டர்களில் மட்டும் வழமையான ஒன்று!

ஆயிரத்தில் ஒருவன் படம் ரிலீசானபோது தியேட்டரில் எங்க குறூப்புக்கு முன் வரிசைல ஒரு பெரிய குடும்பமே வந்திருந்தது. அம்மா, அப்பா, அண்ணா, தம்பி, தங்கச்சி, தாத்தா அதில புதுசா கல்யாணமான ஜோடி எல்லாம் குடும்பமா படம் பார்க்க வந்ததில், அவங்களுக்கு எப்பிடி இருந்துச்சோ சில நேரத்தில எங்களுக்கு சங்கடமா இருந்திச்சு! தியேட்டர்ல செம்ம கமெண்ட்ஸ்! 

படத்தில் ரீமா சென் பார்த்தீபனைப் பார்த்து  'மன்னரே கூட வருவீரோ?' தொடர்ந்து கொஞ்சநேரம் நிசப்தம். கமென்ட் அடிக்க நினைத்து, கண்ட்ரோல் பண்ணிட்டிருக்க, கீழ இருந்த யாரோ ஒருத்தன் என் மனதறிந்து கத்தினான்.

'சட்டுப் புட்டுன்னு ஒரு முடிவுக்கு வாங்க மன்னரே!'

* * * * * * *
பேய் வீடு!   

எங்கள் கம்பெனி ரெசிடென்சில் தங்கியிருக்கிறவங்க ஆறு பேர்ல என்னைத் தவிர, மற்ற எல்லாரும் சிங்கள கன்சல்டன்ட் அங்கிள்ஸ்! எல்லாரும் கண்டியைச் சேர்ந்தவர்கள்! நான் மட்டும் கொழும்பு! 

கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஏதோ பேசிட்டிருந்தாய்ங்க. முதல்ல நான் பெரிசாக் கவனிக்கல! அப்புறம் பேச்சில 'ஹொல்மங்' ன்னு ஒரு சொல் அடிபட...அப்பிடின்னா சிங்களத்தில பேய் இல்ல? பேஸ்தடிச்சுப் போய்க் கேட்டேன். முதல்ல பேசின அங்கிள் விளக்கமா சொன்னார். சாமத்தில சில அமானுஷ்யமான சத்தம் கேக்குது! நாயா, மனுஷனான்னே தெரியாம ஊளையிடுற மாதிரி, கதவைத் தட்டுற மாதிரி, திறப்பால திறக்க ட்ரை பண்ற மாதிரி...ஆனா எங்க இருந்து சத்தம் வருதுன்னு சொல்ல முடியல! வெளில சில சமயம் வீட்டுக்குள்ள இருந்தும்!

இதைக் கேட்ட உடனே எனக்கு வந்திச்சு பாருங்க கோபம்!

இவனுங்க எல்லாம் படிச்சவனுங்கதானா? கொஞ்சம் கூடப் பகுத்தறிவே கிடையாதா?எப்பப் பாத்தாலும் அறிவுகெட்டதனமாவே பேசிக்கிட்டு... இப்பிடியா பேசுறது?  இல்ல தெரியாமத்தான் கேக்குறேன்!


இவனுங்க எல்லாம் வெள்ளிக்கிழமை அஞ்சு மணிக்கே சொந்த வாகனத்தில ஊருக்குப் போயிடுவாங்க. ஆனா இரவு பத்தரை மணிமட்டும் கொழும்பு பஸ்ஸூக்காக ஒரு பச்சப்புள்ள இங்க தனியா இருக்கணுமேன்னு யோசிக்கவே மாட்டானுகளா?

23 comments:

  1. ///இயல்பாகவே நம்மவர்களுக்கு ஒரு ஒரு வெள்ளைத் தோலுக்கு மதிப்பளிக்கும், வளைந்து கொடுக்கும் குணம் வாய்க்கப் பெற்றிருக்கிறது. இது ஜெனட்டிக்கலாக நம் முன்னோரிடமிருந்து கடத்தப்பட்டு வருகிறதுபோலும்.////

    "வெள்ளையாக இருக்கிறவன் பொய்சொல்லமாட்டான்" என்று வடிவேலு படத்தில் சிரிப்பதற்காக சொல்லிக் கொண்டாலும் எங்களின் சமூகத்தின் பிரதிபலிப்புக்களில் அதுவும் ஒன்று. அதாவது வெள்ளையாக இருக்கிறவன் பெரிய மனுஷனாகவும், அறிவாளியாகவும் இருப்பான் என்கிற சொல்ல யோசனையும்.


    ///ஒரு வேளை நித்யஸ்ரீ பாடுறது வாத்தியார் மார்க்கமா இருக்குமோ? இறைவனை மாணவனாப் பாவித்து... பக்திப் பாடல்கள்லயும் ஒரு அதட்டல், சின்ன கண்டிப்பு தெரியுது!///

    யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு- கிழக்கில் இப்போது கோவில்களில் திருவிழா- பொங்கல் சீசன் என்று நினைக்கிறேன். இந்த சீசனில் எல்.ஆர். ஈஸ்வரியின் மிரட்டிலும், நித்யசிறியின் கண்டிப்பும், அவ்வப்போது சுதா ரகுநாதனின் அரவணைப்பும் அடிக்கடி கேட்கக் கூடியதாக இருக்கும்.

    ////படத்தில் ரீமா சென் பார்த்தீபனைப் பார்த்து 'மன்னரே கூட வருவீரோ?' தொடர்ந்து கொஞ்சநேரம் நிசப்தம். கமென்ட் அடிக்க நினைத்து, கண்ட்ரோல் பண்ணிட்டிருக்க, கீழ இருந்த யாரோ ஒருத்தன் என் மனதறிந்து கத்தினான்.

    'சட்டுப் புட்டுன்னு ஒரு முடிவுக்கு வாங்க மன்னரே!'////

    என்னுடைய புரிந்து கொள்ளும் அறிவை வளர்க்க வேண்டும் என்று தூண்டிய பகுதி இதுதான். இன்னும் புரியவேயில்லை. என்ன செய்ய ஆரம்பத்திலிருந்தே பச்ச மண்ணா வளர்ந்திட்டேன்.

    /////
    இவனுங்க எல்லாம் வெள்ளிக்கிழமை அஞ்சு மணிக்கே சொந்த வாகனத்தில ஊருக்குப் போயிடுவாங்க. ஆனா இரவு பத்தரை மணிமட்டும் கொழும்பு பஸ்ஸூக்காக ஒரு பச்சப்புள்ள இங்க தனியா இருக்கணுமேன்னு யோசிக்கவே மாட்டானுகளா?////

    போங்க பாஸ்... நீங்க குடுத்த பில்டப்ப பார்த்தால் பேய்- பிசாசு என்று மூடநம்பிக்கைகளை விளாசப் போகிறீர்கள் என்று பார்த்தால் இப்படி கவுத்துப்புட்டீங்களே. ஆமா, பேயெல்லாமா குடும்பம் நடத்துது உங்க வீட்ல.

    ReplyDelete
  2. //இவனுங்க எல்லாம் ... இப்பிடியா பேசுறது? இல்ல தெரியாமத்தான் கேக்குறேன்!
    //

    பயபுள்ள தைரியசாலின்னு பார்த்தா அடுத்த வரியில் ச்சே இம்புட்டுதானா

    ReplyDelete
  3. நல்லாதான்யா அடிக்கிறாங்க கமன்ட், அது என்னவோய் கலாசார புகழ்

    ReplyDelete
  4. //ஒரு வெள்ளைத் தோலுக்கு மதிப்பளிக்கும், வளைந்து கொடுக்கும் குணம்//

    இப்படியே கிளப்பி விடுங்க அடுத்த தலைமுறைக்கும்

    ReplyDelete
  5. வெள்ளைத்தக்காளி கஜோல் அகர்வால் படம் போட்டு பதிவை பார்த்ததும் இன்னைக்கு அந்த அக்காவுக்கு பொறந்தநாளு அது பத்தின பதிவுனு வந்து பல்பு வாங்கிட்டேன் பாஸ்...ஹி.ஹி.ஹி.ஹி........

    ReplyDelete
  6. //'சட்டுப் புட்டுன்னு ஒரு முடிவுக்கு வாங்க மன்னரே!'////

    என்னுடைய புரிந்து கொள்ளும் அறிவை வளர்க்க வேண்டும் என்று தூண்டிய பகுதி இதுதான். இன்னும் புரியவேயில்லை. என்ன செய்ய ஆரம்பத்திலிருந்தே பச்ச மண்ணா வளர்ந்திட்டேன்.//

    நீங்களும் என்ன மாதிரித்தானா? எனக்கும் ஒண்ணும் புரியல! மன்னர் சைலண்டா யோசிச்சிட்டிருந்தாரா அதான் அப்பிடி சொல்லனும்னு தோணிச்சு!

    //போங்க பாஸ்... நீங்க குடுத்த பில்டப்ப பார்த்தால் பேய்- பிசாசு என்று மூடநம்பிக்கைகளை விளாசப் போகிறீர்கள் என்று பார்த்தால் இப்படி கவுத்துப்புட்டீங்களே//

    எஹே நாங்கெல்லாம் யாரு? கூட்டமா இருந்தா நல்லா விளாசமாட்டமா? தனியா உட்கார்ந்து பேய் கிட்ட பேச்சுவார்த்தை நடத்த முடியுமா? போங்க பாஸ் அதுக்கு நான் ஆளில்ல! :-)

    ReplyDelete
  7. //மனசாட்சி™ said...
    //இவனுங்க எல்லாம் ... இப்பிடியா பேசுறது? இல்ல தெரியாமத்தான் கேக்குறேன்!
    //

    பயபுள்ள தைரியசாலின்னு பார்த்தா அடுத்த வரியில் ச்சே இம்புட்டுதானா//

    அப்பிடித் துப்பிட்டுப் போங்க பாஸ்! :-)

    ReplyDelete
  8. //வெளங்காதவன்™ said...
    சூப்பரு!//

    வாங்க பாஸ்! :-)

    ReplyDelete
  9. //K.s.s.Rajh said...
    வெள்ளைத்தக்காளி கஜோல் அகர்வால் படம் போட்டு பதிவை பார்த்ததும் இன்னைக்கு அந்த அக்காவுக்கு பொறந்தநாளு அது பத்தின பதிவுனு வந்து பல்பு வாங்கிட்டேன் பாஸ்...ஹி.ஹி.ஹி.ஹி.....//

    வாங்க கிஸ் ராஜா ரொம்ப நாளைக்கப்புறம்!
    அதான் படம் போட்டிருக்கமில்ல..அவங்க புரிஞ்சுப்பாங்க! :-)

    ReplyDelete
  10. //'இந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் உங்கள் விஜய்!'//

    அது!

    //ஆனால் 'கலாச்சாரம் புகழ்' யாழ்ப்பாணத் தமிழர்களின் அதிகரிப்பிற்கேற்ப தியேட்டர்களில் செந்தமிழ் வார்த்தைப் பிரயோகம் அதிகரித்ததும், குறிப்பாக ஹீரோயின் அறிமுகத்தின்போது, பாடல்களின் போது, செம்மொழி அர்ச்சனைக//

    நாம புறப்பட்டா பிறகும் சிஷ்ய கோடிங்க நம்ம வேலைய சரியா தான் செய்யுறானுங்க போல!

    ReplyDelete
  11. நானும் பஸ்ல மறுபடியும் சமீரா ரொட்டி படத்த போட்டுட்டானுங்களோன்னு பதறிட்டேன்.....

    ReplyDelete
  12. அப்படியே காஜல் பிறந்தநாள்னு நைசா படத்த போட்டுட்டீங்க போல......?

    ReplyDelete
  13. நண்பன் கமெண்டு சான்சே இல்லை

    தியேட்டர் கமெண்டுக்கு நானும் ரசிகன் ஜீ

    நித்யஸ்ரீ மெலடி பாட்டு பாடினா நல்லா இருக்கும், காலையிலேயே தூக்கத்த கெடுத்துட்டாங்களா

    ReplyDelete
  14. ஸ்ஸ்ஸ்ஸ் ஸ்ஸ்ஸ்ஸ் ஸ்ஸ்ஸ்ஸ் அபா....கண்ணை கட்டுதே....

    ReplyDelete
  15. கடைசிப் பத்திக்கு முந்தின பத்தி படிக்கும் போது ஆஹா... அண்ணன் மூட நம்பிக்கையை துவம்சம் பண்ணப் போறாருன்னு பாத்தா இப்படி சாய்ச்சுப் புட்டீங்களே...!

    ReplyDelete
  16. //
    அந்தத் தம்பிய நினைச்சா ரொம்பப் பாவமா இருந்திச்சு எவ்வளவு பொறுமை? சின்ன முகச்சுழிப்பு இல்லை! அக்காக்கு அடக்கமா, பணிவா குடும்பத்துக்கு ஏற்ற பயபுள்ள!
    //

    அந்த பயபுள்ள நீங்கதானே.. இதுதான் சுய-Marketing என்று சொல்றதா :)

    //
    'இந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் உங்கள் விஜய்!'
    //
    ஹீ.. ஹீ.. ஹீ.. ஹீ.. ஹீ.. ஹீ..

    ReplyDelete
  17. இந்த பஸ்ல படம் போடுறது எனக்கும் சிலநேரங்களில் படுப்பேத்தியிருக்கு மை லோர்ட் :(
    போடுவாங்கப்பா மொக்கைப்படங்களை..... கொலைவெறியாகிடும்

    ReplyDelete
  18. அண்ணே வெள்ளிக்கிழமை வந்திருச்சே? இன்னிக்கி எப்புடி சமாளிக்க போறீங்க?

    ReplyDelete
  19. //'சட்டுப் புட்டுன்னு ஒரு முடிவுக்கு வாங்க மன்னரே!'//

    ஹா..ஹா..இதுக்குத்தான் அரைவேக்காட்டு ஆபாசப் படங்களைப் பார்க்கக்கூடாதுங்கிறது!

    ReplyDelete