Monday, April 9, 2012

டெரர் கும்மியின் அங்கீகாரம்!
நாங்க எல்லாம் சின்ன வயதில இருந்தே கதை, கட்டுரை, கவிதை போட்டிகள்னா  முதல் ஆளா............வெளிநடப்பு செய்திடுவோம்! அவ்வளவு பொருத்தம்!

பள்ளி நாட்களில் ஒழுங்காக ஒரு சிறுகதை, கட்டுரை எழுதியதாக ஞாபகமில்லை. குறிப்பிட்ட தலைப்பினைத் தந்து இருநூற்றைம்பது சொற்களுக்குக் குறையாமல் கட்டுரை வரைக - என்றவுடன் வரையும் அளவிற்கெல்லாம் திறமை(?!) என்னிடம் எப்போதும் இருந்ததில்லை. அதில் எனக்கு என்றுமே ஆர்வம், உடன்பாடு இல்லை.

என்னாலும் எழுத முடியுமா என்ற பரிசோதனை முயற்சியாகவே பதிவுலகத்திற்கு வந்து அவ்வப்போது ஏதாவது எழுதுகிறேன். உலக சினிமாக்கள், சில நல்ல பதிவுகள் தவிர்த்து, பெரும்பாலும் மொக்கையாக! இங்கு மொக்கை என்பது...இது பற்றி முடிந்தால் தனியாக எழுதுகிறேன்.


பதிவுலகம்!
Blog என்பது என்வரையில் நான் நினைத்ததை, ரசிப்பவற்றைப் பதிந்து கொள்ளும் எனது டிஜிட்டல் டைரி. மற்றவர்களையும் படிக்க அனுமதிக்கும் எனது டைரி. நான் எழுதுவது வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரியாது. எனது நெருங்கிய ஒரு சில நண்பர்களுக்கு மட்டுமே தெரியும்! ஆனால் அவர்களுக்குப் பெரிதாக வாசிப்புப் பழக்கம் கிடையாது. பதிவெழுத வந்த புதிதில் நண்பன் எபி வீட்டிற்கு வரும்போதெல்லாம் எனது சமீபத்திய பதிவொன்றை வாசித்துப் பார்க்கச் சொல்வேன் - வீட்டுப்பக்கம் வருவதையே நிறுத்திட்டான்!

பதிவுலகிற்கு வந்த புதிதில், முதன்முதலில் வலைச்சரத்தில் என்னையும் ஒரு பதிவனாக அறிமுகப்படுத்தியவர் எனக்கு மிகப் பிடித்த பிரபல பதிவர் பன்னிக்குட்டி ராம்சாமி!

பதிவுலகம் முகம் தெரியாத, உணர்வுகளால் நெருங்கிய ஏராளமான நண்பர்களையும், உறவுகளையும் கொடுத்திருக்கிறது! சில முயற்சிகளை செய்து பார்க்கவும், பல சமயங்களில் மன அமைதியையும், சோர்ந்து போன தருணங்களில் ஏதோவொரு நம்பிக்கையைக் கொடுப்பதாகவும் பதிவுலகம் இருந்திருக்கிறது. வாழ்வில் நாம் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் சுவாரஷ்யமான, தெரிந்து கொள்ள, கற்றுக்கொள்ள ஏதாவது ஒரு விஷயமாவது இருக்கும் என்பது என் நம்பிக்கை. அதுபோலவே பதிவுலகிலும்!


டெரர் கும்மி விருதுகள் 2011
டெரர் கும்மி நண்பர்களின் முயற்சிக்கு பாராட்டுக்கள்! விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்! என்னைப் பொறுத்தவரையில் பதிவுலகில் இது ஒரு முக்கியமான விருது! முக்கியமாக என் போன்ற பல இளையவர்களுக்கு வழங்கப்பட ஒரு நல்ல அங்கீகாரம் இது!

டெரர் கும்மி நண்பர்கள் பற்றி கூறவே வேண்டியதில்லை. ஒவ்வொருவரும் தனித்தன்மையான எழுத்து, ரசனை கொண்ட ரகளையான பதிவர்கள். ஒரு விருதின் தரம், யாரால் வழங்கப்படுகிறது என்பதிலேயே தங்கியிருக்கிறது. ஒவ்வொரு பிரிவிலும் தனித்தனியாக அந்தந்தத் துறைகளில் தேர்ச்சி பெற்ற நடுவர்களை தெரிவுசெய்து சிறந்த பதிவுகளைத் தேர்ந்தெடுப்பதற்கு மேற்கொண்ட சிரத்தை அதனைச் சொல்லும்! டெரர் கும்மிக்கு என்சார்பிலும், சக பதிவர்கள் சார்பாகவும் பாராட்டுக்களும் நன்றிகளும்!

போட்டியில் கலந்து கொள்ள எனது பதிவு எதனையும் சமர்ப்பிக்கவில்லை எனினும் வென்றவர்கள் பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வம் எப்போதுமே இருந்தது.
Hall of Fame Blogger விருது! - நான் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. எனக்கு, நம் எல்லோருக்கும் பிடித்த, டெரர் கும்மி நண்பர்களைக் கவர்ந்தவர்களில் நானும் ஒருவன் என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி!நன்றி!
டெரர் கும்மி  தளத்தில் அவர்களின் முயற்சிக்கு வாழ்த்துத் தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி!

அதில் என்னைக் குறிப்பிட்டு வாழ்த்திய சி.பி.செந்தில்குமார், மருதமூரான், தனிமரம் நேசன், 'நண்பேன்டா' சிவகுமார் ஆகியோருக்கு நன்றி! எனக்குத் தொலைபேசி அழைப்பெடுத்து தகவல் சொல்ல முயன்ற மைந்தன் சிவா, மின்மடலில் வாழ்த்துக்களைத் தெரிவித்த அண்ணன் செங்கோவி, ஆனந்தி அக்கா மற்றும் வருங்கால ஆர்.ஜே. செல்வாவுக்கும் நன்றி!

மின்மடலில் வாழ்த்துத் தெரிவித்து வெளியில் தெரிய வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட தலைமைக்குக் கட்டுப்பட்ட சிலர் மற்றும் வழக்கம்போல வார்த்தைகளை மௌனிக்கச் செய்து மனதிற்குள் வாழ்த்திய சில பதிவர்களுக்கும் நன்றி!

மீண்டும் டெரர்கும்மி, பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!

32 comments:

 1. வாழ்த்துக்கள் + நன்றிகள் :)

  ReplyDelete
 2. மென்மேலும் பல உயரங்களைத் தொட வாழ்த்துகிறேன் ஜீ!

  ReplyDelete
 3. தங்களது எழுத்து வெற்றிப்பயணம் மென்மேலும் தொடர்ந்து பல சாதனைகள் பெற வாழ்த்துக்கள் சார்..

  ReplyDelete
 4. ப.ரா அவர்களின் கருத்தினை வழிமொழிகிறேன். மற்றும் நன்றிகள் :))

  ReplyDelete
 5. என் நேரம் பல விடயங்களை தவற விட்டு விட்டேனா என சிந்திக்க வைக்கிறது...

  இப்பதிவைப் பார்த்ததும் தான் தங்களுக்கு இது கிடைத்ததே தெரியும் என் உளம் கனிந்த வாழ்த்துக்கள் சகோ...

  இப்படி ஒரு சிறந்த திட்டத்தின் மூலம் பதிவர்களை ஊக்குவிக்கும் ரெரர் கும்மி நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 6. வாழ்த்துகள் நண்பா .. உங்கள் வெற்றி பயணம் தொடரட்டும்

  ReplyDelete
 7. @பன்னிகுட்டி

  //எனக்கு மிகப் பிடித்த பிரபல பதிவர் பன்னிக்குட்டி ராம்சாமி!//

  மச்சி!! இதுக்கு எவ்வளவு காசு கொடுத்த.. :)

  ReplyDelete
 8. வாழ்த்துகள். என்னையும் கூட வலைச்சரத்தில் முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் திரு பன்னிக்குட்டி ராமசாமி அவர்கள்தான் அதை நான் எப்பவுமே நன்றியுடன் நினைவில் வச்சிருக்கேன் நாமெல்லாம் மோதிரக்கையால் குட்டுப்பட்டவர்கள் இல்லியா?

  ReplyDelete
 9. உறவின் நெருக்கத்தோடு வாழ்த்துகள் ஜீ !

  ReplyDelete
 10. //////TERROR-PANDIYAN(VAS) said...
  @பன்னிகுட்டி

  //எனக்கு மிகப் பிடித்த பிரபல பதிவர் பன்னிக்குட்டி ராம்சாமி!//

  மச்சி!! இதுக்கு எவ்வளவு காசு கொடுத்த.. :)//////////

  ங்கொய்யால ஒரு பிரபல பதிவர்கிட்ட கேட்கற கேள்வியா இது? தொலச்சிபுடுவேன் தொலச்சி ராஸ்கல்...!

  ReplyDelete
 11. வாழ்த்துக்கள் - தொடரட்டும்

  ReplyDelete
 12. @பன்னி

  //ங்கொய்யால ஒரு பிரபல பதிவர்கிட்ட கேட்கற கேள்வியா இது? தொலச்சிபுடுவேன் தொலச்சி ராஸ்கல்...!//

  சான்ஸ மிஸ் பண்ணாம இன்னும் ஒரு வாட்டி பிரபல பதிவர்ன்னு சொல்லிட்டாண்டா... :) இதை எல்லாம் நம்பிதான் மக்கள் எமாந்து போராங்க... சரி போய் தொலை... :)

  ReplyDelete
 13. வாழ்த்துக்கள் பாஸ்...
  சரியான விருது சரியானவருக்கு கிடைத்ததில் சந்தோஷம்

  ReplyDelete
 14. வாழ்த்துகள்.

  ReplyDelete
 15. வாழ்த்துகள் நண்பா

  ReplyDelete
 16. வாழ்த்துக்கள் !!!

  ReplyDelete
 17. வாழ்த்துக்கள் ஜீ!

  ReplyDelete
 18. வாழ்த்துக்கள் பாஸ் !மீண்டும் தொடர்ந்து எழுதுங்க!

  ReplyDelete
 19. வெற்றிகள் தொடரட்டும் ஜீ.

  ReplyDelete
 20. வாழ்த்துக்கள் நண்பரே!
  மேலும் விருதுகளை குவிக்க ஆசிர்வாதங்கள்.

  ReplyDelete
 21. வாழ்த்துக்கள் ஜீ.. இன்னும் சிறப்பாக எழுதவும் வாழ்த்துக்கள் :-)

  ReplyDelete
 22. என்னுடைய வாழ்த்துக்களும் உங்களுக்கு!முடிவு பற்றிய அறிவிப்பப் பார்த்தேன் எனினும் சரியாக கவனிக்கவில்லைப் போலும்!மீண்டும் வாழ்த்துக்கள் ஜீ !!!

  ReplyDelete
 23. என்னுடைய இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் ஜீ.

  ReplyDelete
 24. வாழ்த்துக்கள் நண்பரே !

  ReplyDelete
 25. வாழ்த்துகள்,ஜீ!!வெற்றிகள் தொடரட்டும்!

  ReplyDelete
 26. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //////TERROR-PANDIYAN(VAS) said...
  @பன்னிகுட்டி

  //எனக்கு மிகப் பிடித்த பிரபல பதிவர் பன்னிக்குட்டி ராம்சாமி!//

  மச்சி!! இதுக்கு எவ்வளவு காசு கொடுத்த.. :)//////////

  ங்கொய்யால ஒரு பிரபல பதிவர்கிட்ட கேட்கற கேள்வியா இது? தொலச்சிபுடுவேன் தொலச்சி ராஸ்கல்...!///

  ஜீ -க்கு வாழ்த்துகள்.


  டெர்ரர் & பன்னி எனக்கு விருது ஏதும் இல்லியா???

  ReplyDelete
 27. காலை வணக்கம் ஜீ!இனிய நந்தன வருட வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 28. நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!

  //Yoga.S.FR said...
  காலை வணக்கம் ஜீ!இனிய நந்தன வருட வாழ்த்துக்கள்!//
  வணக்கம் பாஸ்! நன்றி! உங்களுக்கும் என் இனிய புதுவருட வாழ்த்துக்கள்!

  நண்பர்கள் அனைவருக்கும் புதுவருட வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 29. Blog என்பது என்வரையில் நான் நினைத்ததை, ரசிப்பவற்றைப் பதிந்து கொள்ளும் எனது டிஜிட்டல் டைரி. மற்றவர்களையும் படிக்க அனுமதிக்கும் எனது டைரி.//
  எனது கருத்தும் அதுதான்.

  ReplyDelete
 30. வாழ்த்துக்கள் ஜீ

  ReplyDelete

Followers

Powered by Blogger.

Follow by Email

Copyright © வானம் தாண்டிய சிறகுகள்.. |