Monday, February 13, 2012

கவனிப்பு! (16+) - சிறுகதை



வனிப்பு என்பது மிக முக்கியமான விஷயம். அதுவும் சில நேரங்களில் அதீத கவனிப்புத் தேவை. ஆனாலும் அனுபவத்தைப்போல வேறு எதுவும் நமக்குக் கற்றுக் கொடுப்பதில்லை. நானும் அன்று கற்றுக் கொண்டேன்!

"ஐந்தரை மணிக்கு ஐட்டம் பஸ் ஸ்டாப்புக்கு வந்துடும்"- அறிவுறுத்தப்பட்டிருந்தேன்.

எனக்கு இது முதல் அனுபவம். உள்ளே இருக்கிற டென்ஷன் கண்களில் தெரிந்து விடாமல் கவனமாக, ஏரியால போலீஸ் நடமாட்டம் இருக்கான்னு பார்த்துகொண்டேன்.

அவளின் அடையாளம் - அழகி! ப்ளூ ஜீன்ஸ், வைட்  டீ ஷர்ட்!  டீ ஷர்ட்டின் மார்பில்  Copy & Paste! என்று எழுதியிருக்கும். ரீபோக் ஷூ அணிந்திருப்பாள்.

அவள்தான் ஐட்டம்! - அப்படி நீங்கள் நினைத்தால், நான் பொறுப்பல்ல!

அவள் தோளில் Laptop பை. அதற்குள் கன கச்சிதமாக அடுக்கப்பட்ட சிறிய பாக்கெட்டுகளில்...ஐட்டம், பிரவுன் சுகர்!


தோ அவள்தான்! எதிர்பார்த்த மாதிரியே..ஆனாலும் எதிர்பார்க்கவில்லை - இவ்வளவு அழகாயிருப்பாள் என்று! இவளுக்கு ஏன் இந்த வேலை? இவள் எல்லாம் பணம் சம்பாதிக்க இவ்வளவு ரிஸ்க் எடுக்கணுமா? எவ்வளவு ஈசியா..

எனது அடையாளம் சொல்லப்பட்டிருக்கும். ஆனாலும் கண்டு கொண்ட மாதிரியே காட்டிக்கொள்ளவில்லை - அனுபவசாலி! ஒரு சிறு சலனம்...சிறு கீற்றுப் புன்னகை...ம்ஹூம்!

ஆனால் நான்...அவள் ஒரு 'ம்..' சொன்னால் என் ஜாதகத்தையே ஒப்புவித்து விடுவேனோ எனத் தோன்றியது. வைட்  டீ ஷர்ட்டின் மார்பில் Copy & Paste! - கவனித்துக் கொண்டேன்! இதெல்லாம் எழுதித்தான் தெரியணுமா?

'எதுவும் பேசாமல் உன்னோட பெட்டியை அவள் பக்கத்துல வக்கிறே நம்ம சங்கேத கேள்வி கேட்டு, பதில் கன்ஃபர்ம் பண்றே'

முதல் கேள்வி 'மன்மோகன் உப்பு யூஸ் பண்ணுவாரா?', பதில் மௌனம்!

கேட்டேன். மௌனமாயிருந்தாள்! லேசாகப் புன்னகைத்தது போல் தோன்றியது பிரமையாகக் கூட இருக்கலாம்.

இரண்டாவது கேள்விதான் உதைத்தது. எதுக்கு இப்பிடி ஒரு கேள்வி? நானெல்லாம் பொண்ணுங்க கிட்ட வலியப் போயி பேசினதே இல்ல! பேர் கூடக் கேட்காத என்னைப் போய்...கேள்வி இதுதான்!

- ப்ரா சைஸ் என்ன?
- 16 GB

என்ன பார்க்கிறீர்கள்? கேள்விக்கும் பதிலுக்கும் சம்பந்தம் இருந்தா பிறகென்ன சங்கேத வார்த்தை?

அது சரி..எப்படிக் கேட்பது? தயங்கி..ஒருவாறு தொழில் தர்மத்தை(?!) நினைத்து மனதைத் தேற்றித் திடப்படுத்திக் கொண்டு இன்னும் கொஞ்சம் நெருங்கி...

அவள் காதிலிருந்து ஹெட் ஃபோனை அகற்ற....

அவளிடம் தயங்கி.... மெல்லக் கேட்டேன்!



'ஏழாக இருக்கலாம்!'

- இது பதிலில்லையே என்கிறீர்களா?

நான் சொன்னது அவளின் செருப்பு சைஸ்!

நல்ல கனமான ஹீல்! ஒரே அடியில் வாயில் உப்புக் கரித்தது!

காலையிலிருந்து ஆஃபீசில் மேலதிகாரியிடம் திட்டு வாங்கியவன், திடீரெனக் காதலி சந்திக்க வர முடியாதென்றதில் காண்டானவன், ஒரு 'பைல்ஸ்' ஆன்டி,  பஸ்ஸில் இடித்து ஒரு பெண்ணின் முறைப்பைச் சம்பாதித்த ஆசைமட்டும் நரைக்காத பெரிய மனுஷன், முப்பத்தைந்து  கடந்தும் திருமணம் கூடிவராத பெண்மணி - எல்லோரும் ஏக காலத்தில் சமுதாய அக்கறை கொண்டதில்... இதற்குமேல் சொல்ல வேண்டுமா?

அய்யய்யோ என் பெட்டி தொலைந்தால் உயிரோடு விடமாட்டாங்களே...மனம் அலறியபோது...

கையில் தவறிய எனது பெட்டியுடன், ஏதோ சொல்லிக் கூட்டத்தை விலக்கி, கீழே விழுந்து கிடந்த என்னை நோக்கி எழுவதற்குக் கைகொடுத்தாள் அவள்..

அழகி, ப்ளூ ஜீன்ஸ், வைட் டீ ஷர்ட்.  Copy & Paste! தோளில் Laptop பை, முக்கியமாக காலில் ரீபோக் ஷூ!

16 comments:

  1. முதலிலேயே பார்வையைக் கொஞ்சம் கீழே இறக்கியிருந்தால் பிரச்சனையே இல்லையே!நல்ல கதை.

    ReplyDelete
  2. காப்பி பேஸ்ட்டை தாண்டி கீழே பார்க்க முடியல.....?

    ReplyDelete
  3. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    காப்பி பேஸ்ட்டை தாண்டி கீழே பார்க்க முடியல.....?
    February 13, 2012
    //
    உலகமகா பொய்

    ReplyDelete
  4. வணக்கம் ஜீ!செருப்பு மார்க் "பாட்டா"வா????

    ReplyDelete
  5. பன்னிக்குட்டி ராம்சாமி said...

    காப்பி பேஸ்ட்டை தாண்டி கீழே பார்க்க முடியல.....///அது வந்து.................அட,போங்க சார்!!!!!

    ReplyDelete
  6. பாஸ் இந்த கதையை ரெண்டு மூணு வாட்டி படிச்சன். ஏன்னா நாம தான் டியூப் லைட் ஆச்சே! நல்லவேளை இப்பவாவது கதை என்னான்னு புரிஞ்சுது. செம அடி போல!

    ReplyDelete
  7. நான் ஒரு ட்யுப் லைட்டு. மூன்று முறை வாசித்த பின் தான் என் கவனிப்பு ரீபோக்கிற்கு வந்தது. கதையும் புரிந்தது. நம்ம லுக்கே தனி இல்ல? ... ஹி ஹி.

    ReplyDelete
  8. அருமை அருமை அது என்ன 16+

    ReplyDelete
  9. வணக்கம் நண்பா,

    சிறுகதை ஒரு நிமிடக் கதையாக அருமையாக இருக்கிறது.
    எதனையும் வெளித் தோற்றத்தை வைத்து எடை போடக் கூடாது என்பதனை இக் கதை சொல்லியிருக்கிறது.

    கொப்பி & பேஸ்ட்..
    செருப்பாலை கன்னத்தில கொப்பி பேஸ்ட் வைச்சதற்கு ரொம்பவே பொருந்துதில்லே!
    ஹே. ஹே..

    ReplyDelete
  10. நான் கூட பய புள்ளைக்கு எதோ ஆகிப்போச்சின்னு பயந்துட்டேன்...நல்லா தான்யா இருக்கு கதை

    ReplyDelete
  11. சொன்ன விதம்தான் ரசனை ஜீ !

    ReplyDelete
  12. எல்லாத்தையும் பார்த்தவன் , காலை கவனிக்காம விட்டானே?....

    ReplyDelete
  13. நல்லதாம்யா கதை சொல்றிக..

    ReplyDelete
  14. ரெம்ப திரில்லாகதை சொல்லுறீங்க பாஸ்.

    ReplyDelete
  15. என்னமா கதை சொல்றார் ஜீ

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...