Tuesday, June 12, 2012

ஆன்டி & பூச்சாண்டி!


'எப்பவுமே முகப் பூச்சு ஓவரா பூசிட்டு திரியிற ஆன்டிங்களைப் பூச்சாண்டிகள் என கூறலாமா?'

பல பூச்சாண்டிகளை அன்றாடம் சந்தித்தாலும், கடந்த ஞாயிறு பேரூந்தில் எனக்குப் பக்கத்தில இருந்த ஆன்டியைப் பார்த்தபோதே இந்தக் கேள்வி எழுந்தது! பொதுவாக ஆண்கள் பக்கத்தில் பெண்களை உட்கார விடுவதில்லை! ஆனால் சில சமயங்களில் ஆன்டிகளை உட்காரவைக்கும் அபாயம் இருக்கிறது!

சமீபகாலமாக சமீரா ரெட்டியின் 'காவியங்களின்' குறுக்கீடு இல்லாமல் எனது பயணங்கள் ஓரளவு சுமுகமாகிவிட்டிருந்த நிலையில் பக்கத்திலிருந்து ஆன்டி மிரட்டிக் கொண்டிருந்தார்.

மேக்கப்பு என்கிறதே மானவாரியா மூஞ்சில அப்புறதுதானே? என அப்புராணியாக் கேக்கிற பொண்ணுங்க நம்ம நாட்டில ஏராளம்! அதுங்களைச் சொல்லிக் குற்றமில்லை. 

அஞ்சாப்புப் படிக்கும்போதே வெளிநாட்டில இருக்கிற அப்பன்காரன் மேக்கப் செட்ன்னு ஒண்ணு அனுப்பி வைப்பான். அடுக்கடுக்கா, கலர் கலரா, விதவிதமான பிரஷ்களோட! (இதை வாட்டர் கலரா யூஸ் பண்ணலாமான்னு நாங்க வேற அப்பவே அறிவு பூர்வமா சிந்திச்சிருக்கம்!)  அதில பொண்ணுக்கு சம்பந்தமில்லாத கலர்தான் அதிகமிருக்கும். அப்புறமென்ன டியூஷன், கல்யாணவீடு, கோவில் திருவிழா எல்லாம் பொண்ணு சும்மா பாப் சிங்கர் கணக்கா பப்பரப்பான்னு போய்க் கலவரமாக்கும்!இதில சில அம்மாக்களும், பொண்ணுங்களோட சேர்ந்துகொள்வது மேலதிக கொடுமை!

இப்பிடியாப்பட்ட மண்ணில பிறந்தவய்ங்க, வளர்ந்தவய்ங்க மெதுவாத்தான் மாறுவாய்ங்க! இவ்வளவு ஏன்? மொத மொதல்ல Fair Ever வந்தப்போ ஓடிபோய் வாங்கி ஒரு டியூபை பூரா ஒரே தடவைல மூஞ்சில அப்பினது யாரு...நம்ம பயலுகதேன்!

'நம்மள மாதிரி சமுதாய அக்கறை கொண்ட' பதிவர்கள்தான் அவங்களுக்குச் சொல்லிக்கொடுக்கணும்! கொஞ்சம் கொஞ்சமா மாத்தணும்!-இல்லையா? அதாலதான் சொல்றேன் வேறொண்ணுமில்ல! 
இதெல்லாம் எனக்கென்ன பெருமையா? ......கடமே!

நம்ம நாட்டில மணப்பெண் அலங்காரம்னு ஒண்ணு வச்சிருக்காங்க பாருங்க அது மாறுவேஷப் போட்டியின் ஒரு மாறுபட்ட வடிவம்! அலங்காரம் முடிஞ்சதும் பொண்ணு வீட்டுக்காரங்களுக்கே அடையாளம் தெரியாது. இதுல மாப்பிள்ளை வேற 'நான் பாத்த பொண்ணு எங்கய்யா?', 'ஒரு வேளை ஆள்மாறாட்டம் பண்ணி ஏமாத்திட்டாங்களோ'ன்னு கன்பியூஸ் ஆகி முழிக்கிறது கண்கொள்ளாக் காட்சி!

ஆனாலும் இந்த ஆன்டிகளின் அலப்பறைதான் தாங்க முடியல!

வயதுக்கு, கலருக்கு சற்றும் சம்பந்தமில்லாமல் அள்ளி மேக்கப் போடுபவர்கள், கறுப்பா இருந்திட்டு கண்களுக்கும் புருவத்துக்குமிடையே ரோஸ் கலர் பெயிண்ட் அடிப்பவர்கள், இருபத்தைந்து வயதில் தைத்த ஆடைகளையே நாற்பது வயதிலும் டபுள் சைஸ் ஆனபின்பும் கொள்கைப் 'பிடிப்புடன்' விடா முயற்சியுடன் அணிந்துகொள்பவர்கள் அல்லது மகளின் ஆடைகளை அணித்து வருபவர்கள், பசங்களைப் பார்த்து அநியாயத்துக்கு வெட்கப்பட்டு தற்கொலை எண்ணத்தைத் தோற்றுவிப்பவர்கள்  -  இவர்களுக்கெல்லாம் கருட புராணத்தில் ...ச்சே ஒரு  ப்ளோல வந்திட்டுது!

இவர்களெல்லாம் 'நானும்' என்ற பிரிவிற்குள் அடங்குவார்கள்!

'நானும்!' -அது சில வருடங்களுக்கு முன் எனது நண்பனொருவனும், நானும் மட்டுமே பாவிக்கும் ஒரு ஸ்லாங்! அநேகமாக இப்படிச் சொல்வான் - 'அவவும் ஒரு 'நானும்' டைப்தான்!'

இந்த 'நானும்' என்ற சொல்லாடலுகான பொருள் பற்றி பேசிக் நாங்கள் கொண்ட தில்லை. ஒரு ஆன்டியின் மனதின் குரலாக 'நானும் இருக்கிறேன்', 'நானும் யூத் தான்!',  'என்னையும் சைட் அடிங்க!',  'நானும் இன்னும் form ல தான் இருக்கேன் என்னையும் ஆட்டத்தில சேர்த்துக்குங்க!' - இந்த மாதிரியாகப் பொருள் கொள்ள முடியும்!

நானும்! - எங்கே நீங்களும் இனிப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்!  - ஏதோ தமிழ் கூறும் நல்லுலகிற்கு என்னாலான சேவை!

* * * * * * *
WAR OF THE RING!
பொதுவாக எனக்கு இப்படியான படங்களில் அவ்வளவாக ஆர்வம் இருந்ததில்லை.  LOTR படங்களில் Return of the king மட்டுமே ஒருமுறை பார்த்திருக்கிறேன். ஆனால், கருந்தேள்ஜியின் War Of The Ring மின்புத்தகம்  டவுன்லோடியதும் அசந்து போனேன். அசுரத்தனமான உழைப்பு என அவர் கூறியதன் அர்த்தம் புரிந்தது. சும்மா அப்பிடி இருக்கு!


மேலோட்டமாக மேய்ந்ததில், படத்தில் பயன்படுத்திய டெக்னிக் பற்றி டீப்பா எழுதியிருந்தார் ( அவர் பதிவுகள் எல்லாமே அப்படித்தான் ஆராய்ந்து எழுதப்பட்டிருக்கும் என்பதால் அதில் ஆச்சரியமேதுமில்லை!) 

உதாரணமா Return of the king படத்தில் என்றுதான் நினைக்கிறேன். ஒரு எரிந்து கொண்டிருக்கும் ஒரு சிதைக்கு முன்னால் வேகமாக ஒரு குதிரை வந்து சடன் பிரேக் அடிக்க, மேலிருந்தவன் சிதைக்குள் போய் விழும் காட்சி எப்படி எடுக்கப்பட்டது என விளக்கப்படங்களுடன்! - முடிவு பண்ணிட்டேன். புத்தகத்தை முழுமையாகப் படித்து, படமும் பார்த்துவிட வேண்டுமென்று!
'திரைக்கதை எழுதுவது இப்படி' எப்ப வரும்னு ஆவலாயிருக்கிறேன்!

22 comments:

  1. /////சமீபகாலமாக சமீரா ரெட்டியின் 'காவியங்களின்' குறுக்கீடு இல்லாமல் எனது பயணங்கள் ஓரளவு சுமுகமாகிவிட்டிருந்த நிலையில் பக்கத்திலிருந்து ஆன்டி மிரட்டிக் கொண்டிருந்தார்.////

    சமீரா ஆண்டி இலங்கை வந்து போனாங்களே போய் பார்க்கலையா?

    என்ன இருந்தாலும் சமீரா ஆண்டி மேல அண்ணனுக்கு ஒரு கண்.

    பூச்சாண்டிகள்- நோ கொமண்ட்ஸ், இன்னும் கல்யாணமெல்லாம் ஆகேல்ல வறவா என்ன மாதிரி வந்து சேருவாவோ தெரியல்ல. அதால அடக்கி வாசிச்சிங்.

    ReplyDelete
  2. //பூச்சாண்டிகள்- நோ கொமண்ட்ஸ், இன்னும் கல்யாணமெல்லாம் ஆகேல்ல வறவா என்ன மாதிரி வந்து சேருவாவோ தெரியல்ல. அதால அடக்கி வாசிச்சிங்//

    என்ன பாஸ் எனக்கும் சேர்த்து பீதியக் கிளப்பிட்டீங்க அவ்வ்வ்!

    வர்றவா ஆன்டியா இருந்தா ஒன்னும் பண்ண முடியாது! ஆனா பூச்சாண்டியா இருந்தா மாற்றலாம் இல்லையா?

    ReplyDelete
  3. தலைவா.. நெறய பொண்ணுகளே கூட இப்ப "நானும்" டைப்லதான் இருக்குக.

    ReplyDelete
  4. நல்லாதம்யா இருக்கு தலைப்பு

    ReplyDelete
  5. //கோவி said...
    தலைவா.. நெறய பொண்ணுகளே கூட இப்ப "நானும்" டைப்லதான் இருக்குக//

    அப்பிடியா? வேணாம் இந்த வெளாட்டுக்கு நான் வரல! எஸ்கேப்!!!! :-)

    ReplyDelete
  6. பூச்சாண்டி என்று எங்கள் தானைத்தலைவி படம் போட்டமைக்கு பிந்து மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வெகுவிரைவில்!

    ReplyDelete
  7. //ஜேகே said...
    பூச்சாண்டி என்று எங்கள் தானைத்தலைவி படம் போட்டமைக்கு பிந்து மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வெகுவிரைவில்!//

    அதென்ன பாஸ் பிந்து மக்கள் கட்சி?

    ReplyDelete
  8. தம்பி .. பெட்ரோல் குண்டுக்கு தயாராக இரும் ... எவனாவது "அதென்ன இந்து மக்கள் கட்சி?" எண்டு கேட்டிருப்பாங்களா?

    ReplyDelete
  9. பஸ் பயணங்கள் என்றாலே ஜீ சாருக்கு அலேஜிக் போல? ஒன்று மாறி ஒரு தலைவலி

    ReplyDelete
  10. //Shanmugan Murugavel said...
    பஸ் பயணங்கள் என்றாலே ஜீ சாருக்கு அலேஜிக் போல? ஒன்று மாறி ஒரு தலைவலி//
    விடுங்க பாஸ் எல்லாம் பழகிருச்சுல்ல!:-)

    ReplyDelete
  11. ஒருவர் என்ன அணியவேண்டும் முகத்திற்கு என்ன பூச வெண்டும் என்பதை அவருக்கு முடிவெடுக்க அனுமதி இருக்கின்றது. இப்படி பூசினால் தப்பு கிப்பு என்றெல்லாம் சொல்வது அவ்வளவு நாகரீகம் இல்லை நண்பா. அன்ரியாக இருக்கட்டும் குமரியாக இருக்கட்டும் அது அவர்கள் தனிப்பட்ட பிரைச்சனை. அப்படியானவர்களை பிடிக்கவில்லை என்றால் நீங்களாவே விலகிப் போய்விடலாமே??

    பெண்களை மட்டும் திட்டி என்ன பயன். நான் அறிய பெயர் அன் ஹான்சம் பூசும் ஆண்கள் பலர்.

    ReplyDelete
  12. ஹாய் ஜீ,

    பின்வரும் வார்த்தைகள் நூற்றிலோரு வார்த்தைகள்..

    //
    நம்ம நாட்டில மணப்பெண் அலங்காரம்னு ஒண்ணு வச்சிருக்காங்க பாருங்க அது மாறுவேஷப் போட்டியின் ஒரு மாறுபட்ட வடிவம்! அலங்காரம் முடிஞ்சதும் பொண்ணு வீட்டுக்காரங்களுக்கே அடையாளம் தெரியாது.
    //

    இப்படித்தான் ஆபீஸ்ல வேலை செய்யிற ஒரு அக்காவோட கல்யாணத்துக்கு போய், இருக்கிற மூன்று ஹால் தேடியும் எங்க கல்யாணம் நடக்குது என்று தெரியல.. மணப்பெண்ணின் முகம் பார்த்து அடையாளம் தெரியல.. பிறகு பெயர் சொல்லித்தான் சரியான ஹாலுக்கு போய் சேர்ந்தோம் :)..

    ReplyDelete
  13. அண்ணனுக்கு சமீரா ரொட்டின்னாலே ஒரு கிளுகிளுப்புத்தான்........ மனச கல்லாக்கிக்கிட்டு படத்தையாவது போட்டிருக்கலாம்.......

    ReplyDelete
  14. ////// 'நானும் யூத் தான்!', 'என்னையும் சைட் அடிங்க!', 'நானும் இன்னும் form ல தான் இருக்கேன் என்னையும் ஆட்டத்தில சேர்த்துக்குங்க!' - இந்த மாதிரியாகப் பொருள் கொள்ள முடியும்!/////////

    அப்புறம் ஆட்டத்துல சேர்த்துக்கிட்டீங்களா இல்லியான்னு சொல்லவே இல்ல?

    ReplyDelete
  15. ///// ஆனால், கருந்தேள்ஜியின் War Of The Ring மின்புத்தகம் டவுன்லோடியதும் அசந்து போனேன். அசுரத்தனமான உழைப்பு என அவர் கூறியதன் அர்த்தம் புரிந்தது. சும்மா அப்பிடி இருக்கு!//////

    நானும் படிச்சிப்பார்க்கிறேன்....

    ReplyDelete
  16. AnonymousJune 12, 2012

    வணக்கம் நண்பரே!

    உங்களுடைய பதிவுகள் இலங்கைத்தமிழர்கள் பலரை சென்றடைய கூகிள்சிறி திரட்டியில்(http://www.googlesri.com/) இணையுங்கள். உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி திரட்டியில் தற்போது இணைக்கலாம். உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் subject பகுதிக்குள்ளும் உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும்(url) மின்னஞ்சலின் Body பகுதிக்குள்ளும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். தன்னியக்கமுறையில் உங்கள் பதிவுகள் டிவிட்டர்,பேஸ்புக்,லிங்டின் போன்ற சமூக தளங்களில் பிரசுரமாவதோடு அதிக வாசகர்களையும் சென்றடையும்.

    தங்கள் பதிவுகளை எதிர்பார்த்து
    யாழ் மஞ்சு

    ReplyDelete
  17. //Mayu Mayooresan said...
    பெண்களை மட்டும் திட்டி என்ன பயன். நான் அறிய பெயர் அன் ஹான்சம் பூசும் ஆண்கள் பலர்//

    யார் பாஸ் திட்டினது நானே அன்னிக்கு பயந்து போய் அந்த எபக்டில எழுதினது பாஸ் இது! cooool!! :-)

    ReplyDelete
  18. //Vimalaharan said...
    இப்படித்தான் ஆபீஸ்ல வேலை செய்யிற ஒரு அக்காவோட கல்யாணத்துக்கு போய், இருக்கிற மூன்று ஹால் தேடியும் எங்க கல்யாணம் நடக்குது என்று தெரியல.. மணப்பெண்ணின் முகம் பார்த்து அடையாளம் தெரியல.. பிறகு பெயர் சொல்லித்தான் சரியான ஹாலுக்கு போய் சேர்ந்தோம் :)//
    பயபுள்ளைங்க எல்லாரும் செமையா பாதிக்கப்பட்டிருக்காய்ங்க போல! :-)

    ReplyDelete
  19. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    அண்ணனுக்கு சமீரா ரொட்டின்னாலே ஒரு கிளுகிளுப்புத்தான்........ மனச கல்லாக்கிக்கிட்டு படத்தையாவது போட்டிருக்கலாம்.......//
    வேணாம் மாம்ஸ் நான் சீரியஸா பேசிக்கிட்டிருக்கேன்!

    ReplyDelete
  20. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ////// 'நானும் யூத் தான்!', 'என்னையும் சைட் அடிங்க!', 'நானும் இன்னும் form ல தான் இருக்கேன் என்னையும் ஆட்டத்தில சேர்த்துக்குங்க!' - இந்த மாதிரியாகப் பொருள் கொள்ள முடியும்!/////////

    அப்புறம் ஆட்டத்துல சேர்த்துக்கிட்டீங்களா இல்லியான்னு சொல்லவே இல்ல?//

    இது ஆவுறதில்ல! இந்த ஆட்டத்துக்கு நான் வரல!

    நாங்கெல்லாம் பச்ச மண்ணுங்க மாம்ஸ்! :-)

    ReplyDelete
  21. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ///// ஆனால், கருந்தேள்ஜியின் War Of The Ring மின்புத்தகம் டவுன்லோடியதும் அசந்து போனேன். அசுரத்தனமான உழைப்பு என அவர் கூறியதன் அர்த்தம் புரிந்தது. சும்மா அப்பிடி இருக்கு!//////

    நானும் படிச்சிப்பார்க்கிறேன்....//

    பாருங்க! முதல்ல படிக்கவே வேணாம்! சும்மா பார்த்தாலே பிடிக்கும்!!! அப்புறம் படிக்க வைக்கும்!!! :-)

    ReplyDelete
  22. மிக்க நன்றி தலைவரே... War of the Ring முழுசா படிச்சிட்டு எப்புடி இருந்ததுன்னும் சொல்லுங்க :-) . . எங்கள் டீம் சார்பாக - நான்.

    ReplyDelete