Tuesday, February 7, 2012

Samaritan Girlசியோலிலுள்ள பள்ளி மாணவிகளான யோ-ஜின், ஜே-யோங் இருவரும் நெருங்கிய தோழிகள். ஐரோப்பாவைச் சுற்றிபார்க்க வேண்டுமென்ற ஆசை இருவருக்கும்! அதற்கு நிறையப் பணம் வேண்டுமே? என்ன செய்வது? உழைத்துச் சம்பாதிக்கலாம் என முடிவு செய்கிறார்கள். குறுகிய காலத்தில் பள்ளி மாணவிகளால் அப்படி என்ன தொழில் செய்து சம்பாதிக்க முடியும்? உலகின் புராதன தொழில்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கிறார்கள்! ப்ராஸ்டிட்யூஷன்!

ஜே-யோங் பாலியல் தொழிலாளியாக, யோ-ஜின் அவளது ஏஜண்டாக செயற்பட, பணம் சேரத் தொடங்குகிறது! ஜே-யோங் தனது வாடிக்கையாளர் பற்றி, அவர்களுடனான உரையாடல்களை  விபரித்துக் கூறுவாள். இது யோ-ஜினுக்குப் பிடிப்பதில்லை. அவர்கள் அனைவரும் கெட்டவர்கள் என்கிறாள் யோ-ஜின்!

தன்னை வசுமித்ரா என அழைக்குமாறு கூறுகிறாள் ஜே-யோங். வசுமித்ரா ஆதி காலத்தில் இந்தியாவில் வாழ்ந்த பெண் என்றும், அவளுடன் உறவுகொண்ட ஆண்கள் எல்லாரும் புத்தபிட்சுகளாக மாறிவிடுவார்கள் என்றும் அவளது அன்பு அவ்வாறு அவர்களை மாற்றிவிடுமாம் என்றும் கூறுகிறாள் ஜே-யோங்.தனது வாடிக்கையாளர்களில் ஒரு இசைக்கலைஞனுடன் காதல் கொள்கிறாள் ஜே-யோங். இது தெரிந்ததும் யோ-ஜின் கோபப்படுகிறாள். அவன் யோ-ஜினிடம் வந்து டின்னருக்கு இருவரையும் அழைத்துச் செல்வதாகக் கூற, கடுமையாக திட்டி அனுப்பிவிடுகிறாள் யோ-ஜின். 

ஒருநாள் ஜே-யோங்கை ஒரு வாடிக்கையாளருடன் அனுப்பிவிட்டு அவளுக்காக அந்த மாடிக்கட்டடத்தின் கீழே யோ-ஜின் காத்திருக்கிறாள். திடீரென்று போலீஸ் சோதனைக்காக வர, ஜே-யோங் தான் இருந்த அறையின் யன்னலில் ஏறி கீழே குதிக்க ஆயத்தமாக நின்றுகொள்கிறாள். அறைக்குள் நுழைந்த போலீஸ் தங்களிடம் வரும்படியும் அவளைத் துன்புறுத்த மாட்டோமென்றும் கூற, கீழே ஜோவும் அவளைக் குதிக்க வேண்டாமென்று கூறி அலறுகிறாள்.

சிறிது நேரம் தடுமாறும் ஜே-யோங் எதையும் காதில்வாங்காமல் ஒரு புன்னகையுடன் கீழே குதித்துவிட, படுகாயமடையும் அவளை முதுகில் சுமந்து கொண்டு ஓடுகிறாள் யோ-ஜின்!


மருத்துவமனையில் உயிருக்குப் போராடும் ஜே-யோங் அந்த இசைக்கலைஞனை ஒருமுறை பார்க்கவேண்டுமெனக் கூற யோ-ஜின் அவசரமாக அவனைத் தேடி ஓடுகிறாள். அவன் கொஞ்சமும் இரக்கமில்லாமல் யோ-ஜினைத் தன்னுடைய இச்சைக்கு இணங்கினால் மட்டுமே வருவேனெனக் கூறி, அவளுடைய சூழ்நிலையின் இயலாமையைச் சாதகமாக்கிக் கொள்கிறான். மிக நிதானமாக அவளது பொறுமையைச் சோதித்து ஒருவழியாக இருவரும் மருத்துவமனையை அடைய, அங்கே ஜே-யோங் இறந்து விட்டிருக்கிறாள்.

தோழியின் இறப்பினால் பெரும் துயரடைகிறாள் யோ-ஜின். இப்போது தன்னிடமுள்ள பணம் அவளுக்குத் தேவையில்லை. அதேபோல ஒருவித குற்றவுணர்வும் சேர்ந்து கொள்ள, ஜே-யோங்கின் பழைய நண்பர்களைத் தொடர்பு கொண்டு ஜே-யோங் போலவே அவர்களிடம் அன்பாக நடந்துகொண்டு அவரவர் பணத்தை உரியவர்களிடமே திருப்பிக் கொடுக்க முடிவு செய்கிறாள்.

இதன் மூலம் தோழியின் துயர் நிறைந்த நினைவுகளிலிருந்தும், குற்ற உணர்விலிருந்தும் விடுபட முடியுமென்று ஏதோ ஒரு அடிப்படையில் நம்பிக்கை கொள்கிறாள் யோ-ஜின்.


ஜே-யோங்கின் குறிப்புப் புத்தகத்தின் மூலம் ஒவ்வொருவராகத் தொடர்புகொண்டு அவர்களுடன் தன்னைப் பகிர்ந்துகொண்டு, அவர்கள் பணத்தைத் திரும்பக் கொடுக்க, அனைவரும் ஆச்சரியப்பட்டு மறுக்க, யோ-ஜின் வற்புறுத்திக் கொடுக்கிறாள். 

ஒருநாள் தந்தை ஒரு கொலை தொடர்பாக சம்பவ இடத்தில் விசாரணைக்குச் செல்லும் போலீஸ்காரரான யோ-ஜின்னின் தந்தை,எதிரிலுள்ள மாடிக்கட்டடத்தின் திறந்திருக்கும் யன்னல் வழியே, யோ-ஜின் ஒரு ஆணின் அணைப்பில் இருப்பதைப் பார்த்துவிடுகிறார். அதிர்ச்சியடையும் தந்தை இரவு யோ-ஜின் தூங்கியபின் அவள் வைத்திருக்கும் ஜே-யோங்கின் குறிப்புப் புத்தகத்தைப் பார்த்து தன மகள் பற்றிய கொடுமையான விஷயத்தைத் தெரிந்து கொள்கிறார்!

பின்பு அவளுக்குத் தெரியாமல் அவளைப் பின்தொடர்கிறார், தொடர்ந்து...? என்னவாகிறது?


தனக்குப்பின் தனது மகளின் வாழ்க்கைக்காக அவளுக்கு அவசியம் தேவையான விஷயங்களை கற்பிக்கும் ஒரு பொறுப்புள்ள தந்தையாக யோ-ஜினுக்கு கார் பழக்கும் காட்சி! 

வழக்கமான கிம் கி-டுக்கின் வழமையான படங்களின் கதாபாத்திரங்கள் போலல்லாமல், எல்லோரும் தேவையான அளவு பேசிக்கொள்கிறார்கள். ஆனால் இறுதிக்காட்சிகளில் மௌனமே கவிதைபோல!

ஒரு நடுத்தர வயது மனிதனின் செல்பேசியை தந்தை கையில் வைத்திருக்க, அது தெரியாத ஜோ வாடிக்கையாலரென நினைத்து தந்தையிடம் பேசும்போது அவர் சத்தம் செய்யாமல் அழும் மிகை நடிப்பில்லாத காட்சி!

கிம் கி-டுக்கின் படமாச்சே! ஏதாவது வில்லங்கம் வருமேன்னு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது வரும் அந்தக் கனவு, ஒருகணம் அதிரவைத்தது!

2004 இல் வெளியான இந்தப்படம் வழமைபோல சொந்தநாட்டில் தோல்வியைத் தழுவ, உலகத் திரைப்பட விழாக்களில் பெரும் வரவேற்பைப் பெற்றது!

Berlin International Film Festival 2004 இல் இரண்டாம் இடமான வெள்ளிக்கரடி விருதைப் பெற்றது!

இயக்கம்: Kim Ki-duk
மொழி: Korean
நாடு: தென் கொரியா   

இயக்குனர் கிம் கி-டுக்கின் மற்றைய படங்களையும் பாருங்கள்! பிடித்திருந்தால் திரட்டிகளில் வாக்களியுங்கள்!

Spring, Summer, Fall, Winter... and Spring    26 comments:

 1. உலக சினிமாவை
  உருட்டி
  உணர்வுகளின் வழியே
  உள்ளங்கையில் தரும்
  உங்களின் லாவகம்
  உண்மையில் யாருக்கும் வராது
  உன்னதமான பதிவு

  ReplyDelete
 2. கிம் டு கிக் படங்களிலேயே அதிரடி குறைந்த படம் இது தானோ..

  ReplyDelete
 3. ஜீ...நன்றி இன்னுமொரு படம் பார்க்கத் தந்திருக்கிறீர்கள்.
  கண்டிப்பாய் பார்ப்பேன் !

  ReplyDelete
 4. <>>>வசுமித்ரா ஆதி காலத்தில் இந்தியாவில் வாழ்ந்த பெண் என்றும், அவளுடன் உறவுகொண்ட ஆண்கள் எல்லாரும் புத்தபிட்சுகளாக மாறிவிடுவார்கள்

  pudhu thakavakl

  ReplyDelete
 5. அருமையானதொரு விமர்சனம்

  ReplyDelete
 6. ஹிஹி வாசித்தோம்...அருமை..வாக்கிட்டோம்..பெருமை...வருகிறோம்..

  ReplyDelete
 7. விமர்சனம் சூப்பர் அண்ணே......!

  ReplyDelete
 8. ஹிஹி திருப்பியும் கொரிய படமா? ஏன் வெள்ளிக்கரடி விருது கொடுத்தாங்க? வெள்ளி குதிரை விருது கொடுத்தா என்ன? :P

  ReplyDelete
 9. @ A.R.ராஜகோபாலன்
  என்ன பாஸ்! என்னென்னமோ சொல்லி மிரட்டுறீங்க? :-)

  //செங்கோவி said...
  கிம் டு கிக் படங்களிலேயே அதிரடி குறைந்த படம் இது தானோ..// ம்ம்ம்..அப்படித்தான் நினைக்கிறேன்..!:-)

  //ஹேமா said...
  ஜீ...நன்றி இன்னுமொரு படம் பார்க்கத் தந்திருக்கிறீர்கள்.
  கண்டிப்பாய் பார்ப்பேன் !// நிச்சயமா பாருங்கள்!

  //tamil444news.blogspot.com said...
  வடை// போயிடுச்சே! :-)

  //சி.பி.செந்தில்குமார் said...
  அட...// இது எதுக்கு? :-)

  //மதுரன் said...
  அருமையானதொரு விமர்சனம்// நன்றி!

  //மைந்தன் சிவா said...
  ஹிஹி வாசித்தோம்...அருமை..வாக்கிட்டோம்..பெருமை...வருகிறோம்.// ஹாய்! என்ன ஒரு மார்க்கமா...:-)

  //MANO நாஞ்சில் மனோ said...
  விமர்சனம் சூப்பர் அண்ணே......!// நன்றி தம்பி! :-)

  ReplyDelete
 10. பொஸ்.....!

  ஓடுகிற பஸ்சுக்குள்ள இருந்து மொபைலில் இந்த விமர்சனம் வாசித்தேன். பஸ்சுக்குள்ள இருந்து வாசிக்கிறதும்- விமர்சனமும் நல்லாயிருக்கு. படத்தை பார்த்துவிட வேண்டும்.

  ReplyDelete
 11. சூப்பர் பதிவு...படங்கள் பலவற்றை சுருட்டி வைத்திருக்கின்றீர்கள்..வாழ்த்துகள்...

  ReplyDelete
 12. விமர்சனத்தைப் பார்த்ததுமே படத்தை பார்க்கணும் என்ற ஆசையை ஏற்படுத்தி இருக்கிறது.

  ReplyDelete
 13. ஜி .கலக்கல் விமர்சனம் .நண்பர் ஒருவர் Kim Ki-duk படத்தை பார்க்க சொல்லி பல முறை பரிந்துரைத்தார் ,நமக்கெங்கு நேரமே இல்லை ,பார்ப்போம்

  ReplyDelete
 14. வணக்கம் ஜீ.. இந்தத்திரைப்படத்தை நான் பார்த்திருக்கின்றேன். உங்கள் விமர்சனங்கள் அசத்தல்.
  இது குறித்த மக்கியமான விடையம் ஒன்றை நாம் தொலைபேசியில் உரையாடிக்கொள்ளலாம் :)

  ReplyDelete
 15. இந்தப் படத்தைப் பார்ப்பதற்குத் தூண்டும் வகையில் அசத்தலாக விமர்சனத்தை எழுதியுள்ளீர்கள் சகோ.
  படத்தினைப் பற்றிய பரந்துபட்ட அலசலினைத் தந்துள்ளீங்க, பகிர்விற்கு நன்றி மாப்ளே.
  நான் பார்க்க வேண்டிய் படங்களுள் இதுவும் ஒன்று, ஆனால் நேரம் தான் கிடைக்கவில்லை.

  ReplyDelete
 16. போலிசுக்கு பயந்து தற்க்கொலை செய்யும் அப்பெண்ணின் முகத்தில் இருக்கும் சிரிப்புக்கு ஆயிரம் அர்த்தம் எழுதலாம்.
  அழகிய புதுக்கவிதைக்கு அருமையான உரை எழுதியுள்ளீர்கள்.

  அவன் இவன் இயக்கியது எவன்?
  என பாலாவுக்கு வேப்பிலை அடித்து ஒரு பதிவெழுதி உள்ளேன்.வருகை தாருங்கள்

  ReplyDelete
 17. //மருதமூரான்
  ஓடுகிற பஸ்சுக்குள்ள இருந்து மொபைலில் இந்த விமர்சனம் வாசித்தேன். பஸ்சுக்குள்ள இருந்து வாசிக்கிறதும்- விமர்சனமும் நல்லாயிருக்கு// :-) நன்றி பாஸ்!

  //“நிலவின்” ஜனகன் said...
  வாழ்த்துகள்...// நன்றி!

  //சந்ரு said...
  விமர்சனத்தைப் பார்த்ததுமே படத்தை பார்க்கணும் என்ற ஆசையை ஏற்படுத்தி இருக்கிறது// :-)

  //நா.மணிவண்ணன் said...
  நண்பர் ஒருவர் Kim Ki-duk படத்தை பார்க்க சொல்லி பல முறை பரிந்துரைத்தார்// பாருங்க மணி!

  //Jana said...
  வணக்கம் ஜீ.. இந்தத்திரைப்படத்தை நான் பார்த்திருக்கின்றேன். உங்கள் விமர்சனங்கள் அசத்தல். இது குறித்த மக்கியமான விடையம் ஒன்றை நாம் தொலைபேசியில் உரையாடிக்கொள்ளலாம் :)// பேசலாமே! நன்றி! :-)

  //நிரூபன் said...
  இந்தப் படத்தைப் பார்ப்பதற்குத் தூண்டும் வகையில் அசத்தலாக விமர்சனத்தை எழுதியுள்ளீர்கள் சகோ.
  படத்தினைப் பற்றிய பரந்துபட்ட அலசலினைத் தந்துள்ளீங்க, பகிர்விற்கு நன்றி மாப்ளே.// ம்ம்ம் சகோவா? மாப்ளேயா? :-)

  //உலக சினிமா ரசிகன் said...
  போலிசுக்கு பயந்து தற்க்கொலை செய்யும் அப்பெண்ணின் முகத்தில் இருக்கும் சிரிப்புக்கு ஆயிரம் அர்த்தம் எழுதலாம்// நிச்சயமா! நன்றி!

  ReplyDelete
 18. அருமையானதொரு விமர்சனம்

  ReplyDelete
 19. மாப்ள படத்த பதிவால பாக்க வைக்கிறே நன்றிய்யா!

  ReplyDelete
 20. படத்தை பார்க்க தூண்டுகிறது உங்க விமர்சனம் அருமை..

  ReplyDelete
 21. படம் பார்க்கவில்லை சகோ!!! ஆனால், தேடி பார்க்க வேண்டும் என்று ஆசையை தரும் அளவுக்கு உங்கள் விமர்சனம் இருக்கிறது!!!! நன்றிகள் இப்படியான நல்ல படத்ஹ்தியா எனக்கு அறிமுகம் செய்தமைக்கு

  ReplyDelete
 22. nalla vimarchanam..
  parkkirEn..........
  vaalththukkal

  ReplyDelete
 23. குற்ற உணர்வில் இருந்து விடுபட தன் தோழி படுத்த எல்லா ஆண்களுடனும் இவளும் படுகிறாளாம்.. என்ன கன்றாவி கான்செப்ட் இது..

  ReplyDelete

Followers

Powered by Blogger.

Follow by Email

Copyright © வானம் தாண்டிய சிறகுகள்.. |